இலக்கியமும் நண்பகல் நேரத்து மயக்கமும்
தமிழில் இலக்கியம்
எங்கு வாழ்கிறது என்றால், அது கிராமங்களில்தான் இன்னும்
உயிர் வாழ்கிறதாம். கிராம இலக்கியம் எழுதுகையில் -
"ஏனுங், கோச்சைக்
போகுலிங்ளா?"
எலும்புகள்
துருத்திக்கொண்டிருக்கும்
வெற்று மார்பில் உதிர்ந்தன போக மீந்திருந்த நரை
முடிகள் பத்து சதவிகிதம் கம்பிகள் போல் நீட்டிக்கொண்டிருக்க, அடிவயிற்றிலிருந்து இருமி டிச்சுக்குழிக்குள்
காறி உமிழ்ந்துவிட்டு, காதில் சொருகியிருந்த துண்டு பீடியை எடுத்துப் பற்றவைக்க தீப்பெட்டி தேடிக்கொண்டே கேட்டான் ராசு.
என்று
எழுதவேண்டும். இதில் ஒரு அவலத்தின் குறியீடு
ஒன்று ஒளிந்திருக்கிறது. அதை வாசிக்கும் வாசகனைக்
கண்டடைய வைக்க வேண்டும்.
"ஆமா கோச்சைக்
போறாங்கோ அஞ்சாறு. ளா ... அருக்காணி, களத முண்ட, எருவாமூட்டிய
வெரசலா எடுத்தடுக்குளா..."
என்று பொண்டாட்டியை வைதுகொண்டே, ரோஷத்துடன் ராசுவிடம் பேச்சுக்கொடுக்காமல் போகும் பழனிச்சாமியின் பின்புலத்தில் - அவனுடைய சேவல் மற்றும் அது தரும் சேட்டைகள் பற்றி விளக்கமாக எழுதவேண்டும்.
வசைகளில்
தெறிக்கும் கிராமத்து அழகிலுக்கென்று ஒரு கல்ட் இருக்கிறது,
அவர்களுக்கு ஆகப்பிடித்த அழகியல் இது.
பொங்கலுக்கு
கோச்சையில் கலந்துகொள்கிறேன் பேர்வழி என்று சொல்லிவிட்டு ஊறவைத்த ராகியையும்,
கோதுமையையும் நன்கு தின்று கொழுத்து ஓபி அடித்துக்கொண்டும், பட்டி முழுக்கக்
கழிந்துகொண்டும், முக்கு வீட்டுக் கோழிக்கு ரூட்டுவிட்டுக்கொண்டும், கோச்சைப் பயிற்சியின் ஒரு பகுதியாக, கால்களில்
கட்டப்பட்ட கத்திகளை அவிழ்த்துவைத்துவிட்டு, நீச்சல் பயிற்சி அளிக்கும்போது மட்டும் செத்துப்போனது போல் நடித்துத் தண்ணீரில்
கொஞ்சதூரம் மிதந்துகொண்டே போய் தப்பித்துக்கொண்டுவிடலாம் என்ற பகல் கனவுடன் கூடிய
நயவஞ்சக எண்ணம் கொண்ட, கள்ள, தோத்தாங்கோழிச் சேவல், பழனிச்சாமியின் சேவல்.
ராசுவுக்கோ,
மாராப்பகவுண்டர் டீக்கடையில் இனிமேல் சிங்கிள் டீ கூட கிடைக்காது, ஏனென்றால்
அவரிடம் ஆறு மாதங்களாக மொள்ளை.
கதையின் ஆசிரியர், தான் கொஞ்சம் சமகால
இலக்கியத்துக்குத் தகுந்தவாறு அட்வான்ஸ்ட்டாக சிந்திப்பதால், கவுண்டர் தன் டீக்கடையில் ஜீ-பே வைத்திருக்கிறார் என்று
ஒரு விவரம் சேர்த்தால் தீர்ந்தது. இவைகளுக்கு மத்தியில் மாராப்பகவுண்டர் மகன் ஏதோ ஒரு
டவுனிலிருந்து படித்துவிட்டு வருகிறான் என்றெல்லாம் எழுதப்படும் புனைவு, அது சிறு கதையா
அல்லது முழுப் புதினமா என்பதைப்பொறுத்து ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கோணங்களில் விரியும். நடுநடுவே, மீறல் என்ற பெயரில் ஏதாவது
ஒரு கள்ள ஓல்ஸ் கோணமும்
வரும். இது போன்ற எழுத்துக்கள்
மூலம்தான் தமிழ் இலக்கியம் உயிர் வாழ்கிறது!
