ஒரு பென் ட்டு பப்ளிஷ் ஃபிக்ஷன்
இ ந்த அமேஸான் கிண்டில் என்று ஒன்று இருக்கிறதல்லவா ? அதில் pentopublish என்கிற வருடாந்திர எழுத்துப்போட்டி இருக்கிறது . அதன் ஐந்தாம் வெர்ஷனில் கலந்துகொள்ளச்சொல்லி ஸ்வாமிநாதன் அதன் இணைப்பை அனுப்பினான் . அவன் எம்மாதிரி ஆள் என்றால் , ஒரு காலத்தில் ஒரு வாராந்திரியில் சினிமா கிசுகிசு மாதிரி இலக்கிய கிசுகிசுவும் வந்துகொண்டிருந்தது அதில் ஜெயமோகனை என்னவென்று விளித்தார்கள் என்று நினைவில்லை , சாரு நிவேதிதாவை கடைசி அட்டையில் பாரு கவேதிதா என்று எழுதினார்கள் என்று ஞாபகம் . ஒரு வேளை அவை அனைத்தையும் இவன் எழுதியிருப்பானோ என்று ஐயுறும் அளவு இலக்கிய உலகில் நடக்கும் அத்தனையும் அத்துப்படி . ஜெமோ , நாஞ்சில் நாடன் முதல் அமலாதித்ய கூமொக்லன் வரை அனைவர் பற்றியும் விரல் நுனியில் தகவல்கள் வைத்திருப்பான் . தவிர இலக்கிய உலகில் நடக்கும் ஸ்கான்டல்கள் , குடலைபுரட்டும் நாற்றமெடுக்கும் இலக்கிய உலக கள்ள ஓல் மேட்டர்கள் மற்றும் குடுமிபுடிச்சண்டைகள் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருந்தாலும் , தகவல்களை மட்...