நிச்சோட்னா

துவே ரொம்ப லேட்தான். கொரோனா காரணமாகத் தள்ளிப்போய்விட்டது. எல்லாவற்றையும் ஆரம்பித்துவைத்தது மனிஷ் ஷா என்பவர்தான் என்று நான் சொல்வேன். நான்கு ஸ்டேட்களைத் தாண்டி வெளியே போகாமல் இருந்த தமிழ், தெலுங்குப் படங்களை உரிமை வாங்கி  சர சரவென்று குடிசைத்தொழில் மாதிரி டப் செய்து யூ ட்யூபில் வெளியிட்டார். அவை இந்தியாவையும் தாண்டி, பங்ளாதேஷ், பாகிஸ்தான், நேபாள் என்று பற்றிக்கொள்ளத் தொடங்கிவிட்டன. ஒரு வகையில் பாகுபலிக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம் என்று கூட சொல்லலாம். அதற்கும் முன்பு சங்கர் இயக்கிய ரோபோ படம் வந்தபோதுகூட, ஏதோ ரஜினி முகத்துக்காகவும் புகழுக்காகவும் இரண்டு ஷோக்கள் கூடுதலாக ஓடின, அவ்வளவே. பாகுபலியைப் பொறுத்த வரை அவ்வளவு பெரிய பட்ஜெட், நடிகர்கள் என்று வைத்துக்கொண்டு ப்ரேவ் ஹார்ட் ரேஞ்சுக்கு எடுத்திருக்கவேண்டிய படத்தை, லும்பக் க்ளாஸிக்காக எடுத்து ஒரு மாஸ் ஹிஸ்டீரியாவையும் கிளப்பிவிட்டுவிட்டார். வணிகப் படங்களாகவே இருந்தபோதிலும், ராட்சஸன் மற்றும் விக்ரம் வேதா போன்ற நல்ல விறுவிறுப்பான கதை மற்றும் திரைக்கதையுடன் இருந்த படங்கள் டப் செய்யப்பட்டு வந்தபோது, துணைக்கண்டத்தில் இருக்கும் ஹிந்திப் படங்கள் பார்த்து கொலை வெறியில் இருந்த ரசிகர்கள் அட என்று ஆச்சர்யத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். ஆனால் தமிழ்ப் படங்கள் இன்னும் இந்தப் பேன் இந்தியா ரேஸுக்குச் செல்லவில்லை, ஆச்சர்யமாக கன்னடா நூறுவருடங்களாக உறங்கிக் கொண்டிருந்துவிட்டு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்துவிட்டது. அப்படத்தின் தரம் பற்றிய கட்டுரை இது இல்லை என்பதால் அதைப் பற்றிப் பேசவில்லை. ஏற்கனவே லும்ப்பென் க்ளாஸிக் என்று சொல்லிவிட்டேன். மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றும் இல்லை. பொன்னியின் செல்வன் வேண்டுமானால் எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது ஆனால், மணிரத்னத்தின் மேலுள்ள நம்பிக்கை போய்விட்டது.  

 கொரோனா காரணமாக வீட்டில் முடங்கிக் கிடந்தவர்களுக்கு புஷ்பா, ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎஃப் என்று இந்தியா முழுக்க இருக்கும் லும்ப்பென் ரசனைத்தன்மை கொண்டவர்களுக்கு தொடர் விருந்து வைத்தால் எப்படி இருக்கும்? அதனால்தான் லும்ப்பென்ஸ் போட்டி போட்டுகொண்டு இப்படங்களைப் பார்த்துத் தள்ளுகிறார்கள்.

