சூரியப்புத்திரன் என்னும் ஆகாயம்

ஐபிஎல் எல்லாம் தொடங்குவதற்கு முன்பே ஐஸிஎல் என்ற ஒன்றைத் தொடங்கி, கபில் தேவ் மாஸ்டர் மைண்டாகச் செயல்பட்டு, லீக் ஒன்றை நடத்தத்துவங்கினார். ஆண்டு 2007. மீண்டும் அதே 2007, 50 ஓவர் .கோவில் மேற்கத்தியத்தீவுகளிலிலிருந்து பங்ளாதேஷிடம்  நன்கு  வாங்கித் திரும்பியிருந்தது பிசிசிஐ. பிறகு 2007 டி20  .கோ இந்திய வெற்றியையும் ஐபிஎல் இனாகுரல் தொடரையும் ஒருங்கேற நமக்கெல்லாம் சுவைக்கத்தந்தது எதோ ஒரு சக்தி. அதே சக்தி கபில்தேவின் ஐஸிஎல்லைக் கவிழ்த்து விரட்டியும் விட்டது 

தொடந்து 2011 ல் கோ வெற்றி. அவ்வளவுதான் சலித்துவிட்டது. தொடக்க ஆண்டு ஐபிஎல்லில் செ.சூ. கி மற்றும் அடுத்த ஆண்டு அது வெல்லும் வரை அதற்கு ஆதரவு. அத்துடன் சரி. முதல் ஐபிஎல்லில் சூ. கியை, ரா. ரா ஷேன் வார்ன் தலைமையில் எங்கிருந்தோ வந்து புரட்டிப் போட்டுக் குத்தியதை மெச்சூரிட்டியுடன்யார் நன்றாக விளையாடினாலும் அவர்களுக்குத்தான் என் ஆதரவு என்று ரசிக்கத் தொடங்கியதிலிருந்தே, கிரிக்கெட் ரசிகனாக இருப்பதற்கு நான் லாயக்கில்லை என்று மனவிலக்கம் ஏற்பட்டுவிட்டது. 

அது ஒரு காரணமென்றால் நானிருந்த மும்பையில் ஐபிஎல் ஆரம்பித்து எல்லா பப்புகளும் நிரம்பி வழிந்து ஒரு புறம் ரசிகர்கள் ஃபுல் மப்பில் என்ஜாய் பண்ணுவதும், மறுபுறம் நடத்துபவர்கள் ஆயிரம் கோடி என்டர்ப்ரைஸாக மாறி பணத்தில் புரள்வது பற்றிய பொறாமையும் சேர்ந்து மனவிலக்கம் ஆட்டோமேட்டிக்காக ஸெட் இன் ஆகி, 'அடப்போங்கடா, இவ்ளோதான்டா நீங்கள்ளாம்' என்றும் ஆகிவிட்டது. 

இதற்கிடையிலான வருடங்களில் எவன் வருகிறான் போகிறான். எவன் அடிக்கிறான், எவன் வாங்குகிறான் போன்றவற்றையெல்லாம் பெரும்பாலும் கண்டுகொள்வதேயில்லை. நடு நடுவில் .கோ நேரத்தில் மட்டும் சேஸிங் கீஸிங் எதிலாவது உயிர்ப்பிருந்தால் கடைசி ஓரிரு ஓவர்கள் பார்ப்பது. ஆசியக் கோப்பை ஆப்பிரிக்கக்கோப்பை என்று எதிலாவது எவனாவது அப்படி ஆடினான் இப்படி ஆடினான் என்று செய்திகளில் எப்படிப்பட்ட பராக்கிரமங்களை வாசிக்க நேர்ந்தாலும் அவன் ஐபிஎல்லில் காசு வாங்கிக்கொழுத்தவன் என்றால், போங்கடா கூமுட்டைகளா என்று அதையும் கண்டுகொள்வதில்லை 

