அய்யன் ஸீரீஸ் (கதை 5) : உலகின் முதல் தொ.நு. பு

ஏன் அறிவியல் புனைவுதான் இருக்கவேண்டுமா? சட்டமா? தொழில் நுட்பப் புனைவு இருந்தால் யாருக்கு எங்கு குடைகிறது? சரி கதைக்குள் போவோமா? 

தோல்வி கிலியில் புரண்டு படுத்த அய்யனுக்கு உறக்கம் மறந்தது. மனமொப்பாமல் தயக்கத்துடன் கரஸ். எம்ஸீயேவை Unblock செய்து, 

'தம்பி, நான் சும்மா டெஸ்ட் பண்ணேன் என் பரீட்சைல நீங்க தேறீட்டீங்க. உங்க ஆசைப்படியே ஃப்ரீயா ஏதாச்சும் பண்ணிக் குடுங்க தம்பி' என்று மெசேஜ் போட்டான். 

அவன் அதற்கு - 

'அண்ணே ஒங்க நல்ல மனசப் புரிஞ்சுக்காம நான்தான் என்னை நானே தற்-ப்லாக் பண்ணிக்கிட்டேன். அதுக்கு நீங்கதான் என்னய மன்னிக்கனும்ணே' என்று பதில் மெசேஜ் போட்டான்.  

அவன் வந்ததும் "வேரியபிள் ப்ளஷர் ஆஃப் டெக்ஸ்ட்" (Variable Pleasure Of Text) ஃபியூச்சர அப்பறமா பில்ட் பண்ணலாம் மொதல்ல "அய்யன் டோக்கன்ஸ்" இம்ப்ளிமென்ட் பண்ணீருங்க  ப்ளீஸ் என்றான். 

அதற்கு அவன் - 

'அண்ணே ஷிபா இனுவெல்லாம் (Shiba Inu) நாய் பேருல வந்திருக்குன்னே நாமளும் நம்ப ஸ்நோயீ செல்லம் பேருல யுடிலிட்டி டோக்கன் ரிலீஸ் பண்ணலாம்ணே' என்று ஐடியா கொடுத்தான். 

'தம்பி சொல்றத செய்யிப்பா, நீ உன் கம்பெனி ப்ராஜெக்ட்ல ஒரு ஐடியாவும் குடுக்காத, ஆனா இங்க வந்து என் கனவு ப்ராஜெக்ட்ல ஃப்ரீயா ஐடியா நொட்டு' என்று அவன் வாயை அடைத்தான். 

அவனும் மூன்றே நாட்களில் பிளாக் செயின் எழுதி முடித்துவிட்டு ஊரில் வெள்ளாமை முற்றிவிட்டது, அறுப்புக்கு ஆள் கூப்பிட்டிருக்கிறார்கள் என்று போய்விட்டான். அதை இவன் எடுத்து அக்ஸப்டன்ஸ் டெஸ்ட் கூட செய்யாமல் அப்படியே ரிலீஸ் செய்துவிட்டுப் பார்த்தால்,  "அய்யன் டோக்கனுக்கு" பதில் "ஈயன் டேக்கன்" என்று இருந்தது. 

கரஸ். எம்ஸீயே தமிழ் மீடியம் போலிருக்கிறது ஸ்பெல்லிங் பிழை விட்டிருந்தான். சோர்ஸ் கோடில் (Source Code) ஸ்பெல்லிங் பிழை விட்டிருந்தால் பில்ட் (Build) ஆகாமல் எரர் (Error) அடித்திருக்கும். இங்கு அதற்கு வழி இல்லை காரணம் பெயர் என்பது ஒரு "ஸ்ட்ரிங்" (String). அதில் என்ன இருந்தாலும் எரர் அடிக்காது. "போடா அய்ய மயிரே" என்று ஸ்ட்ரிங்கிற்குள் பாஸ் பண்ணினாலும் எரர் அடிக்காது. தவிர அய்யன் பெயரெல்லாம் Solidity க்கு எப்படித் தெரியும்?

அதற்குள் ப்ரைஸ் சார்ட் (Price Chart) ஒரே நாளில் 1100% என்று பச்சையில் எகிறியது. எப்படியோ வேலை செய்தால் சரி என்று விட்டுவிட்டான். வரும்படி ஒரு நாளுக்கு மூன்று டாலர்கள் வருகிறது. ஆனால் புகழ்? தமிழ் இலக்கியத்தின் தலை மகன் என்று அரூவில் ஒரு கட்டுரை? அதற்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும். 

ட்ரக் அடிக்கட்டுகளும் கள்ள மார்க்கெட்டில் வெளிநாட்டு டில்டோக்கள்  (Dildo) வாங்குபவர்களும் 'ஈயன் டேக்கன்ஸ்' மூலம் வாங்கத் தொடங்கி நார்கோட்டிக்ஸுக்கும் சைபர் க்ரைம் டிபார்மென்டுக்கும் படு மண்டைக் குடைச்சலைக் கொடுத்தார்கள்.   

