எழுதுவது எப்படி?

வர் ஒரு நல்ல நண்பர். "உங்க ப்ளாக நானாத் தேடிப்போயி படிக்க மாட்டேன் வேண்ணா எனக்கு டெய்லி லிங்க்கு போடுங்க படிக்கறேன், எஃப்பில ட்விட்டர்லயெல்லாம் போடுங்க நெறய பேரு படிப்பாய்ங்க்ய என்று சொல்லியிருந்தார். நல்ல யோசனை என்று அப்போதில் இருந்து போஸ்ட் பண்ண ஆரம்பித்திருந்தேன். (அவர் ட்விட்டர் என்று சொன்னபோது எனக்கு டுய்ட்டர் என்று என்று காதில் விழுந்த மாதிரி நியாபகம், தெக்கத்தி ஊர்கள் தொடங்கும் பார்டர் ஊர்க்காரர். வடிவேலு ஸ்லாங் நன்கு பேசுவார்) நேற்று வேறு ஒரு விஷயத்திற்காக ஃபோனில் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது பேச்சுவாக்கில் "என்னைய்யா நீர் நான் எழுதும் ஒன்றையும் படிப்பதே இல்லை போலிருக்கிறதே" என்று கடிந்துகொண்டேன். இந்த வருடம் குறிப்பிட்ட சில பேர் தவிர நிறைய பேருக்குப் புத்தாண்டு வாழ்த்து வேறு அனுப்பவில்லை. அந்தளவு எழுதுவதிலும் வேறு வேலைகளிலும் மும்மரம். அதிலும் குறிப்பாக என் ப்ளாக்கை ஃபாலோ செய்பவர்களுக்கு மட்டும் அனுப்பியிருந்தேன்.  இவன் பாரு வேலை இருக்கும் போது மட்டும் மெசேஜ் அனுப்பறான் என்று எண்ணிவிடக்கூடாது என்ற கவலை.  இவர் என் வாழ்த்துக்கு ஒரு கர்ட்டஸி எதிர் வாழ்த்து கூடப் போடவில்லை அதையும் வாய் விட்டே கேட்டுவிட்டேன். சரி படிப்பதுதான் இல்லை ஜே-பெக்குகளுக்கா பஞ்சம்? ஏதாவது ஒன்றை எனக்கு குறைந்தபட்சம் பார்வர்டு தட்டிவிட்டிருக்கலாமே என்றேன். மிக நியாயமான காரணம் ஒன்றைச் சொன்னார் ஓ சரி என்று ஏற்றுக்கொண்டேன்.  

நீங்க அனுப்பறது எல்லாத்தையும் படிக்கறது இல்ல பாஸு ஆனா அந்த அ.பு அருமையா இருந்துச்சி என்றுவிட்டு அதில் உள்ள ஒரு விஷயத்தை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டு வேறு ஒரு விஷயத்தை ஓட்டினார். ஆமா நீங்கதான் எழுதறீங்களா இல்ல வேற ஆள் போட்டு எழுதறீங்களா என்று கேட்டார். எங்களுக்கு இதெல்லாம் ரொம்ப சகஜம்தான் அவர் என்னை ஓட்டுவதும் நான் அவரை வாருவதும் போனில் கூட ரொம்பக் குறைவு. நேரில் என்றால் சாதாரண உரையாடலே Roasting மாதிரிதான் இருக்கும். காரணம் எங்கள் இருவரின் Sense of humor இல் பல உள்குத்துக்கள் இருக்கும். சிறு சிறு விஷயங்களையும் overtoned மோடில் சென்று ஓட்டிச் சிரித்துவிட்டுதான் கொஞ்சம் சீரியஸுக்கு மாறுவோம். அதனால் அவர் அப்படிக் கேட்டதெல்லாம் வெகு சகஜம். மேலே ஒரு லைனில் கோட் அண்ட் கோட்டில் இட்டாலிக் மற்றும் போல்ட்-ல் இருக்கும் மேட்டர் ஒன்றும் அப்படிப்பட்டதுதான். அவருக்கு நன்கு புரியும். அடுத்த முறை பேசும்போது டபுள் ரோஸ்டுக்கு மேட்டர் கிடைத்துவிட்டது. 

ஆனால் வேறொரு நபர் என்னைப் பார்த்து இதே கேள்வியைக் கேட்டதில் உள்ள வன்மம் இருக்கிறதே?!  உண்மையில் என்னுடைய புது வென்ச்சரை முன்னிட்டு பெருமைப் பட்டிருக்கவேண்டியவர். பல சந்தர்ப்பங்களில் இம்மாதிரியான அதிர்வுகளை வெளிப் படுத்தியிருக்கிறார். முன்பும் கண்டுகொண்டதில்லை இப்போதும் கண்டுகொள்ளப்போவதில்லை. அறிவிலிகளுடன் என்னத்தைப்போய், உறவுதானே முக்கியம் என்று இருந்துவிட்டேன்.  எனக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை ஆனால் அதில் கதைக்கான கச்சாப் பொருள் ஒன்று கிடைத்துவிட்டது! கூடிய சீக்கிரம் எழுதுவேன்.  

இந்த இவர் இருக்கிறாரே  அவர் யாரும் கிடையாது ஜெகன்தான். ஜாவா ஜெகன்,  Techno Savvy! நீங்கள் பழையன கழிந்து புதியன புக வேண்டும், தமிழில் எழுதுவற்கான தொழில்நுட்பக்கருவிகள் என்னென்ன என்றெல்லாம் கூறி  ஒவ்வொன்றையும் பற்றி விளக்கி பல அருமையான யோசனைகளை வழங்கினார். பேசும்போது அவைகளை மறுதலித்த நான் இப்போது அதில் ஏதாவது ஒன்றை முயன்று பார்க்கலாம் என்றிருக்கிறேன். ஆனால் ஜெகன், என்னதான் இருந்தாலும் நீங்கள் எழுதுவது பற்றி ஏதோ ஒரு ஸெல்ஃப் ஹெல்ப் குப்பை ஆர்டிகிளைப் படித்துவிட்டு எப்படி எழுதுவது என்று எனக்கு டிப்ஸ் கொடுத்தீர்களே... அதற்கு இருக்கிறது உங்களுக்கு ஒரு நாள்.  

-ப்ரஸன்னா 

Comments

Post a Comment

Popular posts from this blog

வலியின் கதை

நடுகல்லில் எனது கட்டுரைகளின் இணைப்பு

Jawan - An Inimitable Experience