ராசு
எச்சிக் காறி துப்பிய டிச்சுக்குழிக்குள்தான்
உலகம் மொத்தத்துக்குமான தமிழ் இலக்கியத்தின் கச்சாப் பொருள் ஒளிந்துகொண்டிருக்கிறது. இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலெல்லாம் தமிழர்களே இல்லை, அங்கெல்லாம் இலக்கியமும் இல்லை. ஐரோப்பா, ஆஸ்திரேலிய நாடுகளிலும் தமிழர்கள் இல்லை, அவர்கள் வாழ்வியலெல்லாம் வாழ்வியலே இல்லை. அதிலிருந்து வருவதெல்லாம் இலக்கியமே இல்லை. "புயலிலே ஒரு தோணி", "சிகண்டி" போன்றவையெல்லாம்
'ரமணிச்சந்திரன்' பாணி பல்ப் ஃபிக்ஷன்கள்.
கிராம உன்னத இலக்கியம் முடிந்ததா? அடுத்து வருவது வேறு வகை மீறல். இது மீறல்களையெல்லாம் மிஞ்சிய மீறல். இப்போதுதான் புதிதாகத் தொடங்கியிருக்கிறது. அஃது யாதெனில், தமிழில் யாரும் உன்னத இலக்கிய உச்சத்தைத் தொடவே இல்லை என்பதேயாம். ஐம்பது வருடங்களுக்கு முன்பே தமிழல்லாத, தமிழனுக்கொவ்வாத மொழி ஒன்றில் உச்ச இலக்கியம் எழுதப்பட்டுவிட்டதாம்.
அம்மாதிரி
இலக்கியங்களின் இலக்கணப்படி உச்ச இலக்கியம் எழுதினால்,
அது அதை வாசிப்பவரை முதலில்
விழுந்து புரண்டு சிரிக்கவைக்கவேண்டும், பிறகு வாசித்துக்கொண்டிருக்கும்போதே
உச்சா வருமல்லவா? அப்போது புத்தகத்தை குப்பறக்க கவிழ்த்துப் போட்டுவிட்டு உச்சா போய்விட்டு வந்து எடுத்து வாசித்தால், பிழியப்பிழிய அழுகை வரவைக்க வேண்டும். பிறகு, மிச்சர், பக்கோடா மற்றும் இன்ன பிற தீனிகளை
எடுத்து மொக்கிக்கொண்டே வாசிக்கையில் ஒரு நொடி அழுவதும்
அடுத்த நொடி சிரிப்பதுமாக விழுந்து
புரளும் வாசகனைக் காண நேரும் குடும்பத்தினர், அல்லு விட்டுப்போய் நேராக பார்மஸிக்குச் சென்று ஆயிரம் மில்லிகிராம் டெக்ரிடாலை, நான்கு பட்டைகள் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமலேயே வாங்கிவந்து உரித்து சோற்றில் கலந்து வைக்குமளவு மானுட உலகின் அவலத்தைப் பிட்டு பிட்டு வைக்கவேண்டும்.
அந்தளவு
அவலத்தைப் பிழிவதானால், அதற்கு எப்படி எழுதவேண்டும்?
முதலில்
கதையில் ஒரு பிணம் விழ
வேண்டும். விழும் பிணம் வறுமையில் நைந்து நூலாகி, கூழாகி, வாழ்க்கையால் வஞ்சிக்கப்பட்டு, இறுதியில் விழவேண்டும். இல்லையேல் ஆரம்பித்திலேயே பிணத்தை விழுக்காட்டிவிட்டு, நேரேஷனில் வாசகன் நெஞ்சைப் பிழிய வேண்டும்.
