ஒரு பின்நவீனத்துவ, ஆட்டோ ஃபிக்ஷன் கொத்துபுரோட்டா
இதெல்லாம் ஒரு கதையா? என்று கேட்கலாம், ஆனால் வேறு
வழி? போஸ்ட் மார்டனைப்போட்டு அடி அடியென்று
அடித்துப் பிய்த்துப்போட்டுவிட்டு அடுத்த மார்டனுக்குப் போகவேண்டியதுதான். சாரு நிவேதிதா
இனிமேல் கண்டுகொள்ளமாட்டார். எப்படியோ ஒழி என்று தண்ணி தெளித்து விட்டுவிட்டார்.
இந்த ஆ ஊ வென்றால் முகம் கோணுவது, சில்லறை விஷயங்களில் மூஞ்சியத்திருப்பிக்கொண்டு கோபித்துக்கொள்வது, நல்ல நல்ல நட்புக்களையெல்லாம் வெடுக்கென்று வெட்டிவிட்டுவிடுவது இதெல்லாம் பொதுவாக பெண்களின் இயல்பு. உடனே என்னைப் பார்த்து Misogynist என்று கத்தக்கூடாது. அறிவியல் ரீதியிலான உண்மையைச் சொல்வதை Misogyny என்று சொல்லவியலாது. உதாரணத்திற்கு, பெண்களின் மூளைதான் பன் மொழிகள் கற்றுக்கொள்வதில் வல்லவைகள் என்று சொன்னால் அது அறிவியல் ரீதியில் எந்தளவு உண்மையோ, அதே அளவு உண்மைதான் நான் மேற்சொன்ன கூற்றும். வெளியாட்கள் என்றால் வெட்டிவிடுவதெல்லாம் சகஜம். அதுவே பார்ட்னர் என்றால்? சில சம்பவங்கள் மூலம் நான் சொல்ல வருவது என்ன என்று விளக்க முயற்சிக்கிறேன். சும்மா உதாரணம்தான், இந்த இடத்தில் அவரவர் வாழ்விலிருந்து உதாரணங்களைப் பொருத்திப் பார்த்துக்கொள்ள பூரண சுதந்திரம் வழங்கப்படுகிறது. இதுதான் பின் நவீனத்துவ எழுத்தும், வாசிப்பும் கூட.
"இங்கு எழுத்தும் வாசிப்பும் வேறு வேறு அல்ல, எழுத்தாளனும் வாசகனும் என்று வேற்றுமை இல்லை இரண்டுமே ஒன்றுதான். ஒரு வகையில் பார்த்தால், ஒரே தளத்தில் இயங்கும் இரு வேறு ..."
போன்ற தரமான இலக்கிய விமர்சன வியாக்கியானங்களை என் வாசகர்கள்தான் தயை கூர்ந்து கமெண்டில் வந்து நல்கவேண்டும்.
சரி உதாரணத்திற்கு வருவோம். நான் வந்த நாள் முதல், இன்று வரை ஐந்து கோடைகள் கடந்து இப்போது ஆறாம் கோடையில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். முதற்கோடையில் பொண்டாட்டி மற்றும் குழந்தைகள் இங்கு வருவதற்கு முன், ஒரே மாதத்தில், இங்கத்திய ஒரு புது நண்பரிடம் கெஞ்சிக் கூத்தாடி, கார் ஓட்டக் கற்றுக்கொண்டேன். நமக்கு இந்த வண்டி சண்டி என்றாலே, நடுக்கம் எடுத்துக்கொள்ளும். "When push comes to shove" மாதிரி எந்த வண்டி ஓட்டுவதென்றாலும், ஏதாவது ஒரு தேவை வரும்வரை ஆட்டிக்கொண்டு திரிந்துகொண்டிருப்பேன் (காலை) வந்ததும், பிச்சை புகிக் கூடக் கற்றுக்கொண்டுவிடுவிடுவேன்.
சைக்கிள்? எங்கள் பொட்டல் ஊரான தாராபுரத்தில், ஒரு கல்லூரி கில்லூரி என்றால், சைக்கிள் இல்லாவிட்டால் அல்லு விட்டுவிடும். நடந்தெல்லாம் போக முடியாது. காலே எட்டாமல் நேரடியாகப் பெரிய சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொண்டேன். பைக்? ஸ்டார்ட் கூடப் பண்ணத்தெரியாது. பிறகு, திடீரென்று பியர் ப்ரெஷர் ஏற, வேளச்சேரியில் பேச்சிலராக ஒரு ஒன்றரை வருடம் இருக்கும்போது, ஒரு அருமை நண்பனின் பைக்கை எடுத்து (அவன் பகலிலேயே கும்பகர்ணத் தூக்கம் தூங்குவான்) ஓட்டக் கற்றுக்கொண்டேன்.
