அன்பே , நாய்களுக்கு தேன் அறவே ஆகாதாம் பேய்களுக்கு அஞ்சனை புத்ரனின் நாமம் பிசாசுகளுக்கு தாயத்து எனில் சைக்கோக்களுக்கு கவிதையாம் நற்சொற்களும் , பின் இசையுமாம் சைக்கோக்களுக்கு துன்பமே இன்பமாம் துயரே துய்ப்பாம் விண்மினி , எத்தனை ஆன்மாக்களின் உயிர்ப்பின் ஒளி நீ! வெறுங் காதல் போதுமே கவிதைகள் எதற்கு என்று எத்தனை மன்றாடியும் உன் கவிதைகளால் மந்தரித்து சைக்கோ என்னை தொலைவில் கட்டுகிறாய் ம்ம் ? நாடி வந்தோர்க்கு காதலையும் கனவுகளையும் அன்னையின் அமுதுபோல் சுரந்து ஒழுகும் நீ குஷ்டரையும் ஸ்நேஹத்தால் குளிர்விக்கும் நீ நாய்களுக்கு ம்ருத்யு தண்டனை என்றபோது துடித்துப் புரண்டாயே ? சைக்கோக்கள் - சபிக்கப்பட்டவர்கள் என்றாய் அது வரை சரி அறிவு ஐந்து... ம்ருகாம்சம் என்றாய் ஆகச்சரி ஆகச்சரி ஆனால் சைக்கோக்கள் சாபத்திற்குரியவர்கள் எனில் அது மட்டும் எங்கனம் சரி ?...
An Open Personal Journal