இது இவ்வாறிருக்க, இப்போது வந்திருக்கிறார்  ஒருவர். சூர்ய குமார் யாதவ் என்னும் ஸ்கை! 2014 முதலே ஐபிஎல்லில் பெயர் அடிபடுவதும், நான் மேற்சொன்ன காரணங்களுக்காக கண்டுகொள்ளாமல் இருந்து இவரை நான் கவனிக்கவே இல்லை. முப்பதோரு வயதில் சர்வதேசப்போட்டிகளில் இந்திய அணியின் கதவைப் பல முறை தட்டித் தட்டி ஓய்ந்தபின் எடுத்திருக்கிறார்கள். .கோவில் அரையிறுதியில் நுழைகிறது என்றதும், ICC காரர்கள் போடும் ஒரு நிமிட ஹைலைட் பார்த்தேன். அட ஷாட்டுகளா அவைகள்? அடுத்து உடனே, இங்கிலாந்துடன் அவர் 55 பந்துகளில் 117 ஓட்டங்கள் எடுத்திருக்கும் அந்த வீடியோவை தேடிப் பார்த்தால், ஒரு ப்ரோக்ராம் செய்யப்பட்ட ரோபோ போல் ஆடுகிறார். எங்கோ வருகிற பந்தை சரியாக அளவெடுத்ததுபோல் 180 டிகிரி திரும்பி லாங் ஸ்டாப்பில் சிக்சருக்குத் தட்டுகிறார், வருகிற பந்து மிகச்சரியாக வந்த அதே வேகத்தில் தொன்னூறு டிகிரி திரும்பி மிட் விக்கெட் நோக்கி கோடு போட்டதுபோல் பறக்கிறது, நடராஜர் ஷாட், குதித்து நாற்பத்தைந்து டிகிரி திரும்பி காற்றிலிருந்துகொண்டே ஹெலிகாப்டர் ஷாட், ஹெலிகாப்டரிலேயே ஆறேழு வேரியேஷன்கள், ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்கூப்எல்ல ஜிம்னாஸ்டிக் மூவ்களுடனும் ஒவ்வொரு ஷாட், டென்னிஸ் பந்தைத் தட்டுவதுபோல் ஒரு ஷாட், சட்டென்று ஒரு ஃபிளிக், அது பாட்டிற்கு ஆளில்லா எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி. 360 டிகிரியில் சுழன்று சுழன்று அடிக்கிறார். பந்து வந்து விழுவதற்கு முன்பே அதைக் கணிக்க முடிந்தால்தான் இத்தகைய ஷாட்களை ஆட முடியும் 

என் அறிவுக்கெட்டிய வகையில் பந்தின் லைனை மட்டும் 100% கச்சிதமாகக் கணித்துக்கொண்டு, லெங்த் பற்றிக் கவலைப்படாமல் நேராக பந்தின் லைன் உடலுக்கு நேராக இருப்பதுபோல் அங்கு நகர்ந்து சென்றுவிடுகிறார். பிறகு எந்த லெங்த்தில் வந்தாலும், அதற்குத்தகுந்தாற்போல் அதை அடிக்கும் திசை மாறுகிறதுமட்டையின் முகம் பந்துடன் மோதும் கோணத்தை மிகத்துல்லியமாக கடைசி வினாடியில் தீர்மானித்து, அதைக் கச்சிதமாகத் திருப்பும் வேலையைச் செய்கிறார். 360 என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். பொருத்தமான பெயர்தான். பந்துவீச்சாளரின் மூளையையும் முன்கூட்டியே படித்துவிடுகிறார். இதற்கெல்லாம் கழுக்குக் கண்களும், எதைப் பற்றியும் கவலைப்படாத மனத்தீரமும்  முக்கியம்.

யார் வீசுகிறார்கள் என்பது பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை போலவும் தெரிகிறது. ஆடுவது பங்களாதேஷா, பாகிஸ்தானா, ஸிம்பாவேவா என்பதையும் கண்டுகொள்வதில்லை போலிருக்கிறது. ஆடுகளம் பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்வதுபோல் தெரியவில்லை. இறுதிப்போட்டிக்கு ஒரு வேளை வந்தால், பவுன்சரை குத்தி ஏற்றி இவரை அடக்கவேண்டும் என்று திட்டம் தீட்டுகின்றனராம் பாக். அணியினர் 

முதலில் அரையிறுதியில் பாப்போம் ஆகாயத்தின் ஆட்டத்தை.          






Comments

Popular posts from this blog

வலியின் கதை

Jawan - An Inimitable Experience

நடுகல் இதழ் 15