 இதைவிட கோமா ஸ்டேஜில் படுத்திருந்த ஹிந்தி சினிமாவை இப்படங்கள் பாடையில் படுக்கவைத்துவிட்டன. சில காரணங்கள் -

 1. அவர்களின் மார்க்கெட் ஹிந்தி பேசும் பெல்ட் மற்றும் வெளிநாடுகள். அவர்களின் பப்பு தக்காணத்தில் வேகாது. இங்கு ப்ராந்தியத்துக்கு ஒரு கொம்பன் என்கிற ரேஞ்சில் சினிமாக்களுடைய மார்க்கெட்டே பெரும் தனித்துவம் கொண்டது. ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஹிந்தி  நன்றாகத் தெரிந்திருந்தாலும் சினிமா என்று வந்தால் ஆதரவு எப்போதும் அவரவர் மொழிப் படங்களுக்குத்தான். தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் அதுவும் கிடையாது. இவ்விரண்டு மாநிலங்களிலும் சேர்த்து எவ்வளவு பெரிய படம் வந்தாலும் மீறி மீறிப் போனால் மொத்தமாகவே ஒரு பத்து தியேட்டர்களில் ஓடும். தொடர்ச்சியாக தென்னிந்தியர்களை, குறிப்பாக தமிழர்களைச் சித்தரிக்கும் விதம். அவைகள் எல்லாவற்றிலும் ஒரு ஆளின் பெயர் அய்யர் என்று இருக்கும் அவன் பட்டை அடித்துக்கொண்டு பூணூல் போட்டுகொண்டு எதற்கெடுத்தாலும்  "ஐயோ ராமா" என்று டயலாக் பேசுவான். முக்கியமாக வில்லனின் கையாளாக இருப்பான் இல்லாவிட்டால் ஹீரோயினின் அப்பனாக இருப்பான். அய்யர் பெண்ணின் அல்குல்  என்றால் தமிழ் நாட்டிலிருந்து வட இந்தியன் வரை எவன் வேண்டுமானாலும் உட்டு ஆட்டிவிட்டுப் போய் விடவேண்டும் ஃபேன்டஸியில். இது போதாது என்று ஷாருக் கான் தமிழ்நாட்டை வளைக்கிறேன் என்ற பெயரில், தமிழர்களை இன்னும் கேவலப்படுத்தி சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். சென்னை கின்னை என்றெல்லாம் காண்பித்தால் வளைக்க முடியாது, மதுரையை வளைத்தால் தமிழ்நாட்டையே வளைத்துவிடலாம் என்று சமீபத்தில் கூட ஒரு ஹிந்திப்படத்தில் ரத்த வாந்தி எடுக்குமளவு செயற்கை மற்றும் அருவருப்பான காட்சிச் சித்தரிப்புகளுடன் ஒரு ஹிந்தி படம் வந்திருந்தது. மீண்டும் ஒரு சுய ஆப்பு.

 2. பாகிஸ்தானில் இந்தியப்படங்களுக்கு மொத்தமாகத் தடை. அவர்களுக்கு சினிமா என்றாலே ஹிந்திப்படங்கள்தான். உருதுவும் ஹிந்தியும் கிட்டத்தட்ட ஒரே மொழி. பாகிஸ்தான் என்பது ஹிந்திப்படங்களுக்கான ஒரு பெரிய சந்தை. எந்த அளவு பெரிய சந்தை என்று புரிந்துகொள்வதற்கு ஒரு சிறு ஒப்பீடு செய்து பார்க்கலாம்பாகிஸ்தானில் ஹிந்திப்படங்கள் ஓடாது என்பதும் டெல்லி, உபி மற்றும் பிஹாரில் ஓடாது என்பதற்கு ஒப்பானது என்று சொல்லுமளவுக்குப் பெரிய சந்தை ஆகும்பாகிஸ்தானிலாவது  அந்த அரசாங்கம் தடை போட்டிருக்கிறது. ஆனால் இங்கு ஹிந்தி பெல்ட்டுகளில் அவர்களாகவே புறக்கணிக்கத் தொடங்கிவிட்டனர்.  

 3. ஒரு சில குடும்பங்கள் மற்றும் சில நடிகர்களின் ஆதிக்கம் காரணமாக சகட்டு மேனிக்கு கதறக் கதற மொன்னை பிளேடை வைத்து கழுத்தை அறுக்கும் படங்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணமிருந்தன. மிக மோசமான Nepotism, அதன் உச்சகட்டமாக, சுஷாந்த் சிங் தூக்கில் தொங்கினார்.

