மனநலமும் இன்றைய சவால்களும் #2
OCD யை மறந்துவிட்டாய் என்று நண்பர் ஒருவர் சுட்டினார் . OCD இல்லாமலா என்று இந்த அத்தியாயம் . இன்னொன்றும் எழுதவேண்டியிருக்கிறது . வேறு ஒரு நண்பன் தலைப்பில் ஃபிக்ஷன் என்று சொல்லிவிட்டு, மருத்துவக்கட்டுரை எழுதுகிறாயே என்று கோபித்துக்கொண்டான். இருக்கிறது என்று சொல்லிவிட்டு குறைவாக இருப்பதற்கு பதில், தலைப்பில் சரி செய்துவிட்டு, தேவைப்பட்ட இடத்தில் மட்டும் ஃபிக்ஷன் தரத்தில் எழுதுவோம் என்று இந்தத் திருத்தம். இந்த Anxiety சம்பந்தப்பட்ட கோளாறுகளில் முக்கியமான ஒன்றுதான் OCD எனப்படும் Obsessive Compulsive Disorder. உலகத்தில் இருக்கும் முக்காலே மூணு வீசம் Taboo க்களும் இவர்களில் இருக்கும் . அதீத நம்பிக்கைகள் , விலக்கல்கள் என்று அனைத்திலும் கொஞ்சமும் நெகிழ்வுத்தன்மையில்லாமல் இருப்பர் . நம்பிக்கைகள் என்று வரும்போது பக்தி என்றால் தீவிரமான பக்தி அல்லது மூட நம்பிக்கையாக இருந்தால் , அதில் வெறித்தனமான பற்றுதலுடன் இருப்பர் . ஹோமோ ஃபோபிக் என்றால் , கடைசி வரை ஹோமோ ஃபோபிக்தான் . தெருவில் இறங்கி நடக்கும்போது தப்பித்தவறி பூனை குறுக்கே போய்விட்டால் அவ்வள...