இந்த
ஸ்ட்ரக்சரலிஸம், டீகன்ஸ்ட்ரக்ஷன்,
போஸ்ட் மார்டனிஸம், வண்டி மையிஸம் (இதற்கு ரைமிங்காக வேறு ஒன்று வரும்
அதை எழுதாமல் எப்படி சாமார்த்தியமாகத் தவிர்த்தேன் பார்த்தீர்களா? சேர்வாரோடு சேர்ந்து அழிந்தது போதும் என்று திருந்திக்கொண்டுவருகிறேன்) மயிரிஸம், எல்லாம் பற்றி ஆங்காங்கே என் அய்யன் கதைகளில் குப்புறப்போட்டு குத்தி விட்டிருந்தேன். இவைகளெல்லாம் வெறும் தியரிகள். எவனும் கண்ணால் கண்டான் இல்லை. லிட்ரேச்சரில் பி.எச்.டி
படித்தவர்கள் ஒலட்டும் மேட்டர்கள். இங்கு தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களில் எம். பில்லோ பி.எச்.டியோ முடித்துவிட்டு,
மொக்கை லெக்சர் கொடுக்கும் சப்ஜெக்ட்டுகள். ஆனால் நேம் ட்ராப்பிங் மாதிரி,
இதையெல்லாம் சிலர் மேம்போக்காகப் பெயர்களைத் தெரிந்துகொண்டுவந்து இங்கு தட்டிவிட்டுவிட்டு, நான்தான் தமிழ் இலக்கியத்தை உய்விக்கவந்த அவதாரம் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.
இம்மாதிரி ஸூடோ இலக்கிய பாபாக்கள் ஏன் தமிழ்நாட்டில் கல்லா
கட்ட முடிகிறது என்னும் கேள்விக்கு விடைகாணும் முயற்சிதான் இக்கட்டுரை.
எந்த
ஒரு சமூகத்திலும், இங்கு சமூகம் என்ற வரையறையில் அந்ததந்த
மொழியில் பேசவும் சிந்திக்கவும் தெரிந்தவர்கள் என்று இச் சட்டகத்தை ஒரு
புரிதலுக்காகச் சுருக்கிக் கொண்டு, மேற்கொண்டு தொடர்வோம்....என்றெல்லாம் மொக்கை மொழிநடையில் புளி உருட்டிக்கொண்டிருக்காமல் நேரடியாகவே வருவோமே?
அதாவது
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கலாச்சாரம் என்பது அரசியல், மொழியறிவு, கலைகள், என்று எது எடுத்தாலும் அது
சினிமாதான். கலாச்சாரம் என்று ஒன்று இருக்கிறதா அல்லது இருந்ததா என்று தெரியவில்லை. அது அன்றைய சினிமாவை அல்லது கொரோனா என்றால், அது வருவதற்கு ஒரு
சில வாரங்கள் முன்பு வெளியான சினிமாவைப் பொறுத்தது. மொழியும் அதற்குத் தகுந்தாற்போல் ஐந்தாறு வருடங்களுக்கு ஒரு முறை பாம்பு
சட்டையை உரிப்பதுபோல் உரித்துக்கொண்டு, புதுச் சட்டையையும் சினிமாவிலிருந்தே
எடுத்துப் போர்த்திக்கொள்ளும்.
சடுதியில்
சில உதாரணங்களைப் பார்த்துவிட்டுப் போய் விடலாம், இது
பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில்
இன்னும் விவரித்து எழுதுவோம்.
அறுபதுகள்
- டூப் உட்றான், காவாலிப்பய.
எழுபதுகள்
- உட்டான்ஸ்,
லோஃபர்.
என்பதுகள்
- ஸைட் அடிப்பது, ஷோ உட்றான், செருப்பு
பிஞ்சிரும், பந்தா காட்றான்.
தொன்னூறுகள் - ஃபிகரு, திம்ஸ் கட்ட, நாட்டுக்கட்டை, டகால்டி.
