எனக்குக் கிடைத்த வாத்தியான்கள்

“நான் நான்காம் வகுப்புப் படிக்கையில் பிலோமினா டீச்சர்தான் எங்கள் ஆங்கில ஆசிரியை.  நன்கு மத்தை விட்டுக் கடை கடையென்று கடைந்தெடுத்த மோரின் நிறம், தங்க ஃபிரேமிட்ட சற்றே பெரிய மூக்குக் கண்ணாடி மூக்கிலிருந்து நழுவிக்கொண்டிருக்க, புடவையின் கொசுவத்தை லாவகமாக பிறந்த புதிதில் தொப்புள் கொடி தொங்கிக்கொண்டிருந்த ஓட்டை  தெரியுமாறு சொருகியிருப்பார்.”

இப்படி ஆரம்பித்து ஸாஃப்ட் போர்ன் ரேஞ்சுக்கு போகுமளவு அந்த நான்காம் வகுப்பு டீச்சரை வர்ணித்து எழுதி, அந்தத் டீச்சரால்தான் என் வாழ்க்கையே மாறியது, அந்த சாரால்தான் சுமாராக முப்பத்தைந்து வயது வயோதிக ஆளின் செக்ஸ் வாழ்க்கைபோல் மந்தமாகப்போய்க்கொண்டிருந்த வாழ்க்கை எக்குத்தப்பாக மாறி "ராக்கெட் செக்ஸ்" லைஃப் ரேஞ்சுக்கு எகிறியது  என்றெல்லாம் ரைட்டப்புக்கள் ஒரே டெம்ப்லேட்டில், பெயர்களையும் ஊர்களையும் மட்டும் லேசாக மாற்றிப்போட்டால் போதும் நமக்கான ஒரு ரைட்டப் தயார் என்கிற அளவு ஃபேஸ்புக்கில் குவிகின்றன.

வர்ணனை என்று வரும்போது "சார்" என்றால் கண்டிப்பு, கையில் பிரம்பெடுத்தால் அதால் அடிவாங்கிய மாணவ சூத்தை மிக்சியில் போட்டு அடித்து ஜூஸ் போட்டுக் குடிக்குமளவு பழுத்துவிடும். பிறகு வர்ணனையில்  அவர் வேட்டியை டப்பா கட்டு கட்டிக்கொண்டு பிருஷ்ட்டத்தை லாவகமாக பேலன்ஸ் செய்து, கோடு போட்ட டவுசர் பிதுங்கிக்கொண்டு தெரிய டீவியெஸ் பிஃப்டியை  ஒட்டிக்கொண்டு வந்து மூட் ஸ்விங் ஆகி செவுனி செவுனியாக அப்பியதையெல்லாம் சிலாகித்து எழுதுகிறார்கள் நாஸ்டால்ஜியா வெறியர்கள்.  அப்பா அம்மா அண்ணன் அக்காள் தம்பி தங்கை உறவு போன்ற ரொமாண்டஸைஷன்களைக் கண்டித்து எழுதிக்கொண்டிருந்த,ஒரே நேரத்தில் மல்டி குத்து” மற்றும் ஆன்லைன் துட்டு தேட்டை எழுத்தாளர்கள்  இந்த அக்கிரமத்தைக் கண்டித்து ஒரு வார்த்தை இதுவரை எழுதியதில்லை.

எனக்கு இந்த  குடும்ப உறுப்பினர்கள் பற்றிய ரொமாண்டைஸிங்கில் கூட பெரிய பிராது கிடையாது.  ஏனென்றால் நிஜமாகவே பல குடும்பங்களில் யாராவது ஒரு நபர் ஆதாரத் தூண் போல நின்று, பெரும்  துயரங்கள், சறுக்கல்கள் ஆகியவற்றை அனுசரித்து, தியாகங்கள் செய்து (தியாகங்கள் என்றால் ரொமாண்ட்டைசேஷன் கிடையாது, தன்னை வருத்திக்கொண்டு, தான் விரும்புவதைக்கூட வேறு ஒருவருக்காக விட்டுக்கொடுத்தல், மற்றவர்களின் வளர்ச்சிக்காக தன்னை வருத்திக்கொள்வது போன்றவைதான் தியாகங்கள் எனப்படும்) வழிநடத்துபவர்கள் என்று கண்ணாரக் கண்டிருக்கிறேன்.

