ஒரு பின்நவீனத்துவ, ஆட்டோ ஃபிக்ஷன் கொத்துபுரோட்டா
இ தெல்லாம் ஒரு கதையா? என்று கேட்கலாம், ஆனால் வேறு வழி? போஸ்ட் மார்டனைப்போட்டு அடி அடியென்று அடித்துப் பிய்த்துப்போட்டுவிட்டு அடுத்த மார்டனுக்குப் போகவேண்டியதுதான். சாரு நிவேதிதா இனிமேல் கண்டுகொள்ளமாட்டார். எப்படியோ ஒழி என்று தண்ணி தெளித்து விட்டுவிட்டார். இந்த ஆ ஊ வென்றால் முகம் கோணுவது, சில்லறை விஷயங்களில் மூஞ்சியத்திருப்பிக்கொண்டு கோபித்துக்கொள்வது, நல்ல நல்ல நட்புக்களையெல்லாம் வெடுக்கென்று வெட்டிவிட்டுவிடுவது இதெல்லாம் பொதுவாக பெண்களின் இயல்பு. உடனே என்னைப் பார்த்து Misogynist என்று கத்தக்கூடாது. அறிவியல் ரீதியிலான உண்மையைச் சொல்வதை Misogyny என்று சொல்லவியலாது. உதாரணத்திற்கு, பெண்களின் மூளைதான் பன் மொழிகள் கற்றுக்கொள்வதில் வல்லவைகள் என்று சொன்னால் அது அறிவியல் ரீதியில் எந்தளவு உண்மையோ, அதே அளவு உண்மைதான் நான் மேற்சொன்ன கூற்றும். வெளியாட்கள் என்றால் வெட்டிவிடுவதெல்லாம் சகஜம். அதுவே பார்ட்னர் என்றால்? சில சம்பவங்கள் மூலம் நான் சொல்ல வருவது என்ன என்று விளக்க முயற்சிக்கிறேன். சும்மா உதாரணம்தான், இந்த இடத்தில் அவரவர் வாழ்விலிருந்து உதாரணங்களைப் பொருத்திப் பார்த்துக்கொள்ள பூ...