சோறு, கோவணம் மற்றும் கூரை
இந்த வாசிப்பு எழுத்து போன்றவையெல்லாம் ஏற்கனவே செகண்டரியாக இருந்தது. இப்போது தேர்டரி
அல்லது ஃபோர்த்தரியாகப் போய்விட்டது. தற்காலம் சோறு, கோவணம், கூரை போன்றவைதான் முதன்மை.
ஹிந்தியில், உர்துவில் அல்லது ஹிந்தி-உர்துவில் மக்கான், கப்டா, அவுர் ரோட்டி. தமிழில்
அந்த வரிசையை அப்படியே ஷஃப்ல் செய்து, கொஞ்சம் நேட்டிவிட்டிக்குத் தகுந்தாற் போல் மொழிபெயர்த்திருக்கிறேன்.
என்றெல்லாம் நான் எழுதினால், அடுத்த வீதியில் குடியிருக்கும், எழுபதுகளில் இங்கு வந்து, இன்னும் அரை வார்த்தை ஆங்கிலம் கூடப் பேசத்தெரியாத செர்பிய அல்லது செக்கோஸ்லோவேக்கியக் கிழ அகதி, இதைத் தேடி மொழியாக்கம் செய்து படித்துவிட்டு வூட்ஸில் வாக் போகும்போது பின்புறமிருந்து வோட்கா பாட்டிலால் மண்டையைப் பிளந்து ஒஹையோ நதியில் வீசிவிடுவான்.
சோறு, கோவணம், கூரையெல்லாம் இல்லை, உண்மையில் எனக்கு ப்ரைமரி என்ன தெரியுமா? ங்கொக்கா...பணம்! என்னுடனிருக்கும் ஒரு ஜீவன்தான் சோற்றுக்கும், கோவணத்துக்கும் கூரைக்கும் உத்திரவாதம் கோருகிறது. சொற் சாட்டையைச் சுழற்றி சுழற்றிச் அடித்துவிட்டு, பிறகு மனது கேட்காமல் நல்கிய அறிவுரைகள் பின்வருமாறு.
(1) என்ன வேஸ்ட் ஆஃப் டைம் இது? கேரியர்ல ஃபோகஸ் பண்ணு. எனக்கு என்ன தமிழா தெரியும்? இருந்தாலும் சும்மா "மால டம் டம், மஞ்ச டம் டம், ஹலமத்தி ஹபீபோ, ரஞ்சிதமே ரஞ்சிதமே" பாட்டுகளுக்கு காலைல இருந்து சாயங்காலம் வரைக்கும் ரீல் அந்துபோகற வரைக்கும் தான் பெத்துப்போட்ட வாரிசுகள ஆடவுட்டு, அதப் பாத்துப் பாத்து பூரிப்படையுற, குடும்பத்துக்கு நூறு டாலர் கட்டவுட்டு, ஆறிப்போய் அவுலு உட்டுப்போன வாழ எல விருந்த சாப்புடவைக்கும் இங்கு உள்ள 'தம்மில் வலர்க்கும்' சங்கங்க நடத்தும் கூடுகைகளுக்கு போகணும்னு எனக்கு என்ன இருக்கு? இருந்தாலும் நாம்போகத் துடிக்கல? ஏம் போறேன்? நெட்வொர்க்கிங், சோஷியல் லைஃப்! மேன் ஈஸ் எ சோஷியல் அனிமல் யு நோ? அது தெரியாம நீ என்ன எழுத்தாளக் கனவு காங்கற?
(2) நீ என்ன எழுதரைன்னு எவ கண்டா? அப்புடியே உனக்கு எதுனா எழுதணும்னாலும், நீ சம்பாரிச்சு ரிடையர் ஆயிட்டு என்னவேண்னாலும் பண்ணிக்கோ. ரிடையர் ஆனதுக்கப்பறம் இருவது வருஷம், முப்பது வருஷம் தொடர்ந்து எழுது.
(மொதோ ரிடையர் ஆனதுக்கப்பறம் உயிரோட இருப்பனாங்கறதுக்கு யார் கியாரண்ட்டி? அல்லது உயிரோட ரிட்டையர் ஆவனாங்கறதுக்கு எவர் கியாரண்ட்டி?)
இனிமேல் என்ன நடந்தாலும், வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல் கான்ஷியஸ்னஸ்ன்னா என்னனு தெரியுமா? டார்க் மேட்டர் பத்தி தெரியுமா? நாம இருக்கற இந்தப் பிரபஞ்சத்துல நம்ம பூமி எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லாத சின்ன தூசி தெரியுமா? லிட்ரேச்சர்ன்னா என்னனு தெரியுமா? தமிழில் நம்பர் ஒன் எழுத்தாளர் யார் தெரியுமா? அரைக்கலன்னா என்னானு தெரியுமா? என்றெல்லாம் வாயை விடவே மாட்டேன். முக்கியமாக, பின்நவீனத்துவம், உச்ச எழுத்துன்னா என்னனு தெரியுமா என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, ஒரு ஃப்ளோவில் த்ரீஸம்ண்ணா என்னானு தெரியுமா? ஃபிலிஸ்டைன் சொஸைடின்னா என்னனு தெரியுமா? என்று மட்டும் உளறித்தொலைக்க மாட்டேன். நான் மேலே எண்களிட்டு இரண்டு பாய்ண்டுகளைத்தான் எழுதியிருக்கிறேன். அதற்குமேல் எழுதவில்லை. ஏனென்று எழுத விருப்பமில்லை.
டெய்ல் பீஸ் -
தற்சம்முக்கே வக்கில்லா அங்கிள் பயல்களையெல்லாம் ஏதோ யு ட்யூப் சேனலில் கூப்பிட்டு பேட்டி கண்டால், ஆங்கிலத் தற்குறி, தமிழ்த் தற்குறி எழுத்தாள அவதாரம் எடுத்து எங்கு போனாலும், எந்தக்கேள்வி கேட்டாலும் அதற்கு ஒரே பதிலாக கடுவன் பூனைகளிடம் கேங் பேங் வாங்கின தெருப்பூனை மாதிரி த்ரீஸம் த்ரீஸம் என்று அனத்திகொண்டிருக்கிறது. நான் இங்கு ஒன் ஸம் எழுத்துக்கே காவடியாட்டம் ஆடி, தீச்சட்டி எடுத்து மடிப்பிச்சை ஏந்த வேண்டியிருக்கிறது.
Comments
Post a Comment