அதுவும்
இல்லையென்றால், இன்னொரு உத்தி இருக்கிறது ஆரம்பத்திலேயே பிணம் விழுந்துவிட்டது என்பதை வாசகனுக்குத் தெரியப்படுத்தாமலேயே போக்குக் காட்டி ஒலட்டிவிட்டு, திடீரென்று கடப்பாரையை எடுத்து குதவாயில் விட்டு மேல் வாய் வழியே
எடுத்ததுபோல் அதிர்ச்சிப் பிணமதிப்பீடு ஏற்படுத்த வேண்டும். அல்லது பிண அதிர்ச்சி மதிப்பீடு.
அவரவர் வசதிக்கேற்ப எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.
இக்கட்டுரையின்
பிண மதிப்பீட்டுகூட்டலுக்காக, பின்வரும் வரி வலிந்து சேர்க்கப்பட்டுள்ளது.
அதெல்லாம் வேண்டாம் இதுவரை வந்த பிண மதிப்பீடே
போதும் என்றால், மேற்கண்ட அதிர்ச்சிப்பிண/ துக்க/ நெஞ்சுபிழி/ அவல மதிப்பீடே போதுமென்றால்,
பின்வரும் இடாலிக் வரிகளை வாசிக்காமல் கடந்து செல்லலாம்.
பொணம்
விழவேண்டும். சாவு அல்லது இழவு
விழுந்து நடுவீட்டில் வைக்கப்பட்டிருக்கும் 'பொணத்தை' எரிக்கவோ புதைக்கவோ கூட நாதியற்ற நிலையில், கதாநாயகனுக்கு சோற்றைப்
பற்றிய சிந்தனை எழவேண்டும். இன்னும் அட்வான்ஸ்ட்டாகப் போய் எழவு வீட்டில்
ஒரு கள்ள ஓழ் நடக்கிறது
என்று எழுத வேண்டும்.
அந்த
'உச்ச' இலக்கிய எஃபெக்ட் இன்னும் வரவில்லையில்லையா? அல்லது பின் நவீனத்துவ பிதாமகரிடம்
'உச்ச' சான்றிதழ் வாங்க வேண்டுமா? மேலும் ஒரு படி போய்
மீற வேண்டும். மீறுகின்ற மீறில் ...த்தா இன்னும் ஐம்பது
வருடத்துக்கு எவனும் மீறவே முடியாமல் மொண்டிக்கொண்டு இருக்கிற விதத்தில், கதையின் நாயகன் பிண வீட்டில் த்ரீஸம்
செய்கிற மாதிரியும் அதுவும் போதாமல், பிணத்தையும் கூட இழுத்துப் போட்டுக்கொண்டு
ஃபோர்ஸம்முக்குப் போய்விட்டது மாதிரியும் எழுத வேண்டும்.
சரி,
போதும். எழுத்திலக்கிய அழிச்சாட்டியங்கள் எப்படியும் போய் ஒழியட்டும். திரை
இலக்கியம் என்று ஒன்று இருந்தால், திரைமொழி என்பது அதன் மொழி என்றால்,
அதை வைத்துக்கொண்டு இலக்கியம் எழுத முடிகிற ஒரு
ஆள் - லிஜோ ஜோஸ் பெல்லிசேரி!
இதற்குள்
நான் இலக்கியத்தை இழுத்ததற்குக் காரணம், இத்திரைப்படம் குறித்து இதுவரை நான் வாசித்த அனைத்து
இலக்கியம் சம்பந்தப்பட்ட ஆட்கள் எழுதிய விமர்சனங்களையும் வாசித்தபோது, அவர்கள் நான் மேற்சொன்ன இலக்கிய
வகையறாக்களில் ஊறியவர்கள் என்று அப்பட்டமாகத் தெரிந்ததால்தான்.
