பிழிவுகளும், புனைவுகளும், புது நூலும், புத்தகக் கண்காட்சியும்

ரீட்சையில் மார்க் வாங்கும் பயல்கள் சொல்வதெல்லாம் ஒரே பார்மூலாதான் பேப்பர் பேப்பராக வாங்கி எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். மதிப்பெண்கள் வேண்டுமானால் சொந்தக்கதை, சோகக்கதை, கண்டது, கேட்டது  கற்பனையில் வருவது என்று எதை வேண்டுமானாலும் கிறுக்கவேண்டும். எனக்கெல்லாம் பேனாவால் அரைப்பக்கம் எழுதினாலே விரல்கள் வலியெடுத்து அப்படியே பெஞ்சிலேயே நீட்டிப் படுத்துக்கொண்டுவிடவேண்டும் என்று தோன்றும். தலை கிறுகிறுத்து ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்து குளுக்கோஸ் ஏற்றவேண்டும். அது தவிர, நான் அவன்கள் சொல்வததையெல்லாம் கேட்டுக்கொண்டு கற்பனை செய்து பக்கங்களை எழுதி நிரப்பினால், வாத்திகள் என்னைச்  செதுக்கினார்கள்.

செதுக்கினார்கள் என்றால் -

"என் வாழ்க்கையில் நான் இந்தளவு உயரத்தை எட்டியிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் என் நான்காம் வகுப்பு வாத்தியார் வடுகுநாதர்தான். அவர்தான் என்னை அங்குலம் அங்குலமாகச் செதுக்கினார்" அந்தத் செதுக்கல்ல.

இது வன்முறை - படர எடுப்பது. அதன் காரணமாகவோ என்னவோ எனக்குப் பரீட்சைகளில் ஆர்வமற்றுப்போய்விட்டது. ஆகையினால் அங்கெல்லாம் எழுதியதில்லை.

ஏதோ விரல் கட்டைப் பட்டடை (கீபோர்டு!) புண்ணியத்தில் ஒரு நாலு வரி எழுத முடிகிறது. அதுவும் இல்லை என்றால், ஆங்காங்கே  ப்ளாகிலும் ஃபேஸ்புக்கிலும் தலை நீட்டிக்கொண்டிருக்கும் நவயுக எழுத்தார்கள் இன்னேரம் அன்றாடச் சோற்றுக்கு அல்லப்பட்டு வயிற்றை ரொப்பிக்கொள்வதுடன் அடக்கிக்கொண்டிருந்திருப்பர்.

புதிதாக எழுத வருபவர்களுக்கென்று  'பழைய' எழுத்தாளர்கள் உபதேச மொழிகள் கூறி நல்வழிப்படுத்த முயல்வதை ஆங்காங்கே காண முடிகிறது. புதிதாக என்றால் ஆண்டுக்கு இரண்டு, மாதத்துக்கு ஒன்று என்ற கணக்கில் அல்ல, பூப்பிளக்க வந்த புற்றீசல் மாதிரி அனுதினமும் குபு குபுவென்று புறப்பட்டு வருவது மட்டுமின்றி, அவ்வாறு வரும்போது கையில் எழுத்துப்பலகையையும், ஒரு கட்டு காகிதத்தையும், மசிக் கூட்டையும், பேனாவையும் எடுத்துக்கொண்டுவராமல், வெறும் கையை மட்டும் நம்பி வருகிறார்கள், அதாவது விரல்களை. வந்த சோரில் ஃபேஸ்புக்கில் 'ச்சுட்குலா'க்கள் (ஹிந்தி ஒய்க. சுட்குலாக்கள் என்றால் துணுக்குகள் என்று பொருள்) இடுகிறார்கள்.  இம்மாதிரி எழுதுபவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு அம்சம் என்னவென்றால், கிறுக்குத்தனம்! எழுதுவதற்கு லேசானது முதல் மிதமானதுவரையில் ஒரு கிறுக்குத்தனம் தேவை அதுமட்டும் இல்லாவிட்டால் ஒரு வரி கூட எழுத முடியாது. கிறுக்குத்தனம் மிதமாக இருக்கும் வரை அதை ரசிக்கலாம். மிதமிஞ்சிவிட்டால் எல்லோரும் ஸினிக்கலாக மாறிவிடுகிறார்கள்.  இணைய எழுத்தாளர்கள் பெரும்பாலானோர் ஸினிக்கலாகத்தான் இருக்கிறார்கள். பிறவி ஸினிக்கலாக இருப்பது என்பது வேறு, வளைத்து வளைத்து வெறி கொண்டு ஓவாளத்துடன் ஸினிக்கலாக இருப்பது என்பது வேறு. இந்த முறுக்கு மாவு கோஷ்டியில் உள்ள அத்தனை பெரும் அதே. (முறுக்கு மாவு என்றால் என்ன என்று பிறகு வருகிறது)

cynical

1. believing that people are motivated purely by self-interest; distrustful of human sincerity or integrity.