ஆனால் தன்னைத்தானே ஒரு அம்பேத்கார் போலவோ அப்துல் கலாம் போலவோ கருதிக்கொண்டு, இன்று நான் அப்ரைசலில் வருடச்சம்பளத்தில் ஐநூறு ரூபாய் ஹைக் வாங்கியதற்கு சுப்பிரமணி வாத்தியார்தான் காரணம் அல்லது சும்மா குருட்டு கும்மா அதிர்ஷ்டத்தில் ஏதாவது அரசுத் தேர்வெழுதி போஸ்டிங் வாங்கி கடைசி காலம் வரை லஞ்சப்பணத்தை வெட்கம் மானமில்லாமல் வாங்கித்தின்று, வீடு வாசல் கட்டி, தான் பெற்ற வாரிசுகளுக்கும் அரசு வேலை வாங்கிக்கொடுத்து, கையூட்டு பெறுவதில் கோச்சிங் கொடுத்து சாதித்தது அல்லது கொஞ்சம் மனப்பாடத்திறன் அதிகம் இருக்கிற காரணத்தினால், ஏதாவது ஒரு அட்வான்ஸ்ட் டிகிரி வாங்கவைத்து யூஎஸ் அனுப்பிவிட்டுவிட்ட காரணத்தினால் ஏற்பட்ட திருப்தியுணர்வு மற்றும் ரிட்டையர் ஆனபிறகு வேலை வெட்டியில்லாமை காரணமாக பிலோமினா டீச்சர் மட்டும் நான் ஒன்றாம் வகுப்பில் ஒன்றுக்கடித்துவிட்டு ஸிப்பை மேலே இழுத்துப் போடும்போது மாணி சிக்கி அலறியபோது, அதை எடுத்துவிடாமால் விட்டுவிட்டிருந்தால், அதைக் கட் செய்துதான் எடுத்திருக்கவேண்டும், இதோ இப்போது அரசுவேலையில் உயரதிகாரிக்கு ஆய் கழுவிவிட்டுக்கொண்டிருக்கும், நான் அனுதினமும் உச்சிமுகரும் வாரிசே எனக்குப் பிறக்காது போயிருக்குமென்றோ, ஃபேக் Idolization செய்கிறார்கள்.

நானும் யோசித்துப்பார்த்தேன் உலகத்தில் எவனெவனோ பழைய ஸ்கூல் வாத்திகளை Idolization செய்கிறார்கள். நமக்கு அப்படி யாராவது உந்து சக்தியாக அமைந்திருக்கிறார்களா என்று பார்த்தால்...

மூன்றாம் வகுப்பில் ஒரு வாத்தியார். ஒரு பையன் அவரிடம் சென்று Bullying பிராது கொடுத்திருக்கிறான். அப்பிராது யாதென்றால், பாதிக்கப்பட்ட வெறுப்பு மற்றும் வேகத்தில் வேகமாக ஓடிவந்து, தனக்கு நிகழ்ந்த அநீதிக்கு ஆதரவு கோரும் வண்ணமாக  "சார் இவன் என்னய கண்டாரோளின்னு திட்டீட்டான் சார்".

ஒரு நியாயமான வாத்தியாராக இருந்தால் என்ன செய்திருக்கவேண்டும்? தம்பி, இந்த மாதிரி கெட்ட வார்த்தைகளையெல்லாம் இந்த வயசுல உன் வாயில இருந்து வரக்கூடாது தம்பீ, இன்னொருதடவ பேசுனைனா உரிச்சுப்போடுவேன், உப்புத் தடவீருவேன் என்றெல்லாம் வழக்கமான பாணியில் மிரட்டிவிட்டு, கெட்ட வார்த்தை பேசிய பையனையும் கூப்பிட்டு ரெண்டு தட்டு தட்டிவிட்டு, மிரட்டிவிட்டு அனுப்பியிருக்கலாம். இந்த ஆள் என்ன செய்தான் தெரியுமா?

"ஏண்டா, உன்னயப்பாத்து கண்டாரஓளின்னு திட்டுனா உனக்கு என்ன மசுத்துக்குடா கோவம் பொத்துகிட்டு வருது? நீயென்ன பொட்டப்புள்ளையாடா? உன்னைய தாயோளின்னு அவந்திட்டீருந்தாலும் சொல்லுலா"

என்று சொல்லி இரு வசைகளுக்குண்டான வித்தியாசங்களை விளக்கி பிராது கொடுத்த பயலை புரட்டிப்புரட்டி அடித்தார். இத்தனைக்கும் இந்த வாத்தியாருக்கு நல்லா தமாசு வாத்தியார், காமெடி வாத்தியார் என்று பெயர். இயற்பெயர் யோசேப்பு பரமானந்தம். 

