ஒளரங்கஸேப் கொண்டாட்ட விழாவில் சாரு ஆற்றிய பேருரையானது
'Martin Luther King' ன் 'I Have a Dream' எனும் வரலாற்றுச்சிறப்பான உரைக்கு ஒப்பானது
என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்தக் கட்டுரையை எழுதத் துவங்குவதற்கு சில மணி நேரங்கள்
முன்புதான் சாருவுடன் சிறு Chit-Chat செய்துகொண்டிருந்தேன்
அதில் அவர் "எனக்காக உயிரையே கொடுக்கத் துணிந்த, என் மேல் அன்பைப் பொழியும் அற்புதமான
200 பேர் இருக்கிறார்கள்" என்றார். இதை நான் இங்கே எழுதுவதற்குக் காரணம், இந்த
இடத்தில் ஒரு சேஃப்டி நெட்டை விரித்துவைத்துவிட்டுத்தான் தொடர்ந்து எழுதவேண்டும் என்று
நினைத்தேன். அந்த சேஃப்டி நெட் என்னவென்றால், நானும் சாரு லவ்வர்தான் சாரு ஹேட்டர்
அல்லன் என்பதுதான். மற்றபடி நான் சாரு லவ்வரா ஹேட்டரா என்பது பற்றி வேறு சந்தேகங்கள்
இருந்தால் அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
மொத்த வீடியோவும் அருமை. அதில் மிஷல் ஃபூக்கோ, லக்கான்,
தெரிதா என்றெல்லாம் அவர் பேட்டையில் புகுந்து விளையாடினார். இதில் அதிகாரம் பற்றிய
அவரது வழக்கமான கருத்தும் அட்டகாசம். இறுதியில்
நாம் இம் மொத்தப் பிரபஞ்சத்தில் எந்தளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறோம் என்பது பற்றியது,
அதற்கு பாத்திமா பாபு We are insignificantly small என்று கூறி மேலும் அக்கூற்றுக்கு
வலு சேர்த்தார்.
எல்லாம் அருமை ஆனால், ஆங்காங்கே உதைத்தது. சில விவாதங்களைத்
தொடங்கிவிடவேண்டிய இடங்கள் இருந்தன. அவையாவன -
1. நிர்பயா பாதிப்பில் ஒளரங்கஸேபில் வரும் ஒரு அத்தியாயத்தை
எழுதியது. அதில் ரேப்பிஸ்டுகளுக்கான நியாயம் பற்றிப் பேசியது. அவை எப்படிப் புரிந்துகொள்ளப்படுமென்றால்,
நீ குட்டைப்பாவாடை போட்டுகொண்டுவந்து எங்களுக்கு உபதேசித்தால், நாங்கள் அதற்குப் பழி
தீர்க்கும் விதத்தில் ரேப் செய்துவிடுவோம். அதாவது இம்மாதிரி ரேப்பிஸ்டுகளுக்கு ஒளரங்ஸேப்
நாவலில் வருவது போல் ஏதாவது ஒரு ஃப்ரெஷ்ட்ரேஷன் இருக்கும் அதனால் அப்படிச்செய்கிறார்கள்.
ஆம் இருக்கும். அவைகளையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொண்டு நான் என்ன செய்யவேண்டும்?
என்னை ரேப் செய்யும்போது நான் அனுசரணையுடன் நடந்துகொள்ளவேண்டும். அல்லது அம்மாதிரி வேறு எங்காவது நடந்தால், அவர்களுக்கான
நியாயத்தை லக்கான், தெரிதா போன்றவர்ககளை மேற்கோள் காட்டி அலசி ஆராய்ந்து பேச வேண்டும்.
எங்கு பேசவேண்டும்? சரி எங்கோ பேசுகிறோம். பிறகு?
