முழுவட்டம் 365

சூரியனை முழு வட்டம் அடித்து முடிப்பதற்குள்  எங்காவது வண்டி முட்டி நின்றுவிடும் என்று நினைத்தேன். ஆரம்பிக்கும்போது, முதல் பாலே சிக்ஸர் என்பது போல் ஆரவாரமாக சென்ற வருடம் அக். 24 முதல் பதிவு. பெரும் வரவேற்பு. என் ஆஸ்தான குரு, சமகால மற்றும் அடுத்த நூறு வருடங்கள் தமிழ் இலக்கியம் பாய வேண்டிய மொத்தப் பாய்ச்சலையும் பாய்ந்து நாட் அவுட்டில் ஆடிக்கொண்டிருக்கும் தலைவர், நவீன எழுத்துச் சித்தருடைய ஆசிகளுடன் இனிதே தொடங்கியது நம் எழுத்து.  

முதல் ஓவரில் சிக்ஸர், அதெல்லாம் சரி தொடர்ந்து ஆட முடியுமா என்று பயம் மட்டும் இருந்துகொண்டே இருந்தது. ஒன்றுமே இல்லாமல் சும்மா புனைவு, சிறு சிறு பத்திகள், இஷ்ட்ட வெங்காயத்துக்கு மனதில் தோன்றிய வண்ணம் சினிமா விமர்சனம் என்று நூற்றுக்கும் மேட்பட்ட பதிவுகள். சிலவற்றை அகற்ற நேர்ந்தது.  சில முயற்சிகள் ஆரம்பித்து நன்றாகப்போய்க்கொண்டு இருந்துவிட்டு சட்டென்று வண்டி தண்டவாளத்திலிருந்து இறங்கிவிட்டது. உதாரணத்திற்கு எழுத ஆரம்பித்த ஒரு நாவல், எழுத்து சம்பந்தப்பட்ட வேறு ஒரு கிளை வேலை மற்றும் இரட்டிப்பு வேலைப்பளு, அப்படியே நின்றுவிட்டது. அறிவியல் புனைவு ஒன்று ஆரம்பித்து படு சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருந்தபோது கொரோனா வந்தது, தவிர அதற்கு இன்னும் நிறைய வாசிப்பு மற்றும் தயாரிப்பு வேலைகள் தேவைப்பட்டதால், அப்படியே நிறுத்திவிட்டேன். ஏனென்றால், அந்த மெனக்கெடல் இல்லாமல் எழுதினால், தமிழ் மகன் எழுதும் டகுள்பாஜி  உருட்டு அறிவியல் புனைவாக மாறிவிட வாய்ப்பிருப்பதால், கவனமாக எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டு அதை நிறுத்திவிட்டேன்.  முதன் முதலில் ஆரம்பித்த மினி நாவல், அதில் சில பெயர்களை மாற்ற வேண்டும். அதன் சாராம்சம் இன்னும் ஃப்ரெஷ்ஷாக மண்டைக்குள் இருக்கிறது, இந்த ஒரு வருடத்தில் இன்னும் பல சுவாரசியமான சம்பவங்கள் சேர்ந்திருக்கின்றன. அதைத் தொடர்ந்து எழுதினால் அமர்க்களமாக இருக்கும். அது நின்று போனதற்குக் காரணம் அது பற்றிய அதை வாசிக்கும் சில நண்பர்கள், பட்டுக்கோட்டை பிரபாகர் மாதிரி இருக்கிறது ராஜேஷ்குமார் மாதிரி இருக்கிறது என்று நொட்டுப்பேசி அதில் கொதிநீரை  ஊற்றி விட்டுவிட்டார்கள். அது ஆரம்ப காலகட்டம் அதனால் கொஞ்சம் சுணங்கிவிட்டேன், இனி யார் என்ன சொன்னாலும் அடங்குவதில்லை.  

