இ ன்ஸ்டாவில் எனக்கு கணக்கு இல்லை , ஆனால் ஃபேஸ்புக்கில் இன்ஸ்ட்டா ரீல்கள் வருகின்றன . அவற்றில் - " சுடச்சுட ஒரு பிளேட் காடை பிரியாணி வாங்கி , வாழ எலைல கொட்டி , சைடுல கொடல் கறி , தலக்கறி , கெடா ஆட்டுக் கொட்டக்கறி , மூளக்கறி , ஈரல் , ரத்த ப் பொரியல் எல்லாத்தையும் வச்சி நல்ல்ல்ல்லா பெனஞ்சு விட்டு அப்புடியே எடுத்து வாய்ல வச்சா ..." என்றோ ... " மட்டன் பிரியாணி , கத்திரிக்காய் கிரேவி , சிக்கன் சிக்ஸ்ட்டி ஃபைவ் , ரைத்தா ப்ரெட் அல்வா எல்லாத்தையும் வச்சி கொழப்பி ஒரு அடி அடிச்சா ..." என்றோ ... அல்லது , " கிழி புரோட்டா , கொத்துக்கறி , ஆப் பாயில் , சால்னா எல்லாத்தையும் போட்டுக் கொழப்பி , ஒம்மாள ஒரு புடி புடிச்சா ..." என்றோ , காட்டு மேனிக்குத் தின்று , அதை க்ளோசப்பில் வீடியோ எடுத்துப் போடுகிறார்கள் . அவை எல்லாவற்றிலும் தவறாமல் சீதபேதி வந்த மாதிரி ஒரு மசாலாக் குழம்பை ஊற்றி , வழித்து வழித்து நக்குகிறார்கள் . இவன்கள் ஃபுட் லவ்வர்ஸாம்!!! "ஃபுட்டையே இப்புட...
An Open Personal Journal