"he was brutally cynical and hardened to every sob story under the sun"

2. concerned only with one's own interests and typically disregarding accepted or appropriate standards in order to achieve them.

"a cynical manipulation of public opinion"

 ஸினிக்கல் என்றதும் எவ்வளவு அருமையாக, தெள்ளத்தெளிவாக விளக்கம் ஆங்கிலத்தில் அளிக்கிறது கூகிள்? இதற்கு தமிழ்ப் பொருள் கேட்டால், "இழிந்த" என்று மொழி பெயர்த்து ஒரே போடாகப்போட்டு மூஞ்சியில் துப்பி முடித்துக்கொள்கிறது.

ஃபேஸ் புக்கில் எழுதுவதற்கென்று சில டெம்ப்லேட்டுகள், அவதாரங்கள்  அல்லது முகமூடிகள்  உள்ளன.

'இடது',

'வலது,

'நடு சென்டர் நஞ்சுண்டன்',

'ஜிஞ்சக் - சொம்படி - முரட்டு முட்டு',

'நமக்கேன் வம்பு',

'...சொல்லிமுடித்துவிட்டு அவள் கண்களை ஏறிட்டேன், அதில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தன' என்று ஃபேஸ்புக் ஸ்டேட்டஸிலேயே, அங்கேயே ரத்தவாந்திச் சிறுகதை முயற்சி.

போன்றவை உட்பட உச்சபட்சமாக புள்ளப்பூச்சியை அடித்துவிட்டுக் கோப்பையைத்தூக்கி ஆட்டுவதுபோல், கேட்பாரற்றவரைக் கண்டபடி இழிவு செய்து எழுதுவது. மற்றவர்களை எழுதினால் வீடுதேடி வந்து வாயிலும் பொச்சிலும் ரிவிட்டு குத்திவிட்டுத் தலைகீழாகத் தொங்கவிட்டுவிடுவார்கள் என்று நன்றாகத் தெரிந்து வைத்துக்கொண்டு, வெறிகொண்டு புள்ளப்பூச்சி அடிக்கிறார்கள். இவற்றையெல்லாம் கூட நல்ல நகைச்சுவையாகக் கருதி நகர்ந்துவிட முடியும். ஆனால் உண்மையில் கோபமூட்டும் எழுத்துப்போக்கு ஒன்று உண்டு. அதுதான் முரட்டு அறிவியல்வாதம். எந்த டாபிக் எடுத்தாலும் அதில் போய், கண்களை மூடிக்கொண்டு குருட்டுத்தனமாக அறிவியல். என்னவோ அனுதினமும் அலாரம் வைத்து வெள்ளன எழுந்து பல் கூடத் துலக்காமல்  ஐம்பது அறிவியல் கண்டுபிடிப்புக்களை நிகழ்த்துவது போலவும், மற்றவன்களெல்லாம் மஞ்ச மாக்கான் போலவும் அறிவியல் மேதாவிலாசம் காண்பிப்பது.

"அது அறிவியல் ரீதியாக சாத்தியமில்லை, இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை, அறிவியல் அடிப்படையில் இதை அணுகினால்..."

எதை, முள் வேலியில் நாய் காலைத்தூக்கி ஒன்றுக்கு அடிப்பதையா?