அதுவாது பரவாயில்லை வேறு சிலர் நான் எழுதுவது சாரு நிவேதிதா மாதிரி இருக்கிறது என்று சொன்னார்கள். இந்த உலகம் எப்படிப்பட்டது தெரியுமா? ஒருவன் வெறிகொண்டு உழைத்து பணம் சம்பாரித்தால், அவ்ளோ பணம் எங்கிருந்து வருதுன்னு எனக்குத் தெரியும், அப்புடி சம்பாரிக்கறதுக்கு நானா இருந்தா தூக்குல தொங்கீருவேன் என்னும்

ஒருவன் நன்றாக நடனம் ஆடினால், ஓகே நீ ஆடறது ஓரளவு தேறும் ஆனா இது பொணக்குத்துக்கு ஆடறவன் ஆடற மாதிரியே இருக்கு என்று என்று சொல்வார்கள். பாடினால், நீ ஸ்ரீனிவாஸயும் சந்தோஷ் நாராயணனையும் மிக்ஸ் பண்ணி  இமிடேட் பண்ணப் பாக்கறே என்று சொல்லும். இந்த உலகத்தில் இனிமேல் எவனுமே எந்தத் திறமையையும் காட்டக்கூடாது, அப்படியே காட்டினாலும் யார் பொறாமையில் பொச்சு வெந்து சாக மாட்டார்கள் என்று தெரிந்துகொண்டு அவர்களிடம் சென்று தெறம காட்டவேண்டும். அல்லது திறமையாவது மயிராவது, கழுத்து வரைக்கும் இருக்கும் காசும் அது தரும் புகழும்தான் பேசும் என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்த மாதிரி, எழுத்து கலை போன்றவற்றில் தன்னம்பிக்கையைச் சிதைப்பதற்கு உன்னோட எழுத்து நடை அதே மாதிரி இருக்கு என்று உளவியல் தாக்குதல் நடத்தினால் போதும். தவிர நடுநடுவில், அடையாளம் தெரியாமல் செல்லாக்காசாகப் போவதற்கு வாழ்த்துக்கள் வேறு ஒரு இடத்திலிருந்து வந்தவண்ணமுள்ளன.  

ஆனால் சாரு நிவேதிதா மாதிரி என்று சொல்வது ஒரு நல்ல ஒப்பீடு என்றே எடுத்துக்கொள்கிறேன். ஏனென்றால், அம்மாதிரிச் சொன்னவர்கள் எல்லாம்  அதிபுத்திசாலிகள் மற்றும் நன்றாக வாசிக்கக்கூடிய அறிவு ஜீவிகள் என்பதால் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். அதுமட்டுமல்லாமல்  நானும் அவரும் ஒரே ஆள் ஆனால் பேரலல் யூனிவெர்சில் பிறக்கவேண்டியவர்கள், ஏதோ பிழை நடந்து ஒரே யூனிவெர்சில் பிறந்துவிட்டதால், ஒரே காலகட்டத்தில் இருக்கிறோம் என்றும் நினைக்கத்தோன்றும். இந்த பிரபஞ்சத்தின் விஸ்தாரணம் மிகப்பெரியது என்பதால், இந்தளவு வயது வித்தியாசம் மற்றும் வேறு வேறு ஊர்கள் வெவ்வேறு அறிவாற்றல் (தலைவர்  பிஸ்தாதி பிஸ்த்து!)  என்று பிறந்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். அவர் சமூகப்பிரச்சனையில் எழுதும் சில கருத்துக்களை நான் கடும் கோபத்துடன் கடிதங்கள் எழுதியிருக்கிறேன். அவற்றில் எந்தத் தனிப்பட்ட காழ்ப்பும் கிடையாது. அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை எக்கச்சக்கமாக உள்ளன என்றாலும் இந்தப்பதிவின் அளவு கருதி, அவர் கால் தூசுக்குப் பெறாத அரை வேக்காடான நான் இரு வரிகளை எழுதியே ஆகவேண்டும். இரு வெவ்வேறு துருவங்கள் கூட கருத்தியல் ஒற்றுமை இல்லாவிட்டாலும், நட்புடன் பழக முடியும், எழுத்து என்று வந்து விட்டால் அதில் எந்த விலக்கோ சமரசமோ இருக்கக்கூடாது, ஒரு எழுத்தாளன் என்பவன் எந்தச்சார்பும் இல்லாமல் யாதும் ஊரே யாவரும் கேளிர், எல்லா மொழியும் என் மொழியே, எல்லா மக்களும் என் மக்கள்  என்று இருக்க வேண்டும் அப்படி இல்லை எனில் அவன் எழுத்தாளனே அல்ல என்று வலியுறுத்துவது, இயன்ற அளவு வேற்று மொழி வார்த்தைகளை, பெயர்களை அதன் உச்சரிப்பு எப்படியிருக்குமோ அதே போல் எழுத முயற்சிப்பது (இதையெல்லாம் நான் கிண்டலடிப்பது உண்டு என்றாலும் அவை அனைத்துமே அவருக்கான Tribute என்றே கருத வேண்டும்), எழுத்து மொழியில் எளிமை. இதன் காரணமாகவே இவர் பல கருத்துக்களில் முன்பு ஒரு மாதிரியும் தற்போது ஒரு மாதிரியும் கருத்துக்களைச் சொல்வார் (அதில் பல கருத்துக்கள் அறிவியலுக்கு முரணாக இருக்கும்  அது வேறு கதை). அதுதான் உண்மையான பகுத்தறிவு, ஒரு மனிதன் அப்படித்தான் இருக்க வேண்டும்.  

