பொன்னியின் செல்வன்
ந ண்பன் ஒருவன் பியர் ப்ரெஷர் , வேறு வழியே இல்லை பார்த்தாக வேண்டியிருக்கிறது அதனால் பார்க்கவிருக்கிறேன் சனி மாலை என்று மெசேஜ் தட்டினான் . இதுநாள் வரை பிறந்தநாளுக்கென்று ஒன்றுமே செய்துகொள்ள மாட்டேன் என்கிறாய் . ஊரே சென்று பார்க்கிறது , இதையாவது செய் . ஃபைண்ட் யூவர் மீ டைம் அண்ட் என்ஜாய் என்று வீட்டில் க்ராண்ட் கிடைத்தது! அப்படியே நெக்குருகிப்போய் டிக்கெட் போட்டுவைத்துவிட்டு காலை ஏழு முதல் மாலை வரை பிழைப்பைப் பார்த்துவிட்டு ஏறக்கட்டி முடித்து விட்டு மணி பார்த்தால் சரியாக ஐந்தே முக்கால் . பிறந்தநாள் வழக்கம்போல், வழமைபோல் மற்றுமொரு நாளாக முடிந்தது . தியேட்டர் வெறும் பத்துநிமிட ட்ரைவ்; சரி என்று ஓடிச்சென்று அமர்ந்தால் - இந்தியர்கள் வெள்ளைகாரப் பொண்டாட்டியையோ , கேர்ள் ஃப்ரெண்டையோ , இந்தியப்பெண்களாக இருந்தால் வெள்ளைக்காரப் பொண்டாட்டனையோ , பாய் ஃப்ரெண்டையோ இழுத்துக்கொண்டு வந்து அமர்ந்திருந்தனர் . பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு தொணதொணவென்று படம் ...