Posts

Showing posts from October, 2022

கன்னி முயற்சி

க ன்னி முயற்சியாக ஆங்கிலத்தில் ஒரு சிறு கட்டுரை. Medium இல் அக்கவுன்ட் செட் செய்துவிட்டு, ஒன்றும் எழுதாமல் டபாய்த்துக்கொண்டிருந்தேன், முதன்முதலில் ஒரு சுமார் சிறுகதை தமிழில் எழுதிவிட்டு, பிற்காலத்தில் நாம் எழுதுவதையெல்லாம் யார் மொழிபெயர்ப்பார்கள் என்று அயர்ச்சியடைந்து, ஆங்கிலம் நன்கு தெரிந்த நான் சகோதரராக மதிக்கும் நண்பர் ஒருவர், அவரிடம் அக்கதையை அனுப்பி,   https://prasannavenkatesans.medium.com/dream-home-home-dream-52ab5bc57544   "அண்ணா இந்த கதைய செத்த வாசிச்சிட்டு சொல்றேளா? நன்னா இருந்தா ட்ரான்ஸ்லேட் பண்ணுங்கோ போறும்"   என்று கேட்டதற்கு, அவர் அதை இரு வரிகள் வாசித்துவிட்டு இடது கையால் தூக்கிப் போட்டுவிட்டார். அவருடைய ஸ்டேண்டர்ட் ரொம்ப ஹை ஸ்டேண்டர்ட். ல. ச. ர, எம் வி வெங்கட்ராம் போன்றவர்கள் கதைகளைத்தான் மொழி பெயர்ப்பார். ஆனால் வாசிப்பு என்று வந்துவிட்டால், ஏனோ பாலகுமாரன் ரசிகர். அதுமட்டும் புரியாத புதிர். அன்றிலிருந்து என்னுடன் டூ வேறு விட்டுவிட்டார், இன்று வரை பேச்சு வார்த்தை இல்லை. ஹை ஸ்டேண்டர்ட் அல்லவா? ஒரு பெரிய எழுத்தாளனிடம் போய் எனக்கு பொன்னியின் செல்வன் படத்தோட

முழுவட்டம் 365

சூ ரியனை முழு வட்டம் அடித்து முடிப்பதற்குள்   எங்காவது வண்டி முட்டி நின்றுவிடும் என்று நினைத்தேன் . ஆரம்பிக்கும்போது , முதல் பாலே சிக்ஸர் என்பது போல் ஆரவாரமாக சென்ற வருடம் அக் . 24 முதல் பதிவு . பெரும் வரவேற்பு . என் ஆஸ்தான குரு , சமகால மற்றும் அடுத்த நூறு வருடங்கள் தமிழ் இலக்கியம் பாய வேண்டிய மொத்தப் பாய்ச்சலையும் பாய்ந்து நாட் அவுட்டில் ஆடிக்கொண்டிருக்கும் தலைவர் , நவீன எழுத்துச் சித்தருடைய ஆசிகளுடன் இனிதே தொடங்கியது நம் எழுத்து .   முதல் ஓவரில் சிக்ஸர் , அதெல்லாம் சரி தொடர்ந்து ஆட முடியுமா என்று பயம் மட்டும் இருந்துகொண்டே இருந்தது . ஒன்றுமே இல்லாமல் சும்மா புனைவு , சிறு சிறு பத்திகள் , இஷ்ட்ட வெங்காயத்துக்கு மனதில் தோன்றிய வண்ணம் சினிமா விமர்சனம் என்று நூற்றுக்கும் மேட்பட்ட பதிவுகள் . சிலவற்றை அகற்ற நேர்ந்தது .   சில முயற்சிகள் ஆரம்பித்து நன்றாகப்போய்க்கொண்டு இருந்துவிட்டு சட்டென்று வண்டி தண்டவாளத்திலிருந்து இறங்கிவிட்டது . உதாரணத்திற்கு எழுத ஆரம்பித்த ஒரு நாவல் , எழுத்து சம்பந்தப்பட்ட வேறு ஒரு

