மனநலமும் இன்றைய சவால்களும் #1

ஃபேஸ்புக் மொன்னை மூளையான்களைக் கொஞ்சம் கவனித்துவிடுவதில் மட்டும் எழுத்துக்களை விரயமாக்காமல், மன நோய்கள் மற்றும் மன நோய்வாய்பட்டிருப்பவர்களை அணுகும் விதம் ஆகியவற்றில் உள்ள சில முக்கிய சிக்கல்கள் மற்றும் சவால்களைப் பற்றி எழுதுவது அதிக நன்மை பயக்கும் என்பதால், இந்த முயற்சி. தலைப்பை மீண்டும் ஒரு முறை வாசித்துவிட்டு, தொடர்ந்து ஜாலியாக வாசியுங்கள்.

  முதலில் மனநோய்கள் மற்றும் உளவியல் சீர்குலைவு அல்லது உளவியல் கோளாறு என்ற இரு வேறு பிரச்சனைகளுக்குள்ள வித்தியாசங்களைப் பார்ப்போம். இந்த இடத்தில் இயன்ற அளவுக்கு எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்த முயன்றிருக்கிறேன், முடியாதவற்றை அப்படியே ஆங்கிலத்தில் எழுதுகிறேன். சிலவற்றுக்கு பின்னொட்டில் டிஸார்டர் என்று வரினும் அவைகள் நோய் வைகையில்தாம் வரும் என்று புரிந்துகொள்வோம்.

 மன நோய்களின் பட்டியல்-

 1. Anxiety என்னும்  மனப்பதட்டம்

 2. Depression என்னும் மனச்சோர்வு நோய்

 3. Bipolar Disorder

 4. Post-Traumatic Stress Disorder (PTSD) - விபத்து, நோய் அல்லது இழப்பிற்குப் பின் வருவது

 5.Schizophrenia எண்ணம் செயல்கள் ஆகியவற்றில் பிறழ்வுத்தன்மையுடன் இருப்பது

 6. Neurodevelopmental Disorder நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடு

 7. Disruptive behaviour and dissocial disorders குணக்கேடு  மற்றும் சமூகவிரோதத் தன்மை

  ********************

  1. Anxiety என்னும்  மனப்பதட்டம்

  உலகத்தில் இருக்கும் அத்தனை ஃபோபியாக்களுக்கும் ஆதாரப்புள்ளி இந்த Anxiety தான். சாதாரணமாக அனைவருக்குமே ஏதாவது ஒரு சூழ்நிலையில் வந்துபோகும் Anxiety யானது இதனது தீவிரத்தன்மை அதிகமாகிசிலருக்கு ஃபோபியாவாக மாறும். அடிக்கடி Panic Attack ஏற்பட்டு, எதற்கெடுத்தாலும் பீதி அடைவர். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்னும் பழமொழிக்கிணங்க, (, தேறிவிட்டேன்! இலக்கிய மொக்கைச்சாமிகளின் நடை எங்கிருந்தோ டெலிபதியில் வந்து விரல்வழி ஒழுகுகிறது) சிறுவயது முதலே அறிகுறிகள் தென்பட்டுவிடும். பதின் பருவத்தில் ஒன் சைட் லவ், தற்கொலை என்றெல்லாம் போவார்கள். தற்கொலை ரூட் பிடிக்காமல், அதற்கும் பயந்துகொண்டு சாதா ரூட் பிடிப்பவர்கள், பிற்காலத்தில், எலிப்பயம், கிளிப்பயம் (ஆக, நம் கிளித் தலைவருக்கு இந்த டிஸார்டர் இல்லை என்று ப்ரூவ் ஆகிறது. தொடர்ந்து படியுங்கள் பார்ப்போம் எதில் வருகிறார் என்று) ஓட பயம், சாட பயம், நடக்க பயம், பேங்கில் போய் பணம் கட்டிவிட்டு வரப் பயம், தண்ணீர்ப் பயம், நன்னீர்ப் பயம், வெங்காயம் உரிக்கப்பயம், தேங்காய் உரிக்கப்பயம், குறிப்பிட்ட சில இடங்களுக்குச் செல்ல மறுத்தல் (உதாரணங்கள் சினிமா தியேட்டர் அல்லது திருமணம் முடிந்ததும் அன்று இரவே கழுத்தைப் பிடித்து ஒரு அறைக்குள் தள்ளுவார்களே? அதன் பெயர் என்ன? மறந்தேவிட்டது!) என்று வகை தொகையில்லாமல் ஃபோபியாக்கள். பயந்து போய் கை, கால்கள் மற்றும் தொடை நடுக்கம், வியர்த்து வழிதல், சீரற்ற இதயத்துடிப்பு, கட்டுக்கடங்காத எண்ணங்கள் மற்றும் கவலைகள், ஒரு பரீட்சை கிரீட்சை என்றாலோ, பாஸ் கூப்பிடுகிறார் என்றாலோ குலை நடுங்கி சமயங்களில் வயிற்றுப்போக்குக் கூட ஏற்படும்.

