Posts

புஷ்பான்னா பயறு இல்ல ஃபயரு

பு ஷ்பா முதலில் தமிழில் தொடங்கி அறுபது வினாடிகளுக்குள் டப்பிங்கின் தரம் தந்த ஏமாற்றத்தினால் நெட்ப்ளிக்ஸில் தெலுங்கிற்கு மாறிக்கொண்டேன். ஹிந்தியிலெல்லாம்  கூட அடிபொழியாக ஷ்ரேயஸ் தல்படேவையெல்லாம் போட்டு அருமையாக மொழி மாற்றம் செய்திருக்கிறார்கள் (இன்னொரு அடி பொழி ஃபாலோ அப் டாபிக் அடுத்து வரவிருக்கிறது! க்ளூ? பான் இந்தியா ரிலீஸ் என்னும் ஓல்!!!). தமிழில் மட்டும் ஏன் இப்படி என்று தெரியவில்லை மனீஷ் ஷா முரட்டடியாக தமிழ் படங்களை, வந்து இறங்க இறங்கச்  சுடச்சுட டப் அடித்து, தன் வீட்டு ஆட்களையெல்லாம் டப்பிங் பேச வைத்து யூ ட்யூபில் விட்டு காசு சம்பாரித்தாரே, அதே தரத்தில் இருந்தது. தமிழர்கள்தானே என்று டேக்கன் ஃபார் க்ராண்ட்டட்டில் இப்படிச் செய்திருக்கக்கூடும்.  ப்ரோமோவில் இங்கு வந்து அல்லு அர்ஜுனை விட்டு  "நான் இங்கதான் போர்ன்தேன் இங்கதான் மட்ராஸிலோ வல்ந்துக்கறேன், நான் தமில் ஆலு, நீங்கோ ஒத்திக்கினாலும் இல்லனாலும் நான் தமில் ஆலு தான்" என்று பேசவைத்து மினிமம் ஒரு அறுபது கோடிக்கு விற்றுவிட்டுப் போய் விட்டார்கள். ஆனால் தமிழில் பாடல்கள் மட்டும் அப்படி இல்லை அது பற்றிப் பிறகு; அவைகளை படங்களில்

வெல்வது எப்படி?

தெ ன் ஆப்பிரிக்காவுடன் தொன்னூற்று இரண்டில் இருந்து இதுவரை எட்டு தொடர்களில் ஆடிய இந்தியா, ஒரே ஒரு தொடரில் சமன் செய்தது தவிர  இதுவரை வெல்ல முடியவில்லை. முடிந்த தொடரை எப்படியாவது வெல்ல முடியுமா என்று ஆலோசனையில் இருப்பதாகக் கேள்வி. ஒரு வேளை பயிற்சி போதாதோ என்று புதிதாக ஒரு நவீனச்சிந்தனை ஒன்று உதித்திருக்கிறதாம். அடுத்த முறை கண்டிப்பாக இந்தியா வெல்ல வேண்டுமென்றால், சில யோசனைகள் என்னிடம் உள்ளன அவையாவன -  1) புஜாரா, ரஹானே போன்ற மூத்த வீரர்களுக்கு மட்டும் அவர்களது சீனியாரிட்டி அடிப்படையின் படி மூன்று அவுட்டுகள் கொடுக்கலாம். அதாவது மூன்று முறை அவர்கள் அவுட்டானதும்தான் ஆட்டமிழந்ததாகக் கருதப்படும். அப்படியெல்லாம் கொடுக்க முடியாது என்றால், அவர்களது கடந்த இருபது இன்னிங்ஸ்களின் ரன்களைக் கூட்டி, கூட ஒரு ஐந்து ரன்கள் சேர்த்துப் போட்டு அவர்களின் ஸ்கோருடன் சேர்ப்பதற்கு ஐஸிஸி விதிகளின்படி ஏதாவது வழியிருக்கிறதா என்று அலசலாம். இம்முறையில் தேவைப்பட்டால், அவர்கள் மீது கேஸ் கூடப் போட்டு தோற்ற தொடரையே கூட வெல்ல வாய்ப்பிருக்கிறது.  2) பவுலிங் போடும்போது நாமும் ஸ்லெட்ஜ் பண்ணி தெ. ஆ  மட்டையாளர்களை சரியான விதத்தில

எழுதுவது எப்படி?