எழுத்து வண்டி மெதுவாக ஓடுவதற்கு ஆயிரம் காரணங்கள். நாளுக்கு பத்திலிருந்து பன்னிரண்டு மணிநேரங்கள் வேலை, குடும்பம், நட்பு பேணுதல், வீட்டு வேலைகள், நோவு, நோக்காடு, வேறு சில பஞ்சாயத்துகள், என்று எல்லாவற்றுக்கும் மத்தியில், நித்திரையைத் தியாகம் செய்து, இயல்பு வாழ்க்கையில் பல சமரசங்கள் செய்துகொண்டு, எந்தக் கொண்டாட்டமோ, பண்டிகை கிண்டிகைகளில் ஈடுபாடில்லாமல் இருத்தல், எழுதும்போது கையயைப்பிடித்து நிறுத்திடும் சண்டையிடும் சந்தர்ப்பங்கள் (எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்குமா?)  கடந்து,  இதுவரை வந்திருக்கிறது. இதில் வாசிப்பு இன்னும் சுருங்கிவிட்டது.

எழுத்து என்று வந்துவிட்டால், இம்மாதிரி நொண்டிச் சாக்குகள் சொல்வது கடும் குற்றம். ஆனால் ஒரு நாளைக்கு இருபத்திநாலு மணிநேரங்கள்தான் என்பதுதானே நடைமுறை உண்மை? முழு நேர எழுத்தாளனாகப் போவதற்கு குறைந்தது மூன்று வருட கடும் வாசிப்பு, அதற்குப் பிறகு பிச்சைக்கார வாழ்க்கை போன்றவற்றுக்குத் தயாராக வேண்டும்

கொஞ்சம் கொஞ்சமாக லாபி செய்வது, பதிப்பகங்களைப் பிடித்துத் தொங்குவது, சக முளைவிடும் எழுத்தாளர்களுக்கு முதுகு சொறிவது, எஸ்டாபிலிஷ்ட்  எழுத்தாளர்களுக்குக் காவடி தூக்குவது போன்ற வேலைகளை எந்தத் தயக்கமுமில்லாமல் செய்யப் பழகிக்கொள்ள வேண்டும். தலைவர் சமீபத்தில் எழுதியிருந்தாரே, அவர் ஒரு குறிப்பிட்ட நபருக்கு ஃபோன் செய்து அவர் எழுதிக்கொண்டிருக்கும் நாவல் சம்பந்தமாக எனக்கு இன்ன விஷயத்தில், இன்ன உதவி வேண்டும் என்று கேட்டதற்கு

"ம்ம் புரியல

"இல்லைங்க இந்த மாதிரி எனக்கு இந்தப் புத்தகம் தேவைப்படுது, தவிர சில விளக்கங்களும்...

"ஹலோ, என்ன கான்டெக்ஸ்டுன்னே புரில. என்னா வேணும் உங்குளுக்கு? புக்க வாங்கி  அனுப்பனுமா, எந்த புக்கு? யாருக்கு அனுப்பனும்?"

 "ஆமா, சில விஷயங்கள்ல கொஞ்சம் சந்தேகமும்..."

