ஒரு பென் ட்டு பப்ளிஷ் ஃபிக்ஷன்

ந்த அமேஸான் கிண்டில் என்று ஒன்று இருக்கிறதல்லவா? அதில் pentopublish என்கிற வருடாந்திர எழுத்துப்போட்டி இருக்கிறது. அதன் ஐந்தாம் வெர்ஷனில் கலந்துகொள்ளச்சொல்லி ஸ்வாமிநாதன் அதன் இணைப்பை அனுப்பினான். அவன் எம்மாதிரி ஆள் என்றால், ஒரு காலத்தில் ஒரு வாராந்திரியில் சினிமா கிசுகிசு மாதிரி இலக்கிய கிசுகிசுவும் வந்துகொண்டிருந்தது அதில் ஜெயமோகனை என்னவென்று விளித்தார்கள் என்று நினைவில்லை, சாரு நிவேதிதாவை கடைசி அட்டையில்  பாரு கவேதிதா என்று எழுதினார்கள் என்று ஞாபகம்ஒரு வேளை அவை அனைத்தையும் இவன் எழுதியிருப்பானோ என்று ஐயுறும் அளவு இலக்கிய உலகில் நடக்கும் அத்தனையும் அத்துப்படி. ஜெமோ, நாஞ்சில் நாடன் முதல் அமலாதித்ய கூமொக்லன் வரை அனைவர் பற்றியும் விரல் நுனியில் தகவல்கள் வைத்திருப்பான். தவிர இலக்கிய உலகில் நடக்கும் ஸ்கான்டல்கள், குடலைபுரட்டும் நாற்றமெடுக்கும் இலக்கிய உலக கள்ள ஓல் மேட்டர்கள் மற்றும் குடுமிபுடிச்சண்டைகள் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருந்தாலும், தகவல்களை மட்டும் வெகு அரிதாகவே கடத்துவான்.    

முதலில்  pentopublish என்று ஒன்று இருப்பதே எனக்குத்தெரியாது. என் பிரச்சனையே என்னவென்றால், நான் இம்மாதிரி விஷயங்களில் ஒன்றும் தெரியாமல்தான் இருப்பேன் ஆனால் அதில் ஒரு ஆர்வம் வந்துவிட்டால், ஒரு கை பார்த்துவிடுவது என்று இறங்கி விடுவேன். அந்தத் தீவிரத்தைப் பார்த்து அதை ஆரம்பித்து வைத்த அல்லது எனக்குத் தகவல் நல்கிய ஆள் எதற்கடா இவனிடம் சொன்னோம் என்று  வெருண்டு ஓடும் வரை அதில் தீவிரம் காட்டுவேன். அதில் ஏதாவது முடிவை எட்டவேண்டும், யாராவது ஒரு சப்ப மேட்டரை இழுத்துகொண்டே போனானாலோ, அல்லது வேலை நடக்காமல் இழுத்தடிக்கிறது என்கிற ஐயம் ஏற்பட்டுவிட்டாலோ, குச்சியை வைத்துக் குத்துவேன். இது உலக இயல்புதானே? லௌகீக வாழ்க்கையில் அடியேன் ப்ரோக்ராம் மேனேஜர்தானே? அங்கு எந்நேரமும் எவன் பூத்திலாவது தட்டுக்குச்சியை விட்டுக் குடைந்துகொண்டே இருக்க வேண்டும். நம்பிக்கை தும்பிக்கை இதற்கெல்லாம் அங்கு வேலையே கிடையாது. இல்லையென்றால் வேலை நடக்காது. ஆனால் இயல்பு வாழ்க்கையில் இம்மாதிரி விஷயங்களில் கொஞ்சம் விட்டுப்பிடிக்கவேண்டும் இல்லையென்றால் உறவு கெட்டுவிடும்

சரி கச்சேரிக்கு வருவோம். இங்கெல்லாம் ஃபேஸ் புக்கில் முதலில் புழுக்கைகள் இட்டுவிட்டுப் பிறகு, அவைகள் காய்ந்து சீந்துவாரத்துப் போனபிறகு அப்படியே முறத்தில் அள்ளி வேறு தலைப்பு வைத்து புக்கு போட்டுவிடுவதுதானே இயல்பு? அதே மாதிரி, அடியேனும் விட்டை, புழுக்கை என்றெல்லாம் வேண்டாம், (என்னதான் இருந்தாலும் நம் ஸ்டாண்டார்டு ஹை அல்லவா?) ஒரு வெள்ளோட்டம் மாதிரி எழுதிவிட்டு, அதை அப்படியே தூசு தட்டி பிற்காலத்தில் எனக்கு இருக்கும் இலக்கிய உலக உச்ச நட்பைப் பயன்படுத்தி, புக்கு போட்டு விடுவோம் என்று ராஜதந்திரமாக யோசித்து வைத்திருந்தேன். அதற்கான நேரமும் வந்தது. அதாவது