2. நிர்பயா குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கிராமங்களில்
அப்படியே பத்தரை மாற்றுத் தங்கங்களாக இருந்தனராம். நகரத்திற்கு வந்து கெட்டுப்போய்
விட்டார்களாம்(!) எதைப்பார்த்து? தொடைகளையும் முலைகளையும் பார்த்து. அருமை சாரு! அந்த
வழக்கில், நிர்பயாவுடன் பஸ்ஸில் சென்று கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிர் பிழைத்த அவளுடைய
பாய் ஃபிரெண்ட் கூறிய ஸ்டேட்மென்டில் ஒரு வரி
-
"இந்த நேரத்தில் ஒரு ஆணுடன் உனக்கு எதுக்குடி
சினிமா... தேவிடியா என்று கேட்டு ப்ரொவோக் செய்தனர். அதைக் கேட்க நீ யார் என்று நிர்பயா
எதிர்த்துக் கேட்டாள். அதற்கான எதிர்வினையாகத்தான் அவர்கள் அம்மாதிரி மிருகத்தனமாகத்
தாக்குதல் தொடுத்தனர்"
அவன்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு விஷயம் என்னவென்றால்,
எவளோ தனக்குச் சம்பந்தமே இல்லாதவளாக இருந்தாலும் கூட, இந்த இரவில் இன்னொருவனுடன் சினிமாவுக்குப்
போகிறாள் என்றால் இவள் தண்டிக்கப் படவேண்டியவள். என்ன தண்டனை? கொடூர பாலியல் வன்முறை.
அதாவது முதலில் முறை வைத்துப் புணர்வது, பிறகு பிறப்புறுப்பில் கம்பியைச் செலுத்தி,
பெருங்குடலை அதன் வழியே வெளியே எடுப்பது.
இவன்களின் கிராமத்தில் எந்த மாதிரியான Patriarchal
சூழ்நிலையில் வளர்ந்திருப்பான்கள்? எந்த அளவு இவன்களின் டி.என்.ஏ வில் Patriarchy ஊறிப்
போயிருந்தால், அந்த அளவு கொடூரமாகத் தாக்கியிருப்பார்கள்? இந்த இடத்தில் Patriarchy பிரச்சனையா? அல்லது பட்டாசு
மற்றும் அரை டவுசர் பிரச்சனையா? நான் கல்கத்தா சென்றிருந்தபோது, அங்கு இரு ரிக்ஷாக்காரர்கள் ஒரு பதிமூன்று
வயதுப் பையனை பழி வாங்குவதற்காக அவனை எப்படியெல்லாம் என்னென்னவெல்லாம் செய்தார்கள் என்று என் காதுபடப்
பேசினார்கள். டீ கொண்டு கொடுக்கும் வேலை அவனுக்கு. அவனைக் காட்டிப் காட்டிப் பேசினார்கள்.
அவன் கண் முன் கடந்துபோனான். இவன்களுடைய விக்டிம் அவன். இன்னும் உயிரோடு இருந்தான்.
அவன் வளர்ந்து என்னென்ன செய்திருப்பான்? இது நடந்து இருபத்தைந்து வருடங்கள் இருக்கும்.
இதில் என்ன டிஸ்பாரிட்டி இருக்கிறது? ஃப்ரெஷ்ட்ரேஷன் இருக்கிறது? எதற்கு அப்படிச் செய்தார்கள்?
மிஷேல் ஃபூக்கோவை க்ராஸ் ரூட் லெவெலுக்கு கடத்திவிட்டால்
மேற்சொன்ன குற்றச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பில்லை. சாரு படித்திருக்கிறார். நாமும் படிப்போம்
ஆனால், மிஷேல் ஃபூக்கோவை க்ராஸ் ரூட் லெவெலுக்கு
எப்படிக் கடத்துவது?
3. இது கொஞ்சம் சென்சிட்டிவானது ஆனால் தயங்காமல் எழுதித்தான்
ஆகவேண்டும். ஜெயிலில் நைஜீரியர்கள் குட்டைபாவாடைப் பெண்ணைக் கண்களால் ரேப் செய்தது.
அவர்கள் நைஜீரியர்கள் என்று அவருக்கு எப்படித்தெரியும்? சரி ஒரு ரெஃபரன்ஸுக்காக அப்படிச்சொல்லியிருப்பார்
சாரு. அதைப் பெரிதாக ரேஷியல் மேக்னிஃபயர் வைத்துக்கொண்டு பார்க்க வேண்டியதில்லை. ஆனால்
அங்கு அறிவியல் ரீதியான ஒரு கோணம் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு இங்கு ஒரு ஆஃப்ரோ
அமெரிக்கன், லன்ச் டேபிளில் என்னுடன் பேசிக்கொண்டே, இந்திய யுவதி ஒருத்தியை எப்படி
ஹாலின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை வரை கண்களால் மேய்ந்தான் என்பதைச் சொல்லியாக
வேண்டும். அப்போது அவன் பார்வை எப்படி இருந்தது என்று நான் விளக்க வேண்டியதில்லை. சாரு
கோவா ஜெயிலில் நைஜீரியர்கள் குட்டைபாவாடைத் தொடைகளை எப்படிப்பார்த்தார்கள் என்று ஆரோவில்
பேருரையில் சொல்லிவிட்டார். இவன் ஜெயிலிலா இருந்தான்? இங்கு அவள் குட்டைபாவாடையும்
அணிந்திருக்கவில்லை. நானும்தான் அவளைப் 'பார்த்தேன்', ஆனால் அவன் பார்த்த பார்வையே
வேறு. ஒரு சில இனங்களுக்கு இயற்கையிலேயே லிபிடோ அதிகமாக இருக்கும், அதற்கு டெஸ்டெஸ்டெரோன்
ஒரு காரணம். அதற்கும் காரணம் அவர்களின் ஜீன்கள். ஆப்பிரிக்கர்கள் தடகளத்திலும் கூட
கில்லி. இது அறிவியல் ரீதியான உண்மை. இது ஒன்றும் பிராமணர்கள்தான் புத்திசாலிகள் என்று
சொல்லும் ஸூடோ ஸயன்ஸ் கிடையாது.