 "ஓஹோ...சரீ..."

 "..."

"ஆமா நான் ஒரு லிஸ்ட்டு குடுத்தனே அதெல்லாம் படிச்சீங்களா? நீங்க...இது சம்பந்தமா வேறே என்னென்ன புக்ஸ் படிச்சிருக்கீங்க, அடுத்தவாரம் என் வீட்டுக்கு எல்லா பர்டிகுலர்ஸும்  (இது பழைய அரசு அதிகாரிகளின் வார்த்தைஎடுத்துக்கிட்டு வந்து பாருங்க"

இதையெல்லாம் கேட்டுவிட்டு, மனதுக்குள் ங்கோத்தால. ஒரு உதவின்னு வந்தா கூதிக்கொழுப்பெடுத்து அதிகாரத் திமிரோடவாடா பேசுவீங்க, உங் குண்டில  கொடராட உட்டு வாய் வழியல எடுக்க. என்று நினைக்கத்தோன்றும், வாய் வயிறெல்லாம் ரியும். ஆனால் காரியமாகவேண்டுமென்றால், பொச்சை அடக்கிக்கொண்டு தேனொழுகப் பேசத்தெரிந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு முழு நேர எழுத்தாளனாக இருந்துகொண்டு குண்டி காய்ந்து கொண்டிருக்கும்போது, எப்படி மாங்க் மாதிரி ஒரு மனப்பக்குவம் வரும்? பாரதி மாதிரி வெம்பி வெம்பி சாக வேண்டியதுதான். ஆகையால், இப்போதைக்கு குண்டித் துணியும் அரை வயிறுக் கஞ்சியும்தான் ப்ரையாரிட்டி. இன்னும் கொஞ்சம் பக்குவம் வந்து பழுத்தபிறகுதான், இந்த உருவி விடும் வேலைகளுக்குப் பழக வேண்டும். மற்றபடி நேர்மையுடன் மனம் திறந்து திட்டுவதற்கும் பாராட்டுவதற்கும் இப்போதைக்கு எந்த மனத்தடையும் இல்லை

சில கட்டுரைத் தொடர்களுக்காக வாசிப்பதோடு சரி. கொஞ்சம் சுதாரித்து, சமீபத்தில் நடுகல் இதழ்களை வாங்கி வாசிக்கக் கிடைத்தது, வேறு சில பதிப்பகங்களிடம் வெவ்வேறு புத்தகங்கள் அனுப்பிவைக்க விண்ணப்பித்திருக்கிறேன். கிண்டில்தான் நமக்கு வசதி இங்கு யூஎஸுக்கு தருவிப்பதற்கு போஸ்டேஜ் செலவு புத்தக விலையை விட மும்மடங்காகிறது ஆனாலும், புத்தகங்கள் என்பதால் ஏதோ ஒரு அறிய பொக்கிஷம் போல் உணர்வதால் போஸ்டேஜ் செலவு ஒரு பொருட்டல்ல.

இத்தனைக்கும் நடுவில், முதல் நெடுங்கதை, கிட்டத்தட்ட ஒரு நாவல் வடிவத்தில் தொகுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு ஒன்று உட்பட என்று கிண்டிலில் சில புத்தகங்களும் வெளியிட முடிந்தது, Medium இல் ஆங்கிலத்தில் என்னுடைய கன்னி முயற்சியாக ஒரு சிறு கட்டுரை என்றுபரவாயில்லை நான் நினைத்த அளவு நான் மோசம் இல்லை. மெதுவாக நகர்ந்தாலும், பல போராட்டங்களுக்கு மத்தியிலும் ஒரு முழு வட்டம் அடித்தது குறித்து திருப்தியே. அடுத்த ஆண்டுக்கான இலக்கு - மெதுவாக தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மாறி, புனைவுகளை அதில் எழுதத் தொடங்கவேண்டும். பார்க்கலாம், முதல் அடி எடுத்து வைத்திருக்கிறேன், எவ்வளவு தூரம் போகிறது என்று பார்த்துவிடுவோம்.

Comments

Popular posts from this blog

வலியின் கதை

Jawan - An Inimitable Experience

நடுகல் இதழ் 15