இந்திய தேசமும் கிரிக்கெட் என்னும் பெருங்கேடும்
நா ன் கிரிக்கெட் பற்றி நடுகல்லில் எழுதிய கட்டுரையை நட்புக் குழுக்களுக்குள் பகிர்ந்திருந்தேன் . சிறு வயது நட்புக்குழுக்குள் பெரிதாக எந்த சலசலப்பும் இருக்காது . அங்கு நல்ல தேர்ந்த வாசிப்பாளர்களும் கருத்துக்களைப் புகுத்தறியும் தன்மையும் உண்டு . ஆனால் " அஞ்சு ரூவா " கருவாட்டுக்கு ஆலாய்ப் பறக்கும் தெரு நாய்க் குழுக்கள் சில உள்ளன அவற்றில் இந்தக் கட்டுரையை விட்டெறிந்தால் போதும் குதறியெடுப்பதுடன் மட்டுமின்றி , என்னை குழுவிலிருந்து தூக்கியெறிவதும் உறுதி . அதைப் பற்றியெல்லாம் அஞ்சினால் எழுத முடியுமா என்ன ? கண்டிப்பாக இதை அந்தக் குழுவில் பகிர்வேன் . சென்ற கட்டுரைக்கே எனக்கு கிரிக்கெட் தீவிரவாதிகளிடமிருந்து கடும் சாபங்கள், மற்றும் வசைகள் வந்தன. நான் எழுதவில்லை ? நான்கைந்து மட்டையான்கள் தவிர இங்கு சொல்லிக்கொள்ள ஓன்றும் இல்லை . அனல் பறக்கும் பந்து வீச்சுக்கு வழியில்லை . இறுதிப்போட்டியில் தோற்றார்கள் . இந்தியர்களை ஒரு முக்கியமான உயிர்போகுமளவு சிக்கலான கட்டத்தில் ஒருங்கிணைப்பது என்பது எவ்வளவு சிரமம் என்பதை சமீபத்தி...