இரண்டாயிரம் - லார்டு லபக் தாஸ், டுமீல் விடுவது - (இது தவிர வேறு என்ன மயிறு என்று நினைவு வரவில்லை, வந்தவுடன் பிறகு திருத்திவிடுகிறேன்)
இரண்டாயிரத்து பத்து
- டுபுக்கு (புடுக்குவின் கோட் வேர்ட்), ங்கொய்யால
(ங்கொம்மாளவின் கோட் வேர்ட்), குடிப்பது
= சரக்கடிப்பது.
இரண்டாயிரத்து
பத்து முதல் கொரோனா வரும் வரை - வச்சி செய்யறது, வாயால வட சுடறது, ஸீன்
போட்றது, ப்ரோ, பூமர், வேற லெவல், க்ரிஞ்.
மேற்கண்டவற்றில்
பெரும்பாலானவை சமூகத்தில் உள்ள பொறுக்கிகளிடமிருந்து வருபவை. அவர்கள்
ஏன் உருவாகிறார்கள் என்பதெல்லாம் மேம்போக்கு
எழுத்தின் வழி எட்டிப் பிடிப்பது
கடினம். ஆனால் அவர்களின் பால் அக்கறை உண்டு.
இதில் பல சமூக, பொருளாதார
அரசியல் உள்ளடுக்குகள் இருக்கின்றன அல்லது இல்லாமலும் இருக்கலாம். அவைகளைப் பற்றியெல்லாம் அல்லது இதே மோஸ்தரில் அடுக்குகள், இணுக்குகள்,சிடுக்குகள், படிமங்கள், தொன்மங்கள் என்று எழுதுவது என்றால் நான் க்ளப் மாற
வேண்டும். (அதற்கு பதில் அரை அவுன்ஸ் அரளி
விதையை அரைத்துக்குடித்துவிட்டுச் செத்துப் போய்விடலாம்). கொஞ்சம் நல்ல க்ளப் என்று
நினைத்துக்கொண்டு போன இடத்திலேயே, உள்ளே
அண்டராயர் கிழிந்து நைந்துகிடப்பதை வெளியே எடுத்துக் காட்டிவிட்டு, நம் அண்டராயரில் கையை
உள்ளே விட்டு நைந்திருக்கிறதா என்று தடவிப்பார்க்கிறார்கள் அசிங்கம் பிடித்தவர்கள் (கருமம், இன்னும் ஹேங் ஓவர் விட்ட
பாடில்லை. க்ளப்பை விட்டு வெளியேறி ரெண்டு மாசம் ஆச்சு). நாம் சப்ஜெக்டுக்கு வருவோம்.
சரி இவைகளால் என்ன பிரச்சனை என்றால், மறுபடி விட்ட இடத்துக்கே வருகிறேன். மேற்படி பொறுக்கி வார்த்தைகள் எல்லாம் pop culture இல் ஊடுருவிவிடுகின்றன அதுதான் பிரச்சனை. வேறு எந்த நாட்டிலும், அண்டை மாநிலமான கேரளாவிலும் கூட இல்லாத அவல நிலை இது. pop culture என்பது ஒரு சமூகத்தின் பாகை மானி. அதை கவனிப்பதன் மூலம் ஒரு சமூகம் எந்தளவு சீர் கெட்டிருக்கிறது அல்லது மேம்பட்டிருக்கிறது என்று எளிதாகச் சொல்லிவிட முடியும். உதாரணமாக 70 களில் ஆஃப்பிரிக்கன்-அமெரிக்கன் ராக் பேண்ட் இசைக்கலைஞர்கள் மேடை மேடையாகத் தோன்றி, வரலாற்றில் முதன்முறையாக நிறவெறியை வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்றாகக் கருத வைத்தனர். இது ஒரு நேர்மறையான அறிகுறி.
சரி
பாப் கல்ச்சர் என்பது உணவு, உடை, நிகழ்காலத்திய இசை,
மற்றும் ஸ்லாங்குகள் கலந்த கலவை என்று பார்த்தோம்.
