என் வயது இருபது
கா ல எந்திரம் என்பது அறிவியல் ரீதியில் சாத்தியமான ஒன்றா என்று தெரியாது . நம்மால் ஏறித்தான் பயணிக்க முடியாதே ஒழிய , சில வரம்பெல்லைகளுக்குட்பட்டு , காலச் சாளரத்தின் வழியே எட்டிப்பார்க்கும் உணர்வை அளிக்கவல்ல ஒன்றுதான் யூட்யூப் என்று தயங்காமல் சொல்லலாம் . ஒரு காலத்தில் , திரை அரங்குகளில் ஃபில்ம் டிவிஷனின் ஆவணப்படம் பார்க்காமல் படத்தைப் பார்த்தால் , படம் பார்த்த திருப்தியே இராது என்று சொல்லும் ஆட்கள் உண்டு . நான் கொஞ்சம் கொஞ்சமாக நாஸ்டால்ஜியா என்னும் வெற்றுப் போதையை விட்டு விலகி வெறும் பதிவு செய்பவனாக மட்டும் இருக்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறேன் . இறந்தகாலம் என்பது எவ்விதக் கொண்டாட்டமும் இல்லாத ஒன்று என்று கொஞ்சம் கொஞ்சமாக ஞானமடைந்து வருவதால் கூட அவ்வாறு இருக்கலாம் . இன்றிலிருந்து ஒரு ஐம்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு , ஒரு இருபது வயதை எட்டிய இளையோரின் சுதந்திர இந்தியா என்னும் இளம் தேசத்திடம் உள்ள ஏமாற்றங்கள் , எதிர்பார்ப்புக்கள் , பிரச்சனைகள் , கனவுகள் மற்றும் ஆசைகள் , நிராசைகள் மற்றும் பு