மினி நாவல்: வட்டங்கள் உள்ளும் புறமும் (பிட் ஒன்று)

10 டவுனிங் ஸ்ட்ரீட். நேரம் மாலை குத்து மதிப்பாக 6:30 அல்லது 7:30 இருக்கும். சாரு ரோடு ஃபேசிங் ஸைடு டேபிளில் அமைதியாக உட்கார்ந்துகொண்டு இருந்தார் கோப்பையில் ரெட் ஒயின். எதிர் சீட்டில் அராத்து ஷார்ட்ஸ் மற்றும் டீ ஷர்ட்டில் சார்ஜ் போன ப்ளுடூத்தை ஒரு கையால் ஷார்ட்ஸின் இடது பாக்கெட்டில் திணித்துக்கொண்டே மறுகையில் உள்ள ஃபோனில் ஸ்க்ரோல் பண்ணிக்கொண்டே அடுத்த மீட்டிங்க க்ராண்ட் சோலாவுல போட்ரலாமான்னு பாத்தா, ச்சை சொதப்பிட்டான் என்று எவனையோ வைதுகொண்டே, க்ரீன் கோகோநட்டுக்கு ரேட்டிங் வேற கம்மியா குடுத்துருக்கான் என்று அலுத்துக்கொண்டார். சொதப்பிய ஆளின் பெயர்  சொன்னபோது மட்டும் காதில் விழாமல் மியூசிக் ஹை டெசிபலில் எகிறியது யார், எவன், எந்த மயிரான் என்றே தெரியவில்லை. பற்றாக்குறைக்கு பிளாஷ் லைட் வேறு பளீர் பளீர் என்று காட்டுக் குத்து பீட்டுடன் ப்ளண்ட் ஆகி சாருவின் மண்டைக்குள் ஒரு சைடாக குடையத்தொடங்கி விட்டது. வீடு போய்ச் சேர்வதற்குள் மைக்ரேன் ஆகக் கன்வர்ட்  ஆகி விடும். ஒரு அரை க்ளாஸ் ஒயின் உள்ளே போயிருக்கும். பசி வயிற்றைக்கிள்ள ஆரம்பித்துவிட்டது. மதியம் மூன்று மணிக்கு கொஞ்சம் வாழைப்பூ பருப்பு உசிலி மற்றும் ரசம் சாதம் அவ்ளவுதான். இப்போதே படு லேட்  ஒரு வேளை இன்னும் லேட்டானால்  ஒரு ஆம்லெட் போட்டு சாப்பிட்டுவிட்டு படுத்துவிடலாம். ஆம்லெட்டில் துருவிய இஞ்சி நன்கு பொடிப்பொடியாக நறுக்கிய கொத்துமல்லி மற்றும்  மஞ்சள்தூள் ஆகியன கட்டாயம் வேண்டும். இந்த ராத்திரியில் போய் கிச்சனில் எலி மாதிரி குடைந்து கொண்டிருந்தால் அவந்திகாவின் தூக்கம் கெட்டுவிடும். தவிர காலையில் நிச்சயம் பாட்டு உண்டு. 

சாரு அப்பாவியாக ரேட்டிங்னா என்ன சீனி? என்று கேட்க, அராத்து போனில் ஒரு மூன்று நொடிகள்  மும்மரமாக இருந்துவிட்டு. அதான் இப்போ உபேர்ல இருந்து எறங்குன ஒன்னே 3 ஸ்டார் போட்டமே சாரு? அதேதான் என்றார். சாரு ஸ்வாரஸ்யமாக ஓ என்று கேட்டுவிட்டு, அதே பவ்யத்துடன் வெயிட்டரிடம் குடிக்க கொஞ்சம் தயங்கி  தண்ணி என்று சொல்லிக்கொண்டே தம்ப்ஸ் அப் ஜெஸ்ச்சராலும் நீர் கேட்டார். வெயிட்டர், லேகே ஆத்தா ஹூன் சார், சாதா சாஹியே யா தாண்டா? என்றான். சாரு தலையை உயர்த்தி அவன் பேட்ஜைப் பார்த்தால் கருப்புசாமி என்று இருந்தது.  தம்பி ஆம்பூராப்பா?  என்று வினவ அவன் நை சார் குடியாத்தம் என்று சொல்லிவிட்டு நகர்ந்து போனான். 

சற்று தூரத்தில் பேக்ரவுண்டில் ஒரு ஒல்லி பிஹாரி வளைந்து நெளிந்து flairtending பண்ணிக்கொண்டிருந்தான். கருப்புச்சாமி போகிற போக்கில் அவனிடம் 

"அபே காண்டூ ட்டூட் ஜாயேகா து. ஃபிர் ராத் மே முஜே தேரே கர் ஆனா படேகா" 

என்று வம்பிழுத்தான். பிஹாரி வளைந்தாடிக்கொண்டே- 

"போக்காச் சொதா கிலானி பை நயி தில்லி கி" என்று கவுன்டர் அட்டாக் கொடுத்தான்.