பைக், கார் என்று கிடையாது, நான் எல்லா மேட்டரிலுமே கொஞ்சம் தாமதம்தான். பச்சிளம் பாலகனாக இருந்து, கொஞ்சம் டிரான்ஸ்ஃபார்ம் ஆகி, பெடல் போட்டு சைக்கிளில் ஏறி உட்கார்ந்து நேராக விடுவதற்குக் கற்றுக்கொள்வதற்குள், சீனியர் விடலைகள், கவிதை எழுத ஆரம்பித்துவிட்டார்கள். விடலைகள் கவிதை எழுதுகிறார்கள் என்றால், அதற்கு என்ன அர்த்தம் என்று சொல்லத் தேவையில்லை. ஒரு பன்னிரண்டு பதிமூன்று வயதிலிருந்து, சாவகாசமாக "சரோஜாதேவி" மற்றும் "பருவகாலம்" துணையுடன் ஆரம்பித்து, ஒரு பதினேழு பதினெட்டு வயது வரை இந்த அண்டத்திலுள்ள எல்லா ஃபேன்டஸிகளையும் அடித்து விளையாடிவிட்டு, எல்லா ப்ளஷர்களையும் நுகர்ந்து, துவண்டுபோன பிறகுதான், திடீரென்று ஞானோதயம் வந்தமாதிரி, ஒருபுறம் மயிரடர்த்தி ஏற, மறுபுறம் தற்காலிகமாக ஹார்மோன்களின் வீரியம் குறைந்து, காட்டாற்று வெள்ளம் கொஞ்சம் வடிந்தபிறகு, அமைதியான நதியினைப்போல் காஜ் கொஞ்சம் சேனலைஸ் ஆகும். அது வரை, அக்கா, தங்கச்சி, அம்மா, ஆத்தா, சித்தி, பெரியம்மா என்று டிசைன் டிசைனாக புத்தகத் துணையுடன் ஃபேண்டஸி வோர்ல்டில் அடித்து மகிழ்ந்துவிட்டு, திடீரென்று புத்தருக்கு ஞானோதயம் வந்தமாதிரி தூய காதல் மோடுக்கு மாறுவர். அதுவரை காட்டு காஜ் மோடில் பிருஷ்ட்டங்கள், கொங்கைகள், முலைகள் என்று விலாவாரியாக உலாத்திக் கொண்டிருந்துவிட்டு அதற்கு மேலுள்ள உடலுறுப்புக்கள் பற்றிய விவாதங்களே இல்லாமல் இருந்துவிட்டு, கவிதைப்பருவம் வரும்போது, கூந்தல், உதடுகள், கண்கள் என்று கொஞ்சம் மட்டுப்பட்ட காஜ் மோடுக்கு மாறிக்கொள்வார்கள். இந்த லோ காஜ் மோடில், சுரத்து அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, கைக்கிளைக்கு மாறி (பெரும்பாலான காஜ் நாய்கள் சரோஜாதேவியில் இன்ஸெஸ்ட் ஜானரில்தான் அதிகக் கதைகளைப் படித்து திளைத்து மகிழும்) ஒன் ஸைட் அமரக்காதல் காதல் தோல்வியில் அனத்திகொண்டிருக்கும். அதற்கு அக்காலத்திய பேஸ்லைன் விடைலைக் காதல் படமான தறுதலை ராகம் என்னும் தாடியாரின் அப்படமும் ஒரு காரணம். அதே கருமாந்தரக் காதல் மரபு மற்றும் நாஸ்டால்ஜியா மரபு தமிழ்ச் சூழலில் இன்னும் தொடர்கிறது.
என்ன மேட்டர்க்காக இவன்கள் எல்லாம் கவிதை எழுதுகிறான்கள் என்று எனக்குப் படு நுணுக்கமாகத் தெரியும் என்பதால், அதன் மேல் மட்டும் ஒரு மரியாதையோ நாட்டமோ இல்லாமல் போய்விட்டது. எந்தளவு என்றால், ஒரு மொண்ணை நாய்க்கு காஜ் ஏறி இறங்கி பிறகு ஏறுகிறது என்றால் அது முதலில் கவிதை எழுதி ஸீன் போடும் என்னும் அளவுக்குதான் என் புரிதல். இம்மாதிரி ஒரு தவறான Brain Wiring என் மண்டைக்குள் Hardwire செய்யப்பட்டு, பசுமரத்தானி போல் ஆழ்மனதில் பதிந்துவிட்டதால், தமிழின் இன்றியமையாத கவிஞர்களின் கவிதைகளை வாசிக்குமளவு எனக்கு ஞானமில்லாமல் போனது. அதில் சாரு நிவேதிதாவும் அடக்கம். நைன்டீஸ் கிட்ஸ் வரைக்கும், அந்தக் காட்டு காஜ் டு காதல் நோய் என்றால், ட்டூ கே கிட்ஸ் என்னும் விசித்திர ஜந்துக்களுக்கு- வேற லெவல், வெறித்தனம் (சென்னையில் மட்டும் வெரீ-தனம்), ப்ரோ, பூமர் இத்யாதி. குஞ்சைக் கையில் பிடித்து மோளக்கூடத் தெரியாது (மோள மட்டும்தான்), ஆனால் அப்பன் ஆத்தாள் காசில்தான் இன்டர்நெட், செல்போனில் எல்லாமும் தொட்டிலில் கிடந்து உச்சா விடும்போதிலிருந்தே கையில் கிடைத்துவிட்ட திமிர். பெற்ற அப்பனும் ஆத்தாளும் இவன்களைத் தூக்கிப்போட்டு கொட்டையில் மிதிக்காமல், நீயா நானா மாதிரி நிகழ்ச்சிகளில் வந்து முற்போக்கு ஃபேமிலி சீன் போடுவதற்காக, நாங்க சுதந்திரம் குடுத்து வளக்கறோம் சுதந்திரம் குடுத்து வளக்கறோம் என்று ஓல் விடுகிறார்கள்.