இவரது செல்லச்சேட்டைகளில் முக்கியமான ஒன்று, கால் பரீட்சை அரைப்பரீட்சைகளின்போது (அப்போதெல்லாம் எங்கள் பள்ளிகளில் அமர்வதற்கு பெஞ்சோ குஞ்சோ கிடையாது) தரையில் சம்மணம் போட்டு பரீட்சை அட்டைகளில் கிளிப் போட்டு பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் மாணவர்களின் பின்னால் சென்று காமெடியாக கண்காணிக்கிறேன், காமெடியாக சந்தேகப்படுகிறேன் என்று சொல்லிக்கொண்டு குனிந்து எழுதிக்கொண்டிருக்கும் மூன்றாம் வகுப்புக் குழந்தைப்பயல் முதுகில் வேட்டியை மடித்துக்கொண்டு  சூத்தை வைத்து அமருவது. இரட்டை நாடி உடம்பு இரட்டை நாடி உடம்பு என்பார்களே? அதுபோன்ற உடல் அமைப்பு இவனுடையது. உண்மையில் இரட்டைக்கும் அதிகமாகவே இருப்பான். மூன்றாம் வகுப்பு பயிலும் பிஞ்சின் முதுகில் நஞ்சு சூத்தை வைத்து அழுத்தினால் என்ன ஆவது? இந்தத் தேவிடியாப்பயல் வாத்தி மட்டும் நான் வளர்ந்ததும் என் கைக்கு சிக்கட்டும் என்று நினைத்துக்கொள்வேன். நல்லவேளை நான் அடுத்த வகுப்புக்குப் போன புதிதிலேயே மாரடைப்பில் போய்ச் சேர்ந்துவிட்டான். உடம்பெல்லாம் கொழுப்பு மற்றும் திமிர். பிறகு மாரடைப்பு வராமல் என்ன செய்யும்?

அதற்கு முன் நான் படித்த பள்ளியில் இதே போல் ஒரு காமெடி வாத்தி நாய். அந்த வாத்தி மகனின் பெயர் குப்புச்சாமியோ சப்புச்சாமியோ என்னவோ. அந்தக் காமெடி மகன் எப்போது மண்டையைப் போட்டான் என்று தெரியாது. இவனது Passtime என்னவென்றால், குறும்பு செய்யும் பொடிப்பயல்ககளைப் பிடித்து தொடையைக் கிள்ளுகிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டே அரைக்கால் சட்டையை உயர்த்தி தொடையைக்கிள்ளிக்கொண்டே உள்ளே ஜட்டிபோடாமல் வெற்றுக் குஞ்சுடன் இருக்கும் பயல்களின் விதையில் சட்டென்று சுண்டுவது. சில பயல்கள் கதறி டவுசரிலியே ஒன்றுக்கு அடிப்பது வழக்கம்.

