Posts

ஒரு பின்நவீனத்துவ, ஆட்டோ ஃபிக்ஷன் கொத்துபுரோட்டா

இ தெல்லாம் ஒரு கதையா? என்று கேட்கலாம், ஆனால் வேறு வழி? போஸ்ட் மார்டனைப்போட்டு அடி  அடியென்று அடித்துப் பிய்த்துப்போட்டுவிட்டு அடுத்த மார்டனுக்குப் போகவேண்டியதுதான். சாரு நிவேதிதா இனிமேல் கண்டுகொள்ளமாட்டார். எப்படியோ ஒழி என்று தண்ணி தெளித்து விட்டுவிட்டார். இந்த ஆ ஊ வென்றால் முகம் கோணுவது, சில்லறை விஷயங்களில் மூஞ்சியத்திருப்பிக்கொண்டு கோபித்துக்கொள்வது, நல்ல நல்ல நட்புக்களையெல்லாம் வெடுக்கென்று வெட்டிவிட்டுவிடுவது இதெல்லாம் பொதுவாக பெண்களின் இயல்பு. உடனே என்னைப் பார்த்து Misogynist என்று கத்தக்கூடாது. அறிவியல் ரீதியிலான உண்மையைச் சொல்வதை Misogyny என்று சொல்லவியலாது. உதாரணத்திற்கு, பெண்களின் மூளைதான் பன் மொழிகள் கற்றுக்கொள்வதில் வல்லவைகள் என்று சொன்னால் அது அறிவியல் ரீதியில் எந்தளவு உண்மையோ, அதே அளவு உண்மைதான் நான் மேற்சொன்ன கூற்றும்.   வெளியாட்கள் என்றால் வெட்டிவிடுவதெல்லாம் சகஜம். அதுவே பார்ட்னர் என்றால்? சில சம்பவங்கள் மூலம் நான் சொல்ல வருவது என்ன என்று விளக்க முயற்சிக்கிறேன். சும்மா உதாரணம்தான், இந்த இடத்தில் அவரவர் வாழ்விலிருந்து உதாரணங்களைப் பொருத்திப் பார்த்துக்கொள்ள பூரண சுதந்த

டான், விக்ரம் மற்றும் நான்...

Image
இ துவரை ஒரு சிவகார்த்திகேயன் படம் கூட பார்த்ததில்லை . நேற்று எக்கச்சக்க வேலைகள் . வழக்கம்போல கொஞ்சம் தாமதமாகவே பொட்டியைக் கட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்து , ஒரு ஷாட் ப்ளாக் காஃபி போட்டுகொண்டு வந்து உட்கார்ந்தால் , நெட்ஃப்ளிக்சில் ஏதோ ம்யூட்டில் ஓடிக்கொண்டிருந்தது . எஸ் . ஜே சூர்யா கையில் கட்டுப் போட்டுகொண்டு சிவகார்த்திகேயனிடம் பேசிக்கொண்டிருந்தார் . இது என்ன படம் என்று கேட்டால் , தெரில புதுசா வந்துருக்குது . நான் பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவ வந்து சப் டைட்டில்ல என்ன ஓடிட்டிருக்குனு பாத்துட்டு போயி வேலைய கன்டின்யூ பண்ணுவேன் என்று பதில் வந்தது . பாஸ் பண்ணிவிட்டுப்பார்த்தால் , டான் என்று இருந்தது . அன் ம்யூட் பண்ணினேன் . படம் முடிய இன்னும் பதினைந்து நிமிடங்கள்தான் . அந்த ஒரு ஸீனிலேயே கதை என்ன என்று புரிந்துவிட்டது . அதற்கு முன்பான இரண்டரை மணிநேரங்கள் பார்க்கவேண்டிய அவசியமே இல்லை . மேலும் போன வாரம்தான் ந்யூஸ் ஃபீடில் -    " வேற லெவல் வேற லெவல் . சிவகார்த்திகேயன் பொழிச்சு ! ஐயோ பயங்கர செண்டிமெண்டா ..

என் வயது இருபது

Image
கா ல எந்திரம் என்பது அறிவியல் ரீதியில் சாத்தியமான   ஒன்றா என்று தெரியாது . நம்மால் ஏறித்தான் பயணிக்க முடியாதே ஒழிய , சில வரம்பெல்லைகளுக்குட்பட்டு , காலச் சாளரத்தின் வழியே எட்டிப்பார்க்கும் உணர்வை அளிக்கவல்ல   ஒன்றுதான் யூட்யூப் என்று தயங்காமல்   சொல்லலாம் . ஒரு காலத்தில் , திரை அரங்குகளில் ஃபில்ம் டிவிஷனின் ஆவணப்படம் பார்க்காமல் படத்தைப் பார்த்தால் , படம் பார்த்த திருப்தியே இராது என்று சொல்லும் ஆட்கள் உண்டு . நான் கொஞ்சம் கொஞ்சமாக நாஸ்டால்ஜியா என்னும் வெற்றுப்   போதையை விட்டு விலகி வெறும் பதிவு செய்பவனாக மட்டும் இருக்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறேன் . இறந்தகாலம் என்பது எவ்விதக் கொண்டாட்டமும் இல்லாத ஒன்று என்று கொஞ்சம் கொஞ்சமாக   ஞானமடைந்து வருவதால் கூட அவ்வாறு இருக்கலாம் .   இன்றிலிருந்து ஒரு ஐம்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு , ஒரு இருபது வயதை எட்டிய   இளையோரின் சுதந்திர இந்தியா என்னும் இளம் தேசத்திடம் உள்ள ஏமாற்றங்கள் , எதிர்பார்ப்புக்கள் , பிரச்சனைகள் , கனவுகள் மற்றும் ஆசைகள் , நிராசைகள் மற்றும் பு