ஸெவென்ட்டிஸ் கிட்ஸ், நாம் மேற்சொன்ன மாதிரி அரிப்பு லெவலை அனுசரித்து, ஒரு தலைக்காதல், தாடி வளர்த்தல் என்று இருந்தனர், பிறகு "சோத்துக்கே..." என்று வரும்போது, எல்லாவற்றையும் ஒழுங்கு மரியாதையாகத் தூக்கிபோட்டுவிட்டு பிழைப்பைப் பார்க்க ஓடிவிட்டனர். எயிட்டீஸ் கிட்ஸ் ஒருதலைக்காதல் காரணமாக, அரளி விதையை அரைத்துக்குடித்துவிட்டு மாண்டு போயினர். இந்தத் தலைமுறையில், வீட்டுக்கு பத்து பன்னிரண்டு என்று இருந்த எண்ணிக்கை, அப்படியே பாதியாகக் குறைந்துபோய், ஆணும் பெண்ணுமாக ஐந்து ஆறு என்று என்று வந்து நின்றது. எடுத்துப்போட்டுவிட்டு நான்கைந்து நாட்கள் அழுதுவிட்டு, வேறு வேலையைப்பார்க்கப்போய் விட்டனர். அதற்கடுத்த தலைமுறைதான் இன்னும் கொஞ்சம் விசித்திரமானது. நைன்டீஸ் கிட்ஸ். இதில் மூன்றில் ஒரு பங்கினர் பழைய தலைமுறையினரை அடியொற்றி, ஒருதலைக்காதல் செய்து தூக்கில் தொங்கி மாண்டனர், அடுத்த முப்பத்துமூன்று சதவிகிதத்தினர் காதலனோ/ காதலியோ ஏமாற்றியதால் தூக்கில் தொங்கியோ, தண்டவாளத்தில் தலையை இட்டோ மாண்டனர். மீந்தவர், பிழைப்பைப் பார்க்கலாயினர். இன்னும் ஒரு சதவிகிதம் மீதியிருக்கிறது, அதில் புள்ளி ஒன்பது சதவிகிதத்தினர், பிழைப்பு வாதியினர்தான், ஆனால் அவர்கள் இயல்புவாழ்க்கையில் நாஸ்டால்ஜியா பேணுவர், அதில் உள்ள விஷயங்கள் ஒரு முழு நாவலுக்கான பெருமதியுடையது. மீந்திருக்கும் புள்ளி ஒரு சதவிகிதம் மட்டும் காதலிக்கவில்லையென்றால், அமிலம் ஊற்றி முகத்தைச் சிதைப்பதற்கும், கல்லூரி வாசலில் கழுத்தறுத்தப்போடுவதற்கும் துணிந்தது. இவை எல்லாவற்றிற்கும் காரணம் தமிழ் சினிமா என்னும் ஒரு கேடுகெட்ட கலாச்சாரச் சொரணை உணர்வினை அழிக்கும் அழி ரப்பர்தான் காரணம்.
இப்போது மறுபடி ட்டூ கேவுக்குப் போவதற்கு முன், பொதுவான சில உணர்வின்மைத்தன்மைகளைச் சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. பெரும்பாலான சோசியல் மீடியா எழுத்துக்களிலும், பேட்டிகளிலும் கேள்விக்கு பதில் சொல்பவராகட்டும், கேள்வி கேட்பவராகட்டும் -
"ஒரு பத்து வருஷங்களுக்கு முன்னாடியெல்லாம்..." என்று சொன்னால் அவர் குத்து மதிப்பாக ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொன்னூறுகளையோ, இரண்டாயிரத்தையோ சுட்டுகிறார் என்று பொருள். அதே போல் -
"ஒரு இருவது, இருவத்தஞ்சு வருஷங்களுக்கு முன்னாடி ..."
என்று சொன்னால் இந்தியா சுதந்திரமடைவதற்கு முன் என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.
எழுபதுகளும், என்பதுகளும், தொன்ணூறுகளுக்கும், ஒன்றா? இல்லையல்லவா? அதே போல்
ட்டூ கே (2k), ட்டூ கே ஓ ஒன் (2k01), ட்டூ கே ஓ ட்டூ (2k02) இவைகளும் வெவ்வேறு தானே? 2k01 மற்றும் 2k02 கிட்ஸ் எந்த வார்ப்பிற்குட்படுகின்றனவோ அவைகள்தான் இப்புவியில் மேற்பரப்பில் அடுத்த ஐம்பதாண்டுகளில் புல் பூண்டற்றுப்போகுமா, அல்லது ஐநூறாண்டுகளில் போகுமா என்பதை நிர்ணயிக்கும்.
