எனக்குக் கிடைத்த வாத்தியான்கள்
“நான் நான்காம் வகுப்புப் படிக்கையில் பிலோமினா டீச்சர்தான் எங்கள் ஆங்கில ஆசிரியை . நன்கு மத்தை விட்டுக் கடை கடையென்று கடைந்தெடுத்த மோரின் நிறம் , தங்க ஃபிரேமிட்ட சற்றே பெரிய மூக்குக் கண்ணாடி மூக்கிலிருந்து நழுவிக்கொண்டிருக்க, புடவையின் கொசுவத்தை லாவகமாக பிறந்த புதிதில் தொப்புள் கொடி தொங்கிக்கொண்டிருந்த ஓட்டை தெரியுமாறு சொருகியிருப்பார் .” இப்படி ஆரம்பித்து ஸாஃப்ட் போர்ன் ரேஞ்சுக்கு போகுமளவு அந்த நான்காம் வகுப்பு டீச்சரை வர்ணித்து எழுதி , அந்தத் டீச்சரால்தான் என் வாழ்க்கையே மாறியது , அந்த சாரால்தான் சுமாராக முப்பத்தைந்து வயது வயோதிக ஆளின் செக்ஸ் வாழ்க்கைபோல் மந்தமாகப்போய்க்கொண்டிருந்த வாழ்க்கை எக்குத்தப்பாக மாறி " ராக்கெட் செக்ஸ் " லைஃப் ரேஞ்சுக்கு எகிறியது என்றெல்லாம் ரைட்டப்புக்கள் ஒரே டெம்ப்லேட்டில் , பெயர்களையும் ஊர்களையும் மட்டும் லேசாக மாற்றிப்போட்டால் போதும் நமக்கான ஒரு ரைட்டப் தயார் என்கிற அளவு ஃபேஸ்புக்கில் குவிகின்றன . வர்ணனை என்று வரும்போது " சார் " என்றால் கண்டிப்பு , கையில் ...