அடேய் அறிவியல் அரைவேக்காடுகளா, இந்தப் பிரபஞ்சம் என்பதே அறிவியல் ரீதியில் சாத்தியம் இல்லை அது தெரியுமா? உணர்வு நிலை அதாவது Consciousness என்றால் என்ன என்பதற்கு அறிவியலிடம் விளக்கமேயில்லை. குவாண்டம் அறிவியல் படி காலம் என்பதே உண்மை கிடையாது தெரியுமா?  செவ்வியல் இயற்பியல் விதிகளின்படியே கூட கருந்துளையின் உள்ளே தலையை நுழைந்துவிட்டால், காலம் என்பது  செத்துப்போய்விடும். காலம் உறைந்தால் Consciousness இல்லை. பிரபஞ்சம் இல்லை. அதுவே நான் பைத்திக்காரனாக இருந்தாலும், அறம் இல்லை, அறிவு இல்லை, அறிவியல் இல்லை, அகந்தை இல்லை, காலம் இல்லை, பிரபஞ்சம் இல்லை, எதுவுமே இல்லை. Consciousness -ம் இல்லை. மூளை என்னும் ஆயிரம் கிராம் கொழுப்பில் ஏற்படும் வேதியல் மாற்றங்கள்தான் எல்லாம்நமக்குத் தெரிந்த கால் தூசு அறிவியல் மூலமாக நாமறிந்த Spacetime கொஞ்சம் வளைந்தால், மண்டைகொழுப்பில் மாற்றங்கள் ஏற்பட்டால், பூமியில் உள்ள அனைவரும் மகாத்மாக்களாக மாறிவிடுவர். கடவுள்களாகக்கூட மாற வாய்ப்புள்ளது. அதற்கு அப்படியே நேரெதிராக மாறவும் வாய்ப்புண்டு. இன்றைய உலகம் அதை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது.

அதே நேரம், நான் அறிவியலுக்கெதிரானவனும் இல்லை. நானும் for the அறிவியல் தான் against the அறிவியல் அல்லன். அறிவியல் பேசலாம், நன்றாகப் பேசலாம் ஆனால்  'As a matter of fact' அறிவியல் பேசவேண்டும், காமன் சென்ஸ் அறிவியல்  பேசவேண்டும், சக மனிதனுக்கான மரியாதை அறிவியல், அறம் சார்ந்த அறிவியல் போன்றவற்றைப் பேசவேண்டும்பகுத்தறியும் திறன் கண்டிப்பாக இருக்கவேண்டும். இவற்றிலெல்லாம் கொஞ்சம்கூடத் தவறில்லை, சமரசம் இல்லை. ஆனால் இது மட்டும்தான் Absolute truth என்று பேசக்கூடாது. அறிவியலின் பெயரில் குருட்டு நம்பிக்கை வைப்பதே கூட அறிவியலுக்கெதிரானது. Classical Physics என்பது Absolute Truth என்றால் Quantum Physics என்பது எல்லாவிதமான சாத்தியங்களையும் அளிக்கக்கூடியது.

இது அறிவியல் பிரச்சனை என்றால், இன்னொன்று முறுக்குப் பிரச்சனை. ஒரே ஒரு முறுக்கு மெஷினை வைத்துக்கொண்டு புளித்த மாவையே நாற்பது வருடங்களாக அடாவடியாக மீண்டும் மீண்டும் ஒரு அச்சைக்கூட முள்ளு முறுக்கிலிருந்து ஓலை முறுக்கு, வட்டமுறுக்கு என்று மாற்றாமல் அதையே பிழிவது ஆனால் பிழிவதை மட்டும் வளைத்து வளைத்து டிசைன் டிஸைனாகப் பிழிந்து இப்போது கடைசியில் விவகாரம் முற்றி அவார்டு வரை சென்று நிற்கிறது. அசிஸ்டென்ட்டுகள், அல்லக்கைகள் சமகால வாழ்கையை எழுதுகிறேன் பேர்வழி என்றுவிட்டு தமிழ்நாட்டில் தினமும் பாய்ப்ரெண்ட், கேர்ல் ப்ரெண்டெல்லாம் கூடிக்கூடி ரூம் போட்டு ரூம் போட்டு த்ரீஸம் பண்ணுகிறார்கள் என்று  புனைகிறார்கள். இதற்கிடையில் எவன் என்று தெரியவில்லை படுவா, கையில் கிடைத்தால் உப்புத் தடவி கருவாடு போட்டு விட வேண்டும். அவரிடம் போய் -

“நா ஒரு கத எளுதீருக்கேன்”

என்று காட்டியிருக்கிறான். அவர் வழக்கம்போல் கரைத்துக் கரைத்து ஊற்றிவிட்டார் (முறுக்கு மாவை அல்ல).