இதில் இந்த ட்டூ கே கிட்ஸ்-ஐ மட்டும் கழுவி ஊற்றாத எழுத்தாளர்களே இல்லை என்று சொல்லுமளவு, தமிழகத்தின் தற்போதைய "தவிர்க்க முடியாத எழுத்தாளர்" அராத்துவிலிருந்து, சாருவிலிருந்து, 'ஜெமோ' வரையில் எல்லோரும் தத்தமது பாணியில் கொத்து புரோட்டா போட்டு முடித்துவிட்டார்கள் (அ-மார்க்ஸ் போட்டாரா என்று தெரியவில்லை. அவர் பெயரை இதில் விட்டுவிட்டால், என்னைக் கொத்துப்புரோட்டா போட்டுவிடுவார்கள்) தற்போது இதில் இருப்பதிலேயே கடை ஊழியனாக இருக்கும் அடியேனின் முறையாதலால், நாமும் கூட்டத்தோடு கூட்டமாக கோதாவில் இறங்கி கும்மாங்குத்து குத்திவிடுவோம் என்று இதைக் கதைக்குள் வைத்தோம்.
எழுபது, என்பது தொன்னூறு என்று பார்த்தோம், ட்டூ கேவின் பிரச்சனைகள்தான் என்ன என்றால், கையையும் காலையும் மற்ற எதையுமே ஆட்டாமல், கால் மேல் கால் போட்டுகொண்டு...
ஒரு நிமிடம் - இவன்களைப் பெற்றவள்களைக் காதலித்து பல Subtle காதல் காஜ்கள் தூக்கில் தொங்கி உயிரிழந்துவிட்டனர் வேறு. ஆக, பிறப்பதற்குப் பல வருடங்கள் முன்பே பல உயிர்களைக்குடித்துப் பிறந்த ரெட்ரோ காஜ்கள்தான் இவன்கள். இவன்கள்தான், இவன்களின் முன்னோர்கள் சாட்சிகளே இல்லாமல் செய்துவந்த வேலைகளை, இப்போது டெக்னாலஜி புண்ணியத்தில் ஸ்மார்ட் ஃபோனின் கண் முன் செய்கிறான்கள். படு மோசமான பாலியல் மற்றும் குத்துக் கொலைபாதகங்களில் ஈடுபடுகிறான்கள். தியேட்டர்களுக்கு வெளியில் வந்து 'வெரீ-தனம்' என்று சென்னையிலும், மற்ற இடங்களில், வெறித்தனம், வச்சி செய்ஞ்சிட்டாங்க என்றும் கத்துகிறான்கள்.
வழக்கம்போல் இந்த மயிர், சரோஜா மேட்டர்களில் யாம் தாமதம் மற்றும் மந்தபுத்திதான். ஆனாலும் இன்றைய எம்மின் எழுத்து வாழ்க்கைக்கு, அம்மாதிரிப் புத்தகங்கள்தான் ஆரம்ப வித்து என்றால் அது மிகையாகாது. ட்யூஷன் டீச்சர், பக்கத்து வீட்டு ஆன்டி என்பது வரை சரி, அது அப்படியே இன்செஸ்ட் வரை வரும்போது அதை அப்படியே காரித் துப்பிவிட்டு ஓடிவிட்டேன். இந்த மயிரான்களின் திடீர் ஜெயகாந்தன், பாலகுமாரன் மற்றும் கமலஹாசன் ரசிகக் குஞ்சு மனப்பான்மை கலந்த தன்மைதான் அப்படியே -
உன் மயிரு உதிர்கிறதே அடடே ஆச்சர்யக்குறி!
உன் வாயில ஸலவா ஒளுகுதே அடடே ஆச்சர்யக்குறி!
அடடே ஆச்சர்யக்குறி! அடடே ஆச்சர்யக்குறி!
போன்ற கவிதைகளாக வெளிப்பட்டுக்கொண்டிருந்தன. இந்தக்காலகட்டத்தில் நான், எல்லோரும் ரசிகர்களாக இருக்கிறார்களே, நாமும் ரசிகன் ஆகியே தீர வேண்டும் என்று தீவிர விஜயகாந்த் ரசிகனாக இருந்தேன். ஒரு முறை மூட்டளவு தண்ணீரில் அமராவதி ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும்போது, அடப்பாவிகளா, இந்த மேட்டரில் கூட கிரியேட்டிவிட்டி இல்லாமால் கடைசியில் சரோஜா தேவி இலக்கியத்தில், அக்காள் தங்கச்சி சித்தி அத்தை வரை வந்து நிற்கும் நாய்களா, நாளைக்கு நீ கவிதை எழுதி, காதலித்து, கல்யாணம் முடித்து, பிறகு அவலை நினைத்து உரலை இடிக்கும்போது கூடக் கற்பனை வறட்சி காரணமாக...
அப்போது நான் நீர் மேலிட்ட ஆணை - நானும் ஒரு நாள் எழுத்தாளன் ஆவன்டா. அப்போதே யாம் மனதளவில் ஒரு எழுத்தாளன் ஆகிவிட்டோம். இப்போது சாரு ஒரு முடுக்கு முடுக்கிவிட, துணிந்து எழுதுகிறேன். தவிர, எழுத்தில் சொதப்பிவிட்டால் சாரு ஜென்மத்திற்குத் திரும்பிப்பார்க்க மாட்டார்.
ஆமாம் நான் எங்கு விட்டேன்? ஆங்...கோடை! பின்நவீனத்துவத்தின் இயல்பே எங்கு தொடங்கினோம், எதில் விட்டோம் என்றே தெரியாது. ஆழம் தெரியாமல் காலை விட்டமாதிரி ஒரு சுழலில் இழுத்துக் கொண்டுவிடும்.
