மன நோய்களும் மருத்துவமும்
மன நோய் என்றவுடன் உடனே பைத்தியம், சைக்கோ, சட்டையைக் கிழித்துக்கொண்டு திரிவது, ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுப்பது என்று தமிழ் சினிமா வழங்கிய தற்குறித்தனமான அறிவையும் சமீபத்திய அரைவேக்காட்டு ஞானத்தையும் மூலதனமாக வைத்துக்கொண்டு, அரைகுறை தமிழ் லிபிப் பரிச்சயத்தையும் துணைக்கு அழைத்துக்கொண்டு பொறுக்கித்தனமாக இழித்தும், பழித்தும் ஃபேஸ்புக்கில் தெல்லவாரித்தனமாக எழுதிக்கொண்டு திரிவது என்பது வாடிக்கையாக மற்றும் பொழுது போக்காகப் போய்விட்டது. டிப்ரெஷனை எப்படிப் போராடி வென்றேன், டிப்ரெஷனைவிட்டு வெளியேறுவதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டியிருந்தது என்று பல பிரபலங்கள் பேட்டி கொடுப்பதையும் காணமுடிகிறது.
Depression
என்பது தமிழ்ப் படுத்தும்போது ஏதோ ஒரு வகையான சோர்வு அல்லது சோகமாக உணர்தல் அவ்வளவுதான் என்பது போன்று மேம்போக்கான நோயாகத் தோன்றும். இது நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு கொடூரமான ஒன்று. உண்மையில் பல தற்கொலைகள், நாட்பட்ட டிப்ரெஷன் காரணமாகத்தான் நிகழ்கிறது. சிலருக்கு திடீரென்று ஒரு நாள், நன்கு ஓடி ஆடி வேலைசெய்துகொண்டு, மகிழ்ச்சியாக வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருக்கும்போதே, எங்கிருந்து வந்து தாக்கியது என்றே தெரியாமல், சட்டென்று வந்து ஆளை அமுக்கிவிடும். திடீரென்று ஒரு நாள் காலையில் படுக்கையிலிருந்து எழுந்துகொள்ள முடியாமல் போகும். கண்களையே திறக்கவேண்டாம், இப்படியே படுக்கையில் படுத்துக்கிடந்தே என் வாழ்க்கையைக் கழித்துவிடுகிறேன், எழுந்துபோய் தற்கொலை செய்வதற்குக்கூட மனத்திலோ உடலிலோ தெம்பிருக்காது. நாட்பட்ட காய்ச்சலில் படுத்து எழுந்தது போல் உடற்சோர்வு வாட்டி வதக்கும். தலை வெடித்துவிடும்போல் தோன்றும். சென்ற கணம் என்ன நடந்தது என்று மறந்துபோகும் அளவு மறதி நிலவும், அடுத்த கணம் பற்றிச் சிந்திப்பதே பெரும் சுமையாகத் தோன்றும். ஒரு கவளம் சோற்றை எடுத்து வாயில் வைப்பதே ப்ரம்மப் ப்ரயத்தனமாக இருக்கும். வாழ்க்கை சூன்யமாக மாறிப் போய்விட்டதுபோல் இருக்கும், எதற்கு வாழ்கிறோம் என்றே தெரியாது. சிலர் ஆற்ற முடியாமல் அழுது பிழிவர். யார் என்ன சொன்னாலும், எவ்வளவு சொன்னாலும் சமாதானம் அடைய மாட்டார்கள். ஒரு காலத்தில் ஈடுபாட்டோடு செய்துவந்த எந்த ஒரு விஷயத்தையும் செய்யமுடியாமல் போவர். இதில் Major depression, Persistent depressive disorder, Post
Partum Depression (பெண்களில் குழந்தைப் பேறு முடிந்ததும் வருவது), என்று பல வகைகள்.
டிப்ரெஷனுக்கு புறக்காரணிகள் என்பது ஒரு துப்பாக்கிக்கு அதன் விசை எப்படியோ அப்படியானது. சில வகையான டிப்ரஷன்களுக்கு புறக்காரணிகளுக்கும் அதற்கும் நேரடித்தொடர்பு இல்லையென்றாலும், டிப்ரெஷனுக்கான கூறுகள் ஒரு நபரில் ஆரம்பம் முதலே இருந்தால், சந்தர்ப்பத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அது துப்பாக்கியின் விசையை இழுத்தவுடன் வெளிப்படும் தோட்டாவைப் போன்று வெடித்து வெளிப்படும்.