அ வர் ஒரு நல்ல நண்பர். "உங்க ப்ளாக நானாத் தேடிப்போயி படிக்க மாட்டேன் வேண்ணா எனக்கு டெய்லி லிங்க்கு போடுங்க படிக்கறேன், எஃப்பில ட்விட்டர்லயெல்லாம் போடுங்க நெறய பேரு படிப்பாய்ங்க்ய என்று சொல்லியிருந்தார். நல்ல யோசனை என்று அப்போதில் இருந்து போஸ்ட் பண்ண ஆரம்பித்திருந்தேன். (அவர் ட்விட்டர் என்று சொன்னபோது எனக்கு டுய்ட்டர் என்று என்று காதில் விழுந்த மாதிரி நியாபகம், தெக்கத்தி ஊர்கள் தொடங்கும் பார்டர் ஊர்க்காரர். வடிவேலு ஸ்லாங் நன்கு பேசுவார்) நேற்று வேறு ஒரு விஷயத்திற்காக ஃபோனில் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது பேச்சுவாக்கில் "என்னைய்யா நீர் நான் எழுதும் ஒன்றையும் படிப்பதே இல்லை போலிருக்கிறதே" என்று கடிந்துகொண்டேன். இந்த வருடம் குறிப்பிட்ட சில பேர் தவிர நிறைய பேருக்குப் புத்தாண்டு வாழ்த்து வேறு அனுப்பவில்லை. அந்தளவு எழுதுவதிலும் வேறு வேலைகளிலும் மும்மரம். அதிலும் குறிப்பாக என் ப்ளாக்கை ஃபாலோ செய்பவர்களுக்கு மட்டும் அனுப்பியிருந்தேன்.  இவன் பாரு வேலை இருக்கும் போது மட்டும் மெசேஜ் அனுப்பறான் என்று எண்ணிவிடக்கூடாது என்ற கவலை.  இவர் என் வாழ்த்துக்கு ஒரு கர்ட்டஸி எதிர் வாழ

கதையின் முன் மற்றும் பின் கதைகள்

எ ன்னுடைய குருவைத் தேடு சிறுகதை முயற்சியைப் படித்துவிட்டு நெடுநாட்கள் நான் மெசேஜ் போட்டால் ப்ளூ டிக் மட்டும் வரும்; நெடுநாள் நண்பன்- அல்ல நண்பர், போன் செய்துவிட்டார். நண்பர் என்று சொல்வதற்குக் காரணம் இளவயது ஊர் நண்பன் அல்ல, பிற்கால நண்பர், என்னிலும் இளையவர். நான் பிளாக் ஆரம்பித்த புதிதில் கட்டை விரல் உயர்த்திய எமோஜி ஒன்று வந்திருந்தது அதற்குப் பிறகு சில மாதங்களாக  ஒன்றும் இல்லை. கலிபோர்னியாவில் பே ஏரியாவில் இருக்கிறார். வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. வாழ்க்கையின் பல இன்னல்களைக் கடந்து தற்போது மிக நல்ல நிலையில் உள்ளார். முதலில் ஜீ, என்னாச்சு ஜீ என்ன நடந்தது என்று கேட்டுக் கொண்டிருந்தார். ஜீ போட்டு பேசக்கூடிய டைப் ஆட்களில் வெகு சிலரில் ஒருவர். நானும் என்னாச்சு என்று கேட்டேன். இல்ல எங்க போனீங்க ஏன் இப்புடியெல்லாம் பண்றாங்க எனக்கும் அப்புடிதான் ஒருத்தன் என்று  ஆரம்பித்து அவருக்கு சமீபத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றைச் சொன்னார்.                 உண்மையில் அவர் எனக்கு நிஜத்தில் நடந்த ஒரு விஷயத்தைத்தான் கதை என்கிற பெயரில் எழுதியிருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். அப்படியாக இருந்தால் நான