கடந்த நான்கு கோடைகளாக வீட்டில் ஒரு நபர் கார் ஓட்டக் கற்றுக்கொள்கிறார். யாரிடமிருந்து? எம்மிடமிருந்து. அடியேன் எப்போதுமே ஒரு தேவை என்று வரும்போது மட்டும் எதையும் கற்றுக்கொள்பவன். எவ்வளவுதான், laid back என்றாலும், raise to the occasion என்றால், கிளர்ந்து நின்று, கற்று சூழ்நிலையுடன் சண்டையிட்டுவிட்டு மீண்டும் hibernation க்குப் போய் விடுவேன் என்பதால், அம்மாதிரி கற்கும்போது அதில் தேவையான அளவு நிபுணத்துவம் பெற்றுவிடுவேன்.
ஒரு கார் கற்றுக்கொள்வதற்கு எதற்கு ஐந்து வருடங்கள் என்றால், இங்கு குளிர் இல்லாமல் இருக்கும் நாட்கள் குறைவு என்றாலும், அதைத் தவிர மிக முக்கியமான காரணம்-
வருடா வருடம் temp ID வாங்குவது, என்னைப் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக்கொண்டு (லைசென்ஸ் வைத்திருக்கும் ஒரு ஆள் உட்கார வேண்டும் என்பது உலக நியதிதானே?)
சிவப்புக்கு நிற்காமல் போவது. நான் அடிவயிற்றிலிருந்து
"பிரேக் பிரேக் பிரேக் பிரேக்...."
இல்லையேல் சடாரென்று த்ரோட்டிலின் மேல் ஏறி நிற்பது, அதுவும் இல்லை என்றால் மாப்பிள்ளை அழைப்பு ஓட்டை நட்ட நடு ரோட்டில் போய் ஓட்டுவது. இங்கெல்லாம் எவனாவது ஹார்ன் அடிக்கிறான் என்றால், அவன் கையில் கிடைத்தால் கொத்து புரோட்டா போட்டுவிடுவான் என்று பொருள். ஹார்ன் அடிப்பது மட்டுமின்றி, ஜன்னலை இறக்கி நடு விரலை வேறு காண்பித்துவிட்டுப் போவான். போலீஸ் பிடித்தால் இன்னும் அமர்க்களம். வேறு யார் கார் மேலாவது குத்தினால், நம் காரை டோட்டல் பண்ணி எடுத்துக்கொண்டு போய்விடுவான் இஸ்யூரன்ஸ்காரன். கையில் அரைக்காசு கொடுப்பான். நாம் போய்க் குத்திய காரும் டோட்டல் பண்ணப்பட்டுப்போய்விடும். கூடவே ஐயோ பாவம் அவன் காருக்கு என்ன பண்ணுவான் என்ற தவிப்பும் நம்மைச் சூழ்ந்துகொள்ளும், இரவில் உறக்கம் வராது. நமக்கு அடுத்த மாதத்திலிருந்து இன்ஸ்யூரன்ஸில் இருபது டாலர்கள் ஏற்றிவிடுவான். இப்போதைய நிலைமையில் கையில் இருக்கும் ஒரே ஓட்டைக் காரும் போனால் பிச்சைதான் எடுக்கவேண்டும். ஒரு பதினைந்து வருடப் பழைய காரின் விலை, கொரோனாவுக்கு முன்பு, இரண்டாயிரம் அல்லது மீறிப்போனால் இரண்டாயிரத்து ஐநூறு டாலர்கள். பக்கத்துக் கடையில் போய் சாமான்கள் வாங்கி வரலாம் அவ்வளவுதான் ஓடும். குளிர்காலத்தில் பாதி வழியில் நின்றுவிடும். அதே கார் இன்று பதினான்காயிரம் டாலர்கள். அதுவும் கைல காசு வாயில தோசை மாதிரி ரொக்கப்பணம் எடுத்துக்கொண்டு டீல் பேசி முடித்த ஒரு மணிக்குள் போய்விடவேண்டும். சொல்லிவிட்டுப் போவதற்கு சில நிமிடங்கள் தாமதமானாலும், பதினான்காயிரத்து ஐநூறு டாலருக்கு வேறு எவனோ ஒருவன் வாங்கி, வீட்டுக்குப்போகும் வழியில் பதினாறாயிரம் டாலருக்கு விற்றுவிட்டுப் போய்விடுவான். காரணம் Global Supply Chain Shortage ப்ராப்ளம். அடசல் கார்கள் கூடப் பிளாட்டின விலைக்குப் போகின்றன. எளிதில் கிடைப்பதும் இல்லை.
இத்தனை டெக்கனிகல் சிக்கல்கள் வைத்துக்கொண்டு, கார் பழக்கிவிடப்பக்கத்தில் உட்கார்ந்தால், பிரேக் அடிக்கவேண்டிய நேரத்தில் ஆக்சிலேட்டரை ஏறி மிதித்தால், ஒரு மனிதன், அதுவும் என்னைப்போன்ற ஒரு சராசரி குழப்பவாதி மற்றும் முன்கோபி, Great job, sweet heart...nice and easy, nice and easy, way to go என்று சொல்வேனா அல்லது இங்கு எழுத முடியாதையெல்லாம் சொல்லி ஒழுங்காக ஓட்டச்சொல்வேனா?