ஸ்வாமிநாதன் pentopublish5 பற்றிச்சொல்லவும், என்னிடம் வெள்ளோட்ட நோக்கில் (இந்த இடத்தில் ஒரு டிப்ளமேட்டிக் மூவ் ஒளிந்துள்ளது. புரிந்தவர் புத்திசாலி!) நான் எழுதியிருந்த அய்யன் ஸீரிஸ் கதைகளை அப்படியே எடுத்துத் தூசி தட்டி, நன்கு மெருகேற்றி, மச்சு மருகு நீக்கி...சுற்றி வளைப்பானேன்? வசைகளை நீக்கி, (காளை மாட்டுக்குக்  காயடிப்பது போன்றது இந்தச் சமரசம்ஒரு வெர்ஷன் தயார் செய்து கிண்டிலில் ஏற்றிவிட்டு நிமிர்ந்தால்...ஒரு நிமிடம் ஒரு நிமிடம்...ரே நிமிடம்முதலில் அதைச்சொல்லி முடித்துவிடுகிறேன்...

எதற்கு நீக்கினேன் என்றால், என்னதான் இருந்தாலும் கிண்டிலில் முதல் பரிசு வாங்கவிருக்கிறது, அப்போது என். சொக்கன் என்னும் தங்கமான மனிதர் கையில் நம் படைப்பு தவழும்போது, அவர் முகம் கோணி, பரிசளிக்காமல் விட்டுவிட்டால்? அதற்காக நீக்கினேன். எந்த இடத்தில் விட்டேன்? ஆங் ...

கிண்டிலில் ஏற்றிவிட்டு நிமிர்ந்தால், ஸ்வாமிநாதன் என்னிடம்

"அதெல்லாம் கரெக்டு...ஆனா, ப்ரமோட் பண்ணனும், மார்க்கெட்டிங் பண்ணனும்

"அப்டீன்னா?" 

"தெரியாதுடா...ரேட்டிங் உளுகணும், நெறைய பேரு படிக்கணும். போன தடவ என்ன நடந்ததுன்னா..."

ஸ்வாமிநாதன் சுருக்கமாக என்ன சொல்ல வருகிறான் என்றால், pentopublish இல் போடுவதெல்லாம் ஒரு பிரச்சனையா? வேட்புமனு தாக்கல் செய்யும்போது, ஒரு தொகுதியில் துரைமுருகனும் நிற்கிறார், எவனோ தோனான் துருத்தியான் கூடத்தான் நிற்கிறான், மனு தாக்கல் செய்கிறான், அலுவல் ரீதியாக அவன் வேட்பாளன். ஆனால் அவன் வெற்றி பெறுவது கூட வேண்டாம் குறைந்த பட்சம் முதல் பத்து இடங்களுக்குள்ளாவது வர வேண்டுமல்லவா

சென்ற வருடங்களில் என்ன செய்தார்கள் தெரியுமா? முதலில் ஆள் வைத்து புத்தகங்களுக்கு ரேட்டிங் போடுவது, பிறகு எல்லைக்கோட்டுக்கப்பால் செட்டிங் செய்யப்பட்ட நடுவர் தயாராக ஒன்றுமே தெரியாத மாதிரி முகத்தை விறைப்பாக அல்லது "ஜென் துறவி" மாதிரி வைத்துக்கொண்டு காத்திருப்பார். அவர்களுக்குள் -  

"தம்பி கொமாரு, நான் ரெடியா இருக்கேன் நீ அமௌண்ட்ட எறக்குவியோ, எத எறக்குவியோ எனக்குத் தெரியாது. நீ முன்னாடி ஒரு காலத்துல செட் பண்ணி போட்ட பிகருங்களக் கூட வுடாத... 

பிறகு மனதுக்குள்

(நீ நெஜமா போட்டியோ இல்ல அவள போட்டுட்டேன், இவளைப் போட்டுட்டேன்னு என்னிய மாதிரி ஓல் உட்னு திரியிறியோ? யாருக்குத் தெரியும்நீ சொல்றவளுக எல்லாரும் லெஸ்பியன்ஸா இருக்களுக்காளுவளேடா உன்னைய எப்புடி நம்பறது? ஆனா அரை இன்ச் குன்யூ- வச்சிகிட்டே, நல்லா செல்ஃப் ப்ராண்டிங் பண்ணி வச்சிருக்கறடாங்கொம்... சரீரீரீ இப்ப ரன்வீர் சிங்கும்தான் அம்மணக்கட்டையா....

