பழகுவதில் நீலமும் இளஞ்சிவப்பும்

சிறுவயதிலிருந்து  நான் எதிர்கொண்ட மற்றும் இன்னமும் எதிர்கொண்டுவரும் மிக முக்கியப்பிரச்சனை ஒன்று. இதைப் பற்றியெல்லாம் யாரும் பேசுவதே இல்லை. 

எந்நேரமும் பெண்ணியமும் நொன்னியமும்தான் புடுங்கிக் கொண்டிருக்க வேண்டுமா? மணமாவதற்கு முன் என் தாய், தமக்கை. இப்போது இவள். 

என்ன பிரச்சனை? 

நெட்டி நெட்டித் தள்ளுவது. போ போய்ப் பேசு, போய்ப் பழகு. சரி பழகலாம் என்று போனால், நாமே இந்த விஷயத்தில் ஒரு தத்தி, இம்மாதிரி சமயங்களில் நமக்கு எதிரில் வருபவன் அதை விடப் பெரிய தத்தியாக வந்து அமைந்து தொலைக்கிரான்கள். 

முதலில் நான்-  

'ஹலோ எப்டி இருக்கீங்க?'

'இருக்கேன்' 

'எங்கே இந்தப்பக்கம்?'

'சும்மா அப்டியே' 

'நாளைக்கி லீவுங்களா?'

'இல்லிங்க எங்கத்த? பசங்க ரொம்ப நாளா  தொல்ல, அதான் சும்மா அழைச்சிட்டு போலாம்னு...நமக்கு அதுக்கெல்லாம் எங்க நேரம்?'

'ஆமா கரெக்டு. சாப்டாச்சுங்களா?'

'ம்ம் ஆச்சு. என்னத்த இந்த வயசுல? வீட்டுக்கு வாங்க ஒருநாள் கண்டிப்பா'

'வந்தர்றோம்'

'அவங்க பேசி முடிச்சுட்டாங்களா? போலங்களா?' 

'தெரிலீங்க. ஆமா முடிச்சுட்டாங்கனு நெனைக்கறேன். போலாம்'

இங்கு யூஎஸில்  அதைவிடக் கொடுமை.  பொதுவாகக்  கோடையில் மட்டும் நடக்கும் நிகழ்வு இது.  எட்டு மாதங்கள் குளிரில் விறைத்து வதங்கி, சுருங்கிச் செத்துவிட்டு, கொஞ்சம் வெப்பம் ஏறியதும்,  குழந்தைகளுக்காக என்று உணவுப்பொட்டலங்கள் கட்டிக்கொண்டு ஏதாவது பெரிய தேசியப்பூங்காவிலோ அல்லது வேறு ஏதாவது இடங்களுக்கோ சென்றால், பெண்களும் குழந்தைகளும் நன்கு ஒன்றிவிடுவார்கள். ஆண்கள் அனைவரும் கேனப் பொச்சன்கள் மாதிரி ஒருத்தன் மூஞ்சியை ஒருத்தன் பார்த்துக்கொண்டு உட்கார்ந்துகொண்டிருக்கவேண்டும். எனக்கே யாருடனாவது போய்ப்  பழகுவதற்கு  தார்க்குச்சி கொண்டு யாராவது குத்தவேண்டும் நான் முன்பே சொன்னது மாதிரி முதலில் தமக்கை (ஆல்ஃபா ஃபீமேல் அவள். நான் எழுதுவதெல்லாம் பத்தில் ஒரு பங்குதான். அவளை எழுதாவிட்டால் அணுகுண்டு மாதிரி இருக்கும் ஒவ்வொன்றும்) தற்போது பொண்டாட்டியின் தார்க்குச்சி. நானே ஒரு எயிட்டீஸ் ஃபிகர் போன்றவன், என்னை யாராவது தேற்ற வேண்டுமானால் அவர்கள்தான் ஃபர்ஸ்ட் மூவ் செய்யவேண்டும். 