புரிந்திருக்குமே? உடனே அந்த நிமிடமே ஆரம்பித்துவிடும் பஞ்சாயத்து. அன்றிலிருந்து சரியாகப் பத்து நாட்கள் ரவுண்டு கட்டி, நினைத்து நினைத்துச் செருப்படி விழும். பிறகு ஒரு வழியாகச் சமாதானமாகி மறுபடியும் காரில் ஏற்றி, ஏறி மீண்டும் அதே போன்ற சூழ்நிலை வந்து, சற்று தூரத்தில் போய்க்கொண்டிருக்கும்போதே சிக்னலில் சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறினால் என்ன செய்யவேண்டும்? அதற்கு நேரெதிராகச் செய்தால் என்ன நடக்கும்?
இத்தனைக்கும் மணிக்கு முப்பத்தைந்து டாலர்கள் கொடுத்து ஒரு தொண்டுக் கிழவர், அவர் நான் வந்த புதிதில் எனக்கே சொல்லிகொடுத்திருக்கிறார். அவரிடம் கிளாசுக்கு அனுப்பினால், பதினைந்து க்ளாஸ்கள் போய்விட்டு, என்னிடம் வந்துவிட்டு, ரிவர்ஸ் மட்டும் எடுத்துக்கொடு, பிறகு அந்த Office Block இன் Parking lot வரை கொண்டு விட்டுவிடு என்று சொல்லிவிட்டு அங்கு போனதும் கற்றுக்கொண்ட திறமையை எல்லாம் காண்பிப்பது, அதிலும் இண்டிகேட்டர் போட்டுவிட்டு திருப்பாமல் நேராகப்போவது.
"பாத்தியா எவ்ளோ திறமையா ஓட்றேன்?"
இதற்கிடையில் நான் மேற்கூறிய உலகளாவிய விநியோகச்சங்கிலிப் பிரச்சனை, போர்ச்சூழல், வேலைப்பாதுகாப்பின்மை, நுழைவுச்சான்று விரிவாக்கப் பிரச்சனை, பச்சை அட்டைப் பிரச்சனை, வேலைத்திறமை மேம்படுத்துதல், பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, பொருளாதார மந்த நிலை, இருத்தலியல் பிரச்சனை, உயிர் பிழைத்திருப்பதன் பிரச்சனை பற்றியெல்லாம் நினைத்துக்கொண்டே வண்டியில் பக்கத்தில் ஏறி ஓட்டப்பழக்கி விட உட்கார்ந்தால் -
"உலகத்துலயே உனக்குத்தான் பிரச்சனையா, ஜாலியா வந்து என்ஜாய் பண்ணலாம்ல? எந்நேரமும் மூஞ்சி ஏன் இப்புடி இருக்கு, அவுனுங்கல்லாம் பாரு எப்புடி என்ஜாய் பண்ரானுக"
என்று சொல்லிவிட்டு, எவனோ பெற்ற ஒரு அரை உழக்குகிற்குப் பிறந்தநாள் என்று, நாட்கணக்கில் அலைந்து திரிந்து கிஃட்டை வாங்கிக்கொண்டு போனால், ஊரிலிருக்கும் இந்தியக் குடும்பங்களையெல்லாம் கூப்பிட்டு, ஒரு ஐம்பது குடும்பங்கள் இருக்கும், கிப்ட் வைப்பதற்கு என்று தனியாக நான்கு டேபிள்களை இழுத்துப் போட்டு வைத்திருந்தார்கள் (அதன் அப்பன் அதற்கும் முந்தின வாரம், என்னிடம் வந்து ஆர்ராராரு... சூப்பரு, ராஜமௌலி அதரகொட்டாடு...அஸ்ஸலு அதிரி போயிந்தி, கேக்க. பாஸூ மீரு ஆர்ராராரு சூஸாஸாரா? குத்த பகல தெங்க்யாடு, வீள்ளம்மா...)
டொமினோஸில் லார்ஜ் சைஸ் பீட்ஸா பதினைந்தில் நாங்கோ ஐந்தோ சிக்கன் டாப்பிங் போட்டு வாங்கியிருந்தான், மீதி சீஸ் பீட்ஸா. குழந்தைகள் சீஸ் பீட்ஸாவைப் பார்த்துப் பார்த்து வெறுத்துவிட்டன. வீட்டிலேயே டஜன் ஃப்ரீ பீட்ஸா அட்டைகள் இறைந்து கிடக்கின்றன. எனக்கோ பசி பின்னுகிறது, வீட்டில் சோறு இல்லை, இதை நம்பிக் கூட்டி வந்திருந்தார் முக்கிய நபர். என்ன செய்ய?
இது இப்படியென்றால்,
நான்: கிச்சன் டாப்பைச் சுத்தம் செய்ய ரப்பிங் ஆல்கஹாலைப் பீய்ச்சி அடித்துவிட்டு, கிட்சன் டவலைபோட்டுத் துடைத்து விட்டால், எண்ணைப்பிசுக்கு, கறைகள் இன்றி பளீரென்று இருக்கும்.