அங்கமாலி
டைரீஸ், சுருளி போன்ற படங்களிலிருந்தே இவரின் பூடகத்தன்மை மற்றும் கதை சொல்லலில் இவர்
நம்மை மெதுவாக உள்ளிழுத்துச் செல்லும் பாங்கு, பிறகு நைச்சியமாக ஏதோ ஒரு மாய
உலகத்துக்குள் கூட்டிக்கொண்டு சென்று இறுதியில் நட்டாற்றில் விட்டுவிடுவது ஈர்க்கத்தொடங்கிவிட்டது. காட்சி ஊடகம் அளிக்கும் சாத்தியங்களை தன் படங்கள் மூலம்
ஆய்வுசெய்து பார்க்கும் ஆர்வமுள்ளவர். ஒரு பேட்டியில் தன்னுடைய
படங்களின் மைய்யச் சரடு புனித பைபிளில்
இருந்து கிடைத்துக்கொண்டே இருக்கிறது என்று சொல்லியிருந்தார் (இணைப்பு கீழே)
https://www.youtube.com/watch?v=Erh1wNqo53A
What if என்னும் ஃபேண்டஸி
கதைகளுக்கான ஒரு வரி. அதை
ஒரு முழுநீளத் திரைப்படம் ஆக்குவதென்றால், அதற்கென்று ஒரு பிளாட், திரைக்கதை,
கேரக்டர்கள் இன்ன பிற. இவையனைத்தும்
அந்த ஃபேண்டஸியை நிகழ்த்திக் காண்பிப்பதற்கான வெறும் தளம் மட்டுமே. படத்தின்
நீளமும் காட்சிகளின் துல்லியமும் கச்சிதம். அழகியலுக்கென்று சிறப்புக் கவனம் செலுத்தியது தெரியாமல், வெகு நேர்த்தியாக ஒரு சர்ரியல்
தன்மையுடன் படமாக்கியிருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் காட்சிகள்
அனைத்திலும் வண்ணத்தோரணம் கட்டித்தொங்கவிடுகிறார். கதை நகரும் இடத்தின்
புவியமைப்பை நம் மூளைக்குள் கடத்தி
விடுவதும், திரையில்
தெரியும் தெருக்களுக்குள் நாமும் இறங்கி உலாவுவது போல் ஏற்படும்
பிரமையும் காக்கா
முட்டை என்னும் திரைப்படத்துக்கு அடுத்தது இப்படத்தில்தான் என்று தோன்றியது. பின்புலத்தில் வரும் தமிழ்ப்பட வசனங்களும் பாடல்களும், நம்மையும் மயக்கத்தில் வைத்திருக்க பேருதவி புரிகின்றன. இதற்கென்று தனியாக வேலை செய்த குழுவினர்
யார் என்று தெரியவில்லை. நன்கு வேலை செய்திருக்கின்றனர்.
ஜேம்ஸ்,
சுந்தரம் போல் பேசுவதும் நடந்துகொள்வதும்
அதை சுந்தரத்தின் குடும்பத்தினர் உட்பட விநோதமாகப் பார்க்கின்றனர் என்பது படு சுவாரஸ்யத்தைக் கிளப்புகிறது.
பிறகு வரும் ஒரு திருப்பத்தில்தான் அது ஏன்
என்று விளங்குகிறது. அந்த இடத்தில் மம்முட்டியின்
முகத்தில் காண்பிக்கும் அதிர்ச்சியும் அதற்குப் பிறகு அவருக்குத் தொடரும் குழப்பமும், அவர் ஆட்படும் துக்கமுமே
போதும், முழுவதுமாக என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று புரிவதோடு
மட்டுமல்ல, நாமும் அந்த மாய வலைக்குள்
சிக்கியது போல் உணர்கிறோம். நடுநடுவில்
ஒருசில காமா சோமா காட்சிகள்
வரத்தான் செய்கின்றன. அவைகள் லிஜோவின் முந்தைய படங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டில் வரும் நாடகத்தன்மை கொண்ட காட்சிகள் போல் இருக்கின்றன.
