இ து நடந்து சரியாக ஒன்றரை வருடங்கள் இருக்கும் . கொரோனாவெல்லாம் சரியாக முற்றுப்பெற்று ஒர்க் ஃப்ரம் ஹோமான்கள் ஜட்டியுடன் அல்லது அதுவும் இல்லாமல் , அதாவது பைஜாமாஸிலோ , லுங்கியுடனோ , கட்டைக் கழிசானுடனோ மேலே மட்டும் சட்டையோ , தேநீர்ச்சட்டையோ அணிந்துகொண்டு டீம்ஸ் காலில் பங்கேற்றுக்கொண்டிருந்த காலம் . நான் மட்டும் தினமும் பணியிடம் சென்று வந்துகொண்டிருந்தேன் . நானெல்லாம் கொரோனா வந்த புதிதில் அதாவது இருபதாம் வருடம் மார்ச் இருபத்து மூன்றாம் தேதியிலிருந்து ஏப்ரல் பதினைந்தோ பதினெழோ வரைதான் வீட்டிலிருந்து வேலை . அதற்குப்பிறகு தினமும் அலுவலகம்தான் அவ்வப்போது மட்டும் வீட்டிலிருந்து வேலை / குறைந்தது பத்து மணி நேரம் வேலை , பிறகு வீட்டுக்கு வந்து வெறிபிடித்த மாதிரி எழுதிக்கொண்டிருந்தேன் . அது ஒரு முதல் நாவல் முயற்சி , மொத்தம் முந்நூற்று முப்பத்தைந்து பக்கங்கள் வந்துவிட்டன . தினமும் எழுதுவதை தனித்தனி கோப்புக்களாகச் சேமித்து வைத்திருந்தேன் . அடுத்த நாள் அதை ஒரு பிரதியெடுத்து கொஞ்சம் திருத்திவிட்டு , பழைய பிரதியை அழித்துவிடுவ