Posts

சூரியப்புத்திரன் என்னும் ஆகாயம்

ஐபிஎல் எல்லாம் தொடங்குவதற்கு முன்பே ஐஸிஎல் என்ற ஒன்றைத் தொடங்கி , கபில் தேவ் மாஸ்டர் மைண்டாகச் செயல்பட்டு , லீக் ஒன்றை நடத்தத்துவங்கினார் . ஆண்டு 2007. மீண்டும் அதே 2007, 50 ஓவர் உ . கோவில் மேற்கத்தியத்தீவுகளிலிலிருந்து பங்ளாதேஷிடம்   நன்கு   வாங்கித் திரும்பியிருந்தது பிசிசிஐ . பிறகு 2007 டி 20  உ . கோ இந்திய வெற்றியையும் ஐபிஎல் இனாகுரல் தொடரையும் ஒருங்கேற நமக்கெல்லாம் சுவைக்கத்தந்தது எதோ ஒரு சக்தி . அதே சக்தி கபில்தேவின் ஐஸிஎல்லைக் கவிழ்த்து விரட்டியும் விட்டது .    தொடந்து 2011 ல் உ கோ வெற்றி . அவ்வளவுதான் சலித்துவிட்டது . தொடக்க ஆண்டு ஐபிஎல்லில் செ . சூ . கி மற்றும் அடுத்த ஆண்டு அது வெல்லும் வரை அதற்கு ஆதரவு . அத்துடன் சரி . முதல் ஐபிஎல்லில் சூ . கியை , ரா . ரா ஷேன் வார்ன் தலைமையில் எங்கிருந்தோ வந்து புரட்டிப் போட்டுக் குத்தியதை மெச்சூரிட்டியுடன் ,  யார் நன்றாக விளையாடினாலும் அவர்களுக்குத்தான் என் ஆதரவு   என்று ரசிக்கத் தொடங்கியதிலிருந்தே , கிரிக்கெட் ரசிகனாக இருப்பதற்கு நான் லாயக்கில்லை என்று மனவிலக்