கவுன்டரில் பார் ஸ்டூலில் சுற்றி வர உட்கார்ந்திருந்த தடிதடியான மூன்று மார்வாடிகள் கல் மோதிர விரல்களால்  கிளாஸை ஏந்தி ஸ்காட்சை உறிஞ்சியபடி  பிஹாரியை ஓட்டப் பாயிண்ட் கிடைத்த உற்சாகத்தில் அண்டர் டோன்ட்  போதையில் இன்னும் சில விலாசமான குதர்க்க வசைகளுடன்  பிஹாரியைப் பிடித்துக்கொண்டனர். அவனைப் பொழுது போக்குக்காக ஓரிரு ஓட்டுகள் ஓட்டுவதும் நடு நடுவில் கான்டெக்ஸ்ட் சுவிட்ச் பண்ணி -

"அரே தேரேக்கோ Pidilite பேச்னா நஹி சாஹியே தா 2300 மே ரெசிஸ்டன்ஸ் ஹை, ஹஃப்தா பர்  மே படே ஆராம்ஸே நிக்கல் ஜா தா தா, து ச்சூத்தியா ஹை ஜலத் பாஜி கர்க்கே பேச் டாலா" 

என்று அவர்களுக்குள் பேசிக்கொள்வதுமாக இருந்தனர். மூன்று மார்வாடிகளில் நடு மார்வாடியின் தொப்பை தொடையில் படர்ந்து வாட்டர் பெட் போல் தொள தொளத்துக் கொண்டிருந்தது. அடிக்கடி மிடில் பிங்கர் காண்பிக்கும் பாவனையில் நடுவிரலை மட்டும் தனியாக உருட்டி உருட்டி அதில் இருக்கும் மொந்தையான யானை மசிர் மோதிரத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தான். யானை மசிர் என்று ஒரு அனுமானம் மட்டும்தான். உண்மையில் அது ஒரு சிந்தடிக் மெடீரியலாகக் கூட இருக்கலாம்.  

கருப்புச்சாமி தண்ணீருடன் வந்ததும் சாரு என்ன நினைத்தாரோ என்னவோ தம்பியில் இருந்து மரியாதைக்கு மாறிவிட்டார். ஒரு கையால் வாட்டர் பாட்டிலைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டே -

கருப்புச்சாமி நார்த்ல இருந்தீங்களா? 

ஆமா சார் 

எங்கே டெல்லியா? 

ஆலோவர் நார்த் சார். ரிட்டயர்டு ஆர்ம்ட் போர்ஸஸ் என்ற படியே நகர்ந்தார்.

அதற்குள் போன் மணி அடிக்க, அராத்து அதை எடுத்து குரலை உயர்த்தி. என்னது? கேக்கல என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் டேபிளில் ஒரு டக்கீலா ஷாட் வைக்கப்பட்டு ஷாட் க்ளாஸின் வடும்பைச் சுற்றி உப்புத் தூள்  தடவப்பட்டிருந்தது. க்ளாஸின் விட்டத்தை முழுவதும் கவர் பண்ணும் அளவுக்கு நீளமான ஒரு கால் பாகம் லெமன் துண்டு நெடுஞ்சாண் கிடையாகக் கிடத்தப்பட்டு இருந்தது.  

சாரு டக்கீலா ஷாட்டை ஒரு வித மருட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார். அதெல்லாம் ஒரு காலம் என்று நினைத்தாரா  அல்லது அராத்து ஷாட்டை அடித்துவிட்டு உப்பை நக்குவாரா அல்லது நக்கிவிட்டு அடிப்பாரா என்று பார்த்தாரா என்று  தெரியவில்லை. எவ்வளவு தீவிரமாக யோசித்துப்பார்த்தாலும் ஒரு டக்கீலா ஷாட் எவ்வாறு அடிக்கப்படும் என்பது கூட மறந்துவிட்டிருந்தது சாருவுக்கு. 

அராத்துவின் முகத்தில் இப்போது ஓரு இலகுவான எள்ளல் தொனி 

வெளிப்பட்டது. அதே தொனியுடன் ஃபோனில் - 

ஆமா, கரெக்ட்டு அதேதான், அங்கியேதான். எப்புடி பாஸ் கரெக்ட்டா பாய்ண்ட்ட புடிச்சீங்க, சான்ஸே இல்ல! வந்துருங்க...வந்துருங்க என்று சொல்லிக்கொண்டிருந்தார். 

(தொடரும்)

Comments

  1. என்ன வார்த்தை ஜாலங்கள்..

    அழகு..வீட்டின் வாழைப்பூ பருப்பு , ரசம் அழகு...அடுத்து வந்த ஆம்லெட் இப்படியும் பண்ணலாம்..ஓஓஓ..நானும் try pandren... ஹிந்தி மே ஆப் ஹா டயலாக் baguth athmika samaj nahei hota hai...this is my humble opinion...don't mistake me... excellent scripting and language modulation

    Pls keep it continue... i am one of your விசிறி...superb👌🤝

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வலியின் கதை

நடுகல்லில் எனது கட்டுரைகளின் இணைப்பு

Jawan - An Inimitable Experience