எழுத்தாளர் தகுதிச் சான்றிதழ்
இது நியாயத்திற்கு அய்யன் கதை ஸீரீஸில் அடுத்த கதையாக வந்திருக்கவேண்டியது. அவசரம் கருதி இந்த வடிவத்தில் வெளியாகிறது.
சினிமாவில் போய் வசனம் எழுதுவதோடு இலக்கியம் முற்றுப்பெறுகிறது. அத்தோடு புதிதாக எழுத வருபவர்களளெல்லாம் வாலைச்சுருட்டிக்கொண்டு அங்கு போய் குட்டிக்கரணம் போடுகிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை சினிமாவில் எழுதுவது என்பதுதான் இலக்கியத்தின் உச்சம். இல்லைன்னா நாலு கத எழுதுனா பெரிய புழுத்தின்னு நெனச்சிக்கறானுக. இதுதான் ப்ராது.
ஆமா சினிமா டயலாக் எழுதறதுன்னா அவ்ளோ தொக்கா ராஜா? தலகீழா நின்னாலும் நிம்ப நால முடியாது ஓய்.
அவன் வந்து ஒரு சீன்ல கதாநாயகன் தன் காதல சொல்லமுடியாம தவிக்கறான். இந்த சீனுக்கு டயலாக் எழுதீருங்க ஜீ என்பான். அப்போது அவனிடம் போய், நா ஆட்டோஃபிக்ஷன்ல போயி, பேல்றப்ப குண்டில இருந்து ரத்தம் ஒழுகற மாதிரி வேணா எழுதிக்குடுக்கட்டுமா? அப்பறம் பன்னி வார வாங்கீட்டு வந்து நடுவெரல்ல தொட்டு உள்ள வுட்டுகிட்டதுக்கப்பறம் குண்டி ரத்தம் கட்டீருச்சுன்னு எழுதறேன். எப்டி ஈட்டிய எடுத்து கீழவிட்டு மேல எடுத்தமாதிரி ஜிவ்வுனு அதிர்ச்சி மதிப்பீடு தூக்குமே? அதத்தான நாங்க நாப்பது வருஷமா இங்க தமிழ்ச் சூழல்ல செஞ்சிகிட்டு இருக்கோம்? என்னால திரும்பத்திரும்ப இதையேதான் ரிப்பீட் மோடுல எழுத முடியும். வேண்ணா இந்த சிச்சுவேஷனுக்கு கவித ஒன்னப் போட்ருவமா?
"கிளியே கிளியே, நீ என் தொடையில் வந்து ஏன் அமர்ந்தாய்?" அப்டீன்னு ஸ்டார்ட் பண்ணி ஒரு கவித எழுதறேன். அத வச்சி நீங்களே அப்டியே உங்க கதைக்கி தகுந்த மாதிரி டயலாக்கா மாத்திக்குங்க. அதைக்கேட்டுவிட்டு அந்த இயக்குனர் உடனே வெட்டிவிட்டுவிடுவான்.
அடுத்த நாள்-
ஒரு 'பிரெஞ்சு வெட்டுக்கதை' என்றுவிட்டு ஆணு பொண்ணு எல்லாம் மாற்றி, தமிழ் சினிமாக்காரனுக்கு பதில் ஃபிரெஞ்ச் சினிமாவின் பெண் இயக்குனர் அமீலி மரியூ வசனம் எழுதக்கூப்பிட்டதாகவும், தன் எழுத்தைப் படித்துவிட்டு வெறியாகி டென் டைவுனிங்கில் வைத்து கிஸ் அடித்துக் குஞ்சைப் பிடித்து இழுத்ததால் ப்ளாக் பண்ணி விட்டேன் என்றும் எழுதுவார்.