அது வீட்டுக்கு வெளியே உள்ள டீன்களின் உலகம்
ஆனால் அங்கு மேற்கண்டவற்றைத் தவிர பிராதானமாக இருக்கவேண்டியது
என்ன? வாசிப்புதானே?
ஒரு நாகரீகமான சமுதாயத்தில், அது பசிக்கு உணவருந்துதலுக்கு அடுத்த இடத்தில் இருக்கவேண்டிய ஒன்று. இங்கு மேற்குலகில், ஒன்பது வயதுவரை வாய்விட்டு வாசிப்பதுதான் இருப்பதிலேயே அதி முக்கியமான Cognitive திறனாகப் பார்க்கப்படுகிறது. வாசிப்பு மற்றும் ஒரு இசைக்கருவி மீட்டத் தெரிந்திருப்பது அல்லது ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபாடு என்பது இங்கு அனுதினமும் பல் தேய்ப்பது மற்றும் குளிப்பதற்கு ஒப்பான நல்லொழுக்கங்களாகப் பார்க்கப்படுகின்றன. இருவர் சந்திப்புகளில் வாசிப்பு பற்றிய பேச்சுக்கள்தான் பெரும்பாலும் நிறைந்திருக்கும். வாசிப்பு என்பது ஒரு அதி முக்கியமான skill. நடப்பது போன்ற, சுவாசிப்பது போன்ற இயற்கையான திறனாக வளர்த்தெடுக்கப்படுகிறது. அதன் காரணமாக வாழ்நாள் முழுவதும் சளைக்காமல் வாசிக்கின்றனர்.
ஆனால்
நம் ஊரில் வாசிப்பு என்றதும் -
ஓ
பொன்னியின் செல்வன், மாடப்புறா, கன்னி மாடம்லாம் படிச்சிருக்கேனே என்று கிழடுகள் கூறக் கேட்கலாம் அதே கிழடுகள் இன்னும்
கொஞ்சம் கூடுதலாக, குமுதம் ஆனந்தவிகடன்லாம் கூட விடாம படிப்பனே
என்று இயம்பினால் உண்டு. ஒரு நாற்பது வயதுக்குக்
கீழ் என்றால், தமிழ் வாசிக்கவே தெரியாது, எழுத்துக்கூட்டிக் கூட்டி பின்நவீனத்துவம் என்பதை 'பின்நவத்துவம்' என்று வாசித்தார் அன்பர் ஒருவர். நானும் தெலுங்கு, கன்னடம் போன்றவற்றை வாசிக்கும்போது எழுத்துக்களுக்கு பதில் நன்கு பரிச்சயமான சில வார்த்தைகள் தென்பட்டால்
அவற்றை ஒரு உரு மாதிரி
அடையாளம் கண்டுகொண்டு தத்தக்கா புதக்கா என்று சில வார்த்தைகள் கோர்வையாக
வாசித்துவிடுவேன். அன்பருக்கும் தமிழில் 'பின்' மற்றும் 'நவத்துவாரம்' என்று இரு வார்த்தைகள் நன்கு
பரிட்சயம் போலிருக்கிறது அதை வைத்துக்கொண்டு 'பின்நவத்துவாரம்'
என்று சொல்லவந்துவிட்டு கடைசி நொடியில் பின்நவத்துவம் என்று முடித்தார். ஒரு வேளை 'பின்நவத்துவாரம்'
என்று செப்பியிருந்தால், அது என்னை வேறு
ஒரு ஆராய்ச்சிக்கு இட்டுச்சென்றுவிட்டு இக்கட்டுரையையே எழுதவிடாமல் செய்திருக்கும்.
"அஃது பொருண்மையில்
உயர்ந்ததாகவும், அக இயல்புகளாக பன்முகப்பருண்மை,
குறிப்பாற்றல், இன்புறுத்தல், கற்பனைத் திறட்சி போன்றவரை வாசகருக்கு நல்குவது மூலம் ஒரு வரையறைக்குட்படாத உளக்
கிளர்ச்சிக்கும், அக எழுச்சிக்கும் வித்திடுவதன்
மூலமாகவும், பழைய இலக்கிய மரபுகளைக்
கட்டுடைப்பு செய்ய முயலும் விழைவு என்றும் சொல்லலாம் ..."