ஒரு முக்கியமான நபர்: ஐயோ காலையில் நான் ஸ்டவ்வை ஆன் பண்ணும்போது ஆல்கஹாலுடன் சேர்ந்து வினை புரிந்து தீ பற்றி எரிந்துவிடும்
நான்: ஆல்கஹால் வினாடிகளில் ஆவியாகக்கூடியது. காலை வரை அதற்கு என்ன வேலை? பதங்கமாதல் என்று ஒன்று இருக்கிறது, அது வேலை செய்யும் விதமே அலாதி. ஆனால் அதற்கும் கிச்சன் டவலில் ரப்பிங் ஆல்கஹாலைத் தொட்டுத்துடைப்பதற்கும் சபந்தமில்லை. இது பற்றி நான் வைட் போர்டில் அறிவியல் பூர்வமாக விளக்கவேண்டும் அப்போதுதான் உனக்குப் புரியும்.
ஒரு முக்கியமான நபர்: மயிறு, உலகத்துல யாருமே ரப்பிங் ஆல்ஹகால் போட்டு கிச்சன் டாப்பைத் துடைக்க மாட்டார்கள். கிச்சன் பற்றி எரிந்துவிடும்.
நான்: டிஷ் வாஷரில் எண்ணி வெறும் பத்தே சொட்டுக்கள் Ajax ஊற்றலாம். ரிசல்ட் அருமையாக இருக்கும். தட்டுக்கள், கோப்பைகள் நன்றாகத் துலங்கிப் பளீரிடும்.
ஒரு முக்கியமான நபர்: நீ ஊத்தீட்டுப் போயிருவ, அது பொங்கி வழிஞ்சு எனக்குதான் தொடச்சு விட பெண்டு நிமிரும். அறிவிருக்கா? பெரியவள நீயா ஸ்விம்மிங் பூல் கூட்டிட்டுப் போறியா நான் கூட்டிட்டுப் போகட்டுமா?
நான்: Children's pool இன்னும் தொறக்கல. இது 5 Foot depth உள்ள நீச்சல் கொளம். கொரோனாவோட இவ ஸ்விம்மிங் நின்னுவோச். ஸ்கில் லெவல் என்னனு தெரியாம நான் ரிஸ்க் எடுக்க மாட்டேன். உனக்கும் ஸ்விம்மிங் தெரியாது, எனக்கும் தெரியாது. லைஃப் கார்டும் கெடையாது இங்க. நாம கண்கொத்திப்பாம்பா வாட்ச் பண்ற அளவு, ட்ரெயின்ட் கெடையாது.
ஒரு முக்கியமான நபர்: எனக்கு மட்டும் அக்கறை இல்லாமயா? ஸ்விம் பண்றப்ப அதப்பாக்காம நான் என்னதான் ஃபோன் கீன் எடுத்துப் பேசுனாலும் பக்கு பக்குனு அடிச்சுகிட்டேதான் இருக்கும் மனசுக்குள்ள கடவுள் கிட்ட வேண்டிகிட்டே அரைமணிநேரம் பேசுவேன், அதுக்குள்ள என்ன ஆயிரும்?
இப்படியெல்லாம் உறவுகள் சில சமயங்களில் Out of sink ல் போகும்தான். வாழ்க்கையில் விரக்திகள் வரும்தான், அப்போது நாம் தெரியாத்தனமாக, தவறான ஒரு இடத்தில் எதையாவது தெரியாத்தனமாகப் பேசி Vent Out செய்துவிடுவோம்தான், செய்யக்கூடாதுதான். ஆனால் அம்மாதிரி சமயங்களில் உலகம் நாம் எடுத்த வாந்தியை நம்மையே நக்க வைக்கும். கூடப்பிறந்தது, கட்டினது, நாம் பெற்றது, நம்மைப் பெற்றது என்று எதுவுமே நம்மை ஏற்றுக்கொள்ளாது. நாம் சொல்ல வந்ததைக் காது கொடுத்தும் கேட்காது. தத்தமது நியாயங்களைத்தான் உரத்துச் சொல்லிக்கொண்டே இருக்கும். நாமும் குருட்டுத்தனமாக நம்முடைய நியாயங்களை சொல்ல முற்படுவதாக நினைத்து உளறிக்கொண்டிருப்போம். அவைகளில் எவ்வித நேர்மறைத் தீர்மானங்களும் எட்டப்படாது.
சாரு நிவேதிதாவின் எக்ஸைல் நாவலில் இரண்டு floran மீன்கள் எப்படி ஒரு தொட்டியில் விட்டால் அடித்துக்கொண்டே செத்துவிடுமோ, அதே மாதிரி மனிதர்களில் சில ஒத்தியல்புகள் உள்ளவர்களை கண்காணிப்பிலாமல் ஒரே தளத்தில் விட்டால், ஆளாளுக்குக் கத்தியை எடுத்துக் கீறிக்கொள்வர். சம்பந்தப்பட்ட இருவரை நிறுத்தச்சொல்ல ஆளே இல்லாமல் ஒருவரை ஒருவர் மூர்க்கமாகத் தாக்கிக்கொண்டு சாவர்.