 4. மேற்சொன்ன மாதிரி படங்கள் வந்தது மட்டுமின்றி, நல்ல தரமான உள்ளடக்கமும், நேர்த்தியான கதை சொல்லல் மற்றும் திரை மொழியும் உள்ள ஹிந்திப் படங்களைக்கூட ஓட விடாமல் B Grade என்று பத்திரிகைகள் வாயிலாக முத்திரை குத்தி ஓட விடாமல் செய்தனர். கீழே இருக்கும் இரு வீடியோக்களையும்  சொடுக்கிப் பார்க்கவும் (பார்ப்பவர்களுக்குக் கொஞ்சமாவது ஹிந்தி தெரிந்தால் நன்றாக கலாசலாக இருக்கும், தெரியாது என்றாலும் பழுதில்லை) . முழுப்படம் எப்படி இருக்கும் என்று தெரியாது. ஆனால் இந்த இரு காட்சிகளே  போதும் இந்த நெபோட்டிஸ மாஃபியாக்களால்  B Grade  என்று முத்திரை குத்தப்படும் படங்களில் எந்த அளவு ரகளையான  ஸீன்கள் எழுதப்படுகின்றன என்று தெரியும். படம் அனுராக் காஷ்யப்பினுடையது! நடிப்பிலும் பட்டையைக் கிளப்புவார்கள். பலர் நேஷனல் ஸ்கூல் ஆஃவ் ட்ராமாவின் உற்பத்தி. இது பற்றித் தனியாக எழுதவேண்டும். (தென்னிந்தியாவில் நடிப்பிற்கு இங்கு மலையாளத்தில் ஃபகத் ஃபாசில், கன்னடத்தில் ராஜ்-பி-ஷெட்டி, இப்போதைக்கு அவ்வளவுதான். தமிழுக்கும், தெலுங்கிற்கும் நடிப்பிற்கும் சம்பந்தமே கிடையாது). 




 பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஹிந்தி சினிமா ரசிகர்கள் தென்னிந்தியப்படங்கள் பக்கம் சாய்ந்துவிட்டனர். அவர்களை மறுபடி மீட்டெடுப்பதற்காக யாரும் எதுவும் செய்வது போல் தோன்றவில்லை. அஜய் தேவ்கன் கூவுவதைப் பார்த்தால், குட்கா பிரச்சனையிலிருந்து தப்புவதற்கும் இப்போது 34 பெயரில் ஒரு படம் வந்திருக்கிறது அதை பாக்ஸ் ஆபீசில் ஆக்சிஜன் கொடுத்துப் பிழைக்கவைக்க வேண்டும் என்று போராடுவதற்காகவும் என்று தெளிவாகத் தெரிகிறது. அதற்குத் தகுந்தாற்போல் அந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த மொத்த பாலிவுட்டும் - ஐயோ, அம்மா, என்னா படம், இந்தியச் சினிமாவையே நட்டுகிட்டு நிக்க வெக்கிது என்ற ரேஞ்சிற்குப் புகழ்ந்து தள்ளுவதைப் பார்க்கும்போது அவர்கள் எந்த அளவு பீதியடைந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

 இவர்களுக்கெல்லாம் கமால் ஆர் கான் என்னும் ஒரு ஆள்தான் லாயக்கு. யார் எவர் என்று பார்க்காமல் சகட்டுமேனிக்குக் கிழி கிழி என்று கிழித்துத் தொங்க விட்டுவிடுவார். என்ன ஒன்று, தென்னிந்தியர்களைக் கண்டால் தோல் நிறத்தையும் தோற்றத்தையும் ரொம்ப கீழ்த்தரமாக அவதூறு செய்து பேசுவார் அதுதான் பெரும் பிரச்சனை அவரிடம். அவரைப் பொறுத்தவரை ரித்திக் ரோஷனும் இன்னொருத்தன் இருக்கிறானே எவோங் அவோங்? ஜாக்கி ஷராப் மாவொங்... ம்ம் டைகர் ஷராப்பு அவர்கள் இருவரும்தான் பெரிய டான்ஸர்களாம். இவற்றைக் கேட்கும்போதுதான் போடா பருத்தி என்று நினைக்கத்தோன்றும்.

Comments

Popular posts from this blog

வலியின் கதை

நடுகல்லில் எனது கட்டுரைகளின் இணைப்பு

Jawan - An Inimitable Experience