Posts

சிறுகதை: குருவைத் தேடு

நா ன் இங்கு வந்ததிலிருந்து மூன்றாம் ஆண்டு முகநூலில் கண்டுபிடித்த  பல வருடங்களாகத் தொலைந்து போன  பள்ளித்தோழன் அரசு. சென்ற முறை அழைத்திருந்தான் செல்லவியலவில்லை.  சிகாகோ சென்று பனி கொட்டித்தீர்க்கும் நான்கு நாட்கள் என் மனைவியின் தோழி வீட்டில் தங்கி உண்டும் உறங்கியும் சீட்டாடியும் கிரிக்கெட் கண்டுகழித்தும் கழித்துவிட்டு  வந்துவிட்டிருந்தோம். இம்முறை அரசுவின் அன்பு அழைப்பை ஏற்று  அவன் சொந்தமாக வாங்கியிருக்கும் கனவு மாளிகைக்குள் அடியெடுத்து வைத்தோம். அவனது பதினோரு வருட அமெரிக்கக் கனவு இவ்வீடு. முதல் அரைமணியில் வீட்டை ஃபெசிலிட்டி டூர் போலக் காண்பித்துவிட்டு, நீ ரெஸ்ட் எடு நான் ஒரு இடத்துக்குப் போய்விட்டு வருகிறேன் என்று என்னைத் தவிர்த்துவிட்டு  அண்டை அயலார்  நட்புக்  கூடுகைக்குச் சென்றுவிட்டான். அவன் போக்கிடம் பற்றிக்  கிச்சன் கேபினட்டின் மூலம் பின்னால் அறிந்துகொண்டேன். இவன் வீட்டில் கீழ் தளத்தில் ஒரு டேபிள் டென்னிஸ் மேஜையும் ஹோம் தியேட்டரும் உண்டு. ஆனால்  இன்று பக்கத்து வீட்டின் கீழ் தளத்தில் கிறிஸ்துமஸ் பார்ட்டியின் ஒரு அங்கமாக  பூல் (pool) விளையாடிக்கொண்டே பீர் அருந்துவது. அதற்குத்தான் சென

அ.பு வின் தொடக்கம்

  கொ ரோனா கடுப்பும் கோபமும் இன்னும் தாளாமல் கெட்ட வார்த்தை மாதிரி "அ. பு" என்று தலைப்பு வைத்திருக்கிறேன் என்று நினைக்கலாம். முகாந்திரமும் இல்லாமல் இல்லை. டிசம்பர் 7 அன்று கொடுத்த சாம்பிள் இன்னமும் PCR டெஸ்ட் செய்யப்படவில்லை. இன்றோடு ஒரு  வாரம் ஆகிறது ஆன்லைனில் "Test Result not available yet" என்று வருகிறது.  அது தொலையட்டும். சரியாக ஒரு வாரம் முன்பு நான் இழந்த வாசனை மற்றும் சுவை உணர்வு இன்னும் திரும்பிய பாடில்லை. அப்போது தோன்றிய ஒன்றுதான் கீழ்க்காணும் அ.பு, அதாவது அறிவியல் புனைவு! (கீழ்க்காணும் லிங்கில் க்ளிக் செய்து படித்து இன்புறுக / திட்டுக) அ.பு - க்வாண்டமும் மெய்யியலும் #1 -ப்ரஸன்னா

தடுப்பூசியாவது மயிராவது

ச ரியாக ஒரு வாரம் முன்பே லேசாக தண்டுவடத்தின் வால்ப்பகுதி முனையின் இரு பகுதிகளிலும் பிருஷ்ட்ட எலும்பின் இட மற்றும் வலப் பகுதிகளை அடக்கிய மொத்த இடுப்பெலும்பிலும் வலி மெதுவாக ஆரம்பித்து, பிறகு ஒரு கட்டத்தில் நடு முதுகும் சேர்ந்து கொண்டு நொக்கு நொக்கென்று நொக்கியது. அதற்கு முந்தைய  வாரத்தில்தான் காரின் இடப்பக்க பின் சக்கரம் அடிக்கடி அழுத்தம் குறைந்து, நெடுஞ்சாலையில் செல்கையில்  ஒரு பக்கமாக இழுத்து இழுத்து கிலியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது சரி என்ன நோக்காடு என்று பார்க்கலாம் என்று Tire Discounters எடுத்துக்கொண்டு போனால் அவன் டயர்கள் நன்றாக இருக்கின்றன, வீல் பேலன்ஸிங் பண்ண வேண்டும் Shocks & Struts மாற்ற வேண்டும் என்று சொல்லி வடஇந்தியாவில் சிப்பாய் கழகம் நடந்த ஆண்டு எண்ணின் அளவு டாலர் பில் தீட்டி அதிர்ச்சி அளித்தான். சரி ஒழி, வாங்கின காசுக்கு ஏதாவது செய்திருப்பான் என்று எடுத்து ஓட்டினால், வளைவுகள் எல்லாம் ஸ்டிக்கிநெஸ் இல்லாமல் அருமையாக இருந்தாலும், வண்டி நல்ல சாலையிலேயே எகிறி எகிறி குதித்துக்கொண்டிருந்தது. கூகிள் செய்து பார்த்தால், அது சரியாவதற்கு ஒரு நூற்றைம்பது மைல்களாவது ஆகும் என்று கண

