Rugged boys Vs Chocolate boys ஒரு பஞ்சாயத்து

சில பேருக்குதான் அந்த அதிர்ஷ்டம் அடிக்கும். கெவுருமென்ட்டு வேலைக்குச் சேர்ந்த ஆறே மாதங்களில் திருமணம் நடந்து, 'பொண்ணு கெட்டுன' இடத்திலிருந்து ஜாக்பாட் அடித்த மாதிரி ஏக்கர் கணக்கில் அசையாச்சொத்துக்கள், ஆடுமாடுகள், வண்டிவாகனங்கள் மற்றும் பெரும்பணம். உடனே சிலகாலங்களுக்குள் வாலன்டரி ரிட்டயர்மெண்ட் வாங்கிவிடுவார்கள். ஆனால் எனக்கு அதெல்லாம் இல்லை  பேசாமல்  பிழைப்பைப் பார்க்கலாம் என்றுவிட்டுதான் கொஞ்ச நாளைக்கு கையை வைத்துக்கொண்டு சும்மா எழுதாமல் இருக்கலாம் என்று  ஒதுங்கிக்கொண்டிருந்துவிட்டு எப்போதாவது ஒழிந்த நேரத்தில் சுய முன்னேற்றப் புத்தகங்களோ அல்லது சமையல் புத்தகங்களோ கிண்டிலில் போட்டுகொண்டு இருக்கலாம் என்று நினைத்தால், இந்த உலகம் நம்மை விடாது போலிருக்கிறது. அடுத்த பஞ்சாயத்து Rugged boys Vs Chocolate boys.  

 இந்த  ஷோவில் வரும் சிகப்பு கலர் ஹை நெக் அணிந்திருக்கும் வாயாடி ஃபிகர் மாதிரி (மாதிரிதான்) ஒரு ஃபிகரைக் கரெக்ட் பன்னுவது என்பதெல்லாம் சாக்லேட் பாய்களின் வாழ்நாள் கனவு. ஒரு காலத்தில் எப்படியாவது இந்த மாதிரி ஒரு கில்லாடி யங் லேடியைத்தான் கரெக்ட் பண்ணவேண்டும் என்று நினைத்துக்கொண்டு வெறும் பிளான் மட்டும் போட்டுகொண்டு ஆக்ஷனில் இறங்காமல் இருந்துவிட்டேன். அதே போல் இருக்கிறார்கள், வாயைத்திறக்கக்கூட விடாமல் முரட்டு அடி விழுந்தது. 

இதில் வரும் சாக்லேட் பாய்கள் எல்லாம்...எழுத்துவதற்கே கை கூசுகிறது. சாக்லேட் பாய்கள் என்று சொல்லிக்கொள்வதற்கும் கூடக் கூச்சப்படவேண்டுமடா நீங்களெல்லாம். காலம் உருண்டோடவில்லை?  நானெல்லாம் சாக்லேட் கூட இல்லை, மாங்கா அல்லது நெல்லிக்கா பாயாக இருந்தேன். அதுகூடத் தவறில்லை வெறும் சூழ்நிலை. ஆனாலும் எனக்கெல்லாம் இந்த மாதிரி ஒரு லட்டு வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தால், நம்பர் வாங்கி, காஃபி, பப் வரைக்குமாவது போயிருப்பேன்.  (பிறகு அந்த ஃபிகரும் நாமும் வீட்டுக்குப் போய் பழைய சோத்தை நக்குவோம் அது வேறு விஷயம்) 

இப்படியா வாயைத்திறந்தாலே குத்து வாங்கிக்கொண்டு வருவீர்கள்? சை... 

அங்கிருந்து வரும் ஒவ்வொரு கவுன்ட்டரும் கும்மாங்குத்து மாதிரி வருகிறது. அதுவும் அந்த 'ரெட்டை வாய் ரெட் கலரைத்' தேர்ந்தெடுத்து ஃபிரென்ட் ரோவில் போட்டிருப்பார்கள் போலும். அடி பின்னுகிறது. அது கொடுக்கும் பல்பென்ன? பாலுக்கு பால் சிக்ஸரென்ன? 