  சில குழந்தைகள், சில சூழ்நிலைகளில் குறிப்பாக பள்ளிகளில் தன் திறமைக்கும் புரிந்துகொள்ளும் அறிவுக்கும் மிகையான விஷயங்களைக் கற்க வலியுறுத்தப்படும்போது, அதில் தோல்வியுறும்போது, அதைச் சொல்லமுடியாமல், மெது மெதுவாக தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வார்கள். பிற்காலத்தில் அது Anxiety disorder ஆக மாறும். Introverted ஆகவும் மாறிவிடுவார்கள். இளமையில் தனக்குப் பிடிக்காத சூழ்நிலைகளில் தள்ளிவிடப்படும் நிலையை எதிர்க்கமுடியாதவர்களை, இந்நோய் தாக்குவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

  நாங்கள் குடியிருந்த தெருவில் ஒரு அக்கா, அந்த அக்காவுக்கு ஒரு மகன் அந்த மகனுக்கும் எனக்கும் ஒரே வயது. (எங்கள் ஊர்ப்பகுதிகளிலெல்லாம் வகுப்புத் தோழர்களின் அம்மா என்றால் நமக்கு அக்கா, அவனது அப்பா நமக்கு அண்ணா. இது என்ன லாஜிக் என்று புரியவில்லை). அந்த அக்கா இவனை செட்டியார் கடைக்கு சாமான் வாங்கக் காசு கொடுத்து அனுப்பினால், இவன் அதை வாங்கிக்கொண்டு வடக்க பாத்து ஒரு பத்து அடி, பிறகு கெழக்க திரும்பி ஒரு தெருவைக்கடந்தால் செட்டியார் கடை. வாங்கிக்கொண்டு ஐந்தே நிமிடத்தில் வந்துவிடலாம். இவன் மட்டும் எப்போது அனுப்பினாலும், அதற்கு நேர் எதிராக தெக்க பாத்து நடந்து, ஊர் சுற்றிக்கொண்டு ஒம்போது மண்னேரம் கடைக்குப் போய் வந்துகொண்டிருந்தான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, ஒருநாள் அந்த அக்கா அவனைப் பிடித்துக்கொண்டது.

  "ஏனுங் இவனையப் பாருங், கறிக்கொளம்பு வெக்யறக்கு ரண்டு தேங்கா சில்லு, ஒரு கட்டு கருவேப் தல வாங்கியாரச் சொன்னா ஊரு தேசமெல்லா தொண்டு சுத்திப்போட்டு எப்ப வாராம்ன்னு பாருங்" என்றுவிட்டுப் போட்டு அடி பெண்டு நிமுத்தியது. இவன் அழுதுகொண்டே,

  "ம்மா அந்த வீதி வழியா போமாண்டங்மா, பயம்மாருக்குதுங் மா. அந்தக்கா மொறச்சு மொறச்சு பாக்குதுங்மா" என்றிருக்கிறான்.

  "அவ மொறச்சுப் பாத்தா உனக்கென்றா? உன்ர சாமானத்தைவா புடிச்சு இழுத்துருவா, வாடா, வந்து எந்தக் _____ னு காட்டு நாங்கேக்கறேன்" என்று தரதரவென பத்தடிகள் இழுத்துக்கொண்டு சென்றது. இவன் பலி பீடத்துக்கு இழுத்துச் செல்வது போல், பீதியில் டவுசரில் ஒன்றுக்கு அடித்துவிட்டு, அங்கேயே கிடந்து புரண்டு அழுது தப்பித்துவிட்டான். அந்த இளம் வயதிலேயே எனக்குக் கொஞ்சம்  ஞானம் அதிகம் என்பதால்,

  "அக்கா எனத்தையோ பாத்து பயுந்து போயிருக்கறானுங்க்கா உட்ருங்க்கா" என்று கெஞ்சவும்,

  "இந்த வயசுலயே பாக்ககூடாத எதைடா பாத்து பயந்தே?" என்று எக்ஸ்ட்ரா நாலு மொத்து மொத்தியது.    

  என்ன அநியாயம் பாருங்கள்? இதுவும் ஒரு விதத்தில் விக்டிம் ஷேமிங் மாதிரித்தானே? ஐயோ பாவம் காணாததைக் கண்டு பயந்து போயிருக்கும் தன் வாரிசை அள்ளி வாஞ்சையுடன் அனைத்து, அரவணைக்காமல் போட்டுச் சாத்தினால், பிற்காலத்தில் என்னென்ன பிரச்சனைகள் வரும்?

  ஆனால் நடந்தது என்னவென்றால், இவன் சுற்றிக்கொண்டு போகும் சாக்கில், தெற்குத் தெரு காவாலிப் பசங்களுடன் சேர்ந்துகொண்டு எட்டு வயசிலேயே பீடி! ஒரு நாள் கையையும் களவுமாக மாட்டிக்கொண்டதும், அந்த அக்காவுக்கு உடம்பு சரியில்லை என்று கேஸை இவன் அப்பாவுக்கு டிரான்ஸ்பர் பண்ணி விட்டது. அன்னார் ஸ்டேஷனில் ஏட்டு. வீட்டுக்குள் என்ன ட்ரீட்மெண்ட் நடந்தது என்று தெரியவில்லை. அலறல் சத்தம் தெருவையே கதறவிட்டது.