அதற்குக் கொமாரு, மனதுக்குள்வலியுறுத்தும் குரலில்

முண்டக்கட்ட. எங்க முண்டக்கட்ட சொல்லுங்க பாப்பம்....

அதற்கு அவர் மனதுக்குள்

போடாங்கோத்தா...முண்டக்கட்ட

ண்டக்கட்டனுகிட்டு...பாப்பாரப்........

பாத்தியா கர்மா எப்புடி வேல செய்யுதுன்னு?) 

... மறுபடி ரூட்டு வுட்டு ராசி ஆயிக்கோ, அவுளுகளயும் அவுளுகளோட இன்னத்த புருஷன், அப்பன் சித்தப்பன், அவ பின்னாடி ரூட்டு விட்டுக்கிட்டுத் தெரிஞ்ச மிச்சர் மாமாக்கள்னு ஒருத்தன வுடாத. எனக்கு லௌகீகம் தெரியாது, ஆனா இந்த மாதிரி விஷயங்கள்ல நீ படு கில்லி, புத்திசாலி, என்னதான் இருந்தாலும் அய்யங்கார் மூள..."


இதையெல்லாம்  ஸ்வாமிநாதன் என்னிடம் இந்த அளவு விளக்கமாகச் சொல்லவில்லை. ஆனாலும் அர்த்த புஷ்டியுடன் அவன் புன்னகைத்து இவை அனைத்தையும் ஒரே நொடியில் உணர்த்திவிட்டான்

எனக்கும் இந்த டீலிங் பிடித்திருந்தது. கார்ப்பரேட்டுகளில்... எந்த கார்ப்பரேட் என்று சொல்லமாட்டேன், ஏற்கனவே பட்டறையைப் போட்டு நன்கு புட்டம் பெருத்துப்போய் உட்கார்ந்துகொண்டிருக்கும் ஒரு குழுவில் உள்ள சிலர் அப்ரைசல் என்கிற பெயரில் அவர்களுக்குள்ளாகவே மாறி மாறி ரேட்டிங் A+,  A ஓஹோ +,  A ங்கோ + என்று ரேட்டிங் போட்டுக்கொண்டு, சாதாரண ப்ராஜெக்ட் மேனேஜரிலிருந்து, ஏஜிஎம், பீஜீஎம், ஸீஜிஎம், டிஜிஎம்மென்று அவர்களுக்குள்ளேயே ஊட்டிவிட்டுக்கொண்டு ஊட்டம் பெற்று வளர்ந்துவருவதைப் பார்த்தவன் என்பதால், இதெல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையாகவே தெரியவில்லை.

சரி இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? நான் முன்பே சொன்னது போல் என் தீவிர அர்ப்பணிப்பு முகத்தைக் காண்பித்துவிட்டேன். முதலில் ரேட்டிங் போடச்சொல்லிக் கேட்டேன், பிறகு கெஞ்சல், பிறகு இரத்தல், எப்படியும் ஒரு ஐம்பது ரேட்டிங் தேறிவிடாதுஇதிலெல்லாம் கூச்ச நாச்சமே பார்க்கக்கூடாது. ஆனால் நடந்தது என்ன? நான் தொண்ணாந்து தொண்ணாந்து கெஞ்சிக் கேட்டுக்கொண்ட ஆட்களைத்தவிர ஒரு ரேட்டிங் கூட அதிகம் விழவில்லை. இத்தனை அனுகூலச்சத்துருக்களைக் கூட வைத்துக்கொண்டு நாம் போடும் புத்தகமெல்லாம் எக்காலத்தில் வெற்றி பெறுவது? வெற்றி பெறுவது கிடக்கட்டும், முதல் நூறிலாவது வர வேண்டாமா? இத்தனைக்கும் இருக்கும் எல்லா ஃபிரீ ப்ரோமோக்களையும் ஆன் செய்து ஐந்து நாட்களுக்கு புத்தகம் இலவசம் வேறு. KDP காரன் அனுமதித்தால் நிரந்தரமாகவே புத்தகத்தை இலவசமாக நல்கிவிடலாம்தான். 

