மினி நாவல்: வட்டங்கள் உள்ளும் புறமும் (பிட் இரண்டு)
கு ப்பனின் குல வழக்கப்படி குப்புசாமி என்ற நாமகரணம் கூட சகஜம்தான் ஆனால் குப்பன் என்று பெயர் வைப்பதற்கு ஒரு பழைய ஃபேமிலி ஹிஸ்டரியின் தொல் எச்சங்கள் காரணமான கம்பல்ஷன் இருக்க வேண்டும். எதோ ஒரு Jinx breaking கிற்காக முதல் ஆண் பிள்ளைக்கு குப்பன் என்று பெயர் வைப்பார்கள். அடுத்த தலைமுறையில் தேவையில்லை அதற்கடுத்த தலைமுறையில் தேவை. இப்படி எதோ ஒரு பாடாவதி லாஜிக் காரணமாக குப்பன் என்ற பெயர் நாளடைவில் மருவி கூப்பன் ஆனது. அது காரண காரியமில்லாமல் நடக்கவில்லை. அதற்கும் ஒரு தனி மனிதன் தான் காரணம். குப்பனுக்கு Coupon என்று அவன் பெயருக்கு ஸ்பெல்லிங் எழுதுவிக்கப்பட்ட அந்தக் காலகட்டங்களில் வத்தலகுண்டு அரசு ஆரம்பப்பள்ளி ஹெட் மாஸ்டர்தான் அப்பள்ளியின் ஆங்கிலப் புலவரும் கூட. நம்மிடம் படிக்கும் பிள்ளைகளுக்கு எல்லாம் ஸ்பெல்லிங் எழுதச் சொல்லித்தருவது என்பது நானாக எனக்கு வரித்துக்கொண்ட கடமை. அக்கடமையிலிருந்து வழுவவேண்டுமானால் பிணமாகித்தான் வழுவுவேன் என்று வலியப்போய் வம்படியாக ஆங்கிலத்தில் படு வினோதமாக ஸ்பெல்லிங் எழுதப் பழக்குவார். அப்படி எக்ஸ்ஸாக்ட்டாக எப்போது நினைத்தார் என்பது தெரியாது ஆனால்...