எந்தவிதமான டிப்ரெஷனாக இருந்தாலும் அதன் தீவிரத்தைப் பொறுத்து, அது தானாகவோ அல்லது தெரபி மூலமாகவோ சரியாகும். தெரபி என்பது இங்கு மருந்து மாத்திரைகள் என்று அறிக. இதன் தன்மையைப்பொறுத்து, Bupropion அல்லது SNRI வகையான மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது. இதில் SNRI வகை மருந்துகள் Serotonin என்னும் வேதிப்பொருள் மூளையில் சுரவாமை காரணமாக நோயாளிகளுக்குக் கொடுக்கப்படுவது. இதில் Bupropion வகை மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகள் தாங்கொனா சித்தரவதைக்குட்படுவர். கடும் பக்கவிளைவுகள் ஏற்படும். வாய் வறண்டு போதல், தொண்டை வலி, கண்கள் இருளுதல், சீரற்ற இதயத்துடிப்பு, குழப்பம், தலை வலி, அதீத துக்கம் மற்றும் எரிச்சல் உணர்வு, வாந்தி, மயக்கம், தூக்கமின்மை மற்றும் தற்கொலை உணர்வு. இவைகள் காரணமாக இவர்கள் துடிதுடித்துப்போய் தன்னைச் சார்ந்தவர்களிடமும் மருத்துவர்களிடமும் இந்த மருந்தை நிறுத்தத் சொல்லிக் கெஞ்சிக் கதறுவதுண்டு (நானே கதறியிருக்கிறேன்).
இது தவிர Schizophrenia, Bipolar
Disorder போன்ற டிப்ரஷனைவிடக் கொடூரமான மன நோய்கள் இருக்கின்றன. இவ்வகையான நோய்கள் தக்க மருத்துவ மற்றும் அனுசரணையான கவனிப்பின்மூலம் கட்டுக்குள் வரக்கூடியவை, அல்லது கைத்தடியுடனோ, கண்ணாடியுடனோ வாழ்க்கையை ஓட்டுவது போல் கடைசிவரை ஓட்ட முடியும். மருந்து மாத்திரைகள் மூலம் ஓரளவு மீண்டுவந்த பிறகு, CBT எனப்படும் Cognitive Behavior Therapy வழங்கப்படும். பல மாதங்கள் சளைக்காமல் சென்று மணிக்கணக்கில் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவேண்டும்.
மருத்துவம் மருந்து மாத்திரை என்பது ஒரு பங்கு என்றால், இதில் மீதம் தொண்ணூற்று ஒன்பதில் தொன்னூற்று எட்டு பங்கு நோயாளியின் உறவினர்களுடையது. இந்நிலை மிகவும் துரதிர்ஷ்ட்டவசமானது ஆனால் அதுதான் நிதர்சனம். ஒரு கடும் காய்ச்சல் வந்தாலே ஒரு நபருக்கு எப்படிப்பட்ட சுஷ்ருதைகளும் கவனிப்பும் தேவைப்படும்? ஆனால் மன நோய் என்பது அதைவிடக் கொடூரமானது அல்லவா? இது ஒரு விபத்தில் அடிபட்டு பேச்சு மூச்சில்லாமல் கிடப்பது போன்றது. அம்மாதிரி சுவாதீனமில்லாமல் படுத்துக்கிடக்கும் ஆளிடம் போய், உனக்கென்ன கேடு, எந்திரிச்சி ஓடு, நீச்சல் அடி, யோகா பண்ணு என்று அட்வைஸ் எழுதும் ஃபேஸ்புக் கேனாதி மகன்களை வேண்டுமானால் அவன்களின் பட்டெக்சில் ராடைக் காய்ச்சி ஒரு இழுப்பு இழுத்துவிட்டு, சூடு வீணாகப் போகிறதே என்று அதை அப்படியே உள்ளே விட்டுவிடவேண்டும் என்று திட்டி எழுதிவிட்டுப் போய்விடலாம். ஆனால் நிதர்சனத்தில், உடன் உள்ளவர்களின் மர மண்டையிலேயே இது ஒரு Real Medical Condition என்று ஏறித்தொலைப்பதில்லை. அவர்களும் நோயாளிகளிடம் சென்று, உனக்கு என்ன நோக்காடு? எல்லாம் திமிரு வேற ஒன்னும் இல்ல, எங்குளுக்கெல்லாம் கஷ்டமில்லையா? எங்குளுக்கு டிப்ரஷன் இல்லையா? நாம்போயி எந்த மருந்த வாங்கிக் குடிக்கறது? எந்தக் கவுத்துல தொங்கறது என்று 'கு. கூ' மாதிரி ரூல்ஸ் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு ஒனத்தி இருந்தால், உன்னிடமெல்லாம் ஏன் ஏச்சுக்கள் கேட்டுக்கொண்டிருப்பார்கள்? அவர்கள் பாட்டிற்குத் திமிறி எழுந்து, வேலையைப் பார்க்கப் போக மாட்டார்களா?
