ப்ளூ சட்டையும் லும்பன் கல்ட்ஸும்

ந்த ப்ளூ சட்டை மாறன் என்பவரின் சினிமா விமர்சனத்தை முதன்முதலில் ஒருவர் என்னிடம் காண்பித்தபோது, அடப்போய்யா என்றுவிட்டு பதிலுக்கு நான் -  

பாஸ்கி, சங்கர் கணேஷைக் கூப்பிட்டு, இது ஒரு ஜாலி இன்டர்வியூ, நீங்க பாட்டுக்கு ஜாலியா என்ன வேணும்னாலும் காலாய்ங்க என்று சொன்னதுதான் மாயம், சங்கர் கணேஷ் அதை ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டு கலாய்க்கிறேன் பேர்வழி என்றுவிட்டு உட்கார்ந்துகொண்டே  மொக்கை கலாய் சமர்சால்ட் மற்றும்  ஸ்லாப்ஸ்டிக் என்று புகுந்து விளையாடியிருப்பார். அதைக் காதில் மற்றும் கண்களில் ரத்தம் வழிய வழியப் பார்த்துச் சிரித்து ரசித்திருப்பார் பாஸ்கி. அந்த வீடியோவைப் போட்டுக்காண்பித்தேன். 

அதில் வரும் சங்கர் கணேஷ் டைப் ஆள்தான் என்றுதான் இதுநாள் வரை ப்ளூ சட்டை மாறனை நினைத்திருந்தேன் VTK பட விமர்சனத்தைப் பார்க்கும் வரை. படத்தைப்பற்றித்  தன் வழக்கமான பாணியில் கலாய்க்கிறேன் என்றுவிட்டு 'பாஸ்கி சங்கர் கணேஷ் இன்டர்வியூ' பண்ணிக்கொண்டிருந்தவரை சும்மா போனைக் காதில் மாட்டிக்கொண்டு வாக்குவம் பண்ணிக்கொண்டே கேட்டுக் கொண்டிருந்தேன். திடீரென்று படத்தில் வரும் வசனம் ஒன்றைக்குறிப்பிட்டு ஏக வசனத்தில் -  

"ஏண்டா மிஷினுக்கு மட்டும் தெரியுமாடா அது என்னா பண்ணுதுன்னு? ஏண்டா இப்பிடியெல்லாம் டயலாக் எழுதி உயிரெடுக்கறீங்கன்னு" 

என்று சொல்வதைக்கேட்டதும்தான் உலுப்பி விட்டதைப்போல், அறிவுக்கண்கள் திறந்ததுபோல் சிலுப்பிக்கொண்டு எழுந்து....

அட டயலாக்கை விடுங்கள் கதை யார் கதை என்று பார்த்தால்...சரி அதையும் விடு! 

ஏற்கனவே இங்கு தமிழில் எல்லா செய்வினைகளும் செயப்பாட்டு வினைகளாக எழுதப்பட்டு வருகின்றன. 

"ஆண்களுடன் பெண்களும் சேர்ந்து வேலை செய்யப்படுகிறார்கள்"

"என் அம்மாச்சி சுடப்படும் ஆப்பம் வெகு ருசியான ஆப்பமாக இருக்கப்படும்"

"என் தாத்தாவும் அம்மாச்சியுடன் சேர்ந்து நன்றாக ஆப்பம் சுடப்படுவார்கள், அவ்வாறு சுடும் ஆப்பமும் நன்றாக இருக்கப்படும்"   

"நான் தினமும் உடற்ப்ப் ப்பயிற்சிக்காக அறுபது கிலோமீட்டர்கள் அன்னம் ஆகாரமில்லாமல் ஓடப்படுகிறேன்"  

"நான் அவ்வாறு ஓடப்படும்போது ஊடகங்கள் ஒற்றைக்காரணங்களுக்காக களைத் தாகத்துடன் ஓடப்படும் என்னைத் தொடரப்படுகின்றன"

என்று சம்மந்தா சம்மந்தமில்லாமல் தமிழைக் காறித்துப்பிக் கொத்துப் பரோட்டா போட்டுக்கொண்டிருப்பதைக் கண்டிக்க வேண்டிய ஸ்தானத்தில் உள்ள பெருந்தலை, தன்னைத் தழுவி அதே போல் குறைக்கும் bush-league babe சொறி நாய்க் Clone களை உருவாக்கிவிட்டுவிட்டு, அவைகளும் கருமசிரத்தையாக படிமம், தொன்மம், நொன்மம் என்று எருமைக் குதத்தில் உள்ள ஆறிப்போன  புண்களை நக்கி அதில் ஆனந்தம் அடையும் வீட்டு விசுவாச நாய்கள் போலிருக்க, இத்தகைய இழிநிலைகளைப் பற்றிய கவனமும் கவலையும் அக்கறையும் கொள்ளவேண்டிய ஆள், சேனல் சேனலாகப் போய் வம்புவையும் நொம்புவையும் பற்றிப் புகழ்ச்சியுரை ஆற்றிச் சேவகம் செய்துவருகிறார். படங்களுக்கு மறை கழண்ட அல்லது மறையில் உள்ள திருகு பற்றிய தத்துவங்கள் எல்லாம் எடுத்தியம்பி வசனங்கள் எழுதுகிறார்.

இந்த இடத்தில்தான் நம்ம தல வெயிட்டக் காட்டுவார் என்று பார்த்தால், அவர் அதற்கு நேர்மாறாக லும்பன் கேம்ப்  குறியீட்டு வெறி Clone Bot கள் விட்டெரியும் பொறையைக்கவிக்கொண்டு ஸலாம் போடுவதை என்னவென்று நொந்துகொள்வது? அடப்போய்யா, உனக்கெல்லாம் என்னய்யா கம்பல்ஷன்? காறித்துப்பி அதுகள் முஞ்சியிலேயே விட்டெறியவேண்டாமா எச்சிபொறையை

Comments

Popular posts from this blog

வலியின் கதை

நடுகல்லில் எனது கட்டுரைகளின் இணைப்பு

Jawan - An Inimitable Experience