மேற்கு ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பாவிலெல்லாம் நீங்க ஒங்க பிளாக்ல  (Blog) சொன்ன ஃபியூச்சர் எப்போ வரும் எப்போ வரும் என்று போன் செய்து கேட்டுக் கொண்டிருந்தனர். கரஸ். எம்ஸீயேவின் அல்காரிதம் படு கச்சிதமாகவும் செக்யூர்டாகவும் இருந்தது அதனால் 'ஈயன் டேக்கன்ஸ்' இவனுடையதுதான் என்றோ  யார் இந்த வேலையைச் செய்தார்கள் என்றோ இன்டெர்போலாலேயே கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இது தந்த நம்பிக்கையின் காரணமாக, முடிக்காமல் விட்ட தன்னுடைய முதல் சிறுகதையை ஸ்னாப்ஷாட் எடுத்து NFT டோக்கன் ஒன்று வேறு தனியாக ரிலீஸ் செய்யவேண்டும் என்று திட்டமிட்டான் அய்யன். கரஸ். எம்ஸீயே எப்போது வருவான் என்று தெரியாது. மெசேஜ் போட்டால் ரிப்ளை வருவது கிடையாது. போன் செய்தால் யார் யாரோ எடுத்து 

'அவெய்ங் அறுத்துக்கிறுக்யாங், நீங்க யாருணே...?'  என்று கேட்டார்கள்.  

தமிழ் வாசகர்கள் வழக்கம்போல் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. பிளாகில், அமேசான் கிண்டிலிலெல்லாம் ஈ ஆடியது. புதிதாக ஏதாவது எழுதினால்தானே? இதே அய்யன் கதை சீரிஸில், டெக்னாலஜி சம்பந்தமான பாய்ச்சல் கதையில் வந்த மாதிரி அடுத்த கட்டத்துக்குப் போய் செயற்கை அறிவு ஊட்டினால் கதைகள் ஒற்றைச் சொடுக்கில் வந்து மளமளவென விழும். சர சரவென்று க்ளிக் செய்து க்ளிக் செய்து ஸீரோ டிகிரிக்கு அனுப்பி வைக்கலாம். 

சாருவை வைத்து முன்னுரை எழுத வைக்கவேண்டிய அவசியமே இல்லை. அவரை மாதிரியே எழுதுவதற்கு பிறழ்ஸ்-22  என்னும் ரைட்டிங்க் பாட்டிடம் (Writing Bot) எழுதப்பணித்தால் முன்னூறு மைக்ரோ வினாடிகளில் எழுதித் தரும். 

ஆனால் இதையெல்லாம் செய்து முடிக்க தொழில் நுட்பத்திற்கு எங்கு போவது? கரஸ். எம்ஸீயே வேறு லீவில் போய்த்தொலைத்து விட்டிருக்கிறான். 

அய்யனின் சென்ற  படைப்பான "கோஸ்ட் ரைட்டிங்" (Ghost Writing) செய்யப்பட்ட நாவல் வேறு ஹிட் அடித்து இவன் புகழ் உலகம் முழுவதும் பரவியிருந்ததா? 'கோஸ்ட் கல்யாணை' அவிஜா போர்டு மற்றும் தற்சமயம் சாருவின் நாவலில் அவுரங்கசீப் பேசிக்கொண்டிருக்கும் அகோரி மூலமாகவெல்லாம் கூப்பிட்டுப் பார்த்தான். அவர் இவன் பெயரைக்கேட்டவுடனே அஞ்சி நடுங்கி உலகத்துலயே தற்கொலை செஞ்சுக்கிட்ட ஒரே ஆவி நான்தாண்டா. வேணும்னா ஸ்நோயீகிட்ட கேட்டுப்பாரு. அவனுக்காக எழுதி எனக்கே கற்பனை வறட்சி வந்துருச்சி, நானே நாப்பது வருஷம் கழிச்சி வந்து உயிரை விட்டு எழுதிக் குடுத்துருக்கேன் என்று சொல்லி வர மறுத்துவிட்டார்.  

தன் வாசகர்களை வெகுவாக மிஸ் செய்த அய்யன், என்ன எழுதுவது என்று தவித்துப் போய், என் அன்பிற்குரிய வாசகர்களே, அன்பு என்கிற போர்வையில் இப்படி ஒளிந்து விளையாட்டு விளையாடலாமா? நான் இப்படி வெகு காலமாக சும்மா இருக்கிறேன் என்றால் உங்களுக்கு உவப்பானதாக ஏதோ ஒன்றை நல்கவிருக்கிறேன் என்றுதானே பொருள்? என்னுடைய பழைய பதிவுகள் எத்தனை இருக்கின்றன? குறைந்தது அவைகளில் ஏதாவது ஒன்றில் போயாவது, ஐ லவ் யூ அய்யன், ஐ மிஸ் யூ அய்யன் என்று என்றாவது ஒரு மெசேஜ் போட்டிருக்கிறீர்களா என்று கடிந்து கொண்டும் பார்த்தாயிற்று. என்னதான் இரைந்தாலும் எத்தனை இரந்தாலும் தமிழ் வாசகர்கள் கடுகளவு கூடக் கருணை காட்டவில்லை. ஆனால் தொடர்ச்சியாக 'Rotten rat' என்ற ஒரே ஒரு ஹேட்டர் (Hater) மட்டும் டார் டாராகக் கிழித்து கமெண்ட்டில் வந்து மெசேஜ் தட்டிக்கொண்டிருந்தான். 