குடும்பத்தினர் அல்லது சார்ந்தவர்கள் அறிவுள்ளவர்களாக இருந்தால், நோயாளி தப்பித்து ஓரளவு சமாளித்து மீண்டுவிடுவார். அதுவே ஃபேஸ்புக்கில் திமிரெடுத்துப்போய், சமூக விரோதத் தன்மையுடன் எழுதுபவன் போல் இருந்தால் அவ்வளவுதான் அந்தக்குடும்பம் தலையெடுக்கமுடியாமல் திணறி, மண்ணோடு மண்ணாகப் போய்விடும். மன நோயாளிகளுக்கு சாதாரண நோயாளிகளுக்குத் தேவைப்படும் அன்பிலும் அரவணைப்பிலும், கவனிப்பிலும் நூறு மடங்கு தேவைப்படும். அவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தங்களுக்கு ஏற்பட்ட துயரத்தைப் பற்றிப் புலம்பத்தான் செய்வார்கள். அது ஒரு ரேப் விக்டிம் அல்லது படு கொடூரமான சித்தரவதைக்கூடத்திலிருந்து தப்பிய ஒருவரின் மனநிலைதான், அவர்கள் யாரோடாவது பேசத்துடிக்கத்தான் செய்வார்கள். நாஜி வதைமுகாமிலிருந்தோ, ரஷ்ய குலாகிலிருந்து தப்பி வெளியேறிய ஒருவன் ஆதரவாகத் தன்னுடன் யாராவது பேசமாட்டானா, ஆற்றுதல் படுத்தமாட்டானா என்று துடிக்கத்தானே செய்வான்?
அன்புக்கும் அனுசரணைக்கும், ஒருவித Constant reassurance ஐ இவ்வுலகம் நல்கிக்கொண்டே இருக்காதா என்று ஏங்கிக்கொண்டேதான் இருப்பான். ஆனால் இவ்வுலகம் அந்த அளவு கருணை உள்ளம் கொண்டதல்ல. முதலில் இதிலிருந்து தப்பி வருபவர்கள் சொல்லும் கதைகள்தான் பிரபலங்களின் பேட்டிகள். அவர்களுக்கு அந்தக் கொடுப்பினையைத் தருவது அவர்களது அனுசரணையான, இதைப்பற்றிய புரிதலுள்ள குடும்பமும் இவையெல்லாவற்றுக்கும் Enabler ராக உள்ள பணம் என்னும் சூப்பர் வெப்பன். ஒரு பைபோலாராகவே இருந்தாலும் ஒரு மூன்று வருடங்கள் வேலை, தொழில் என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஆள், அம்பு, சேனை, கவனிப்பு என்று அனைத்தையும் மொத்தமாக ஒரே ஆளின்மேல் செலுத்த முடியும். இதுவே ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பம் என்றால், அவ்வளவுதான், அதுவும் நான்கு பேர் உள்ள குடும்பத்தில் நோய்வாய்பட்டிருப்பவர் தவிர மற்ற மூவரும் சேணம் கட்டிய குதிரை மாதிரி ஒற்றை ஆளுக்காகப் போராட வேண்டும். மூன்றில் ஒன்றின் மண்டையில் விஷயம் ஏறவில்லையென்றாலும் ஆட்டம் காலி, குடும்பம் முழுகிவிடும். வீட்டில் ஒருக்கணம் நிம்மதியிருக்காது. எந்நேரமும் அடிதடி, சண்டை, மண்டை உடைதல், அழுகாச்சி, அக்கம்பக்கத்தவர்கள் சண்டை என்று போகும்.