சரி ஒழி விடு என்றால், ஒரே முறுக்கு மாவை வைத்துக்கொண்டு பிழியும் நம்ம தல ஒழுங்கா எழுதி மார்க் போடச்சொல்லி சிலேட்டை நீட்டினால், அவார்டு மிதப்பில் எச்சுப் பேச்சு பேசுகிறார்

(இங்கே க்ளிக் செய்யவும்)

https://prasannavenkatesans.mainpage.co.in/2022/10/blog-post.html

என்னதான் இருந்தாலும் குரு. ஒன்றும் சொல்லவும் முடியவில்லை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. நமக்கென்று வந்து வாய்க்கிற வாத்திகளும்...குருவும்.

பழைய முறுக்குகள், இசி கதைகள், இசி பற்றிய கட்டுரைகள். பலவட்டரை கற்பனை 'ஸம்' கள் (ஓயி ஒக்காள  ஓலி, ஒருத்தனுக்கு எந்திரிச்சி நிக்கவே முடீலியாமா அவுனுக்கு ஒம்போது ஸம் கேக்குதாமா. 'ஸம்'மு மவனே) இவைகளையும் மன்னித்து விட்டுவிடலாம். சில சமயங்களில் எப்போதாவது மூடு வரும்போது, தல ஒங்க எழுத்துன்னாலே ஒரு போத தல, படிச்சதையும் ஒடம்பு முழுக்க ஒரு மாரி மசமசன்னு இருக்கு, என் 'ஸம்' கேர்ள் பிரண்டும் பிரென்சு புறச்ச்சீல...சாரி தல போதைல நாக்கு ஒலட்டீருச்சி..பிரெஞ்சு இலக்கியத்துல Gautier Lafaille எழுதுன அந்த நாவல படிச்சிட்டு ஒங்கள நெனைச்சி...என்று டைம் பாஸ் பண்ணலாம். அவரும் அந்த ஒற்றைப் பொறியைப் பிடித்துக்கொண்டு பிளாக்கில் கட்டுரைகள் புனைவார். இதனால்தான் அவருடைய கட்டுரைகள் அருமையாக இருக்கின்றன ஆனால் நிஜ புனைவு என்று வரும்போது சல்லென்று நனைந்துவிடுகிறது, சட்டை வியர்வையில்.

இறுதியாக 'உச்ச' எழுத்து. இப்போதுதான் நான் சுற்றி வளைத்து டாபிக்குக்கே வருகிறேன்.

மேற்கண்ட எல்லா கெரகங்களையும் ஒரு போதை இரவில் மன்னித்து ஹக் பண்ணி (ஹிந்தியில் ஹக் என்றால் வேறு பொருள். என் குருநாதருக்குப் பிடித்த ஒன்று) விட்டுவிடலாம்.

ஆனால் இந்த பாலகுமாரன் 2.0 இருக்கிறாரே? அவர் செய்கின்ற அழிச்சாட்டியங்கள் இருக்கின்றதே? அவர் போன்றவர்கள் தலைமையில் நடக்கும் இலக்கிய அராஜகங்கள், பாசாங்கு எழுத்துக்கள் எப்படிப்பட்ட வாசகர்களை உருவாக்கி விட்டிருக்கிறது என்பதற்கு பின் வரும் உதாரணமே சாட்சி.

நடுகல்லில் புத்தகம் வெளியாகி இரு வாரங்கள் ஆகியிருக்குமா? முப்பது வருடங்களாக எந்தத் தொடர்பும் இல்லாமல் நினைவில் மட்டுமே இருக்கும் சொந்த ஊரிலிருந்து பாசக் கணைகள் தொடுத்து நண்பர்கள் ஆகினர் பலர். அவர்களில் ஒரு சிலரேனும் புத்தகங்கள் நடுகல்லிலிருந்து வாங்கினாரா, வாசித்தனரா என்பது கம்பத்தைய்யனுக்கே, வஞ்சியம்மனுக்கே, பட்டத்தரசிக்கே, சோளீஸ்வரருக்கே வெளிச்சம்.

வேறு எங்கிருந்தும்கூட இது வரை ஒரு விமரிசனம், ஒரு மூச்சு? ம்ஹூம்.