முதலில் வெறுப்பாளர்களுடன் என்ன பேச்சு? என் எழுத்தை வெறுப்பவர்களும் என்னை வெறுப்பவர்களும் ஒன்று என்று போஸ்ட் போட்டான். ஒரு எதிர் வினையும் இல்லை. இந்த வாசக வஞ்சகர்களைவிட வெறுப்பாள Rotten rat எவ்வளவோ பரவாயில்லை, சரி இவனுடனாவது ஏதாவது வம்பு வளர்ப்போம், அன்பாளனாக, ரசிகனாக மாற்றுவோம். வாழ்க்கையே ஒரு லவ் ஹேட் கேம்தானே என்று ஸ்னேஹ பாவமாக மெசேஜ் தட்டினான். ஏதோ ஓரு போஸ்டிங்கில் உள்ள பின்னூட்டத்திலேயே, எல்லை மீறி இருவரும் பொதுவெளியில் பின்வருமாறு வழக்காடினர்-  

அய்யன்: நீங்கள் உமிழும் வெறுப்பை என் இடது கையால் தாங்கிக் கொள்கிறேன். எங்கே தங்களின் அன்பை  என் வலக்கை மீது உமிழுங்கள் பார்க்கலாம்? 

Rotten rat:  ஏன் கையதான் காமிப்பியா? மூஞ்சியக் காட்டு, துப்பறேன்.

அய்யன்: ஐயகோ! அய்யனைப் படிப்பவர்களுக்கு அன்பு என்பது ஆன்மாவின் அடி ஆழத்திலிருந்து ஊற்றெடுக்கவேண்டும். நீங்கள் என் முகத்தில் உமிழ்ந்தாலும் பரவாயில்லை. 

Rotten rat இவனது இன்வால்வ்மென்ட்டைப் பார்த்து மயங்கி, ச்சை இவனைப்போய் என்று எண்ணினானா என்று தெரியவில்லை. 

Rotten rat: நீங்க இவ்வளவு நல்லவரா? எனக்கு இதுநாள் வரை தெரியாம போச்சே? 

அய்யனும் ஒரு வினாடி ஜன்னல் வழியே கீழுதட்டைக் கடித்தவண்ணம் வானத்தை நோக்கிவிட்டு, அடுத்த வினாடி பிளாகில் - 

அய்யன்: ப்ச்., தியானத்தின் மூலம் வெறுப்புணர்வைக் கடக்கலாம். நீங்கள் Rotten rat கிடையாது. அது வெறும் பாவனைதான். உண்மையில் நீங்கள் ஒரு மனிதர், அற்புதமான மனிதர், மாமனிதர்! 

இதற்கு Rotten rat கண்டிப்பாக இளகி வழிந்து வளைக்குள் ஓடி மறைந்திருக்க வேண்டும். 

Rotten rat: (கண்ணீர் எமோஜி) 

அய்யன்: என்ன Rotten rat, தங்களது உண்மைப் பெயர்? 

Rotten rat: சொல்கிறேன் அய்யன். முதலில் தாங்கள் என்னை மன்னித்தருளுங்கள். நான் என்ன கைம்மாறு செய்ய வேண்டும் தங்களுக்கு? இந்த அற்ப உயிரையும் கொடுப்பான் இந்த ராட்டன் ராட்.

அய்யன்: ஐயோ என் உயிர் நீங்கள்! உங்களிடம் போய் உயிர்ப்பலி கேட்பேனா? ஒரு மில்லியன் "ஈயன் டேக்கன்ஸ்" வாங்குங்களேன். ஒரு டேக்கன், சாரி டோக்கன் 0.00000001 டாலர் விற்கிறது க்யூ காயினில். 

அடுத்தநாள் காலை டெக்கான் ஹெரால்ட்டில் முதற்பக்கத்தில் - 

"Nabbed Man Behind Takensgate Is long Suspected Self-styled Postmodernist!" என்று தலையங்கம் வந்திருந்தது. 

ஜெயநகர் போலீஸ் ஸ்டேஷனில் ஜட்டியுடன் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தான் அய்யன்.

Comments

  1. Super, 🎊 👏 💐 English words in tamil makes it very hard to understand, please add English words in bracket, eagerly waiting the next part.. 😀

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நடுகல்லில் எனது கட்டுரைகளின் இணைப்பு

வலியின் கதை

Jawan - An Inimitable Experience