Posts

Neglect Couplet

A s a wandering soul, forgotten and lost, I'm but a mere ghost in a world at great cost. I plead for love, but find only empty air, Crying out for aid, but met with silence unfair. As the world moves on, heedless of my cries, I am left behind, drowning in endless sighs. If I were to die, no tears would be shed, No one to wonder what thoughts filled my head. No voice or face to be missed or adored, Gone without a trace, like a forgotten chord. But even in death, I shan't be alone, For the pain and hurt, I've always known, Will leave me be, and finally let me rest, In peace with myself, and nothing less.

Great Gatsby காலம்

ம னித மனங்களின் ஆழ்மன வக்கிரங்கள் குறைந்த பாடில்லை .  சென்ற நூற்றாண்டில் இருபதுகளின் பிற்பகுதியில் Great Depression என்று ஒன்று தாக்கியது , ஆனால் அது மனநலம் சார்ந்ததல்ல . பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தொடங்கி , அசுரவேகத்தில் சரசரவென்று ஏறிய பொருளாதாரத்தின் வீழ்ச்சி , படீரென்று தடுக்கி தலைகுப்புற விழுந்து பற்கள் பதினாறையும் உடைத்துக்கொண்டது . நாம் மானுடர் என்று மனிதன் பெருமையடித்துக்கொள்ளும் அவனின் ஆதார குணநலங்களான பகுத்தறிவு , ஈகையுணர்வு , ஈரம் , சக உயிர்களிடத்து அன்பு மற்றும் நட்பு பாராட்டுதல் இவை எதுவுமே , எக்காலத்திலுமே புராணகால யுகங்களில் கூறப்படுவதுபோல் எப்போதும் நிலைத்து நின்றதில்லை . மானுட விழுமியங்கள் அத்தனையும் வெறும் பாழ் கற்பிதங்கள் , பொய் , பித்தலாட்டம் .   1929 - லும் பொருளாதாரம் நொறுங்கிக் குப்பலாகக் கீழே விழுந்தபோது , அப்படியே கனவுப்பொண்ணுலகம் போல் ஜொலித்துக்கொண்டிருந்த மானுட விழுமியங்கள் , தீபாவளி மாலை வேளை முகூர்த் ட்ரேடிங்கின்போது குஜராத்தி , மார்வாடி பெரு முதலைகள் விருப்பத்துக்கேற்ப

எனது ஒவ்வாமை

அமெரிக்கர்களின் கிறுக்கு ஃபேன்டஸிகளில் ஒன்று   "are we on a simulation?" எனும் கேள்வி . அதற்குத் தகுந்தாற்போல் , இயற்கையும் இயந்திரத்தனமாக , ப்ரோக்ராம் செய்யப்பட்டது போல் , அலாரம் வைத்தது போல் மாறிக்கொண்டே இருக்கும் . இலையுதிர்க்காலம் நெருங்க நெருங்க,  மரங்களில் இலைகள் பச்சையிலிருந்து , ஆரஞ்சு , மஞ்சள் இளஞ்சிவப்பு என்று மாறி உதிர்ந்து , குளிர்காலம் வரும்போது மரங்கள் மொட்டை மொட்டையாக மூளியாய் நின்றுகொண்டிருக்கும் . ஒரு எழுபது வயதைக் கடக்கும்போது பெண்களில் ஒரு ஆண்குரல் தன்மை வந்துவிடும் . அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் , முதன்மையானது மெனோபாஸுக்குப் பிறகு ஈஸ்ட்ரஜன் என்னும் ஹார்மோன் சுரப்பு குறைவதும் , வயதாகும்போது இயற்கையாகவே திசுக்களின் பருண்மை குறைவதும் அதன் காரணமாக குரல் நானில் ஏற்படும் மீட்சித்தன்மை குறைவும் ஒரு காரணம் எனலாம் .  இங்கு அமெரிக்காவில் , ருதுக்கள் மாறுகையில் ஒவ்வொரு ருதுவுக்கும் ஒரு ஒவ்வாமை .  ஸ்ப்ரிங் பருவத்தில் அதாவது இளவேனிற் காலத்தில் , குளிர்காலம் முழுக்க சுணங்கி , வாடி மரத்துப்போ