மினி நாவல்: வட்டங்கள் உள்ளும் புறமும் (பிட் ஏழு)

பெ ண்களில் உள்ள ஒரு விஷேசம் என்னவென்றால், ஒரு பிரச்னையை சுவடு தெரியாமல் அழிக்க வேண்டும் என்று முடிவு மட்டும் கட்டிவிட்டால் போதும், எந்த எல்லைக்கும் செல்வார்கள், எவ்வகையான ஆயுதம் வேண்டுமானாலும் ஏந்தத் தயாராகிவிடுவார்கள், எந்த யுக்தியையும் கையாள்வார்கள். துக்கம் துயரம் பிரச்சனையில் உழல்வது போன்றவையெல்லாம் வெறும் பாசாங்குதான். சில பெண்களைப் பார்த்தால் மேலோட்டமாக பிரச்சனையில் உழன்று அழுது புலம்புவது போல் தோன்றும் ஆனால் அதற்குப் பின்புலத்தில் ஏதோ ஒரு தீவிரமான தயாரிப்பு நடந்துகொண்டிருக்கும். சில வகைப் பெண்கள் அதீத நுண்ணுணர்வு கொண்டவர்கள் பிரச்சனை என்று ஒன்று முளைவிடுவதற்கு முன்னதாகவே ஞான த்ருஷ்ட்டியில் தெரிந்துகொண்டு அது விதையாகப் புதையுண்டு இருக்கும்போதே கிண்டி எடுத்து எறிந்துவிடுவார்கள். முற்றும் வரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். முடிவு மட்டும் எடுத்துவிட்டால் எந்தப் படுகுழியில் இருந்தும், பாதாளலோகத்தில் மாட்டிக்கொண்டிருந்தாலும், எல்லாவற்றையும் முறியடித்துக் கொண்டு மேலே வந்து குன்றின் மேல் ஏறி அமர்ந்து அரசாளுவார்கள்.  அவளே ஒரு குடி அடிமையாக இருந்தவள்தான், முக்கியத்துவம் கொட

க்ளோஸ் த பாட்டில்

ஒ ரு வாரமாக நானே எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் அதற்கான காலமும் சூழலும் இப்போதுதான் நன்றாகப் பொருந்தி வந்திருக்கிறது. சாருவை இம்சித்த மொன்னை பிளேடுகள் மற்றும் நான் அவரிடம் போட்ட பிளேடு என்று எல்லாவற்றையும் தொகுத்து அவர் ஒரு அருமையான பத்தியைப் பதிவேற்றியிருந்தார்.  http://charuonline.com/blog/?p=11020 வழக்கமாக சாரு ஆர்மியை நோக்கி வெளியில் இருந்து வரும் தாக்குதல்கள், அவர்கள் குடிக்கிறார்கள், குடியை ஊக்குவிக்கிறார்கள் என்றெல்லாம் இருக்கும். அதற்கும் வழக்கமான எதிர்வினையாக நாங்கள்  எவ்வளவு  உயர்தரமான மது அருந்துகிறோம், என்ன மாதிரியான ரம்யமான சூழ்நிலையில் அமர்ந்து அருந்துகிறோம், என்ன விதமான  தத்துவ மற்றும் இலக்கிய விசாரணைகளில் ஈடுபட அது உதவுகிறது என்றெல்லாம் இருக்கும். நான் புரிந்துகொண்ட வரை எதுவுமே குடிவெறியையோ அல்லது indulgence-ஐ  ஆதரிக்கும் வகையிலோ இருக்காது. மாறாக அளவாக உபயோகிக்கும்வரை குடி ஒரு உணவுப்பொருள்தான், வேறு யாரையும் அது துன்பப்படுத்தாத வகையில் இருக்கும் வரை, பொறுப்பாக அதில் தேவையான அளவு மட்டும் ஈடுபட்டு வெளியேறுவது எப்படி என்று எங்களுக்குத்தெரியும் மற்றபடி நாங்கள் குட