உறவுகளிலும் இம்மாதிரிப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு moderator ஒருவரைக் கண்டு பிடிக்கலாம். சில காலம் முன்பு வரை குடும்பத்துக்குள்ளேயே சில நாரதர்கள் இருப்பார்கள், அவர்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் நன்மையைக் கருதி, டிப்ளமேட்டிக்காகப் பேசி பிரச்சனைகளை மேலாண்மை செய்வர். உதாரணத்திற்கு ஒரு அத்தைப்பாட்டியோ, ஒரு அப்புத்தாவோ, தாத்தாவோ, அவன் கெடக்கறான் கேனையன், அவனுக்கு ஒன்னும் தெரியாது என்று இங்கும் அங்குமாகச் சொல்லி Flair up களைச் சமாளிப்பர். அதே ரோலில் உள்ள எதிர்மறை ஆட்கள் அய்யம்பேட்டை வேலை செய்து உள்ளதையும் கெடுப்பதும் உண்டு.
அவைகளெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டதால், இக்காலங்களில் moderation அல்லது பஞ்சாயத்து செய்து வைப்பதற்கென்று யாரும் இருப்பதில்லை. குழந்தைகள் வளர்ந்து, கொஞ்சம் பெரியவர்கள் ஆனதும் சூழ்நிலை உணர்திறன் நன்கு மேம்படுகிறது. அவர்கள் சப்ப மேட்டரை வைத்துக்கொண்டு அதை ஊதி ஊதிப் பெரிசாக்கி அடித்துக்கொண்டு சாகும் அப்பனையும் அம்மாளையும் எளிதாகக் கையாண்டு பிரித்துவிடுவார்கள்.
ஒருவேளை குழந்தைகளுக்கு கொஞ்சம் சிறுவயது என்றாலோ, அல்லது இப்போதுதான் புதிதாக மணமானவர்கள் என்றாலோ, அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகி நீங்கள் சண்டையிட்டுக்கொண்டு சாகும்போது பிரித்துவிடும் வரை இருவரில் ஒருவர் வாயை மூடிக்கொண்டு இருப்பது நலம். பெண்களுக்கு அது சாத்தியமில்லை என்பதால் (மறுபடி Misogynist Misogynist என்று கத்தாமல் முதல் பாராவைப் போய் மீண்டும் ஒரு முறை படித்துக்கொள்ளவும்)
மற்றபடி பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள், மரபு சார்ந்த பிரச்சனைகள், Childhood Abuse, டீனேஜ் முதல் ஒருத்தனுடன் கல்யாணம் கட்டிக்கொண்டு போகும் வரை தெருவில் போகிறவன் வருகிறவனெல்லாம் கொடுக்கும் காதல் தொல்லைகள், திருமணத்தில் ஏற்படும் அப்யூஸ்கள், நினைத்த இடத்தில் ஸிப்பைத் திறந்து சுவற்றில் ஒன்றுக்கு அடிக்கமுடியாமை, டாஸ்மாக்கிலோ, பாரிலோ மதியம் இரண்டு மணியிலிருந்து, இரவு பத்து மணி வரை ஜாலி பண்ண முடியாமை, என்று ஆண்களுக்கு இல்லாத பிரச்சனைகளின் நீளம் அதிகமாக இருப்பதால், இந்த இடத்தில் ஒரு பெண்ணியலாளராக இருந்து எழுத வேண்டிய அவசியம் இல்லாமலேயே பெண்கள் சார்பில் ஆண்களை வீட்டுக்குள் தேவையில்லாமல் வாயைத்திறக்காமல் மூடிக்கொண்டு இருக்கவும், என்ன தப்பு யார் தப்பு என்கிற போஸ்ட்மார்ட்டம்-இல் ஈடுபடாமல் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
எந்தப்பிணக்கு வந்தாலும், தவறு யார் மேல் இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்துவிடவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பெண்களுக்கு. இம்மாதிரி காலில் விழுந்து நான் பண்ணதுதான் தப்பு என்று சரண்டர் ஆகுபவனை மறுபடி முதலில் இருந்து ஆரம்பித்து, டார்ச்சர் செய்யாதீர்கள். அவனைப்பொறுத்தவரை பேட்ச் அப் செய்து நிலைமை சீரானால் போதும் மற்றதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை என்று பல சமயங்களில் எந்த ஈகோவும் பார்க்காமல் நான் பண்ணதுதான் தப்பு என்று சரண்டர் ஆவது உண்டு. காலில் விழுந்து சரண்டர் ஆனவனை மறுபடி தூக்கிப்போட்டு மிதிக்காமல் இருந்தால் மட்டும் போதும். மற்றபடி ஆண்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணையெல்லாம் கிடையாது. அதெல்லாம் இருந்தால் இவ்வுலகில் பிழைத்திருப்பது கடினம்.
நான் மேற்சொன்னவையெல்லாம் சிறு சிறு விஷயங்களுக்காக அடித்துக்கொண்டு, நாட்கணக்கில் சண்டையை இழுத்துக்கொண்டு போய்விட்டு மறுபடி சேர்ந்துகொள்ளும் ஆட்களுக்குத்தான். மற்றபடி Abusive Marriage Relationship என்னும் நிலையை எட்டுமானால், இந்த மாதிரி உறவுகளுக்குள்ளெல்லாம் இருந்து உழன்று துன்புறாமல் கொஞ்சம் கூட யோசியாமல் டைவர்ஸ் பண்ணிவிடுங்கள். ஆண் பெண் என்று இருவருக்குமே இது பொருந்தும்.
Comments
Post a Comment