எழுத்தாளன்னா என்னானு தெரியுமா? அவுனுக்கு எவனோ ஃபூக்கோ, விக்தோர் ஹுகோ, பால் சாத்தர், தெரிதா, Mylan Garnier, Matteo Toussaint, ஹொஸே பெர்ர்ரெஸ், ஹுவான் ஃப்ரெத்ரீக் போன்றவர்கள் பெயர்களை வெறும் தெரிந்துவைத்திருந்தால் மட்டும் போதாது, அங்கு அந்த மொழியில் அவர்கள் போல்டாக புண்டை, முலை, ஓழ் என்று பேண்டு வைத்திருப்பதையெல்லாம் கரைத்துக்குடித்துவிட்டு, நள்ளிரவில் எழுப்பிக் கேட்டாலும் வாந்தி எடுக்கத் தெரிந்திருக்கவேண்டும். அவைகளையெல்லாம் எவனோ நக்கி சாம்பிள் பார்த்துவிட்டு இங்கு வந்து கக்கிவைத்ததை வைத்துக்கொண்டு, வெறி கொண்டு இங்கே வந்து உச்ச இலக்கியம்னா அது புண்டை, முலை, ஓழ்தான் என்று வெறி பிடித்து எழுதும் ஆட்களையும் அதற்கு முட்டுக்கொடுக்கும் ஆட்களையும் பற்றிச் சொல்லவில்லை. சரி அப்போதாவது எழுத்தாளர் என்று ஒத்துக்கொள்வார்களா? சாரி முடியாது.
ராக், ஹெவி மெட்டல், இண்டி ராக், சைக்கடெலிக் ராக், போஸ்ஸ்ஸா நோவா, போஸ்ட் மார்டன் மாதிரி போஸ்ட் டிஸ்கோ, மோடல் டாங்க், ப்ளூஸ் ராக், ரெகட்டன் என்று எதைக் கேட்டாலும் அதைப்பற்றி மூன்று மணி நேரங்கள் பேசத்தெரிந்திருக்க வேண்டும். ஐ எனக்கு இதெல்லாம் தெரியுமே? எனக்கு இலக்கிய சர்ட்டிபிகெட்டு ப்ளீஜ்? நோ, அதையெல்லாம் வச்சிக்கிட்டு இலக்கிய சர்டிபிகேட் குடுக்க முடியாது.
ஒரு எழுத்தாளன்னா அவுனுக்கு டான்ஸ்ன்னா அதுல கரகாட்டம், காவடி ஆட்டம், அடவுகட்டி ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், நய்யாண்டி மேளம் மொதக்கொண்டு த்தாங்கோ, ங்கோங்கோ, ஸல்ஸா, ஜல்ஸா, மரியாச்சி, ஃப்ளெம்மிங்கோ (ஸ்பானிஷ் கனக்ஷனை விட்டுவிட்டால் எப்படி?) ன்னு எல்லாம் தெரிஞ்சிருக்கணும். அதுவும் தெரியுமே, நானே த்தாங்கோ, பெல்லி டான்ஸெல்லாம் அசால்ட்டா ஆடுவனே? பொணத்துக்கு முன்னாடி ஆடறதையெல்லாம் கணக்குல எடுத்துக்க முடியாது. உனக்கெல்லாம் இலக்கிய சர்டிபிகேட் கெடையாது.
இங்க வந்து பிக்காஸோ, வான் கோன்னு மட்டும் ஒலட்டிக்கிட்டு இருக்கக்கூடாது. ஜார்ஜ் காண்டோ, ஜஸ்டின் போவர், ஹோர்ஹேஸ் ப்ராக்கோ மாதிரி அதி உன்னத ஓவியர்களப் பத்தி தெரிஞ்சிருந்தா மட்டும் போதாது, ஸ்ட்ரோக்ஸ்சும் அவங்கள மாதிரியே இருக்கணும். ஸ்ட்ரோக்குன்னா தட்டையா, மொன்னையா கையடிக்கறதுன்னு புரிஞ்சுக்கக்கூடாது. இந்த ஆர்ட் பத்தி ஒண்ணுமே தெரியாத Philistine Society கிட்டயெல்லாம் நான் பேச்சே வச்சிக்க மாட்டேன்.
அட நானே நல்லா வரைவேன் ஸார் ப்ளீஸ் அந்த இலக்கிய சர்டிபிகேட்டு? ஆமா அவுப்பாங்க. போயி ஒலக சினிமா பாத்துட்டு வந்து, "டைனிங் பிக்" பத்தி ஆறு மணி நேரம் பேச முடியுமா? தத்துவத்துல கிற்கேகார்ட், நியேட்ஷே, தெரிதான்னு எல்லாத்தையும் கலக்கி குடிச்சிட்டு வந்திருக்கணும்.