ஆனால் அங்கு என்னடாவென்றால், பெரிய மெஷினரியே அதில் மிஷனரி ஆர்வத்துடன் செயல்பட்டு புத்தகத்தை வெற்றிபெற வைத்திருக்கிறது. pentopublish க்கு ஆள் வைத்து முன்னூறு நானூறு பேர் 5 ஸ்டார் ரேட்டிங் போடுகிறார்கள்

//இந்த நாவலை நான் கக்கூஸில் உட்கார்ந்தது வாசிக்கையில் எனக்கு கிச்சுகிச்சு மூட்டுவது போல் இருந்தது, கக்கூஸ் தரையிலேயே விழுந்து விழுந்து புரண்டு சிரித்தேன், அதில் அப்படியே கான்ஸ்டிபேஷனும் சரியாகி விட்டது <ஸ்மைலி#1 ஸ்மைலி#2 ஸ்மைலி#3 வாயைப்பிளந்து சிரிக்கும் ஸ்மைலி #1>. அதாவது 😊😊😊😃//   

பிறகு போட்டியில் முந்தி வந்தது மாதிரி வந்து, தயாராக உள்ள ஆள், முதல் பரிசு கொடுக்கிறார்! நமக்கு நாற்பது வந்தாலும், முதல் பத்திற்குள் வந்தாலும் பரவாயில்லை, எப்படியும் என். சொக்கன் வாசித்துவிடுவார் அது போதும்.

இது ஒரு புறமிருக்க, ஸ்வாமிநாதன் உட்பட்ட நண்பர்கள் சிலர் தத்தமது அலுவல்கள் மற்றும் லௌகீகப் பிரச்சனைகளை ஒதுக்கிவைத்துவிட்டுஐந்து நட்சத்திரம் நல்கினார்களே அதுவே மிகுதி. இப்படியெல்லாம் எழுதினால் அடுத்த முறையிலிருந்து அதுவும் போட மாட்டார்கள். இதுவே சில வருடங்கள் முன் என்றால், மூடிட்டு போ வேற வேல மயிறு இல்ல என்றிருப்பார்கள். இப்போதெல்லாம் கொஞ்சம் மெச்சூரிட்டி வந்துவிட்டது, ரொம்ப டிப்ளமேட்டிக்காக ஹேண்டில் பண்ணி, இன்னா போடறேன் அன்னா போடறேன். ஓ போட்டுட்டனே வர்லயா என்பார்கள். அதற்குத் தகுந்தாற்போல், அமேஸான்காரனும், ஒருவன் ரிவ்யூ எழுதி ஸ்டார் குத்துவதே பெரிய விஷயம், அவன் கையில் காலில் விழுந்து அதை வாங்குவதற்குள் அல்லு விட்டுவிடுகிறது. அதைகொண்டுபோய் வைத்துக்கொண்டு ஒரு வாரத்துக்கு அப்டேட் செய்வதில்லை. நான் இங்கு உண்மையில் ரேட்டிங் போட்ட உற்ற நண்பர்களைச் சந்தேகித்துக்கொண்டு உட்கார்ந்துகொண்டிருக்கிறேன்.

சரி இப்போது நான் என்ன செய்யவேண்டும்? சாரு ஸாரை அணுக வேண்டும். ஆனால் சாரு ஸார்தான்  டெரர் ஆயிற்றே? அறம் மட்டும் பிரண்டுவிட்டால் போதும், அப்படியே சுட்டெரித்துவிடுவாராயிற்றே? அவர் அறம் பேசினால் எல்லோரும் டவுசரில் ஒன்றுக்கடித்துவிடுவார்கள் வேறா? ஆனால் எழுத்து என்று வரும்போது மட்டும் சமரசமே  இல்லாமல் பிறழ்வார் அது வேறு

நான் சாரு ஸாரிடம் போய் இம்மாதிரி விஷயங்களைப் பேசுவதும், ஒரு ஐஏஎஸ் ஆஃபீஸர் சும்மா ஒரு "இதுக்கு", நாம் எல்லோரும் ஒன்று, சமமாகப் பழகுவோம்  என்று க்ரூப் 3 ஆள் ஒருவரின் தோளில் கையயைப் போட்டதும் உடனே அவரிடம் போய் தோளில் கை போடப்பட்ட க்ரூப் 3 ஆள், என் மகனுக்கு மெடிக்கல் ஸீட் வாங்கித்தாருங்கள் என்று கேட்பதற்குச் சமம்ஐஏஎஸ் திரை மறைவில் ஆயிரத்தெட்டு அயோக்கியத்தனங்கள்  பண்ணிக்கொண்டு திரிந்தாலும், அவர் க்ரூப் 3 க்கு மயிரவா செய்வார்

க்ரூப் 3 தான் எந்நேரமும் ரேங்க் ஆபீஸருக்கு கால் கழுவிவிட்டுக்கொண்டு இருக்கவேண்டுமே தவிர, ரேங்க் ஆபீஸரிடமெலாம் சரி சமமாக எந்த உதவியும் கேட்கக்கூடாது. அவர் மூடு வரும்போது கை போடுவார், அதாவது  தோழ பாவத்துடன் தோளில் கை போடுவார். 