ஜே.ஜே என்று ஒரு அரதப்பழைய மாதவன் படம். அதில் அவர் மீசை தாடி, வியர்வை என்று எதுமே இல்லாமலேயே படு rugged boy யாக வந்து அமோகாவைக் கரெக்ட் பண்ணுவார். அதில் வேறு ஒருவர் முயற்சியெடுத்து சரியாக ரூட் கூட விடாமல் - 

"நான் கண்ணுக்குள்ள பொத்திப் பொத்தி வச்சிக்குவேன் தெரியுமா? என் நெஞ்சுக்குள்ள அப்புடியே..." என்று மொக்கை போட்டுக்கொண்டே இருப்பார். 

அமோகா அதில் எந்த எக்ஸ்பிரேஷனும் இல்லாமல் கருமமே கண்ணாக ஹெவி மேக்கப்புடன், கனவில் உனை நான் உனை நான் என்று டூயட் பாடிவிட்டு கடைசியில் க்ளைமாக்சில் மாதவனைச் சென்றடைவாள்... 

அதே மோல்ட் அண்ட் மெடீரியலில் இத்தனை வருடங்கள் கடந்துவந்து 'ஹை நெக் ரெட்' டிடம் மொக்கை வாங்குவதையெல்லாம் கடந்துபோகுமளவு நானொன்றும் சொரணையற்ற எழுத்தாளன் கிடையாது.  

 அட உண்மையில் சாக்லெட், ரகெட்டெல்லாம் கிடையாது...கஞ்சித் தண்ணி, கறிச்சோறுக்கு ஏதாச்சும் வழி உண்டா என்றுதான் எடை போட்டுப் பார்ப்பார்கள் 'ஹை நெக் ரெட்கள்'. அடி மனதில் சொந்தத்துக்குள் அல்லது ஜாதிக்குள்ளேயே எவனாவது தக்காளிச்சோத்தை சொத்துப்பத்துடன் கனவு கண்டுகொண்டிருப்பார்கள்.    

இதெல்லாம் தெரியாக் குச்சி மிட்டாய் பாய்ஸ், ரொம்ப சின்சியராக நாங்கெல்லாம் எப்புடி கேர் பண்ணுவோம் தெரியுமா என்று சல்லி மார்க்கெட்டிங் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். 

அந்த 'ஹை நெக் ரெட்' டுக்கும் ஆழ்மனதில் சாக்லேட் பாய்தான் வேண்டும், ரக்கட் பாயையெல்லாம் சும்மா பார்த்து உசுப்பிவிட்டு சாக்லெட்டா ரக்கடா என்று கொஞ்சம் தெளிவாகக் குழம்பி டாஸ் போட்டுப்பார்த்துவிட்டு, மனதுக்குள் கிடந்து தவிப்பார்கள். அதை மெதுவாக, நேக்காக வெளியே கொண்டு வந்து, அதற்கே அறிமுகப்படுத்திவைத்து 'ஹை நெக் ரெட்'  வெட்கப்படவைக்க வேண்டும். இப்போது என்னை விட்டால், அதை மிகச்சரியாகச் செய்து முடிப்பேன். ரக்கட் பாய்ஸும் இதைச் சரியாகச் செய்து  காண்பித்து ஜாலியாக ஒரு டக்கீலா ஷாட் அடித்துவிட்டுப் போய்விடுவார்கள் அவர்களிடம்  அந்தத்  திறமை இருக்கிறது.  

நானும் மாங்கா  நெல்லிக்காயிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ப்ரொமோட் ஆகி இப்போதுதான் தெளிவு  பாயாக வளர்ந்திருக்கிறேன். க்காளி கல்லக்கண்டா நாயக்காணோம் நாயக்கண்டா கல்லக்காணோம்.  

சரி  மிச்சர் பாய்ஸ்  நீங்களெல்லாம் இப்படியே பிஸ்கோத் பாய்ஸ்களாகவே இருந்தால்தானே எங்களுக்கும் ஒரு பொழுதுபோக்கு? 

Comments

Popular posts from this blog

வலியின் கதை

Jawan - An Inimitable Experience

நடுகல் இதழ் 15