இன்னொரு பக்கம், சாருவின் உரை எனக்கென்னவோ மேற்சொன்ன அந்த சம்பவங்கள் மற்றும் அதிலுள்ள மனிதர்கள்
வாயிலாக உண்மையில் தெரிதாவையும் லக்கானையும்தான் அறிமுகப்படுத்துகிறாரோ அல்லது பயிற்றுவிக்கிறாரோ
என்று தோன்றியது. தெரிதாவையும் லக்கானையும் வைத்து அச்சம்பவங்களை நியாயப்படுத்துவதுபோல்
தோன்றவில்லை.
ஆனால், பின்வருவது அதற்கு நேர் மாறாக, நான் பயந்த மாதிரியான
ஒன்றை நோக்கிச்செல்கிறதோ என்ற கவலையை அளித்தது. அதற்குள் செல்வதற்கு முன், சாரு அவர்
சந்தித்த அத்தனை பெண்களும் யாராவது ஒருவரால் அல்லது பலரால் சைல்ட் அப்யூஸ் செய்யப்பட்டிருந்தார்
என்று சொன்னார். இந்தியாவில் தோராயமாக செக்ஸ் ரேஷியோ என்பது 995 என்று வைத்துக்கொள்வோம்
அதாவது ஆயிரம் ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற கணக்கில். சமீப காலங்களில் செக்ஸ் ரேஷியோ
இன்னும் முன்னேறி, பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று எங்கோ படித்த ஞாபகம். இதை
நாம் ஒரு எளிமைக்காக 1000 க்கு ஆயிரம் என்று வைத்துக்கொள்வோம். சாரு இதுவரை ஒரு நூறு
பெண்களைச் சந்தித்திருக்கிறார் என்றால், அவர்கள் அனைவருமே அப்யூஸ் செய்யப்பட்டிருக்கிறார்கள்
என்றால், சாரு இதுவரை ஒரு நூறு ஆண்களையாவது சந்தித்திருப்பார் அல்லவா? அவர்களில் எத்தனை
பேர் அப்யூஸர்கள்? அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆண்களில் எத்தனை பேர் அப்யூஸர்கள்?
நீங்கள் சந்தித்த அத்தனை பெண்ணும் அப்யூஸ் செய்யப்பட்டிருப்பது உண்மையானால், நீங்கள்
சந்தித்ததில் குறைந்தது பாதி ஆண்களாவது அப்யூஸராக இருக்கவேண்டும். ஒரு பத்து சதவீதம்
ஆண்கள்தான் அப்யூஸர்கள் என்றாலும் கூட அவர்கள் தன் வாழ்க்கையில் பத்து பெண் அல்லது
ஆண் குழந்தைகளை அப்யூஸ் செய்திருக்கவேண்டும். ஹேபிட்சுவல் அஃபெண்டராக இருக்கவேண்டும். அப்படியென்றால் நீங்கள் சந்தித்த நூறில் பத்துப்
பெண்கள் ஒரே ஆளினால் அப்யூஸ் பண்ணப்பட்டிருக்கவேண்டும். சரி அதற்குள் போக விரும்பவில்லை
இத்தோடு விட்டு விடுகிறேன். ஏனென்றால், சொல்வதற்கில்லை.
நான் பயந்தது என்னவென்றால், சைல்ட் அப்யூஸ் பற்றிப்
பேசியபோது, மைக்கை வாங்கி நடுக்கத்துடன் கேள்வி கேட்ட ஒரு அன்பர், அம்மாதிரி நடக்காமல்
இருக்கவேண்டுமென்றால் ப்ராத்தலை லீகலைஸ் பண்ணிவிடவேண்டும் என்கிறார். இதுதான் அபாயகரமானது.