உலகெங்கிலும் ஆண்களைக்காட்டிலும் பெண்களுக்கு அதிகம் மன நோய்கள் ஏற்படுகின்றன, அதிலும் குறிப்பாக டிப்ரெஷன் என்பதை வெளிப்படுத்தக்கூட முடியாமல் அதை அப்படியே Internalize செய்துகொண்டு அதனுடனேயே வாழப்பழகிக்கொள்வர். இதற்கு நேரெதிராக ஆண்கள் டிப்ரெஷனை Externalize செய்யும் அதாவது அதை வெளிப்படுத்தும் போக்கினைக் கொண்டிருப்பர். பெண்களுக்கு டிப்ரெஷன் வருவதற்காண காரணங்களாகக் கூறப்படுபவை -
1.
பூப்பெய்தும்போது சிலரில் ஏற்படும் அதீத ஹார்மோன் மாற்றங்கள்
2.
மாத விடாய் ஏற்படுவதற்கு முன் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள். இது பொதுவாக ஒரு கடந்துபோகக்கூடிய ஒன்று என்றாலும் சிலரில் நிரந்தரமாகத் தங்கிவிடும்.
3.
கர்ப்பகாலங்களில் வருவது.
4. ஏற்கனேவே சொன்னதுபோல், Postpartum depression. குழந்தை பிறந்தவுடன் வருவது.
5.
மெனோபாஸ் காரணமாக, அளவுக்கதிகமாக செக்குமாடு போல் உழைப்பது, குடும்பங்களுக்குள் சரிசம உரிமை அல்லது மரியாதை அல்லது அங்கீகாரம் வழங்கப்படாதிருத்தல்.
6.
வெளியே சொல்ல முடியாத பாலியல் ரீதியான சீண்டல்கள் மற்றும் சித்தரவதைகள். சில சமயங்களில் வெளியே பகிரத் தயங்கும் நோயுடன் போராட்டம்.
என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
அதைவிட துரதிர்ஷ்டவசமாக, இப்போதுதான் ஓரளவு மன நோய்கள் பற்றிய விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டுவரும் நிலையில், குருட்டு அதிர்ஷ்டத்தில் புகழடைந்த சில ஃபேஸ்புக் கிறுக்கர்கள் இதுபற்றி ஒரு 'அ' னா 'ஆ' வன்னா கூடத்தெரியாமல், நக்கல் மயிரும் கிண்டல் மயிரும் அடித்துக்கொண்டு திரிகிறான்கள் முழு மூட அற்பர்கள். ஊர்க்காசை ஆட்டையைப் போட்டுத் தின்றுகொண்டு, படம் எடுக்கிறேன் குடம் எடுக்கிறேன் என்று தெனாவெட்டாகத் திரியும் இவன்களுக்கெல்லாம் டிப்ரெஷன் பற்றிய புரிதல் வராமல் இருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. பிராடு காசில் தின்பவனுக்குக் கொழுப்பு கூடுதலாகத்தான் இருக்கும். மன நோயில் உழல்பவர்களைப் பழிப்பது, உடல் ஊனமுற்றவர்களையோ அல்லது இதய நோயாளிகளையோ பழிப்பதற்கு ஒப்பானது. அம்மாதிரி செய்துகொண்டு திரியும் அறிவிலிக் கபோதிகளைக் கூட விட்டுவிடலாம். ஆனால் இந்த மோடு முட்டிகள்தான் இலக்கியப் புடுங்கிகள் என்று சர்டிபிகேட் கொடுக்கும் சீனியரை என்னவென்று சொல்வது?
இவனைப்பற்றி ஒரு நெல்லைக்கார நண்பனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அவன் கடும் கோபத்தில், என்னிடம் கேட்டது.
"ஏம்ல அவன கேக்க வேண்டீதுதான ல?"
"என்னல கேக்க?"
"ஏம்டே, இப்பிடித்தான் உங்கொம்ம டிப்ரெஷன் வந்து பாடைல படுத்துக்கிடக்கைல, ஏட்டி மூதி, யோகா பண்ணுடி, நீச்சலடிடி, எந்திச்சி போயி கடுக்காயத் தின்னுட்டுக் கக்குஸுக்குப் போடி செருக்கிவுல்லியன்னு எத்துவியாடே கூதிவுள்ளிய...அப்டீன்னு"
என்றான்.
Comments
Post a Comment