நிச்சோட்னா
இ துவே ரொம்ப லேட்தான் . கொரோனா காரணமாகத் தள்ளிப்போய்விட்டது . எல்லாவற்றையும் ஆரம்பித்துவைத்தது மனிஷ் ஷா என்பவர்தான் என்று நான் சொல்வேன் . நான்கு ஸ்டேட்களைத் தாண்டி வெளியே போகாமல் இருந்த தமிழ் , தெலுங்குப் படங்களை உரிமை வாங்கி சர சரவென்று குடிசைத்தொழில் மாதிரி டப் செய்து யூ ட்யூபில் வெளியிட்டார் . அவை இந்தியாவையும் தாண்டி , பங்ளாதேஷ் , பாகிஸ்தான் , நேபாள் என்று பற்றிக்கொள்ளத் தொடங்கிவிட்டன . ஒரு வகையில் பாகுபலிக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம் என்று கூட சொல்லலாம் . அதற்கும் முன்பு சங்கர் இயக்கிய ரோபோ படம் வந்தபோதுகூட , ஏதோ ரஜினி முகத்துக்காகவும் புகழுக்காகவும் இரண்டு ஷோக்கள் கூடுதலாக ஓடின , அவ்வளவே . பாகுபலியைப் பொறுத்த வரை அவ்வளவு பெரிய பட்ஜெட் , நடிகர்கள் என்று வைத்துக்கொண்டு ப்ரேவ் ஹார்ட் ரேஞ்சுக்கு எடுத்திருக்கவேண்டிய படத்தை , லும்பக் க்ளாஸிக்காக எடுத்து ஒரு மாஸ் ஹிஸ்டீரியாவையும் கிளப்பிவிட்டுவிட்டார் . வணிகப் படங்களாகவே இருந்தபோதிலும் , ராட்சஸன் மற்றும் விக்ரம் வேதா போன்ற நல்ல விறுவிறுப்பான கதை மற்றும்