இங்குதான் சில Parallels ஐ Draw பண்ணவேண்டியிருக்கிறது.
இங்கு குடியுடன் ஒப்பிடவேண்டியிருக்கிறது. என்னிடம்
குடி நல்லதா என்று பர்சனலாகக் கூப்பிட்டுக் கேட்டால், கெட்டது என்பேன். ஏனென்றால் அதுதான்
உண்மை. ஆனால் அதை ஒரு டாபூ என்று எண்ணுபவன் அல்ல. ஒரு 70:30 என்ற விகிதத்தில் வேண்டுமானால்
பின்னதில் உள்ளவர்களுக்கு குடி ஒரு கொண்டாட்டமாகவும் உவப்பாகவும் இருக்கலாம். சாரு
குடியும் உணவும் ஒன்று என்று சொல்லக்கூடியவர். அது ஒரு உரிமை என்று கொள்ளும் அளவில்
மட்டுமே உணவுடன் ஒப்பிடமுடியும். அதற்கும் மேல் முடியாது. அவரும் அதைத்தான் சொல்லுகிறார்,
பல நேரங்களில் அவர் சொல்லவருவதன் ஆழம் தெரியாமல் பலர் லிட்ரெல் ஸென்சில் எடுத்துக்கொள்வது
போல் தெரிகிறது.
எனக்கு அதில் பிரச்சனை என்ன என்று கேட்டால், மசால்
தோசையையோ, மட்டன் பிரியாணியையோ தின்றுவிட்டு வண்டி ஓட்டிக்கொண்டு செல்பவன் ஒருவன் அண்ணாச்சி
கடையில் தயிர் பாக்கெட் வாங்கிக்கொண்டு சிவனே என்று வீட்டுக்குப் போய்க்கொண்டிருப்பவனை,
ஒலட்டிக்கொண்டே சென்று பின்னாலிருந்து இடித்து,
மூன்று மாதங்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்புவதில்லை. ஆனால் அந்த வலிமை ஆல்கஹாலுக்கு உண்டு.
சோறு-மீன்குழம்பு
அல்லது செட் தோசை, பொங்கல், தயிர் வடை ஆகியவற்றைத் தின்றுவிட்டு, காரில் ஹை
ஸ்பீடில் போய் ஈசிஆரில் டிவைடரில் குத்த வைக்காது. அதே வேலையை மூன்று ரவுண்ட் ரெமி
மார்ட்டினோ, மிலிட்டரி ரம்மோ செய்யவல்லது. அந்த அடிப்படையில்தான் இரண்டையும் ஒப்பிட
முடியாது என்றேன். மற்றபடி வீட்டிலோ, ரூம் போட்டோ ஒரு ஃபுல் ரெட் லேபிளை ஒரே ஆளாகக்
காலி செய்துவிட்டு மட்டையாகிப் படுத்துவிட்டால், எனக்கு அதில் ஒரு பிரச்சனையும் இல்லை.
சாரு டாஸ்மாக் சரக்கும் மற்றதற்கும் வேறுபாடு உண்டு என்பார்.
அதெல்லாம் பரவாயில்ல ஆனால் இந்த வேறுபாடுகளை குடிமகன்களுக்கு எப்படிச்சொல்லிப்
புரியவைப்பது? அது அவர்களுக்குப் புரியும் வரை சிக்னல் சிக்னலுக்கு மிஷல்ஃபூக்கோ, லக்கான் மற்றும் தெரிதாவின் சாரத்தை பிட் நோட்டீஸ் போட்டு விநியோகிக்க
முடியுமா?
அன்பரின் கை
நடுக்கத்தைப் பார்க்கையில், முதலில் அவர் சாருவைப் பார்த்துதான் மரியாதையில்
நடுங்குகிறார் என்று நினைத்தேன். பிறகுதான் பார்ட்டி எதற்கு நடுங்கியது என்று தெரிந்தது.
அவரது மனதில் நெடுநாள் இருந்த உள்ளக்கிடக்கையை,
ஒரு சித்திரத்தை, சித்திரம் பேசுதடி படத்தில் வரும் ஒரு காட்சி அங்கீகரித்திருக்கிறது அதற்கான ரீஅஸ்யூரன்ஸை எப்படியாவது யாரிடமாவது பெறுவதற்காக
சுற்றியலைந்துகொண்டிருத்துவிட்டு, கடைசியில் சாருவிடம் வந்து அவர் அப்யூஸ் பற்றிப்
பேசியதும், இதுதான் சாக்கு என்று அந்தக் கேள்வியைக் கேட்டதுபோல் தோன்றியது.
