நானென்ன செய்தேனடா?
ப க்தி காணங்களின் சிறப்பே இறைவனிடம் இறைஞ்சும்போதோ அல்லது அவனிடம் தன் உள்ளக்கிடக்கைகளைக் கொட்டும்போதோ வார்த்தைகள் மிகுந்த தோழ பாவத்துடன் வெளிப்படும். அவ்வகையில், கீழ்க்காணும் இப்பாடலில் புரந்தரதாசர், ஏழுமலையானை "நான் என்ன பாவம் செய்தேனடா ரங்கைய்யா? நீதான் என்னை உடனிருந்து காக்கவேண்டும்" என்று தொடங்கி, தொடர்ந்து அவனை ஒருமையில் சுட்டி விளித்து, தன் கீர்தனையிலூடாக உரையாட முற்படுகிறார். இக் கீர்த்தனையைப் பாடிய நரசிம்ம நாயக் அவர்கள் தொடக்கம் முதல் இறுதிவரை தன் குரலினிமையால் கட்டிப்போடுகிறார். மேலும் கேட்டுக்கொண்டே இருப்பதற்கு ஏங்கும் வண்ணம் உள்ள இப்பாடலில், அதி அற்புதமாகச் சில இடங்களில் தன் ஆலாபனை மூலம் புரந்தரதாஸருக்கு வந்தனைகள் செய்கிறார். நல்ல ஒலிப் பெருக்கியிலோ அல்லது ஹெட்செட்டுகளோ அணிந்து கேட்க வேண்டிய கீர்த்தனை. பக்தி காணங்களுக்கே உரித்தான இசைக்கருவிகளும் தாளங்களும் கண்டிப்பாகக் கேட்பவருக்கு உவப்பளிக்கும். வீட்டிலிருக்கும் துணை, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடனும் சேர்ந்து கேட்கலாம். மொழி புரியவேண்டிய அவசியமே இன்றி என்ன நடக்கும் தெரியுமா? கண்கள் பனிக்கும்! அதற்கு நான் உத்தரவ...