Posts

Showing posts from May, 2022

என் வயது இருபது

Image
கா ல எந்திரம் என்பது அறிவியல் ரீதியில் சாத்தியமான   ஒன்றா என்று தெரியாது . நம்மால் ஏறித்தான் பயணிக்க முடியாதே ஒழிய , சில வரம்பெல்லைகளுக்குட்பட்டு , காலச் சாளரத்தின் வழியே எட்டிப்பார்க்கும் உணர்வை அளிக்கவல்ல   ஒன்றுதான் யூட்யூப் என்று தயங்காமல்   சொல்லலாம் . ஒரு காலத்தில் , திரை அரங்குகளில் ஃபில்ம் டிவிஷனின் ஆவணப்படம் பார்க்காமல் படத்தைப் பார்த்தால் , படம் பார்த்த திருப்தியே இராது என்று சொல்லும் ஆட்கள் உண்டு . நான் கொஞ்சம் கொஞ்சமாக நாஸ்டால்ஜியா என்னும் வெற்றுப்   போதையை விட்டு விலகி வெறும் பதிவு செய்பவனாக மட்டும் இருக்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறேன் . இறந்தகாலம் என்பது எவ்விதக் கொண்டாட்டமும் இல்லாத ஒன்று என்று கொஞ்சம் கொஞ்சமாக   ஞானமடைந்து வருவதால் கூட அவ்வாறு இருக்கலாம் .   இன்றிலிருந்து ஒரு ஐம்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு , ஒரு இருபது வயதை எட்டிய   இளையோரின் சுதந்திர இந்தியா என்னும் இளம் தேசத்திடம் உள்ள ஏமாற்றங்கள் , எதிர்பார்ப்புக்கள் , பிரச்சனைகள் , கனவுகள் மற்றும...

ரேக்தா

Image
சா ருவின் " நான்தான் ஒளரங்கஸேப் " ஒரு   தொடராக Bynge இல் வெளிவந்து கொண்டிருக்கும்போது ,  தொடர்ச்சியாக சிந்தனையைத் தூண்டிக்கொண்டே இருந்த இடங்கள் சில இருந்தன . அவைகளில் ஒன்றுதான் சுருக்கமாகச் சொன்னால் ஹிந்தி - உருது விவாதம் அல்லது ஹிந்தி - உருது பிரச்சனை . இதைத் தொடங்கி வைத்தால் , பல கிளைகளை விரித்துப் படர்ந்து பரவிக்கொண்டே முடிவே இல்லாமல் சென்றுகொண்டிருக்கும் . இது ஒரு Infinity Puzzle மாதிரியானது .  விவாதங்கள் என்றால் மொழி வெறியுடன் அடித்துக்கொள்வதல்ல. இம்மாதிரி விவாதங்கள் மிக அருமையாக, நல்ல முதிர்ச்சியுடன்    Jashn-e-rekhta போன்ற அரங்கங்களில் நடக்கும். அம்மாதிரி விவாதம் சிலவற்றின் காணொளிகள் மேலே நல்கப்பட்டிருக்கிறது.  சாரு   உர்தூ என்று எழுதுவார் . தமிழில் எழுதும்போது அதை உருது என்றுதான் எழுதவேண்டும் என்று விவாதிப்பேன் . கொஞ்சம் விவாதித்துவிட்டு அது அவரவர் விருப்பம் என்று இலகுவில் விட்டுவிடுவேன் . தமிழில் மற்ற மொழிகளில் உள்ள எல்லா ஓசைகளையும் அப்படியே எழுதுவதும் கடினம் . இங்கு தமிழ்நாட்டில் இர...

மீண்டும் அதே

Image
  இ ம்மாதிரியான ஒரு உள்ளடக்கத்தில் எழுதுவது அநேகமாக இதுவே கடைசி முறை . மூன்றாம் முறையோ என்னவோ , எனக்கே சலிப்புத் தட்டிவிட்டது .   என் வாழ்நாளில் இன்று வரை நான்தான் சரியாக அறம் பேணவில்லையோ ? இந்த நேரத்தில் இப்படிச் சொல்லியிருக்கக் கூடாதோ ? அப்படிச் சொல்லியிருக்கக்கூடாதோ ? ஐயோ பாவம் . என்றெல்லாம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இதுநாள் வரை என்னை நானேதான் வருத்திக் கொண்டிருக்கின்றேன் என்று தெரிய வருகிறது . இத்தனைக்கும் என் பாட்டி " ஐயோ பாவம்னா ஆறு மாச பாவம் புடிக்கும் " என்று சொல்வாள் . அவள் கிடக்கிறாள் கிறுக்குக் கிழவி என்று எண்ணியது உண்டு . அவள் போய் இருபத்தைந்து வருடங்கள் ஆகின்றன . என்னையே செல்ஃப் டவுட்டில் தள்ளிய நாய்களை ( சொந்தக்கார நாய்கள் உட்பட , அதில் பெட்டை நாய்களும் அடக்கம் . ஒரு வேளை இதைப் படிக்க நேரிட்டால் , அது உனக்கு உறுத்தினால் உடனடியாக அன் ஃபிரென்ட் செய்துகொண்டு ஓடிவிடவும் )   இன்று வரை இந்த உண்மை தெரியாமல் நான்தான் செய்வதையும் செய்துவிட்டு மன சாட்சி   மயிர் சாட்சி ...