நான் ஆரம்பத்திலிருந்து பள்ளியிறுதி வரை பயின்றதெல்லாம் அரசுப்பள்ளிகள்தாம். அவற்றில் எந்த வாத்தியையும்  Idolize செய்துகொள்ளும் கொடுப்பினை எனக்கு இருந்ததில்லை. ஏனென்றால் அங்கெல்லாம்  நடக்கும் வரக்கொடுமைகள் இன்னும் அதிகம், மரம் ஏறியது, மாங்காய் பறித்தது போன்ற சில்லறைக் குறும்புகளுக்கெல்லாம் கண்டிப்புடன் இருக்கிறோம், திருத்துகிறோம் என்றெல்லாம் சைக்கோத்தனமாக நாலைந்து வாத்திகள் ரவுண்டு கட்டி அடிப்பது, டீச்சர்கள் முன் சீன் போடுவது எல்லாம் நடக்கும். அதற்கும் கொஞ்சம் மேல் வகுப்புகளில், தனக்குத் தெரிந்த வாத்தி மகன்கள், அண்ணன் மவன்கள், தங்கச்சி மவன்கள் போன்றவர்கள் அதே பள்ளியில் படிக்க நேர்வதுண்டு. அது போன்ற வாரிசுகளுக்கு Favoritism செய்து அவன்களின் தலைகளைத் எந்நேரமும் அவன்களின் தலையைத் தடவிவிட்டுக்கொண்டிருப்பது, மடியில் உட்காரவைத்து மம்மு சோறு ஊட்டுவது, விட்டால் இடைவேளைகளில் அவன்களுக்கு கைச் சேவை செய்துவிடுவது வரை செல்வது, பிறகு உச்சி முகர்ந்து டெஸ்ட்களில் அதிக மதிப்பெண்கள் வழங்குவது, வழங்கிவிட்டு பேப்பர் கொடுக்கிறேன் பேர்வழி என்று சொல்லிவிட்டு, Favoritism  காரணமாக மம்மு சோறு நாய்களை குஷிப்படுத்துவதற்காக அவன்களை மட்டும் பாராட்டி சீராட்டிப் பேசிவிட்டு மற்றவன்களை வரிசையில் வரச்சொல்லி முழியை மடக்கச்சொல்லி குண்டாந்தடி மூங்கில் பிரம்பால் முழியிலேயே வெறிகொண்டு போடுவது. இது போன்ற விஷயங்களில் வாத்திகள் ஓரளவு கமுக்கமாகச் செய்தால், ரொம்ப இன்வால்மெண்ட்டுடன் செய்வது என்னவோ டீச்சி மவள்கள்தான்.  (பிச்சைக்காரன் இதற்கு என்னை மன்னிக்கவும்). இது தவிர என்சிசி, எனெஸ்ஸஸ் கேம்புகள் கூட்டிச்செல்வதில்  மம்மு சோற்று மவன்களுக்கு முன்னுரிமை. தன்னிடம் ட்யூஷன் வரவில்லையென்றால் அடி, கடைவீதியில் எதிரில் பார்க்கும்போது வணக்கம் வைக்காததற்காக பள்ளியில் வந்து அடி, அப்பனிடம் தன்னிடம் எல்லைசி போடச் சொல்லி, காசில்லாமல் அப்பன் அதில் போடவில்லையென்றால் அடி.

அரசுவேலை என்பதால் நல்ல கொழுத்த சம்பளம் வாங்கிக்கொண்டும் எந்நேரமும் மெடிக்கல் லீவ், ஆசிரியர் போராட்டம், கோச்சை, பங்காளிச்சண்டை, கரடுகரடாக காற்றில் காது மயிர் பறக்க புல்லெட்டில் சென்று வட்டித் தொழில். அடகுக்கு நகை பிடிப்பது. பயிர்க்கடன் நகைக்கடன் வாங்கி, கல்யாணம், காதுகுத்து, சடங்கு, சாங்கியம் நடத்தி அரசாங்கத்துக்கு பட்டை நாமம்.

வெகு அரிதாக யாராவது நல்ல ஆசிரியர் இருக்கலாம். எனக்கு நினைவில்லை. கல்லூரிக்குச் சென்றால் இதே கதை, தனக்கு கிடைத்த சிறு அதிகாரத்தை எப்படியாவது தன்னிடம் சிக்கியவனிடம்/ சிக்கியவளிடம் காண்பிப்பது. இன்டெர்னல் மார்க் போடுவதில் பிரச்சனை. பிராக்டிகல் பரீட்சையில் பெயில் செய்துவிட்டு மனஉளைச்சல் கொடுப்பது. இவன்கள் எனக்குக் கிடைத்த வாத்திகள். நாம்தான் சிறு வயதிலிருந்து ஒரு பயலையும் Idolize செய்ததில்லையே, இந்த இலக்கிய விஷயத்திலாவது யாரையாவது குருவாக வரித்துக்கொண்டே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, ஒரு குரு பூர்ணிமா நாளன்று நம் குருநாதருடன் ஒரு நட்பு ஆரம்பித்தது பாருங்கள்! அட அட அட. நமக்கென்று வந்து வாய்க்கிறான்கள் பாருங்கள் ஆசான் மவன்கள். இப்போது இவன்களில் எந்த வாத்தி மயிரானை வைத்து எழுதி ரொமாண்ட்ஸைஸ் பண்ணுவது என்று தலையைச் சொரிந்து கொண்டிருக்கிறேன்.

 


Comments

Popular posts from this blog

வலியின் கதை

நடுகல்லில் எனது கட்டுரைகளின் இணைப்பு

Jawan - An Inimitable Experience