மினி நாவல்: வட்டங்கள் உள்ளும் புறமும் (பிட் ஆறு)

ஆ யிரத்தித் தொள்ளாயிரத்து நாற்பத்து மூன்றாம் ஆண்டு சென்னையில் அக்டோபர் மாதம் ஒரு ஆறு நாட்கள் தொடர் அடமழை விடாமல் கொட்டித் தீர்த்தது.  அது பற்றி அசோகமித்திரன் கூட, தான் சிறுவனாக இருக்கும்போது செகந்தராபாத்தில் இருந்து எப்படி வண்டி மாறி மாறி சென்னை சென்ட்ரல் வந்து அங்கிருந்து சைதாப்பேட்டை போகமுடியாமல் மாம்பலத்திலேயே லோக்கல் ட்ரெயின் நின்றுவிட்டது என்பது பற்றியெல்லாம் ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். மொத்த சென்னையையும்  கடற்கோள் கொண்டுவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு என்னூர், திருவொற்றியூர், எழும்பூர், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, செயின்ட் ஜார்ஜ் டவுன், சிந்தாதிரிபேட்டை, சாந்தோம் என்று மொத்த சென்னையும் நீரில் பல நாட்களுக்கு மூழ்கித் தத்தளித்ததாம்.  ஐஸ்ஹவுஸ் பாதி உயரத்துக்கு மேல் நீரில் மூழ்கியது. அதில் முன்னொரு காலத்தில் பாஸ்டனில் இருந்து கப்பலில் பல மாதங்கள்  பயணம் செய்து மதராஸ் துறைமுகம் வந்தடைந்த பனிப்பாளங்கள் காற்றோ சூரிய ஒளியோ புகா வகையில் அமைக்கப்பட்ட பல பனி மண்டபங்களில் வைக்கப்பட்டன. அம்மண்டபங்கள் கூட முற்றாக மூழ்கி விட்டன. இப்போது போலீஸ் ம்யூசியமாக இருக்கிறது அல்லவா? அது 1856 முதல் 2013 வரை

மினி நாவல்: வட்டங்கள் உள்ளும் புறமும் (பிட் ஐந்து)

இ ந்த மூடிக்குடியே கூட மணங்களைப் பகுத்தறியவியலா கோதையின்  நுகர்சிப்  புலன் சார்ந்த ஒரு குறைபாடு காரணமாகத்தான்  சாத்தியப்படுகிறது. வயிற்றினுள் மெதுவான வன்கோரத்துடன் விரவிப்பரவுகின்ற கச்சைச் சாராயம் விருவிருவென உட்கிரகிக்கப்பட்டு குருதியில் கலந்து நாசிவழியே கசிந்து நாறிக்கொண்டிருந்தாலும் வீட்டிற்குள் சத்தமில்லாமல் போய்ப்  புழங்க முடிகிறது. சில மூடிகள் அதிகமானால் அதற்கும் வினை.  வீட்டில் குடிக்கத்தொடங்கியவனை சில முறை எச்சரித்தும் கேட்கவில்லை. உனக்கு என்னடி தெரியும் ஆபீசுல எவ்ளோ ப்ரச்சன தெரியுமா? சரக்கடிச்சா எவ்ளோ ரிலாக்சா இருக்கு தெரியுமா? என்றுவிட்டு நடு நடுவில் எமொஷனல் ரொமான்ஸ் கொடுத்தான். அது அவளுக்குப் புரியவே இல்லை.  ஆனால் அதில் ஒருவித  ஒருவித கிக் இருந்தது. அட இது புது மாதிரி இருக்கிறதே என்று முதலில் ரசித்தவள், இவன் ரொம்ப ஓவராகப்போகவே, ஊரில்  உள்ள  சில அக்காள்களிடம் போன் செய்து கேட்டிருக்கிறாள். அவர்களே குடி கிராஜுவேட் ஆகிப் பலவருடங்கள் ஆகின்றன. குடல் கறியுடன் ஊறுகாய் நக்கிகொண்டே ஒன்றரை குவாட்டர் அடித்துவிட்டுப் புருஷனுடன் ஜாலி பண்ணும் சீனியர்கள். இவளிடம் மட்டும் குயுக்தியாக, பழைய வ