சல்லியன்ஸ்

நேற்று இரவு ஒருவன் போன் செய்தான். அவன் இதைப் படிப்பதற்கு 0.0000000000001% கூட வாய்ப்பில்லை. 

குறைந்தது ஒரு செய்தித்தாள் வாசிக்கும் ஒருவன்கூட இம்மாதிரி ஈனத்தனமாக நடந்துகொள்ளமாட்டான். 

தாள முடியாமல் நான் இதை நான் இங்கு எழுதுகிறேன். மறு அறிமுகமானதே பல வருடங்கள் கழித்து வாட்ஸப் புண்ணியத்தில். பிறகும் ஒரு வருடம் ஒரு தொடர்பு இல்லை ஒன்றும் இல்லை. திடீரென்று மெசேஜ் போட்டு கால் செய்யச் சொன்னான். செய்தால், அவன்- உன் தம்பி என்ன பண்றான்? சொன்னேன் - பேங்கில் இருக்கிறான். என்ன போஸ்டிங்க்? கோபத்தை அடக்கிக்கொண்டு நான் அது பற்றி கேட்பதில்லை. அப்போ பேச்சு வார்த்தை இல்லையா? (நீங்கதான்டா பங்காளிச்சண்டை கூதி சண்டைன்னு ஒருத்தனுக் கொருத்தன் கழுத்தையும் பொச்சையும் அறுத்துக்குவீங்க புருஷன் பொண்டாட்டிக்கும் பொண்டாட்டி புருஷனுக்கும் வெஷம் வெச்சுக்குவீங்க... தூ... என்று மனதில் நினைத்துக்கொண்டு) இருக்குது ஆனா அதெல்லாம் தம்பியா இருந்தாலும் அதையெல்லாம் கேக்கறது கிடையாது. அவன் எந்தப்பதவியில் இருந்தாலும் இல்லாட்டினாலும் எனக்குத் தம்பிதான் அதை வைத்து அவனை மதிப்பிடுவதாக இல்லை. பழைய நண்பர்களுக்கும் அதுதான் பதவியை வைத்தோ உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறதோ என்பதை வைத்துப் பழகினால் அது வேசைத்தனம். இதை நான் இப்படியே சொல்லாமல் நனி நாகரீகமாகப்  பாலீஷாகச் சொன்னேன். உடனே பேச்சை மாற்றி அவன் ரெஸார்ட்டோ ஏதோ ஒன்றை வாங்கியிருக்கிறானாம் அதை நான் போய் ஊரெல்லாம் பரப்பவேண்டும் என்று அடி போட்டான். இதை எடுத்த எடுப்பிலேயே சொல்லியிருந்தால் முதலில் கொஞ்சம் வேலை என்றால் வருகிறான் என்று மனதுக்குள் கடிந்துகொண்டாலும் உடனே மாறி சிறிதுநேரத்தில் இளகி இருந்திருப்பேன். அதுதான் என் குணம். 

நண்பர்கள் என்றால் நான் வெகு சகஜமாக உண்மையில் மனது விட்டுப்  பேசக்கூடியவன். ஆனால் நான் பேசும்போது பேச்சை மாற்றுவது, இணைப்பைத் துண்டித்துவிட்டு  ஐயோ கட்டாயிருச்சு என்றால், நான் ஒதுங்கிப் போய்விடுவேன். அடேய் எனக்கா தெரியாது? எந்நேரமும் காசு காசு என்று கோவில் குளம் என்று சுற்றிக் கொண்டிருந்துவிட்டு - காசு;, ஜாதகம் ஜோசியம் - காசு; பரிகாரம் - காசு;  எந்நேரமும் காசுக்குப் பொறுக்கித் தின்றுகொண்டு...இந்த இடத்தில் நான் இருப்பதிலேயே கடும் வசையைப் போட்டிருக்கவேண்டும். அதற்குப்  பதில் - கடவுள் உன்னை மாதிரி ஆட்களுக்கெல்லாம்  நவத்துவாரங்களிலும் காசை வைத்து அடைப்பது மட்டுமின்றி  குத்தியும் விடவேண்டும் என்பதோடு நிறுத்திக்கொள்கிறேன். 


Comments

  1. ப்ரசன்னா, நீ சமீப காலங்களில் கோபம் வெளியே காட்டாமல் இருக்கிறாய்....ஆனாலும் அதையும் தாண்டி இந்த பதிவு என்றால்...அவனை தண்டிக்க வேண்டும் இறைவன்....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வலியின் கதை

Jawan - An Inimitable Experience

நடுகல் இதழ் 15