என்றெல்லாம்
மொக்கச்சாமி க்ளப்பில் சேர்ந்துகொண்டு, கேட்பாரே இல்லாமல் அட்டூழியம் செய்துகொண்டு திரிகிறார்கள்.
இதுவுமே
கூட வெகு அரிதான சிலர்தான்.
மற்றவர்கள் எல்லாம் பொது இயல்பான பப்ஜி,
பைக் ரேஸ், வேற லெவல், பிரியாணி
வெறி என்றுதான் சுற்றுகிறார்கள் (அடேய் தமிழ்நாட்டில் வேறு உணவு வகைகளே
இல்லையா?)
தமிழ்
சினிமா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இலங்கையர்களையும் கெடுத்துக்கொண்டிருக்கிறது. அங்குள்ள தமிழர்களும் இந்த விஷயத்தில் தமிழ்நாட்டுடன்
போட்டி போடுகின்றனர்.
தமிழ் நாட்டில் நிலைமை இந்த லட்சணத்தில் இருப்பதால்தான், யார் வேண்டுமானாலும் குறளி வித்தை காண்பித்து ஃபாரின் எலக்கியம், மெட்டல் ம்யூசிக் வீடியோ லிங்க், உயர் ரசனை என்று ஸீன் போட்டு ஏமாற்ற முடிகிறது. ஒரு காலத்தில், அதாவது தொண்ணூறுகளில், குவைத், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து ஊர் திரும்பும் பொறுக்கி ஃபாரின் ரிட்டர்ன் தறுதலைகள் என்னென்ன மாதிரி ஸீன் போடுவான்கள்? ஏன் அப்படி? ஏனென்றால், நாம் அதுவரை ஃபிளைட் ஏறியவனைக் கண்ணால் கூட கண்டிருக்க மாட்டோம். அவனும் வீ.ஸீ.ஆர், செண்ட்டு, சிகரெட்டு என்று எடுத்துக் காண்பித்து சளைக்காமல், ஷோ ஆஃப் செய்வது பற்றி கொஞ்சம்கூட வெட்கமானமில்லாமல், அவுத்துபோட்டுவிட்டு ஆட்டிக்காண்பிப்பான் தானே? இன்டர்நெட்டெல்லாம் வந்த பிறகு இப்போது எவனாவது பாரின் ரிட்டர்ன் ஸீன் போட்டால் நாம் பொளக்கப்போட்டு நிமுத்துவோமா மாட்டோமா? ஆனால், இலக்கிய உலகில் இன்னும் தொண்ணூறுகள் என்ன, அறுபதுகளில் பாரின் ரிட்டனைக் கண்ணுற்றவன் போல் ஆ என்று வாயைப் பிளக்கிறார்கள். ஏனென்றால் இப்போதுதான் நிலைமை முன்னெப்போதும் இருந்ததைக்காட்டிலும் அதள பாதாளத்தில் இருக்கிறது. அதை அவன்கள் நன்கு பயன்படுத்திக்கொள்கின்றான்கள் அவ்வளவுதான்.
இவர்கள் பின்னால் போகின்றவர்கள் எல்லாம் அரிஸ்டோ மற்றும் ப்ளாட்டோவின் சிஷ்யர்களாகவா மாறுவார்கள்?
ஒரு ஓஷோ டைப் Cult என்றாலும் சரி ஒழி என்று விட்டுத்தொலையலாம். ஆனால் இது ஜிம் ஜோன்ஸ்-ன் Cult. அவர்களுக்கு இப்போது புரியாது. ஜிம் ஜோன்ஸ் Cult களுக்கு என்ன நடந்தது என்று தெரிந்தால் சுதாரித்துக்கொள்வார்கள்.
//மொக்கச்சாமி க்ளப்பில் சேர்ந்துகொண்டு, கேட்பாரே இல்லாமல் அட்டூழியம் செய்துகொண்டு திரிகிறார்கள்.//
ReplyDeleteசெமை..!😂👍