மம்முட்டி
அப்படியே தமிழர் ஒருவர் போல் பேசுகிறார் என்பது
மட்டும் வடிகட்டின பொய். அவர் மௌனம் சம்மதம்
படத்தில் பேசிய அதே மலையாள வாடையுடன்
கூடிய தமிழில்தான் பேசுகிறார். அவரை அளவுக்கதிகமாகப் பாராட்டுவது,
கமலஹாசன் சதிலீலாவதி படத்தில், அச்சு அசலாக கோவைத்தமிழ் பேசினார் என்று பத்திரிக்கைகளும் சினிமா ஆட்களும் போற்றி மகிழ்ந்து குட்டிக்கரணம் அடித்தது போல் இருக்கிறது. கமல்
என்னதான் முக்கி முக்கி ஹோம் ஒர்க் செய்திருந்தாலும்,
அவர் பேசிய கொங்குத்தமிழ், புள்ள புடிக்கறவன் பேசுகிற தமிழ் மாதிரிதான் இருந்தது. அதுதான் உண்மை. அவர் இதையேதான் சதிலீலாவதி
கன்னட வெர்ஷனிலும் செய்தார். ஹூப்ளி கன்னடத்தில் பின்னிப் பெடலெடுத்தார் என்று புளகாங்கிதம் அடைந்தனர். தமிழில் அவன் என்று சொல்வதை
கன்னடத்தில் 'அவனு' என்று சொல்வார்கள். வட கர்நாடகாவில் அதையே
அவா(ங்) என்று சொல்வார்கள்.
கமல் படம் நெடுக அவா(ங்) என்பதற்கு பதில்
அவெய்ங்...இவெய்ங் என்று மதுரை பாஷையில் சொல்வதுபோல் சொல்லிக்கொண்டிருந்தார். இதை அவர் தமிழ்நாட்டுக்
கன்னட பிராமணர்களிடமிருந்தே கற்றுக்கொண்டிருந்திருக்கலாம்.
அவர்கள் கன்னடத்திலும் அவ்வாறே பேசுவர். நாகேஷ் அப்போது உயிருடனிருந்தார், அவரும் கன்னட ப்ராமணர்தான், அவரைக்கேட்டிருந்தால் சொல்லிக்கொடுத்திருந்திருப்பார்.
கமல் பேசும் ஹூப்ளி கன்னடத்தைக் கேட்கும்போது, அவர் பேசிக் கொலை
செய்த கொங்குத் தமிழைக் கேட்டபோது உண்டான அதே அருவருப்பு உண்டானது.
கோவையில் பல கோவில்பட்டி ஆட்கள்
உளர், அவர்கள் அற்புதமாக டயலக்ட் ஸ்விட்ச் செய்து பேசுவார்கள். அவர்களிடமிருந்து டயலக்ட் நுஆன்சஸை எப்படிப் பிடிப்பது என்று கற்றுக்கொண்டிருந்திருக்கலாம்.
எதற்கு இவ்வளவு எழுதுகின்றேன் என்றால், பேச்சு மொழியில் அக்ஸன்ட் மற்றும் டயலெக்ட் இவ்விரண்டும் இன்றியமையாத கூறுகள். இவையிரண்டும் 100/100 சரியாக வேறு ஒரு பகுதியில் பிறந்து வளர்ந்தவர்களுக்குப் பேச வருவது கடினமே, அதைக் குறைகூற முடியாது. ஆனால், திரைப்படங்கள் போன்றவற்றில் ஒருவர் அதை முனையும்போது, அதை தகுதிக்கு மீறிப் பாராட்டத் தேவையில்லை. தவிர கமலஹாசன், நம்பியாரையே அவர் தமிழ் பேசினால் மலையாளத்தொனி வந்துவிடுவதாகச் சொல்லக்கூடியவர், அந்தளவு இதன் முக்கியத்துவம் உணர்ந்தவர். இது பற்றி வேறு ஒரு பதிவில் பிற்பாடு விரிவாக எழுதுவேன்.
மம்முட்டி,
இந்தப்படத்துக்கென்று தமிழுக்காக எந்த ஹோம்வொர்க்கும் செய்ததுபோல்
தோன்றவில்லை. முப்பது வருடப் பழைய மம்முட்டி எப்படித்
தமிழ் பேசினாரோ, அதே போல்தான் பேசியது
போல் இருந்தது. இதே பகுதியில் படமாக்கப்பட்ட
ஹலிதா ஷமீம் என்பவர் எடுத்த ஒரு படத்தில், இரு
வட்டார வழக்குகளின் இணைவு அல்லது மற்றும் ஒரு சிறு திரிபு
அற்புதமாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். அதில் வரும் பாத்திரங்கள் கச்சிதமாகப் பேசியிருக்கும்.
