மினி நாவல்: வட்டங்கள் உள்ளும் புறமும் (பிட் நான்கு)

சாருவுக்கு இந்த பாஸு என்றோ, தல அல்லது  ஜீ என்று போட்டு பேசினால் அறவே பிடிக்காது, படு அலர்ஜி. அம்மாதிரி நெருங்கிய வட்டத்துக்குள் வேறு யாராவது பேசி இவர் கேட்க நேர்ந்தாலோ அல்லது இவரிடம் அப்படி யாரவது பேச முயன்றாலோ அவ்வளவுதான் சோலி. இதுவே ஒரு பத்து வருடங்கள் முன்பு என்றால் வாடாங் ங்கோத்தா என்று தொடங்கியிருப்பார். சாதாரணர் எல்லோரும் போடா ங்கோத்தா என்றுதான் தொடங்குவர், ஆனால் இவர் அப்படியில்லை, என்ன விவகாரம் என்று தெரியவில்லை. 

இப்போது எல்லாம் மாறிவிட்டது ஒரு வேளை அராத்துவுடனோ அல்லது ஸ்ரீராமுடனோ புது ஆள் ஒருவர் பாஸு கீஸு என்று பேசுவாரேயானால் சாரு  அந்த aversion ஐ வெளிக்காட்டாமல் சரி சீனி நான் நாளைக்கி கால் பண்றேன், ஆழ்வார்பேட் லேர்ந்து Cat Kibble வருது போன வாட்டி வாட்ச்மேன் வாங்கி ட்ராவர்ல வச்சி மறந்துட்டு  இல்லவே இல்லனு சாதிச்சிட்டார், மழை வந்து புழுப்புழுத்தப்பறம் குப்பைல கிடந்ததை அவந்திகா பாத்துட்டு, அவுளுக்கு பொறுக்கவே முடியல, நான் கிளம்பறேன் என்று நைசாக  நழுவிவிடுவார். அராத்துவுக்கு ச்சை அட ஆமால்ல என்று உடனே தலைவருக்கு என்ன பிரச்சனை என்று புரிந்துவிடும்.

ஏனென்றால் சாருவின் எப்பூனைக்கும் இது வரை Stella's & Chewys தவிர வேறு எதுவும் கொடுத்ததில்லை, அதுதான் ஃபீப் பேஸ்டு. பூனைகள் நன்கு தின்று கொழுத்துவிட்டு ஒரு பதினைந்து நாட்கள் எங்காவது ஓசி காச் கிடைக்கிறதா என்று வெளியேறி ஏரியா ரவுடி மற்றும் அதன் எடுபிடி தெருப்பூனைகளுடன் சண்டையிட்டு மிதி வாங்கி பெண்டு நிமிர்ந்து வீடு வந்து சேரும். அம்மைனர் கடுவனுக்காக வீட்டில்  அன்ன ஆகாரமில்லாமல் இரண்டு நாட்கள் தேவுடு  காத்திருந்திருக்கும் பெட்டைப் பூனைகள் இது வரும் நேரம் பார்த்து வீடு தாங்காமல் Stella's & Chewys தின்று உடம்பில் தினவேற்றிக்கொண்டு, இது போய் மிதி வாங்கி வந்த அதே பேட்டைப் பூனைகளுடன் காதலில் விழுந்து வயிற்றுக்குள் மினி பூனைகளை வாங்கிக்கொண்டு வந்துவிடும். இந்த கோக்கு மாக்கு மேட்டரெல்லாம் சாரு ஒன்றுமறியார் பாவம் அவர்பாட்டுக்கு தியாகய்யர் பற்றிய நாவலுக்கு ரிசர்ச் மெடீரியலுக்காக  ஃபாலோ-அப் பண்ணிக்கொண்டு இருக்கும் இடைவெளியில் இவை அனைத்தும் நடந்துவிடும். இது ஒரு  இடைவெளி மேட்டர் மட்டுமின்றி இது அவரின் forte என்பதாலும் அராத்து இதையெல்லாம் ரொம்ப க்ளோஸாக வாட்ச் பண்ணி வைத்திருப்பார். தவிர இந்த மாதிரி நுஆன்சஸ் தெரிந்திருப்பதனால்தான் அராத்துவுக்கு உடனடியாக சாருவின் குறிப்பறிந்து "பாஸு"  மற்றும் "தல" நபர்களை சமயம் பார்த்து வெட்டிவிடவும் முடிகிறது.  

இங்கனம் தன் கண்முன் யாரேனும் எவரையேனும் பாஸ் என்றோ பாஸு என்றோ தல என்றோ ஜீ என்றோ விளிப்பாராயின் அதை எஞ்ஞான்றும் பொறுத்துக் கொளா சாரு, அராத்து பாஸ் என்று தன் முன்னாலேயே அவ்வாறு ஒருவரை விளித்துப் பேசுவது மட்டுமல்ல அவர் முகத்தில் வெளிப்படும் எள்ளல் தொனியையும் கண்ட அவர் துணுக்குறுவதை விடுத்து, அதற்கு மாறாக இதுகாறும் ஒரு தீவிர Ennui வயப்பட்டிருந்தவர், திடீரென முகமலர்ந்தார்.  

அப்படியென்றால் அராத்து யாரையோ லந்து பண்ணிக்கொண்டிருக்கிறார் என்று பொருள். யாரென்று சாரு கண்ஜாடையால் வினவ, அராத்து அந்த சீப் த்ரில்லை அனுபவித்துக்கொண்டே வலக்கை விரல்களைக்குவித்து சாருவிடம் வட்ட sign காட்டினார். 

சாருவுக்கு கிட்டத்தட்ட ஆள் யாரென்று புரிந்துவிட்டது. ஒரே ஒரு ஸிப் ஒயின் எடுத்துக்கொண்டவர், இன்னும் ஆர்வம் மேலிட, ஒரு ஐயப்பாட்டு விலக்குக்காகக்  கேட்டே விட்டார். உள்ளா  வெளியா? 

இதுவரை இந்நாவலை வாசித்துக் கொண்டிருந்தவர்களில் வகிக்கிரர்   யாரேனும் இருந்தால் தயவு செய்து இத்தோடு வாசிப்பதை நிறுத்திக்கொண்டு  எங்காவது கண்காணாமல் போய்விடவும். 

பிறகென்ன பிறகு? மேற்கூறிய அராத்து காட்டிய வட்ட சாடைகள் சாரு வாசகர்களின் இலக்கிய உள் மற்றும் வெளி வட்டங்களாகும் அயன்மீர். இவைகளைப் பற்றி  இதுவரை தெரியாதவர்கள் தெரிந்துகொண்டு வந்து வாசித்தால் போதும், இல்லாவிட்டாலும் போகப் போகத்தெரிந்துவிடும். ஒரு வேளை இப்போது விளங்காதிருந்தாலும் இறுதியில் தெரியத்தான் போகிறது.  

(தொடரும்)


Comments

Popular posts from this blog

நடுகல்லில் எனது கட்டுரைகளின் இணைப்பு

வலியின் கதை

Jawan - An Inimitable Experience