இரு பாடல்கள்
இவ்விரண்டு பாடல்களையும் அப்படியே பகிர்வதை விட, சில வரிகள் எழுதுவது உவப்பு என்று பட்டது. இரண்டும் பண்டரிபுர விட்டலைப் பற்றியது. ஒன்று கன்னடம் மற்றொன்று மராத்தி.
முதற்பாடல் -
ஞானக் குழந்தை என்றால் நமக்கெல்லாம் யார் நினைவுக்கு வருவார்? எனக்கு நினைவுக்கு வருபவர் ரகுராம் மணிகண்டன். வளர்ந்து இளைஞர் ஆகிவிட்டார் என்று நினைக்கிறேன். இந்தப் பாடலைக் கேட்கும்போது கண்கள் கண்டிப்பாகப் பனிக்கும். புரந்தர தாசர் இயற்றிய இப்பாடல் சென்ற வருடத்தின் இறுதியில் தொடச்சியாகப் பல முறைகள் கேட்டு ஒவ்வொரு முறை கேட்கும் போதும் ஒரு துளி கண்ணீராவது உகுத்திருப்பேன் என்று நினைக்கிறேன், காரணமே தெரியாமல்! மொழிப் பரீச்சயமில்லாதோருக்கும் இது நடக்குமென்பது உறுதி.
https://www.youtube.com/watch?v=uCCaFqRoihQ
கன்னட மொழி கிட்டத்தட்ட தமிழ் போன்றே இருக்கும் சகோதர மொழி. மற்ற தென்னிந்திய மொழிகளில் உள்ளது போலவே சமஸ்க்ருத பாதிப்பு உண்டு. இக்காரணத்தினால் தமிழில் இல்லாத சில கடின உச்சரிப்புகள் கொண்ட இப்பாடலை வெகு ஸ்ரத்தையாகவும் அற்புதமாகவும் பாடியிருப்பார் சிறுவர் மணிகண்டன். சப் டைட்டிலில் ஒவ்வொரு வரிக்கும் மொழி பெயர்ப்பு உண்டு என்பதாலும், என்னுடைய அரை குறை மொழியறிவை வைத்துத் தனியாக மொழி பெயர்க்கவேண்டிய அவசியமில்லை என்பதாலும் நியாயத்திற்கு இங்கு நிறைவு செய்திருக்கவேண்டும்.
ஆனால் 'பவாப்தி தாட்டிதவா' என்கிற அந்த ஒரு வரி மட்டும் நேரடியாகத் தைக்கிற வரி என்பதாலும், அது ஆங்கிலத்தில் கொஞ்சம் சுற்றி வளைத்து இருப்பதுபோல் எனக்குப் பட்டதாலும் அதை நான் கீழ்க் கண்டவாறு மொழி பெயர்க்கிறேன் -
'ப(ಭ)வாப்தி தாட்டித்தவா' = 'பிறவிப்பெருங்கடலை நீந்திக் கடந்தவன்'
இரண்டாவது பாடல் -
இதை எழுதியவர் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த கதிமா (गदिमा) என்ற புனைபெயரைக் கொண்ட ஜி. டி மத்குள்கர் (Gajānan Digambar Mādguḷkar). இப்பாடல் வரிகளை இங்கு மெனக்கெட்டு மறுபடி எழுதுவதை விட நேரடியாகக் கேட்பது நலம். நான் உணர்ந்த அல்லது நம்பும் சில உண்மைகள் -
மராத்தி மொழி ஒன்றும் சாதாரண மொழி கிடையாது. இந்தியாவிலேயே சமஸ்க்ரித அடிப்படையிலான மொழிகளில் நேரடியாக அம்மொழியின் கூறுகளை அப்படியே உள்ளடக்கிய ஒரு தொன்மொழி. இதில் உள்ள சில வார்த்தைகளின் உச்சரிப்பு தமிழ் உட்பட வேறு எந்த உலக மொழிகளிலும் கிடையாது. காதுகளைக் கூர்மையாக்கிக் கேட்கவேண்டும். இப்பாடலின் முதல் வரியிலேயே இரு இடங்களில் அம்மாதிரியான சிறப்பு உச்சரிப்புகள் உண்டு. கீழ்கண்ட இக்காணொளியில் உள்ள இன்னொரு சிறப்பு, இதைப் பாடிய இருவரும் தென்னிந்தியப் பெண்கள் ஆவர். உச்சரிப்பில் ஒரு பிசிறு இல்லாமல் அற்புதமாகப் பாடியிருப்பார்கள். இவ்விரு பாடல்களையும் கேட்டுவிட்டு தத்தமது அனுபவங்களைப் பகிருங்கள்.
ஒரு சிறு குறிப்பு:
இப்பாடலைக் கேட்கும்போதும் உங்கள் கண்கள் பனிக்க வேண்டும். இல்லையென்றால் நான் எழுதுவதை நிறுத்திக்கொள்வேன்.
Thanks for sharing
ReplyDelete🧡
DeleteDo you know the version of Kanada Raja is a cover to Mahesh Kale's verison? The original has 14M views on youtube.
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=GA1x7iadCwo
Yes, I do. I've heard Mahesh Kale's renditions innumerable times
DeleteI came to your blog after listening to your Jeeji story here: https://youtu.be/UaI1Ra7np24
ReplyDeleteOne of the best stories I heard in recent times. (Inspired from true events in your life, I guess)
Thanks for reading. I encourage you to read
Deletehttps://prasannavenkatesans.blogspot.com/2022/01/blog-post.html