ஜேம்ஸ் இறுதியில் திண்ணையில் துயில் நீங்கி எழும்போது, எந்தக் குழப்பமும் இல்லாமல் நாம் போகலாம் என்று குடும்பத்துடன் செல்லும் இடம் அற்புதம். Lucid dream Vs Vivid dream என்னும் விளையாட்டுக்குள் ஜேம்ஸ் இருந்தால்தான் அப்படி இயல்பாக அனைத்தையும் உணர்ந்து, கடந்துபோக முடிகிறது. சுந்தரம் ஏதோ ஒரு உண்மையை உணர்ந்து யாருக்கும் சொல்லாமல் விலகிச் செல்கிறான், ஜேம்ஸுக்கும் இது அத்தனையும் விளங்குகிறது, அதனால்தான் அதிகம் அலட்டலில்லாத அதிர்ச்சியுடன் அமைதியாக ஊர் திரும்புகிறான்.
இம்மாதிரி
ஃபேண்டஸி படங்களுகே உள்ள மற்றொரு கூரான,
புதிர்களுக்கான குறிப்புக்களையும் குறியீடுகளையும் படத்தில் பல இடங்களின் பார்க்கலாம்.
ஒன்று வேனின் முன் கண்ணாடியில் மம்முட்டி
இறங்கிச் சென்ற பிறகு அனைவரும் உறங்கிக்கொண்டிருக்கும் நேர் காட்சி மற்றும்
அதன் தலைகீழ் பிம்பம். மம்முட்டி வீட்டை விட்டு வெளியேறும் மதியம் இரு தூண்கள் மற்றும்
வாயில் தெரியுமிடத்தில் அரை பாதி வாயிலில்
மட்டும் ஒன்றுமே நிகழாமலிருப்பது, அதே நேரம் சுவற்றில்
விழும் மம்முட்டியின் நிழல். இன்டெர்ப்ரேட்டஷனுக்கும் வழிகள் விட்டு, அதற்கும் சில க்ளூக்களை வைத்து,
சாவியை பார்வையாளர்களிடமே ஒப்படைத்துவிடுகிறது. என்னுடைய இன்டெர்ப்ரேட்ஷனை இங்கு சொல்லவில்லை, சொன்னால் ஸ்பாய்லர் ஆகிவிடும். ஆதலால் ஒரு சிறு க்ளூ
மட்டும். Portal என்னும் திறவுச்சொல்தான் அது.
எனக்கு
மனதளவில் நெருக்கமான படம். அதற்குக் காரணம், இதில் சுந்தரம் இருக்கும் நேரெதிர் மனநிலையில்தான், நினைவு
தெரிந்த முதல் நாள் முதல் இன்று
வரை வாழ்ந்துவருகிறேன். நான் யார்? நான்
இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறேன், என்ன கருமம்டா
இது? இந்த நான் நானல்ல
அது உறுதி, ஆனால் யாரென்று தெரியவில்லை, ஞாபகம் வர மறுக்கிறது, எங்கோ
முகவரி தொலைந்து போய் இங்கே வந்துவிட்டேன்
என்பதே அது.
பி.
கு -
மேற்சொன்னது உண்மையில் இது ஒரு உளவியல் சிக்கலா, இவ்வியாதிக்கு மருத்துவப்பெயர் ஏதேனும் உண்டா, அதற்கு உகந்த மருத்துவம் தினமும் சிங்கிள் மால்ட்டும் சோடாவும்தானா? வேறு மருந்தே இல்லையல்லவா என்றெல்லாம் டாக்டர் ஷாலினியிடம் யாரேனும் போய் விசாரித்து மருத்துவ ரீதியாக ப்ரிஸ்க்ரிப்ஷன் வாங்கிக்கொடுத்தால் எனக்கு ரொம்ப வசதியாக இருக்கும்.
Comments
Post a Comment