பைபோலார் ஒரு சாபக்கேடு

Image
"மனநலமும் இன்றைய சவால்களும்" இன் #8 ம்  பகுதி செ ன்ற பகுதியில் நான் எழுதிய வசை வார்த்தைகள் மிகக்குறைவு. அவைகளெல்லாம் வெறும் மாதிரிகள் மட்டுமே. அதைவிடக் கடும் வசைகளையும் மனம் மற்றும் உடல் ரீதியிலான சித்தரவதைகளை உடனிருந்து அனுபவிக்கும் குடும்பத்தினர் பலரை நான் பார்த்திருக்கிறேன். நோயாளியின் வாயிலிருந்து வந்து விழும் வார்த்தைகளைக் கேட்டிருக்கிறேன்.   சூழ்நிலையைப் பொறுத்து, இடங்களைப் பொறுத்து, கிராமம், நகரம், குக்கிராமம், பெருநகரம் மற்றும் சமூகப் பொருளாதாரச் சூழ்நிலை மற்றும் Bipolar Disorder நோயின் தீவிரத்தைப் பொறுத்து வார்த்தைகளோ அல்லது அது வெளிப்படும் விதங்களோ மாறுபடும். Bipolar இல் Maniac மற்றும் Depression என்று மாறி மாறி வரும் என்று தொடரின் ஆரம்பத்திலேயே பார்த்தோம். ஆனால் அறுதியிட்டுக் கூறவியலாத கால அளவில் இரண்டுமே நீடிக்கும். பலர் பெரும்பாலும் Maniac இலும், வெகு குறைந்த காலம் Depression இலும் என்றோ அல்லது அதற்கு நேர்மாறாக பெரும்பாலும் Depression இல் மட்டுமே உழன்றுகொண்டிருக்கும் ஆட்கள் கூட உண்டு. இதில் இரண்டாம் பிரிவினருக்கு திடீரென்று உற்சாகம் தொற்றிக்கொண்டு, மளமளவென வேலைகள

இது அவ்வளவு சுலபமல்ல நண்பா(!)

உண்மையில் இது "மனநலமும் இன்றைய சவால்களும்" இன் #7 ம்  பகுதியாகும். "மெண்டல்" தொடர் என்கிற காரணத்தினால், யாரும் வாசிப்பதில்லை.ஒரு Click Bait செட் செய்து, தலைப்பை மாற்றி இட்டிருக்கிறேன். மெதுமெதுவாக  உலகில் உள்ள மிக முக்கியமான மெண்டல் பிரச்சனையான பைபோலார் பற்றி ஆர்வத்தை வரவழைப்பது எம் கடமை என்று நினைப்பதால் இவ்விழைவு.  க ட்டுக்கடங்கா உற்சாகம் , விளிம்புவரை தளும்பி வழியும் மகிழ்ச்சி , துள்ளல் , அதீத ஆக்கவளம் , எல்லா வேலைகளையும் இழுத்துபோட்டுக்கொண்டு செய்வது , உலகத்தில் யாருக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் உடனே அதில் தலையிட்டு அதை முடிக்கும் வரை உறுதியுடன் இருப்பது , ஊன் உறக்கமின்றி , அன்னஆகாரமின்றி எந்நேரமும் பரோபகாரச் சிந்தனை , அனுமானிக்க  இயலவிலா  இலக்குகளை  சுயநிர்ணயம் செய்துகொள்வது .    " அடுத்த வருஷம் இதே நாள் வீடு வாங்குவேன் , சொந்தவீட்டுல காலடி எடுத்து வைப்பேன்   மெர்சிடீஸ்ல போய் ராணி   மாதிரி எறங்குவேன் "   " அந்தத் தேவிடியா   என்னமா பீத்திக்கறா ... என் கால் தூசுக்கு சமமாவாளா பச்சத் தேவுடியா ? காமிக்கறேன்ட