அன்பே ,
இ ந்த லா ஆஃப் அட்ராக்ஷன் , Law of attaction என்று ஒன்று உண்டு. 2006 இல் "தி ஸீக்ரெட்" என்னும் பெயரில் வந்து பெரும் ஹிட் அடித்த ஒரு ஆவணப் படம். இதற்கான தோற்றம் என்று பார்த்தால் , அப்படம் வெளியான ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அதற்கான ஆதார கச்சாப் பொருள் விவேகானந்தர் மூலம் அமெரிக்கா சென்றடைந்துவிட்டது. 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கிட்டத்தட்ட இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த அரை நூற்றாண்டுகள் , போர் , பஞ்சம் மற்றும் பட்டினி. அதில் சாமானிய மனிதர்களுக்கு புத்தகங்கள் மற்றும் வாசிப்பு என்பது இன்றைய மதிப்பின் அடிப்படையில் ஃபீனிக்ஸ் மாலில் செக்யூரிட்டி வேலையில் இருந்துகொண்டு தீபாவளி போனஸில் லேண்ட் ரோவர் கார் வாங்க ஆசைப்படுவது போன்றது. அதனால் இது போன்ற புத்தகங்கள் நூலகங்களின் ஏதோ ஒரு மூலையில் சீந்துவாறற்று உறங்கிக்கொண்டிருந்தன. ஐம்பதுகளில் அறுபதுகளிலும் உலகம் முழுக்க புது வசந்தம் பிறக்க ஆரம்பித்துவிட்டது. பழைய போர்கள் முடிவுற்றன , அதிகாரத்தின் ருசி கண்ட பூனைகள் புதிய போர்களைத் தொடங்கின . புதுப்புது சிந்தனைகளும் , பெண்ணியமும் (மேற்கில் , குறிப்பாக அமெரிக்காவில்) , ...
சிறப்பு… தொடருட்டும் உன் எழத்து் பயணம்…
ReplyDelete