Posts

Showing posts from March, 2023

எனது ஒவ்வாமை

அமெரிக்கர்களின் கிறுக்கு ஃபேன்டஸிகளில் ஒன்று   "are we on a simulation?" எனும் கேள்வி . அதற்குத் தகுந்தாற்போல் , இயற்கையும் இயந்திரத்தனமாக , ப்ரோக்ராம் செய்யப்பட்டது போல் , அலாரம் வைத்தது போல் மாறிக்கொண்டே இருக்கும் . இலையுதிர்க்காலம் நெருங்க நெருங்க,  மரங்களில் இலைகள் பச்சையிலிருந்து , ஆரஞ்சு , மஞ்சள் இளஞ்சிவப்பு என்று மாறி உதிர்ந்து , குளிர்காலம் வரும்போது மரங்கள் மொட்டை மொட்டையாக மூளியாய் நின்றுகொண்டிருக்கும் . ஒரு எழுபது வயதைக் கடக்கும்போது பெண்களில் ஒரு ஆண்குரல் தன்மை வந்துவிடும் . அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் , முதன்மையானது மெனோபாஸுக்குப் பிறகு ஈஸ்ட்ரஜன் என்னும் ஹார்மோன் சுரப்பு குறைவதும் , வயதாகும்போது இயற்கையாகவே திசுக்களின் பருண்மை குறைவதும் அதன் காரணமாக குரல் நானில் ஏற்படும் மீட்சித்தன்மை குறைவும் ஒரு காரணம் எனலாம் .  இங்கு அமெரிக்காவில் , ருதுக்கள் மாறுகையில் ஒவ்வொரு ருதுவுக்கும் ஒரு ஒவ்வாமை .  ஸ்ப்ரிங் பருவத்தில் அதாவது இளவேனிற் காலத்தில் , குளிர்காலம் முழுக்க சுணங்கி , வாடி ம...