Posts

Showing posts from December, 2022

ரிவார்டு ஜிகினாக்களும் கொள்கைக் கொத்தடிமைகளும்

Image
ரி வார்டு வாங்கிய கைய்யோடு நம்ம ஜிகினா எய்த்தாளரைப் பிடித்து உட்காரவைத்து ஒருவர் பேட்டி கண்டார் . ஜிகினாவும் மறுக்கா மறுக்கா அதைவே பேசுனாப்டி . ஆணியை அடித்து அடித்துத்தான் இறக்குவார்களாமே ? அம்மியை அடிமேல் அடி வைத்தால்தான் நகருமாமே ? பிள்ளையார் எறும்பு  ஊர்ந்து ஊர்ந்து, திருப்பரங்குன்றமே பாதி தேய்ந்துவிட்டதாமே ? அந்த மாதிரி ஒரே விஷயத்தை டிஸைன்   டிஸைனாக வெட்கம் மானம் சூடு சொரணை பார்க்காமல் மீண்டும் மீண்டும் ஓட்டிக்கொண்டே இருக்கவேண்டும் , ஒலட்டிக்கொண்டே இருக்கவேண்டும் . அது கொசுவர்த்தி , ஷேவிங் பிளேடு , கக்கூஸ் கழுவும் சவுக்காரக் கூழ் விற்பதிலிருந்து இலக்கியம் மற்றும் இலக்கிய பிராண்ட் விற்பது வரை அனைத்துக்கும் பொருந்தும் உத்தி என்பது தெரியாமல் போய்விட்டது . வெகு சமீபத்தில்தான் மண்டையில் உரைத்தது . வெறி ... பிழைப்புவாத வெறி ஊறினால்தான் இங்கு பிழைக்க முடியும் . இங்கு என்றால் இந்த உலகத்தில் , அது எந்தத் துறையாகட்டும் . மார்க்கெட்டிங் செய்யவேண்டுமென்று என்னிடம் சொன்னால் , என்னைக் கொலைக்களத்துக்குக் கொண்டுபோ...

பிழிவுகளும், புனைவுகளும், புது நூலும், புத்தகக் கண்காட்சியும்

ப ரீட்சையில் மார்க் வாங்கும் பயல்கள் சொல்வதெல்லாம் ஒரே பார்மூலாதான் பேப்பர் பேப்பராக வாங்கி எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் . மதிப்பெண்கள் வேண்டுமானால் சொந்தக்கதை , சோகக்கதை , கண்டது , கேட்டது   கற்பனையில் வருவது என்று எதை வேண்டுமானாலும் கிறுக்கவேண்டும் . எனக்கெல்லாம் பேனாவால் அரைப்பக்கம் எழுதினாலே விரல்கள் வலியெடுத்து அப்படியே பெஞ்சிலேயே நீட்டிப் படுத்துக்கொண்டுவிடவேண்டும் என்று தோன்றும் . தலை கிறுகிறுத்து ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்து குளுக்கோஸ் ஏற்றவேண்டும் . அது தவிர , நான் அவன்கள் சொல்வததையெல்லாம் கேட்டுக்கொண்டு கற்பனை செய்து பக்கங்களை எழுதி நிரப்பினால் , வாத்திகள் என்னைச்   செதுக்கினார்கள் . செதுக்கினார்கள் என்றால் - " என் வாழ்க்கையில் நான் இந்தளவு உயரத்தை எட்டியிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் என் நான்காம் வகுப்பு வாத்தியார் வடுகுநாதர்தான் . அவர்தான் என்னை அங்குலம் அங்குலமாகச் செதுக்கினார் " அந்தத் செதுக்கல்ல . இது வன்முறை - படர எடுப்பது . அதன் காரணமாகவோ என்னவோ எனக்குப் பரீட்சைகளில் ஆர்வமற்று...