வசைகள், வசைகளினும் கொடியன மற்றும் ஆர்ஆர்ஆர்
ச மீப காலங்களில் மிக மோசமாக மனிதர்கள் வாயில் விழுந்து வதைபடும் வார்த்தைகள் இரண்டு. ஒன்று - Cringe இன்னொன்று Pan-India . முதலாவது தமிழர்கள் தவிர மொத்த இந்தியர்களின் வாயிலும் விழுந்து வதைபடுகிறது. இரண்டாவது, அதாவது Pan-India என்பது திரைப்பட உலகில் இருப்பவர் வாய்களில். இந்த Cringe ஐ மன்னித்து விட்டுவிடலாம். ஏனென்றால், ஒரு ஐந்தாறு வருடங்களாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பேசி மகிழ்ந்த 'கொய்யால' வும். 'வச்சு செய்றேன்' ஆகிய வார்த்தைகளை விட இது பரவாயில்லை என்பதால். இந்த வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தம் தெரிந்துதான் பேசுகிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை. ஏனென்றால் - இங்கு இரு வருடங்களுக்கு முன்பு, அதாவது கொரோனா வருவதற்கு முன்பு, யாராவது ஒருவர் வீட்டிற்குச் சென்று குடும்பத்துடன் குதூகலமாக சாப்பிட்டுவிட்டு ஏதாவது மொக்கை சினிமா பார்ப்பது அல்லது கொஞ்ச நேரத்திற்கு Dumb Charades மாதிரி ஏதாவது விளையாடுவது. அதில் ஒரு யுவதிக்கு, அன்பர் ஒருவர் Enact பண்ணிக் காண்பித்துக் கொண்டிருந்தார். அது என்ன என்பதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சிரமமாக இருந்ததாம், அதை எக்ஸ்ப்ரெஸ் செய்வதற்கு அந்த யு