"என்னப்பாத்தியா எல்லார் கூடவும் எப்புடி சரி சமமா பழகறேன்னு?"

 க்ரூப் 3 ஹி ஹி என்று சங்கோஜத்துடன் இளித்துக்கொண்டு கால் கழுவிவிட்டு, தொடர்ந்து ஆடர்லி வேலை செய்துகொண்டிருக்கவேண்டும்.

ரேங்க் ஆபீசர்/ ஐஏஎஸ் ஆபீசர் மாறாக வெளிய போ மேன்...உங்களை மாதிரி ஆளுங்களையெல்லாம்வெக்கற எடத்துல வைக்கணும் என்று சொல்லி மெமோ கொடுப்பாரா மாட்டாரா? (இந்த மெமோ மெமோ என்றால் என்னவென்று கொஞ்சம் புரிந்துகொண்டு  எழுதவேண்டும் அடுத்த முறை. அரசு/ அரசாங்கம்/ ஐஏஎஸ்/ ஊழியர்/ ஹைரார்க்கி/ பீரோக்ரஸி சம்பந்தப்பட்ட எழுத்து என்றவுடன் உடனே ச்சும்மா ஒரு இதுக்காக, விரல்கள் தன்னிச்சையாக மெமோ என்று தட்டுகின்றன. ஒரு பின்னநவீனத்துவ எழுத்தாளனாக நான் இவற்றையெல்லாம் கொஞ்சம் குறைத்துக்கொண்டால்  நலம்

அதுவும் அவர் "நேர்மையான", கவனிக்கவும் நேர்மையான அல்ல "நேர்மையான" ஐஏஎஸ் ஆக இருந்தால் என்ன செய்வார்? இது கொஞ்சம் புரியாமல் இருப்பவர்களுக்கு வேறு விதமாகச் சொல்வதானால், சிட்டிங் எம்மெல்யேவிடம் போய் ஒரு வட்டச்செயலாளர் ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டு, பூப்பு நன்னீராட்டுவிழா பத்திரிக்கையை எடுத்து நீட்டினால், ஏற்கனவே அமலாக்கத்துறையிடம் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கிக்கொண்டிருக்கும் எம்மெல்யே என்ன சொல்வார்?

இதையெல்லாம் ஒரு வேளை அமேஸான்காரன் வாசிக்கநேரிட்டால், அப்படியா சேதி? ஆள் வைத்தா ரேட்டிங் போடுகிறாய் என்று என்னைப் போட்டியிலிருந்து விலக்கிவிட்டாலும் விட்டுவிடுவார்கள். பிறகு நானும் ஆமா ஒன்னு ரெண்டு கால்ல விழுந்து கெஞ்சி ரேட்டிங் போட்டுக்கறவன வந்து நொட்டு அங்க நானூறு ஐநூறுன்னு தலைக்கி நூர்ரூவா குடுத்து ஆள் வச்சி ரிவ்யூ போட வச்சி, முதல் பரிசு வேற குடுத்துகுட்டானுக, அத வாங்கீட்டு அவனும் வாண்டடா நானும் எலுத்தாலன் நானும் எய்த்தாயன் நானும் எளுத்தாலன் என்று சொல்லிக்கொண்டு தூக்கித் தோளில் போட்டுகொண்டு திரிகிறான் (எங்கே எழுத்தாளன் சொல்லு...எழுத்தாளன்) அவுனுகள வுட்ரு என்று நினைத்துக்கொள்வேன்.

ஒரு கதை என்றால் இப்படியே நீண்டுகொண்டே போய்க்கொண்டே இருக்கும். பின் நவீனத்துவம் என்று வரும்போது கதை என்பது ஒரு கதை மட்டுமாஇப்போதுதானே தொடங்கியிருக்கிறது? ஆனால் இக்கதை இத்தோடு நிறைவடைகிறது. 


Comments

Popular posts from this blog

வலியின் கதை

Jawan - An Inimitable Experience

நடுகல் இதழ் 15