இது தவிர கம்பு சுத்தத் தெரிஞ்சிருக்கணும், குத்து வரிசை, மான் கராத்தே, சமர்சால்ட், காக் ஃபைட்டு, கபடி, கில்லி, கோலி, மாஞ்சா காத்தாடி, பொம்பரம், கொக்கோக சாஸ்திரம், வில் வித்தை, ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குதிரையேற்றம், நீச்சல், வாளெறிதல், வட்டெறிதல், களரிப்பயட்டு, வான சாஸ்திரம், ஜோதிடம், எண்கணிதம், நேமாலஜி, ஃபங் ஷெய், வாஸ்து, அக்கு பன்ச்சர், யுனானி, நேச்சுரோபதி, ஹோமியோபதி, டாரெட் கார்டு அப்புடீன்னு என்னய மாதிரி ஆயகலைகள் அறுபத்துநாலும் தெரிஞ்சிருக்கணும். அப்பத்தான் நீ எழுத்தாளன்னு ஒத்துக்க முடியும்.
நாங்க எல்லாத்தயும் தெரிஞ்சிக்கிட்டு வர்றோம் நீ மட்டும் வக்கணையா அவார்டு குடுக்கறாங்கன்னதையும் சினிமாக்கு போயி சோரம் போனவிங்யளுக்கு காவடி தூக்கு. இங்கிட்டு தெரிதா, பூக்கோ, மெட்டல் ம்யூசிக்குனு அப்புடியே எல்லாத்தையும் கரைச்சி டெய்லி அஞ்சி டோஸ் குடிச்சிப் பெருத்துப்போன உம்பட அள்ளக்கையிக்கி ரெடியா எழுத்தாள சர்டிபிகேட் எடுத்து நொட்டு.
ஒலக வரலாறு தெரிஞ்சிருக்கணும், தத்துவம் தெரிஞ்சிருக்கணும், மெட்டல் ம்யூசிக் தெரிஞ்சிருக்கணும் என்றெல்லாம் சொல்லும்போது, கிட்ட கூப்பிட்டு, அதெல்லாம் சரி "எங்க ஏ ப்ளஸ் பி ஹோல் ஸ்கொயர்க்கு பார்மூலா சொல்லு" என்று கேட்கவேண்டும் போல் தோன்றுகிறது இந்த டிசைனர் இலக்கியவாதிகளிடம்.
யாராச்சி இன்னும் நாலு எழுத்துலகக் கலைமாமணி அவார்டும், கறிச்சோறும் சாராயமும் ஏற்பாடு பண்ணுங்கப்பா. தாங்க முடில. இந்த கேப்புல நடுவுல நடந்த முக்கியமான சம்பவத்தை மறந்துபோய்ட்டேன். லேட்டா எழுதினாலும் பரவால்ல, கவர் பண்ணி விட்ருவோம். ஆமா, யார்ரா நீங்கள்லாம்? சூனியகாரனுககிட்டயே போயி, எலும்பு மிச்சம் வைக்காம பிரியாணிய நக்கித்தின்னுவோட்டு ஏனத்தையும் சுத்தமா புளி போட்டு வெளக்கிக் கழுவி வெச்சுட்டு வந்துருக்கீங்களேடா? உங்கள நெனைச்சா ரொம்பப் பெருமையா இருக்குடா. ஆமா வவுத்தால கிவுத்தால போச்சா போகுலையா? அந்த பிரியாணியத்தின்னுட்டு இன்னும் உயிரோட மட்டும் இருந்தீங்கன்னா, இனி உங்கள எமன்னாலயே ஒன்னும் பண்ண முடியாதுடா.
https://www.youtube.com/watch?v=gg4yv1aGwNw
பிரியாணி என்றதும் நினைவுக்கு வருவது அந்த வீடியோவில் வரும் காட்சி. அங்கு போய் பிரியாணி மண்டிவிட்டு வந்தவர்களுக்கு ஒரு மெசேஜ். உண்மையில் நீங்கள் செய்திருக்கவேண்டியது இந்த வீடியோவில் வருவதைத்தான். நீங்கள் அதற்கு நேரெதிராகச் செய்துவிட்டு வந்திருக்கிறீர்கள். மெச்சத்தான் வேண்டும்.
😂😂
ReplyDelete