   அந்தக்கா என்னைப் பார்க்கும்போதெல்லாம்,

  "அந்த அய்யிரு பையனப்  பாரு எப்புடி ஒழுக்கமா, தின்னூறு வெச்சிக்கிட்டு மந்தரமெல்லா சொல்லுது பாரு..."

  நானும் சிலகாலம் வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம், "தின்னூரை" இன்னும் பெரிதாக இழுத்துவிட்டுக்கொண்டு அந்தப்பக்கம் போவதும் வருவதுமாக ஸீன் போட்டுக்கொண்டிருந்தேன்.

  பிற்காலத்தில் தலைவர் பதினாறு வயதிலேயே லீலைகள் பல புரிந்து, அடிக்க வந்தால், அடப் போ பொம்பள, நீ ரொம்ப யோக்கியமா? என்று பெற்ற அன்னையையே கதறவிட்டான். அந்தக்கா பாவம், நாலு வார்த்தைகள் மங்களகரமாகப் பேசுமே ஒழிய, மற்றபடி நல்ல அக்கா. தற்சமயம் தலைவர் சிங்கப்பூரில் இருப்பதாகக் கேள்வி. சென்ற வருடம் போன் செய்து வேதாந்தமெல்லாம் பேசினான்.

  இந்தக்கதையை எதற்குச் சொல்கிறேன் என்றால், எல்லா Anxiety யும் நிஜ Anxiety கிடையாது. ஏதாவது ஸ்காண்டலில் ஈடுபடும்போது கிலி கவ்வும். பலர் கள்ள உறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்துவிட்டு, அதை மறைக்கும் போது முதலில் Anxiety யின் பிடியில் சிக்கித்தவித்துப் பிறகு Jugglery நன்கு கைகூடியதும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவர். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல, கொஞ்சம் கொஞ்சமாகக் குற்ற உணர்வில் வாட வாட, அது depression என்னும் நரகக்குழிக்குள் தள்ளிவிட்டுவிடும். ஒரு சிலர், குற்றவுணர்வு நொற்ற உணர்வு இதெல்லாம் எதுவும் இல்லாதவர்கள்தன் போக்கை நியாயப்படுத்துவதற்காக - இது என்ன பெரிய விஷயம்? சங்க காலத்தில் இல்லாததா? தலைவிக்குக் பிரசவம் நடக்கும்போது, தலைவன் அருகே இல்லாமல் பரத்தை வீட்டில் குஜால் பண்ணிக்கொண்டு இருப்பது பற்றிக் கவலைப்பட்டு இங்கனம் எழுதுகிறான், என்று எதைவாவது மேற்கொள் காட்டி எழுதுவார்கள். இல்லையென்றால், Shakespeare இன் Juliet ட்டுக்கு முதன் முதலில் கில்மாவில் ஈடுபடும்போது அவளுக்கு வயது பதினொன்று என்று கற்கால வழக்கங்களைத் துணைக்கு அழைத்துக்கொள்வர். எருமை கூடத்தான்  வாயால் புல் மேய்ந்துகொண்டே, அதே நேரத்தில் சாணியும் போட்டு, மூத்திரமும் பெய்யும், அதே போல்தான் Cannibals ஆன குகை மனிதனும் கூட... ஆய் போய்க்கொண்டே, ஒரு கையால் மனிதக்காலைச் சுட்டுத்தின்பான். ஏன் ஐயா இந்த மாதிரி primitive சங்கதிகளைத்தான் நீங்கள் Adultery யில் ஈடுபடுவதற்காக சந்தர்ப்பவாதமாகப் பயன்படுத்துவீர்கள்? இவன்கள் சொல்லும் இன்னொரு சாக்கு, இதெல்லாம் Victorian morality, பழமை வாதம்! சரி பிறகு ஜூலியட்? சங்க இலக்கியம்? அவைகளெல்லாம் பின் நவீனத்துவமா? உங்கள் நோக்கத்திற்கு, உங்கள் பல பட்டறை கில்மா வேலையில் ஈடுபடுவதை மறைப்பதற்குத்தான் ஒன்றுக்கு ஒன்று முரணான உதாரணங்களை அடுக்குவீர்கள்? இந்தளவு prehistoric மனநிலையில் இருந்துகொண்டு, எப்படி உங்களால் நாங்கள்தான் நவீன இலக்கியத்தின் அவதார் பாபா என்று வெட்கமில்லாமல் மார்தட்டிக்கொள்ள முடிகிறது? ஏனென்றால், இவர்களுக்கு இருப்பது Anxiety யோ Depression கிடையாது, வேறு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது. அது என்ன என்பது பற்றிப் பிறகு பார்க்கலாம்.

  (தொடரும்)

Comments

Popular posts from this blog

வலியின் கதை

Jawan - An Inimitable Experience

நடுகல் இதழ் 15