 இதையும் மீறி நாம் ஏதாவது பேசிக்கொண்டிருந்தால், இன்டோர் என்றால் மோட்டுவளையைப் பார்ப்பது. அவுட்டோர் என்றால் நாம்  ஏதாவது பேசினால், வேறு எங்காவது பார்த்துக்கொண்டே மண்டையை ஆட்டுவது, ஆட்டிக்கொண்டே "டேய் குத்விக்....(பெருங்குரலெடுத்து) டேய் குத்விக், டேய் அங்க போகாதடா, அப்புடி தொங்காதடா, ஓடாதடா, சறுக்காதடா..." அதே அவன் மவன் நடு பார்க்கில் யாரையாவது புல்லி (Bully) பண்ணினாலோ, குஞ்சை எடுத்து ஆட்டினாலோ அப்பனும் ஆத்தாளும் பெருமையுடன் பார்த்து ரசிப்பது. 

 இந்த மயிரான்கள் வீட்டுக்கு இன்வைட் பண்ணுவான்களாம் நான் போய் சிறப்பிக்கவேண்டுமாம். பெஞ்சில் உட்கார்ந்திருக்கையில், நாம் ஏதாவது பேசுகையில் டைட் ட்ராக் பேண்டில் தெரியும் கொட்டையைச் சொரிந்துகொண்டே பேசுவது. எல்லாவனும் என்னைவிட ஐந்து பத்து வருடங்கள்  வயதில் குறைந்தவன்கள் வேறு. இவன்கள் இப்படியென்றால் என் வயதை ஒத்த வயது ஆனால் அங்கிள் (உருவக்கேலி கூடாதுதான், ஆனால் வேறு வழியில்லை இந்த இடத்தில்)  என்னை Cold லுக் விடுவாராம், ஏனென்றால் அவர் ஆபீசராம்.

  இங்கு சோசியலைஸ் ஆக வேண்டுமென்றால் எச்.ஒன்.பி மற்றும் க்ரீன் கார்ட் பிரச்சனைகள், அல்லது எது எங்கே சல்லீசாகக் கிடைக்கிறது என்பன போன்ற விஷயங்கள் பற்றிப் பேசவேண்டும்.  அதுவும் ஒருத்தன் இன்னொருத்தனுக்கு சும்மா சொல்ல மாட்டான் நம்மிடமிருந்து ஏதாவது விஷயம் கிட்டுகிறதா என்று பார்த்துவிட்டு அதற்குப்  பிறகு ஏதாவது நம்மிடம் பேசுவான்கள். நானும் வேறு வழியில்லாமல் பேசுவதற்கு டாபிக் வேண்டுமே என்று இவைகளைப் பேசத்தொடங்கியிருக்கிறேன் இப்போது. ஆனால் நமக்குத் தார்குச்சி. 

படுவேக சோசியலைஸ் டைப் ஆட்களும் உண்டு, நாமும் நம்பி இன்வால்வ் ஆனால், அவன்கள் தோளில் கையைப்போட்ட மறு வினாடியே,  என்கிட்ட ஒரு ஸ்கீம் இருக்கு என்று ஆரம்பித்து ஆம்வே ஏஜெண்டுக்களாக மாறிவிடுகிறான்கள்.

குஞ்சைச் சொரிந்துகொண்டிருக்கும் மயிரான்களுடன் நான் போய் ஐஸ் பிரேக் பண்ணி, பிறகு - 

"அப்பறம் சொல்லுங்க, சாப்டீங்களா என்ன படம் பாத்தீங்க? வெய்யில் ஜாஸ்தி" என்று உருவி விடவேண்டும். 

யாருடன் பேசும்போதும் குறைந்தபட்ச Warmth மற்றும் involvement வேண்டும். அது இல்லாமல் நீ இயல்பு வாழ்க்கையிலும் பெரிய்ய 'பிசினெஸ்லைக்' புளுத்தி என்றால் ஓடிப் போய்விடுங்கள் அடிமை நாய்களா. எனக்கா தெரியாது எச்.ஒன்.பியில் நக்கிக் கொண்டிருப்பது நான் மட்டுமல்ல நீயும்தான் என்று?  

இது தமிழ்நாட்டுச் சூழ்நிலைக்கும் அப்படியே பொருந்தும். இடமும் சூழலும் மட்டும் வேறுபடும் அவ்வளவே. 

இன்னும் விரிவாக எழுத வேண்டிய சீரியஸான பிரச்சனை இது.

Comments

Popular posts from this blog

வலியின் கதை

நடுகல்லில் எனது கட்டுரைகளின் இணைப்பு

Jawan - An Inimitable Experience