ஆனால், என்னுடைய தலை சிறந்த நண்பர். உற்ற தோழர், அச்சு வடிவில் வெளிவந்ததும், அதுவரை சும்மா இருந்துவிட்டு நடுகல்லிடமிருந்து புத்தகத்தை வாங்காமல் கிண்டிலில் போய் பதிவிறக்கி  அதே கதைகளைத் தேடிப்பிடித்து வாசித்தார். புத்தகங்கள் அச்சில் வருவதன் அனுகூலம் மற்றும் அதன் வீச்சு என்பது இதுதான்! அற்புதம்.

வாசித்தவர் விரிவான விமர்சனக்கணக்கைளைத் தொடுத்தார். நண்பர் நல்ல தேர்ந்த வாசிப்பாளர். என்னிலும் மூத்தவர். அதன் சாராம்சம் -  

கதைகள் அருமை, நக்கல், கிண்டல் நகைச்சுவையெல்லாம் தூக்குகிறது ஆனால் ஆங்காங்கே எகிறுகிறது. ஒரு கதை என்றால் சில சிக்கல்களை உருவாக்கி வைத்துவிட்டு, முடிச்சை  இறுதியில் அவிழ்க்கவேண்டும். வாசகர்கள் வாயடைத்துப் போய் விட வேண்டும். கதைகள் ஒரு நூல் பிடித்த மாதிரி போக வேண்டும். நூலின் தலைப்பில் உள்ள கதை மட்டும் அருமை, நான் எதிர்பார்த்த மாதிரியே நூல் பிடித்த மாதிரியே போகிறது. பிறகு சில கதைகளில் என்ன முடிவு? அந்தக்கதைகளில் முடிவு அப்படி இருந்திருக்கக்கூடாது என்றெல்லாம் அறிவுரை நல்கினார். அதாவது இலக்கியம் என்றால் அவற்றுக்கான பொது இலக்கணம் அவை நூல் பிடித்த மாதிரி போக வேண்டும், அதில் ஒரு முடிவும் இருக்க வேண்டும், அதுவும் அது நீதி நூல் போன்ற ஒரு முடிவையோ ஒரு நாவல்டி ஃபேக்டரையோ, ட்விஸ்ட்டையோ எதையோ ஒன்றை வைத்து முடிக்கவேண்டும்.    வாசிப்பவர்கள் புள்ளிகளை இணைப்பதற்கும், பிரதிக்கு வெளியே போய்விட்டு வருவதற்கென்று ஒன்றையும் விட்டு வைக்கக்கூடாது.         

ஒரு சிறுகதையில் உள்ள அனைத்துச் சம்பிரதாயமான கூறுகளையும் அதாவது கதையின் பாத்திரம், பின்புலம், கரு, முரண்பாடுகள் பிறகு திண்ணமான ஒரு முடிவு என்று அனைத்தையும் உரித்து வாழைப்பழம் மாதிரி ஊட்டிவிட்டு, செரித்தும் விட வேண்டும். அனைத்தையும் புளி போட்டு விளக்கியும் விடவேண்டும்.

ஒரு புனைவு என்றால் அது இப்படித்தான் இருந்து நொட்டவேண்டும் என்று யார் சொன்னது? எப்படியெல்லாம் எழுதக்கூடாது என்று யாராவது பாடம் நடத்தினால், இன்னும் எச்சாக அப்படியே எழுதவேண்டும் என்று உற்சாகம் பிறக்கிறது. இனி இதுதான் நம் ஸ்டைல்! (ஒரு இடத்தில் வரும் தட்டச்சுப் பிழை, நான் இழைத்த பிழை, அது pleasure of text இல் மண் அள்ளி வீசுகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்) .

பாசங்குக் கதைகளின்  தொழிற்கூடம் மூடப்படும்வரை, பிய் பிய் என்று தூற்றிக்கொண்டே பிய் உண்ணும் பிய்களும்  அதன் அல்லக்கை முண்டங்களும் கடுகி ஒழியும் வரை, புது முயற்சிகளுக்கும், எழுத்துக்களுக்கும்  இது போன்ற அறிவுரைகள் தொடர்ந்து வழங்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.

ஆனாலும் தமிழில் பாசாங்கைத்தவிர வேறு எழுத்துக்களுக்கு வாய்ப்பே இல்லை. 

(முற்றும்)


Comments

Popular posts from this blog

வலியின் கதை

Jawan - An Inimitable Experience

நடுகல் இதழ் 15