அதாவது அன்பர் என்ன சொல்லவருகிறார் என்றால், பசித்தால்
எப்படி வண்டியை எடுத்துக்கொண்டு அஞ்சப்பருக்கோ சரவண பவனுக்கோ போய் சாப்பிட்டுவிட்டு
பில் கட்டிவிட்டு வருகிறோமோ, அதே போல் தண்டு தூக்கியவுடன் நேராக வீட்டில் போய் நான்
மேட்டர் சென்டருக்குப் போய்ட்டுவரேன் என்று சொல்லிவிட்டு பணம் கட்டி மேட்டர் முடித்துவிட்டு
வந்துவிடலாம். எப்படி!? எனக்குமே செம சுவாரசியமாக இருந்தது. அதாவது லீகலைஸ் செய்தவுடன்
அடுத்தவர்கள் வீட்டிலிருந்து 'அந்த' Career Aspirants பெண்கள் எல்லாம் அப்ளை செய்து
அந்த வேலைக்கு வருவார்கள். நன்கு ரெகுலரைஸ் பண்ணப்பட்டு ஐஎஸ்ஓ சான்றிதழ் வாங்கி வைத்திருப்பார்கள்.
எல்லாம் சுத்தபத்தமாக இருக்கும். தினமும் மூன்று ஷிஃப்டில் கேப் வைத்து கூட்டி வருவார்கள். இவர் போய் வேலையை முடித்துக்கொண்டு வந்துவிடுவார்?
இதுவும் பசி மாதிரிதானே? இதிலெல்லாம் என்ன பெரிய டபூ
இருக்கிறது? வேண்டும்போதெல்லாம் சும்மா போய் செய்துவிட்டு வந்துவிடவேண்டியது.
வீட்டம்மாவும் - "மேட்டர்க்குப் போகைல காண்டம் எடுத்துட்டுப் போங்க,
மேட்டர் முடிச்சுட்டு வரும்போது இட்லி மாவு வாங்கீட்டு வந்துருங்க. எனக்கு ஆறு மணி
கேப் வந்துரும்" ஆஹா நினைப்பதற்கே எவ்வளவு கிளுகிளுப்பாக இருக்கிறது? அம்மாதிரி
ஒரு வடிகால் வழங்கிவிட்டால், பாவம் அப்யூஸ் பண்ணுவதை நிடுத்தி விடுவார்கள்.
"நீங்க போயிட்டு வந்தே மூணு மாசம் ஆச்சு. உட்டா மறுபடி கொழந்தைகள
அப்யூஸ் பண்ண ஆரம்பிச்சிருவீங்க"
சாரு உண்மையில் பொறுமையாக பதில் சொன்னார். முதல் பெஞ்சில்
இருந்த அராத்து, அருமையாக உற்சாகப்படுத்தினார். நானும் அன்பர் மிஷல் பூக்கோ பற்றி சந்தேகம்
கேட்பார் என்று பார்த்தால், புள்ளி கரும சிரத்தையாக சாருவிடம் போய் சமூகத்தில் புரையோடிப்
போயிருக்கும் பிரச்சனையை நினைத்து வெதும்பி அதற்கு ஆன்-தி-ஸ்பாட் தீர்வையும் முன்மொழிகிறார்.
மேலும் சில கேள்விகள் மற்றும் Parallel கள்.
1. குடி என்பது மனிதனின் அடிப்படை உரிமை. மதுக்கடைகளைப்
போய் ஏன் மூடவேண்டும்?
எதிர் கேள்வி: உயிரோடு இருப்பது மனித உரிமை. தூக்குத்
தண்டனையையே ஏன் ரத்து செய்துவிடக்கூடாது?
2. பாலியல் வடிகால் என்பது மனிதனின் அடிப்படை உரிமை.
பிராத்தல்களை ஏன் திறந்துவிடக்கூடாது?
எதிர் கேள்வி: என்கவுன்ட்டர் என்பது மனித உரிமைக்கு
எதிரானது. உரிமைப் பறிப்பும் உரிமை மறுப்பும் ஒன்றேதான். எந்தக் குற்றத்திற்கும், எவ்வளவு
கொடூரமான சமூக விரோதியாக இருந்தாலும் என்கவுன்ட்டர் கூடாது என்று ஏன் சொல்லக்கூடாது?
