மினி நாவல்: வட்டங்கள் உள்ளும் புறமும் (பிட் ஏழு)
பெ ண்களில் உள்ள ஒரு விஷேசம் என்னவென்றால், ஒரு பிரச்னையை சுவடு தெரியாமல் அழிக்க வேண்டும் என்று முடிவு மட்டும் கட்டிவிட்டால் போதும், எந்த எல்லைக்கும் செல்வார்கள், எவ்வகையான ஆயுதம் வேண்டுமானாலும் ஏந்தத் தயாராகிவிடுவார்கள், எந்த யுக்தியையும் கையாள்வார்கள். துக்கம் துயரம் பிரச்சனையில் உழல்வது போன்றவையெல்லாம் வெறும் பாசாங்குதான். சில பெண்களைப் பார்த்தால் மேலோட்டமாக பிரச்சனையில் உழன்று அழுது புலம்புவது போல் தோன்றும் ஆனால் அதற்குப் பின்புலத்தில் ஏதோ ஒரு தீவிரமான தயாரிப்பு நடந்துகொண்டிருக்கும். சில வகைப் பெண்கள் அதீத நுண்ணுணர்வு கொண்டவர்கள் பிரச்சனை என்று ஒன்று முளைவிடுவதற்கு முன்னதாகவே ஞான த்ருஷ்ட்டியில் தெரிந்துகொண்டு அது விதையாகப் புதையுண்டு இருக்கும்போதே கிண்டி எடுத்து எறிந்துவிடுவார்கள். முற்றும் வரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். முடிவு மட்டும் எடுத்துவிட்டால் எந்தப் படுகுழியில் இருந்தும், பாதாளலோகத்தில் மாட்டிக்கொண்டிருந்தாலும், எல்லாவற்றையும் முறியடித்துக் கொண்டு மேலே வந்து குன்றின் மேல் ஏறி அமர்ந்து அரசாளுவார்கள். அவளே ஒரு குடி அடிமையாக இருந்தவள்தான், முக்கியத்துவம் கொட