ஆங்கில லும்ப்பனும் தமிழ்ச் சும்பனும்

ருக்கிற பிரச்சனைகள் எல்லாம் போதாது என்று  புதிதாக ஒரு பிரளயம் வெடித்திருக்கிறது. முதன் முதலில் சாருதான் இந்த லும்பன் பிரச்னையை ஆரம்பித்து வைத்தது. புஷ்பா வந்த புதிதில்  கூட, ஒரு போஸ்ட் போட்டு  சாரு, அப்டீன்னா என்ன சாரு எனக்கு மண்டையே வெடித்துவிடும் போலிருக்கிறது என்று கேட்டிருந்தேன். அவர் ஒளரங்கஸேபில் படு பிசியாக இருந்ததனால், என்னைப்போன்ற Readers ஐயெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார். இப்போது மறுபடியும் நாம் Write பண்ணிக் கேட்க வேண்டியிருக்கிறது. இம்மாதிரி கிணற்றில் போட்ட கற்கள் பல உண்டு. ஆனால் இரண்டாம் முறை எனக்கு அந்த ஐயம் வலுத்த கையோடு துரிதமாக விளக்கமும் கிடைத்துவிட்டது. Straight from horse's mouth. ஆனால் it was bit too late by then. முதலில் லும்பன் என்றால் சும்பன் மாதிரி நினைத்துக்கொண்டிருந்தேன். சும்பனுக்கும் அர்த்தம் தெரியாது. தெற்கத்தி ஊர்க்காரர்கள் வாயில் சென்று அது மருவி "சொம்பை" என்று மருவி விட்டது போலும்.

"நாங்கன்னா மட்டும் என்ன சொம்பைங்யலா?"  என்பார்கள்.

ஏனென்றால் இதற்கிடையில்-

நானும் நாட்கணக்கில் எங்கெங்கோ தேடிப்பார்த்துவிட்டு,  அன்ன ஆகாரமில்லாமல், ஊண் உறக்கமில்லாமல், தேடாத இடமில்லை, கேட்காத ஆளில்லை என்று பித்துப் பிடித்து அலைந்தேன்.

நாட்களும் வெகுவேகமாக உருண்டோடியது. பல டிக்ஷ்னரிகளைப் புரட்டிப் பார்த்தேன். Google, பீகிள், Bing என்று நமக்குத் தெரிந்த ஒன்று விடாமல் தேடிப்பார்த்துச் சலித்து அகாஸ்மாத்தாக ஆங்கிலத்தில் எங்கோ Lumpen என்று படித்த ஞாபகம் வந்தது. ஆங்கிலத்தில் பல சொற்கள் பெயர்ச்சொல்களாக மட்டுமல்லாமல் வினைச் சொற்களாகவும் இருப்பதுண்டு. அவ்வகையில்  Lump என்னும் பெயர்ச்சொல்லுக்கு வினைச்சொல் கூட இருக்கலாம் அதன் Past participle தான் Lumpen போலிருக்கிறது என்று விட்டுவிட்டேன். நம் ஆங்கில அறிவு எந்த லட்சணத்தில் இருக்கிறது பாருங்கள்.

 கடைசியில்தான் அது லும்பன் அல்ல லும்ப்பன் என்று தெரிந்தது. அடங்கொங்காங்கோ இதை வைத்துக் கொண்டுதான் இந்த ஒலட்டு ஒலட்டிக்கிட்டிருந்தீங்களாடா என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். இது வெறும் எழுத்துச் சிக்கல் பிரச்சனை. சாருவிடம் வழக்கமான பாணியில் சிறு லந்து செய்துவிட்டு "லும்ப்பன்"
என்று எழுதலாமே என்று சொன்னவுடன் உடனடியாக ஏற்றுக்கொண்டு, அதற்குள் ஒரு கவிதையையும் எழுதிவிட்டார். அதனால்தான் அவரை Aristocrat என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். lumpen literati என்றால் என்ன என்றெல்லாம் எனக்கு விளக்கினார். 

ஆனால் விபரமறியாதவர்கள், கூகிள் சர்ச் செய்து பரிவுடன் வாயில் கொண்டுபோய் வைத்தாலும் அதைக் கொழுத்துப் போய் துப்பியது மட்டுமல்லாமல், சாருவிடம் போய் கு.கூ மாதிரி Etymology லெவலில் விளக்கம் கேட்டு எப்படியாவது disproof செய்து அவர் இது லம்பேன்/ லம்ப்பென்/ லம்ப்பன்/ லும்ப்பெனுக்கு உச்சரிப்பு லும்பன்தான் என்று சொல்லிவிடமாட்டாரா என்று கெஞ்சி ஒரு தியரியை கையில் காலில் விழுந்து அதை Establish பண்ணிக்கொண்டு அப்பா என்று நிம்மதியாகி சவுடால் உடுகிறார் (ஜெர்மன் மூலச் சொல்லாம்!). என்ன கு. கொ இருந்தால், சொன்னவனை அப்பன் பேரை கூகிளிள் தேடச்சொல்வார்? (இந்தத் தே___ ம __ர் தேடியிருப்பார், அதனால்தான் அடுத்தவனைத் தேடச் சொல்கிறார்)

தலைவர் சொல்கிறார் ... கூகிளில் போய் புடுங்கக் கூடாதாம். இவரேதான் புடுங்குவாராம். இதெல்லாம் தெரிந்தால்

"அப்போ நீயே புடுங்கவேண்டீத்தான? உன்ற  புத்தி எங்க Beep  திங்கப் போச்சாடா கேனப்Beepச்சா?" என்று  எங்கள் ஊர் ஆட்கள் கேட்பார்கள்.

இப்போது லும்பன் என்பது தமிழ் கூறும் நல்லுலகில் படு derogatory சொல்லாக மாறி ஒரு கெட்ட வார்த்தையாகிவிட்டது. கடந்த 100 ஆண்டுகளில் தமிழ்ச் சூழலில் நல்ல வசை வார்த்தைகளை எழுதுபவர்களே குறைவு. அந்த வகையில் Lumpen நிஜ லும்பர்களிடம் கொடுத்து, ப்ராசஸ் பண்ணவைத்து லும்பன் என்று coin செய்ய வைத்த பெருமையை சாருவுக்கு நல்கி அவருக்கு ஒரு லும்பன் சல்யூட்.

நிஜத்தில் lumpen ஐத் தமிழ் வரி வடிவத்தில் எழுதுபவர்கள் இன்று முதல் லும்ப்பென் என்று எழுதுவார்களாகவேறு மாதிரி எழுதினால், நான் போடா லும்பா என்பேன்.

 இனிமேல் தமிழில் திட்டுவதற்கு புது வசை வார்த்தை கிட்டியிருக்கிறது. வெறும் லும்பன் என்றால் செல்லமாக எறும்பு கடித்த மாதிரி இருப்பதால், பின் வருமாறு அவரவர் வட்டார வழக்கைப் பாவித்து ஏசலாம் -

 போடா லும்பக் _____

 இட்டு நிரப்புவதற்குத் தேவையான Reference Guide

 *கஸ்மாலம்

*கம்னாட்டி

*கபோதி/ காம்போதி 

 வேறு மாதிரியெல்லாம் நினைத்தால் அதற்கு நிறுவனம் பொறுப்பல்ல.

 ஆனால் சாரு பாவம். லவ் யூ சாரு!

Comments

Popular posts from this blog

நடுகல்லில் எனது கட்டுரைகளின் இணைப்பு

வலியின் கதை

Jawan - An Inimitable Experience