கன்னி முயற்சி
கன்னி முயற்சியாக ஆங்கிலத்தில் ஒரு சிறு
கட்டுரை. Medium இல் அக்கவுன்ட் செட் செய்துவிட்டு, ஒன்றும் எழுதாமல் டபாய்த்துக்கொண்டிருந்தேன்,
முதன்முதலில் ஒரு சுமார் சிறுகதை தமிழில் எழுதிவிட்டு, பிற்காலத்தில் நாம் எழுதுவதையெல்லாம்
யார் மொழிபெயர்ப்பார்கள் என்று அயர்ச்சியடைந்து, ஆங்கிலம் நன்கு தெரிந்த நான் சகோதரராக
மதிக்கும் நண்பர் ஒருவர், அவரிடம் அக்கதையை அனுப்பி,
சரி முதலில் கொஞ்சம் ஏதாவது எழுதுவோம், பிறகு நொண்டி நொண்டி நாமே மொழிபெயர்த்துக்கொள்வதுதான் வழி என்று நினைத்துக்கொண்டேன். இடையில் ஒரு சினிமா நண்பருக்கு அற்புதமான ஒரு ஸ்க்ரிப்டை தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் வாய்ப்பும் கிட்டியது. அதைத்தொடர்ந்து வாட்ஸப் க்ரூபில் சில கிறுக்கல்கள். தமிழில் எழுத்தாளர்கள் ஆவதற்கு ஃபேஸ்புக் போஸ்ட் போடத்தெரிந்திருக்க வேண்டும், அதற்குக் குறைந்த பட்சம் ஐம்பது ஐம்பது வரிகளாக எழுதிப் பயிற்சியிருந்தால், ஒரே ஆண்டில் எழுத்தாளர். பிறகு அந்த உயர எழுத்தாளர் சர்ட்டிஃபிக்கெட் கொடுத்தவுடன் , எழுத்தாளர் தேர்ச்சி. ஆனால் நமக்கு ஐம்பது வரியெல்லாம் தாங்காது, அதனால் க்ரூப்புகளில் போய் ஐந்தைந்து வரிகள் ஆங்கிலம் எழுதியவுடன், கான்ஃபிடன்ஸ் வந்துவிட்டது. போடு ஆர்டிகிள என்று போட்டாயிற்று. வாசித்துவிட்டு ஏதாவது கமெண்ட் எழுதுங்கள். எங்கு வேண்டுமானாலும் எழுதுங்கள் பரவாயில்லை.
ஒரு வகையில் இதைக் கன்னி முயற்சி என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இதைத்தவிர ப்லாக் போஸ்டிலேயே ஆறு மாதங்கள் முன்பே ஆங்கிலத்தில் ஒரு ஃபிளாஷ் பிக்ஷன் எழுதியிருக்கிறேன். அதையெல்லாம் தமிழில் வாசித்தால், உவ்வேக் தூ என்பார்கள். அதனால்தான் ஆங்கிலம். அது வெறும் ட்ரைலர்தான். இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாக கியர் தட்டி ஏற வேண்டும் ஆங்கிலத்தில். அவைகள் கொமட்டில் குத்தி மூஞ்சியில் துப்பியது மாதிரி இருக்கும். பார்க்கலாம். இன்னொரு வகையில் கன்னி முயற்சிதான், Medium என்னும் சர்வதேச platform இல் வருவதால்.
Comments
Post a Comment