சிறுகதை: குருவைத் தேடு

நா ன் இங்கு வந்ததிலிருந்து மூன்றாம் ஆண்டு முகநூலில் கண்டுபிடித்த  பல வருடங்களாகத் தொலைந்து போன  பள்ளித்தோழன் அரசு. சென்ற முறை அழைத்திருந்தான் செல்லவியலவில்லை.  சிகாகோ சென்று பனி கொட்டித்தீர்க்கும் நான்கு நாட்கள் என் மனைவியின் தோழி வீட்டில் தங்கி உண்டும் உறங்கியும் சீட்டாடியும் கிரிக்கெட் கண்டுகழித்தும் கழித்துவிட்டு  வந்துவிட்டிருந்தோம். இம்முறை அரசுவின் அன்பு அழைப்பை ஏற்று  அவன் சொந்தமாக வாங்கியிருக்கும் கனவு மாளிகைக்குள் அடியெடுத்து வைத்தோம். அவனது பதினோரு வருட அமெரிக்கக் கனவு இவ்வீடு. முதல் அரைமணியில் வீட்டை ஃபெசிலிட்டி டூர் போலக் காண்பித்துவிட்டு, நீ ரெஸ்ட் எடு நான் ஒரு இடத்துக்குப் போய்விட்டு வருகிறேன் என்று என்னைத் தவிர்த்துவிட்டு  அண்டை அயலார்  நட்புக்  கூடுகைக்குச் சென்றுவிட்டான். அவன் போக்கிடம் பற்றிக்  கிச்சன் கேபினட்டின் மூலம் பின்னால் அறிந்துகொண்டேன். இவன் வீட்டில் கீழ் தளத்தில் ஒரு டேபிள் டென்னிஸ் மேஜையும் ஹோம் தியேட்டரும் உண்டு. ஆனால்  இன்று பக்கத்து வீட்டின் கீழ் தளத்தில் கிறிஸ்துமஸ் பார்ட்டியின் ஒரு அங்கமாக  பூல் (pool) விளையாடிக்கொண்டே பீர் அருந்துவது. அதற்குத்தான் சென

அ.பு வின் தொடக்கம்

  கொ ரோனா கடுப்பும் கோபமும் இன்னும் தாளாமல் கெட்ட வார்த்தை மாதிரி "அ. பு" என்று தலைப்பு வைத்திருக்கிறேன் என்று நினைக்கலாம். முகாந்திரமும் இல்லாமல் இல்லை. டிசம்பர் 7 அன்று கொடுத்த சாம்பிள் இன்னமும் PCR டெஸ்ட் செய்யப்படவில்லை. இன்றோடு ஒரு  வாரம் ஆகிறது ஆன்லைனில் "Test Result not available yet" என்று வருகிறது.  அது தொலையட்டும். சரியாக ஒரு வாரம் முன்பு நான் இழந்த வாசனை மற்றும் சுவை உணர்வு இன்னும் திரும்பிய பாடில்லை. அப்போது தோன்றிய ஒன்றுதான் கீழ்க்காணும் அ.பு, அதாவது அறிவியல் புனைவு! (கீழ்க்காணும் லிங்கில் க்ளிக் செய்து படித்து இன்புறுக / திட்டுக) அ.பு - க்வாண்டமும் மெய்யியலும் #1 -ப்ரஸன்னா

தடுப்பூசியாவது மயிராவது

ச ரியாக ஒரு வாரம் முன்பே லேசாக தண்டுவடத்தின் வால்ப்பகுதி முனையின் இரு பகுதிகளிலும் பிருஷ்ட்ட எலும்பின் இட மற்றும் வலப் பகுதிகளை அடக்கிய மொத்த இடுப்பெலும்பிலும் வலி மெதுவாக ஆரம்பித்து, பிறகு ஒரு கட்டத்தில் நடு முதுகும் சேர்ந்து கொண்டு நொக்கு நொக்கென்று நொக்கியது. அதற்கு முந்தைய  வாரத்தில்தான் காரின் இடப்பக்க பின் சக்கரம் அடிக்கடி அழுத்தம் குறைந்து, நெடுஞ்சாலையில் செல்கையில்  ஒரு பக்கமாக இழுத்து இழுத்து கிலியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது சரி என்ன நோக்காடு என்று பார்க்கலாம் என்று Tire Discounters எடுத்துக்கொண்டு போனால் அவன் டயர்கள் நன்றாக இருக்கின்றன, வீல் பேலன்ஸிங் பண்ண வேண்டும் Shocks & Struts மாற்ற வேண்டும் என்று சொல்லி வடஇந்தியாவில் சிப்பாய் கழகம் நடந்த ஆண்டு எண்ணின் அளவு டாலர் பில் தீட்டி அதிர்ச்சி அளித்தான். சரி ஒழி, வாங்கின காசுக்கு ஏதாவது செய்திருப்பான் என்று எடுத்து ஓட்டினால், வளைவுகள் எல்லாம் ஸ்டிக்கிநெஸ் இல்லாமல் அருமையாக இருந்தாலும், வண்டி நல்ல சாலையிலேயே எகிறி எகிறி குதித்துக்கொண்டிருந்தது. கூகிள் செய்து பார்த்தால், அது சரியாவதற்கு ஒரு நூற்றைம்பது மைல்களாவது ஆகும் என்று கண