மேற்கண்ட இரு கேள்விகளின் பதில்களும் அவற்றின் எதிர்க்
கேள்விகளுக்கான பதில்களும் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். வேறு வேறாக இருக்க முடியாது.
சும்மா ஒரு கொசுறு கேள்வி: Club House இல் எதற்கு ஃபாத்திமா பாபுவின் Strict Moderation வேண்டும்?
ஒரு ஐடியல் சமூகத்தில் உரிமைகளைப் பேசலாம். உரிமைகளை
கடுமையாகப் போராடித்தான் பெறவேண்டும் என்று அவசியமில்லை ஆனால் அவற்றை Earn செய்ய வேண்டும்.
அதற்கு குறைந்த பட்ச மதிப்பீடுகளாவது சமூகத்தில் இருக்க வேண்டும். அவைகள் இல்லாத சமூகத்தில்
இம்மாதிரி உரிமைகளைப் பற்றி பேசுவதும், ஒரு கொரில்லாவின் கையில் ஏகே 47 ஐக் கொடுத்துவிட்டு
அது பொறுப்புடன் நடந்துகொள்ளும் என்று எதிர்பார்ப்பதும் ஒன்று. முதலில் சக மனிதனை
மனிதனாக மதிக்கவோ அல்லது குறைந்த பட்சம் சிக்னலில் சிகப்பு விழுந்தால் நிற்கவோ பழகுவோம்.
பொதுவாக இம்மாதிரி அறிமுகங்களை Abstract என்று சொல்வார்கள்
ஆனால் சாருவின் உரைகளில் எப்பேர்ப்பட்ட கருத்துக்களையும் ஒரு Extract ஆக வழங்கிவிடுவார்.
மிஷல் ஃபூக்கோ, தெரிதா போன்ற பெயர்களையெல்லாம் நான் கேள்விப்பட்டது கூட கிடையாது. இனி
படிக்க வேண்டிய அவசியமும் கிடையாது. அதுதான் சாரு வாயிலாக அதன் சாராம்சம் கிடைத்துவிட்டதே?
பிழைத்துக் கிடந்தால் டார்க் சைகாலஜி படித்துப் பார்க்க வேண்டும்.
மறுபடியும் சொல்கிறேன். சாருவிடம் அவர் பேசும்போது
அவருடைய பேச்சில் உள்ள டெப்த் தெரியாமல் பலர் அவரிடம் போய் பேசுகிறார்களோ என்று தோன்றுகிறது. அன்பர் ஒரு ரெண்டு ரவுண்டு போட்டிருந்திருந்தால்
கொஞ்சம் Free ஆகி அங்கேயே Effective ஆக Networking செய்து, புது Friends பிடித்து, அவர்களுடன் கலந்துரையாடி, அவருடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு
கண்டிருந்திருக்கலாம். டேட்டிங் ஆப்ஸ் இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் ரூட்டு விட்டுப்பார்க்கலாம். அல்லது கொஞ்சம் கன்சர்வேட்டிவாக இருந்தால், மேட்ரிமோனியில் முயற்சித்துப் பார்க்கலாம். இத்தனை வழிகள் இருக்கின்றன. ப்ராத்தலேதான் வேண்டுமா? மணமானவரா என்று தெரியவில்லை. ஒரு வேளை ஆகியிருந்தால், அவருக்கு இருக்கும் இம்மாதிரி சமூக அக்கறையை எல்லாம் ஊட்டம்னி பார்த்தால், என்ன நடக்கும் என்பதை இங்கு எழுதுவது என் வேலை அல்ல.
இறுதியாக ஒன்று, சாருவிடம் இன்னொரு பிரச்சனை என்னவென்றால்,
அவர் 'ஸாக்ரடீஸ் மற்றும் சீடர்கள்' ரேஞ்சிற்கு உட்கார்ந்து அவருடைய எழுத்துக்களை
demystify செய்யப்பார்க்கிறார். அதன் மதிப்பு தெரியாமல் அவரோடு வந்து மொக்கை ஒலட்டு ஒலட்டுகிறார்கள். என்னைக்கேட்டால் அவர் பாட்டுக்கு எழுதிக் கொண்டே போகவேண்டும், அதை அவருடைய வாசகர்கள்தான் demystify செய்ய முயற்சிக்க வேண்டும். சாரு ஒரு mystic, இதை நான் சமீபத்தில்தான் புரிந்துகொண்டேன்!
Comments
Post a Comment